Showing posts with label சீனா எழுபது. Show all posts
Showing posts with label சீனா எழுபது. Show all posts

Friday, April 10, 2020

அக்கம் பக்கம்! இன்று என்ன சேதி?

1950களில் இந்தோ சீனி பாய் பாய் என்ற முழக்கங்களை காங்கிரஸ்காரர்கள் எழுப்பிக்கொண்டு  இருந்த கதை இன்றைய தலைமுறை அறிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கை என்ற ஒரு மாயஉலகில் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எழுந்த கோஷம் அது. 1962 இல் இந்திய சீனப்போருக்குப் பிறகு அந்த கோஷம் என்ன ஆனது என்பது அந்த நாளைய CONகிரஸ் ஆசாமிகளுக்கே நினைவிருக்காது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோசீனி பாய்பாய் கோஷம் கடந்தவாரம் மறுபடி சீனத்தரப்பிலிருந்து வெகுவாகத் தம்பட்டம் அடிக்கப் பட்டிருக்கிறது என்பது காலமும் கொரோனா வைரசும் ஏற்படுத்தித் தந்திருக்கிற விசித்திரம்! இங்கே ஹிந்து நாளிதழுக்கும் செலெக்டிவாக வேறுசில ஊடகங்களுக்கும் இந்திய-சீன் உறவு: எழுபது ஆண்டுகள் என்று முழுப்பக்க விளம்பரங்கள் சீன தூதரகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டதைக்கூட  கவனித்திருக்க மாட்டோம் தானே! என்று இந்தப்பக்கங்களில் எழுதியதன் தொடர்ச்சியாக இன்று அக்கம் பக்கம்! என்ன சேதி தளத்துக்காக  

அல் ஜஸீராவின் இன்றைய 26 நிமிட வீடியோ சொல்வதென்ன? கொரோனா வைரஸ் தொற்றைக் குறித்து சீனா இதுவரை உண்மைகளை மறைத்தே வந்திருப்பதில் பல நாடுகளுக்கும் சீனாவின் மீதான நம்பிக்கை சுத்தமாகக் காலி! உலகெங்கும் கொரோனா வைரசுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில், அதற்கான விலையைச் சீனா கொடுத்தே ஆக வேண்டும் என்கிற குரல்கள் பெருக ஆரம்பித்திருக்கின்றன. 

 
 

ப்ரம்ம செலானி மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

There are many lessons to be learned from the Wuhan coronavirus pandemic. But one is already clear: China needs to be isolated from the civilized world until its behavior improves. We are in the current situation, with deaths and economic devastation worldwide, because China handled this outbreak with its trademark mixture of dishonesty, incompetence and thuggery. Were China a more civilized nation, this outbreak would have been stopped early, and with far less harm, inside and outside of China.

As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.

As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from AustraliaEurope, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.”  இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப் படிக்க.  

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும்  தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம்   கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?! 

இது இன்று இந்தப்பக்கங்களில் எழுதப்பட்டதன் சுருக்கம்  நண்பர்கள் இந்தப்பக்கமும் வந்து வாசிக்கலாமே! மீண்டும் சந்திப்போம்.  

Friday, November 1, 2019

கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! #சீனா இன்று!

சீன விவகாரங்களைத் தொடர்ந்து இங்கே மற்றும் இங்கே  பார்த்துவருகிறோம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் முழு அளவிலான கூட்டம் கடந்த திங்கள் முதல் வியாழன் முடிய நான்கு நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. எதிர்பார்க்கப் பட்டபடி சீனப் பொருளாதார மந்தம் குறித்தோ, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் குறித்தோ எதையும் குறிப்பிடாமல் இந்தக் கூட்டத்தைப் பற்றிய செய்திக்குறிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. அதற்கு முன் சென்ற வாரம் பொலிட்பீரோ (அரசியல்விவகாரத் தலைமைக்குழு) கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பிளாக்செயின் டெக்னாலஜிக்குப் பச்சைக் கொடி காட்டியிருந்ததை முன்னாலேயே சொல்லியிருந்ததை இரண்டாவது வரியில் உள்ள சுட்டியில் பார்க்கலாம்.

