Tuesday, July 13, 2010

தமிழ்ப்பதிப்புத் துறைக்கு மதிப்புக் கிட்டுமா?

 

மின்தமிழ்  கூகிள் வலைக் குழுமத்தில் இன்றைக்கு ஒரு சுவையான விவாத இழையைப் படித்தேன். தினமணி நாளிதழில் திரு எஸ் ரவீந்திரன் எழுதிய கட்டுரையைத் துவக்கமாக வைத்து தமிழ்ப் பதிப்புத் துறைக்கு மதிப்புக் கிட்டுமா  என்ற ஒரு விவாதம் தொடங்கியிருக்கிறது. வழக்கம் போலவே, கொஞ்சம் கருத்து, நிறையக் கும்மி என்று ஆரம்பித்து, வேறு ஒரு இழையில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் அங்கே ஓடிவிடுவது தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தாலுமே, வலைக் குழுமங்களில் இந்த விவாத இழைகள், வலைப்பதிவுகளில் நடப்பதை விடப் பயனுள்ளதாகப் பல தருணங்களிலும் பார்த்திருக்கிறேன்.

இந்த இழையில் விவாதிக்கப் பட்ட விஷயங்களைக் கொஞ்சம் படித்து விடுங்கள்! ஏனென்றால், இந்தப் பதிவு, அந்த இழையில் பேசப்பட்டதை ஒட்டியே அதையும் தாண்டிய கருத்தோட்டத்தைச் சொல்ல முனைகிறது.


"""உண்மையில் பல பதிப்பகங்களின் புலம்பலைக் கேட்பார் யாருமில்லை ஏனென்றால்,  "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது", என்ற பழமொழிக்கேற்ப பதிப்பகங்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

அரசு நூலகங்களுக்கு நூல்களை அனுப்ப வேண்டும் என்றால் கையில் பணம் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் எக்கச்சக்கமான விதி முறைகள் வேறு. ஒரு வழியாகப் புத்தகங்களை அவர்கள் கேட்கும் நிபந்தனைகளின்படி அச்சிட்டு அனுப்பினாலும் நூலுக்கான தொகை சில்லறையாக வந்து சேர ஓராண்டு ஆகிறது.

இதில் வேதனை என்னவென்றால் ஒரு நூலின் விலை ரூ. 40 என்றால் நூலகத் துறை நிர்ணயிக்கும் விலை ரூ. 20 அல்லது ரூ. 25 ஆகத்தான் இருக்கும். 160 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை சுமார் ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் செலவழிக்க வேண்டும்.

ஆனால், நமக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?
ரூ. 20 ஆயிரம் மட்டுமே! 

மேலும், நூல்களை 30 மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்ப ஆகும் பார்சல் செலவு, பதிவஞ்சல் செலவு மற்றும் இதர செலவுகளைப் பதிப்பாளர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது.

இந்தத் தொகையை வைத்து  பதிப்பகங்கள் எப்படி நடத்த முடியும்?"


இப்படிப் பதிப்பகங்களின் "பரிதாபமான" நிலையை  தினமணி கட்டுரை நெஞ்சுருக விவரிக்கிறது. அகிலன், நா.பார்த்தசாரதி உட்பட பல எழுத்தாளர்கள்  பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தொகையைக் கொடுப்பதில் செய்யும் தகிடுதத்தங்களை, வெளிப்படையாகவே தங்கள் குமுறலைத் தங்கள் கதைகளிலேயே கொட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கூட தங்கள் தளங்களில் தங்களுக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை மிகுந்த அடக்கத்துடன் சொல்லப் போக  ஒரு பதிப்பகம், அல்லது அதன் சார்பில் மாவு மெல்லுபவர் ஒருவர்  முன்னவருக்கு ஒரு லட்சம், பின்னவருக்கு இரண்டு லட்சத்துக்குக் குறையாமல் வருடா வருடம் கிடைப்பதாக தகவல் சொல்லியிருந்தது எத்தனை பேர் கண்களில் பட்டது என்று எனக்குத் தெரியாது.  

பக்கத்துக்கு சராசரியாக ஐம்பது பைசா என்று விலை வைத்து புத்தகங்களை விற்கிற அந்தப் பதிப்பகம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறது என்ற கணக்குமே கூட இங்கே நிறையப்பேருக்குப் புரியாத ஒன்று தான்!