    
Blockchain Technology பற்றி சீன அதிபருக்கு என்ன தெரியும்? அதில் உள்ள சிக்கல்கள் அவருக்குத் தெரிந்திருக்குமா என்ற ரீதியில் இரு அமெரிக்க ஊடகச் செய்திகளைப் பார்க்க முடிந்தது. அதற்கு முன்னால் ForeignPolicy டாட்காம் தளத்தில் வெளியாகி இருந்த ஒரு செய்தியைப் படவடிவில் பார்த்து விடலாம்.

கடந்த பத்தாண்டுகளில் எந்தெந்த நாடுகளில் 10% மிகப் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள்? அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா  வந்திருப்பதை பார்க்க முடிகிறதா? கிட்டத்தட்ட இத்தாலி, இங்கிலாந்துக்கு சமமாக இருந்த சீனா, நான்கு மடங்கு உயர்ந்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறதா?


ஐந்தாம் தலைமுறை 5G தொழில்நுட்பத்தில் சேவைகளை இன்று  சீனாவில் 50 நகரங்களில் மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் அளிக்க  ஆரம்பித்து விட்டன. China just switched on the world's largest 5G network.
The country's three state-run telecom operators launched services for the next generation wireless technology on Friday.
China Mobile (CHL)China Telecom (CHA) and China Unicom (CHU) are all offering 5G plans that start at 128 yuan ($18) for 30 GB of data per month, giving Chinese internet users access to the ultra fast service.
    5G commercial services are now available in 50 cities, including Beijing, Shanghai, Guangzhou and Shenzhen, according to Chinese state news agency Xinhua. In Shanghai, nearly 12,000 5G base stations have been activated to support 5G coverage across the city's key outdoor areas. என்கிறது CNN.

    கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டத்தைப் பேச ஆரம்பித்து எங்கெங்கோ போகிறதே என்று நினைக்கிறீர்களா?

    கூட்ட முடிவுகள் வெளியே அறிவிக்கப்படவில்லை தான்!ஆனால் வெளியே தெரிய வந்திருக்கிற இந்த விஷயங்களே அடுத்துவரும்  காலங்களில் உலக நடப்பைப் புரட்டிப்போடக் கூடியவை என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

    மீண்டும் சந்திப்போம்.
       

    Saturday, January 26, 2019

    இந்த நூற்றாண்டு சீனாவுடையதா?

    அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்து பிறக்கிறது என்பது சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு #மாசேதுங் கற்பித்த வலுவான பாடம். அதனால் தானோ என்னவோ சீனா தன்னுடைய அண்டை நாடுகள் எதனுடனும் #சுமுகஉறவுகள் வைத்துக்கொண்டதே இல்லை.

    #வாய்க்கால்வரப்புத்தகராறு கள் போலவே அண்டைநாடுகள் அத்தனையுடனும் தகராறு #எல்லைப்பிரச்சினைகள் அடாவடிகள், அத்து மீறுவது, வன்மத்தைக் கக்குவது இவையெல்லாம் சீன ராணுவத்துக்கும் சீன கம்யூனிஸ்ட்கட்சிக்கும் உள்ள பொதுவான குணங்கள்.

    #மாசேதுங் சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் விடுபட்ட நிலையில் தான் #டெங்சியாவோபிங் சீனாவை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திச் செல்ல முடிந்தது என்பதில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியும், ராணுவமும் அடக்கியே வாசிக்கவைக்கப்பட்டன. முழுக்கவனமும் சீனாவை தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்குவதிலேயே செலுத்தப்பட்டது. #டெங்சியாவோபிங் வழியில் சீனா முப்பதே வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவானது.

    #சீனவர்த்தகநடைமுறைகள் எப்படிப்பட்டவை என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும், இங்கே கவனம் கொள்ள வேண்டியது சீனா #வர்த்தகஉபரி யாக இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களைக் கையிருப்பாக, குறிப்பாக அமெரிக்க அரசு கடன்பத்திரங்களில் முதலீடாக வைத்திருக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதுதான்.

    இந்தப் பின்னணியில் தான் சீன ராணுவ அதிகாரி ஒருவரின் மகனான #ஜிஜின்பிங் சீன அதிபராகவும், கம்யூனிஸ்ட்கட்சித் தலைவராகவும் 2012 இல் உருவானார். கம்யூனிஸ்ட் கட்சிமீதும் ராணுவத்தின் மீதும் தனதுபிடியை வலுப்படுத்திக் கொண்டே வந்த அதே சமயம் சீனர்களுக்குள் ஒரு கனவையும் விதைத்தார்.