மேலே தினமணி கட்டுரையில் போட்டிருக்கிற கணக்கின் படி அச்சிடும் செலவு ரூ.20, எழுத்தாளருக்கு ராயல்டி ரூ.2,  வெளியீட்டுச் செலவு அல்லது விளம்பரம் ரூ.5, விற்பனையாளர்  கழிவு ரூ.10, பதிப்பகத்தாருடைய ஆதாயம் ரூ.10, இதர செலவினங்கள் ரூ.3 என்று வைத்துக் கொண்டால் கூட புத்தகம் நாற்பதில் இருந்து ஐம்பதிற்குள் தான் வரும். ஆனால், இங்கே புத்தகங்களைக் கறார் விலையில் ஒரு பதிப்பகம் பக்கத்திற்கு ஐம்பது பைசா என்ற விலையில் அதாவது, இந்த எடுத்துக் காட்டில் உள்ள நூற்றறுபது பக்கப் புத்தகம் எண்பது அல்லது அதற்கும் மேலே விலை வைத்து விற்பதை, பரிதாபத்துக்குரிய நிலை என்றா சொல்ல முடியும்? 

அச்சிடும் முறைகளில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. மினி ஆப்செட்டில் அச்சிடும் போது குறைவாக ஆகும் அடக்கச் செலவு, டிமாண்டுக்குத் தகுந்தபடி, தேவையான பிரதிகளை மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வசதி இப்படிப் பதிப்புத் துறையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.

நூலகத் துறைக்கு விலை பேசும்போது, மொத்த விலை/bulk order  என்ற வகையில், விளம்பரச் செலவு, விற்பனையாளர் கழிவு இதர செலவினங்கள் எல்லாம் இல்லை. அதைக் கழித்து விலை பேசப்படுவதில் என்ன குறை சொல்ல முடியும்? அதற்குப் பதிலாக, கையூட்டு என்று கூட சொல்ல வேண்டாம், ஆர்டர் கொடுப்பதற்குக் கொஞ்சம் கைம்மாறு, புத்தகத்திற்கான பணம் வந்து சேருவதில் தாமதம் என்று குறை சொல்பவர்கள் எதற்காக நூலகங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்? குறை சொல்லிக் கொண்டே விற்பனை செய்வதில் என்ன நுண்ணரசியல் இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசிப்பதற்காக எழுப்பப் படும் கேள்விகளே இவை.

பதிப்பகங்கள் பொது நூலகத் துறை ஆர்டரை எதிர்பார்த்து மட்டுமே இருப்பதாகச் சொல்லப் படுகிற நிலை மாறி நிறைய நாட்களாயிற்று. நூலகத் துறைக்கு விற்கப்படும் புத்தகங்கள்  நேற்றைய நாட்களைப் போலக் குறைந்த பட்ச உத்தரவாதமாக இல்லை, இன்றைக்கு மாறி வரும் சூழலில் அதிகப்படி வருமானமாகவே இருக்கிறது.

ஆக பதிப்பகங்களுடைய பரிதாபமான நிலைமைக்கு, நூலகத் துறையை மட்டுமே குறை சொல்ல முடியாது. வேறு காரணங்களும் இருக்கின்றன.

முதலில் மக்களுடைய ரசனைக்கேற்றபடி, புத்தகங்களை வெளிடுகிறார்களா? தங்களுடைய வெளியீடுகளைக் குறித்து குறைந்தபட்ச விவரங்களையாவது பொதுவெளியில் பதிப்பகங்களோ, ஆசிரியர்களோ பகிர்ந்து கொள்கிறார்களா? புத்தகத்தைக் குறித்த விமரிசனங்களை சேர்த்து அறியத் தருகிறார்களா?

அடுத்ததாக வாங்க நினைக்கும் வாசகருக்கு அருகாமையில் எந்த இடங்களில் எல்லாம் புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும், இணையத்தின் வழியாக ஆர்டர் செய்து பெற முடியுமா, இப்படி விவரங்களைப் பரவலாக அறியச் செய்திருக்கிறார்களா?

மூன்றாவதாக வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தி, திருவிழாக் கூட்டத்திற்கு வருகிற கூட்டம் கலர் அப்பளம், ரிப்பன் போலத் தேவை இல்லாததெல்லாம் வங்கி வருவதைப் போலப் புத்தகங்களை விற்பனை செய்வதை விடுத்து, இந்த மாதிரிக் கண்காட்சிகளில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தும் நிகழ்ச்சிகளாகவும், எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களைப் பற்றி  வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிற மாதிரியான நிகழ்வுகளாகவும் நடத்த பபாசி போன்ற புத்தக வெளியீட்டாளர்கள் அமைப்பு யோசிக்கத் தயாராயிருக்கிறதா? கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வித்தியாசமான தீம், வரலாற்றுப் புதினங்களுக்கு ஒரு நாள், அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு நாள் இப்படி வித்தியாசமாக சிந்திக்கவும் செயல் படுத்தவும் இங்கே கண்காட்சி ஏற்பாடு செய்பவர்களுக்கு மனமிருக்கிறதா?

காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாராக இருக்கும் வாசகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட வாசகர்களை ஏமாற்றாமல், நேர்மையாக தங்களுடைய படைப்புக்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளப் பதிப்பாளர்கள் முன்வரும் போது, வாசகர்களுடைய ஆதரவு நிச்சயமாகப் பதிப்பகங்களுக்குக் கிடைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கட்டுபடியாகக் கூடிய விலை! பதிப்பகங்கள் தங்களுடைய புத்தகங்களை ஜனங்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலையில் தரத் தயாராக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு புத்தகம் விற்பனைக்கு வந்து ஒரு ஆண்டுக்குப் பிறகோ அல்லது முதல்பதிப்பு வெளிவந்து விற்றுப் போன பிறகோ அடுத்து வருவது மலிவுப் பதிப்பாக இருப்பதை வழக்கமாகக் கொண்டாலே புத்தக விற்பனையை எதிர்பார்க்காத உயரங்களுக்குத் தமிழிலும் கொண்டுபோகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை.

உங்களுடைய கருத்துக்களையும் தெரிந்துகொள்ள ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.


5 comments:

  1. இன்னிக்குதான் ஒரு பிரச்சனைய சொல்லி அதுக்கு ஒரு தீர்வையும் சொலியிருக்கீங்க. நன்றி.

    // ஒரு புத்தகம் விற்பனைக்கு வந்து ஒரு ஆண்டுக்குப் பிறகோ அல்லது முதல்பதிப்பு வெளிவந்து விற்றுப் போன பிறகோ அடுத்து வருவது மலிவுப் பதிப்பாக இருப்பதை வழக்கமாகக் கொண்டாலே புத்தக விற்பனையை எதிர்பார்க்காத உயரங்களுக்குத் தமிழிலும் கொண்டுபோகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை.
    //
    எங்க நம்பிக்கையும் அதுதேன்

    ReplyDelete
  2. வாருங்கள் மயில்ராவணன்!

    பிரச்சினை என்று சொல்பவர் தான் அதற்குத் தீர்வும் சொல்லியாக வேண்டும் இல்லையா? இந்த மன நிலை தான் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கியிருக்க, அதாவது பிரச்சினையை வளர்த்துக் கொண்டே போவதற்கும் காரணமாக இருக்கிறது. நீங்களும் கூட உங்களுக்கு சரி என்று படுகிற ஒரு தீர்வு அல்லது கருத்தை முன்வைத்திருக்கலாம் இல்லையா?

    இந்தப் பக்கங்களிலேயே மலிவு விலையில்நூல்களை வெளியிட ஆரம்பித்த பிரேமா பிரசுரம், தடபுடலாக ஆரம்பித்த ராணிமுத்து, அசோகனின் பாக்கெட் நாவல் முயற்சியைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். வாசகர் வட்டம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகனுக்கும், படைப்பாளிக்கும் பாலமாக இருந்து செயல் பட்ட விதத்தை அறிந்திருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்.

    ஒரு இருபது வருடங்களுக்கு முந்தைய நிலையை இப்போதும் இருப்பது போல தினமணி கட்டுரை சித்தரிக்க முற்படுகிறது. மின்தமிழில் வெளியான அந்த இழையையும் படியுங்கள், வேறு என்னென்ன விதமாக யோசனைகளை வைத்திருக்கிறார்கள் அல்லது முடமாகி நிற்கிறார்கள் என்பதும் புரியும்!

    ReplyDelete
  3. புத்தகத்தின் பொருளடக்கம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அந்த புத்தகம் அதிக பிரதிகள் விற்கும்.

    உதாரணம்- சுஜாதாவின் கற்றதும் petradhum, ஒரு புளியமரம், மோகமுள், கடல்புரம், அலைவோம் திரிவோம்... .... இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

    ReplyDelete
  4. இந்தப் பதிவின் மையக் கருத்தே, அப்படி சரக்கு தரமாக இருக்கிறது என்ற உத்தரவாதத்தையோ, எழுத்தின் ஒரு சாம்பிளையோ, அதன் மீது செய்யப் பட்ட விமரிசனங்களையோ பதிப்பகங்கள் பொது வெளியில் வைப்பதில்லை என்பது தானே!

    அப்புறம் அந்தப் பொருளடக்கம்...! இங்கே விஷயத்தின் தராதரத்தை வைத்து எவரும் புத்தகம் வாங்குவதில்லை! ரசனை என்பது கூட ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருப்பது தான்! அதனால் பொத்தாம் பொதுவாக சொல்வதை விட்டு விட்டு, நீங்கள் புத்தகங்களை அல்லது எழுத்தாளர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைச் சொன்னீர்கள் என்றால் அது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  5. நான் தேடிக் கொண்டிருக்கும் விவரங்கள் கிடைக்கப் பெற்றேன்....நானும் நிறைய பதிப்பகத்தாரின் விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)