    #AmericanTianxia என்கிற வார்த்தைப்பிரயோகம் முதன்முதலில் 2013 இல் #வாங்குங்வு என்கிற சரித்திர ஆசிரியரால் பயன் படுத்தப் பட்டது. உலகத்துநாடுகளின் மொத்த அரசியல், பொருளாதாரத்துக்கும் #அமெரிக்கா நடுநாயகமாக (அல்லது ஆதாரமாக) இருக்கிறது என்று பொருள்படும்படியாக. இதே கருத்தை ஒரு சிறுபுத்தகமாக விரிவு செய்து அமெரிக்கா இன்னமும் உலகின் நடுநாயகமாக இருக்கிறது என்று #சால்வடோர்பாபோன்ஸ் என்கிற ஆஸ்திரேலியப்பேராசிரியர் எழுதியதைப் பற்றி முன்னமே கூகிள் பிளஸ்சில் பேசியிருக்கிறோம்.

    20ஆம் நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது போலவே 21ஆம் நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும். சீனா உலகின் நடுநாயகமாக இருக்கும் இப்படி ஒரு சிந்தனை சீனர்களிடையே சிலகாலமாகவே இருப்பதுதான்! அதற்குச் செயல்வடிவம் தருகிற மாதிரியே #ஜிஜின்பிங் #ஒரேபெல்ட்ஒரேரோடு என்கிற #OBOR #BeltandRoadInitiative திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இதெல்லாம் சின்னச் சின்னப் பகிர்வுகளாகத் தரவுகளுடன் பலமுறை இங்கே கூகிள் பிளஸ்சில் பேசப்பட்டதுதான்.

    இந்த அடிப்படை விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது இந்த விஷயத்தில் புதிதாகச் சொல்வதற்கு என்ன என்பதை பார்ப்போம்.

    In a surprise Sunday move, Beijing announced that the Communist Party leadership wants to abolish the two-term limit for China’s president and vice president, potentially paving the way for China’s 64-year-old President Xi Jinping to stay in power indefinitely. What does this mean for Chinese politics, political reform, and relations with the rest of the world? http://www.chinafile.com/conversation/xi-wont-go

    எல்லா அரசியல்வாதிகளுக்கும் வருகிற அதே வியாதிதான்! #நிரந்தரத்தலைவர் ஆக ஆயுட்காலம் முழுக்க இருந்துவிடுகிற முனைப்பு ரஷ்யாவின் புடினைத் தொடர்ந்து #ஜிஜின்பிங் குக்கும் வந்து சீனக்கம்யூனிஸ்ட் கட்சி விதிகளிலும் திருத்தம் மேற்கொள்ளப் படவிருக்கிறது என்பது செய்தி. சரி! அது அவர்கள் உள்விவகாரம் நமக்கென்ன என்கிறீர்களா?

    பிலிப்பைன்ஸ் அதிபர் தென்சீனக்கடல் செயற்கைத்தீவுகள் அமெரிக்கா சீனாவுக்குமான பிரச்சினை எங்களுக்கென்ன வந்தது? என்று அலட்சியமாகப் பேசியது போல இந்தியாவும் இருந்துவிடமுடியாது இந்த #Infographic இல் என்னதான் சொல்கிறார்கள் என்பதையாவது படத்தைப்பெரிதாக்கிப் பார்த்து விடுங்கள்.

    சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்!


    இப்படி நம்மைச் சுற்றி உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள், நம்மை எப்படி பாதிக்கும், நமக்கென்ன சம்பந்தம் என்று செய்திகள், அவை மீதான சிறு குறிப்பு , விமரிசனங்களோடு ஒரு புதிய வலைப்பக்க அறிமுகம்!

    Tuesday, January 15, 2019

    எது சமூக நீதி? தொடரும் விவாதங்கள்!

    கனிமொழி, என்ன அநியாயம் இது என்று ஒரே ஒரு கேள்விதான் சூடாகக் கேட்டார்! அதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் TK ரங்கராஜன் பரபரப்பான, பேசும் பொருளாகி விட்டார்! ஓசி விளம்பரமாகக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் தெளிவான விடைகள் கிடைக்கிறதா என்பதை பார்க்கும் மக்கள் தான் வந்து சொல்லவேண்டும்!


    red publicly

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)