Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Sunday, April 12, 2020

கூகிள்! அரசியல்! படித்ததில் பிடித்தது! #TSபாலையா

நடுவில் இரண்டுமூன்று நாட்களாக வீடியோக்களை பதிவில் இணைக்க முடியாமல் இருந்தது இன்றைக்குச் சரியாகி இருக்கிற மாதிரித் தெரிகிறது. ஆனால் கூகிளை முழுக்க முழுக்க நம்பியிருப்பது படுமுட்டாள்தனம் என்பதைக் கடந்தகால அனுபவங்கள் கற்றுக் கொடுத்தும் கூட கண்மூடித்தனமாக Firefox இல் இருந்து Chrome ப்ரவுசருக்கு மாறி, அதையும் personalised browser ஆகப்பயன்படுத்திவந்தது பெரும் தவறோ என்று யோசிக்க வைத்திருக்கிறது.


பானாசீனா செட்டியாருக்குத் தானும் பரபரப்புச் செய்திகளில் இடம்பெற்றே ஆகவேண்டும் என்ற தவிப்பிருக்காதா என்ன? இந்த நாறவாய் மட்டும் இல்லாமலிருந்தால் சீனாதானாவைத் தெரு நாயோ, காக்கையோ தூக்கிக் கொண்டு போயிருக்குமோ? இந்த 32 நிமிட நேர்காணலைப் பார்த்தபோது லைம்லைட்டில் இருந்தே ஆகவேண்டுமென்கிற தவிப்பு இருக்கிற மாதிரியே தமிழக சேனல்களுக்கும் இந்தமாதிரி குபீர் பொருளாதார மேதை தேவைப்படுகிறார் என்பது வெளிப்பட்டது. நெருக்கடியான நேரத்திலும் கூடத் தமிழக அரசியல்வாதிகள் எவரும் தங்களுடைய குறுகிய அரசியல் குட்டையில் இருந்து வெளியே வரத் தயாராக இல்லை என்பதும் தெரிந்த விஷயம்தான்.  அரசியல் குப்பைகள்!

முகநூலில் சில பகிர்வுகள் உண்மையிலேயே வித்தியாசமானதாகவும், வாசித்ததில் மிகவும் பிடித்தமானதாகவும் இருப்பதை மறுக்க முடியாது! அந்த வகையில் நடிகர் T S பாலையா பற்றி:


Balaguru Kalyanasundaram  நேற்று, பிற்பகல் 4:38

சில ஆளுமைகளைப்பற்றி நம்மிடமிருக்கும் தரவுகளை வைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவைத்திருப்போம் . அது பலநேரம் நிதர்சனத்தில் உண்மையாய் இருப்பதில்லை. கிக்கிரி பிங்கிரி என கோமாளித்தனம் செய்யும் நகைச்சுவை நடிகர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திரபாபு , காளி N .ரத்தினம் போன்றவர்களின் உண்மையான ஆளுமை பற்றி தெரிந்த போது விக்கித்து நிற்க வேண்டியிருந்தது . அந்த வரிசையில் இன்று வாசித்த `'நூற்றாண்டு கண்ட T.S. பாலையா `' புத்தகம் அவர் பற்றிய நிறைவானதொரு பிம்பத்தை கொடுத்து பிரமிக்க வைத்தது .

1.பாலையா ஒரு நல்ல குணச்சித்திர & நகைச்சுவை நடிகர் , 2. அவர் சிவாஜி எம்ஜிர் காலத்திய நடிகர் . என்று இதுநாள் வரை நினைத்திருந்தது எவ்வளவு தவறு என்று புரியவைத்தது புத்தகம் . 1936 ல் திரைத்துறையில் நுழைந்தவர் 1950 ல் உச்சம் தோட்டிருக்கிறார் . அந்த காலகட்டத்தில் தொடர்ந்து பாகவதர் , பியூ சின்னப்பா விற்கு எதிராக வில்லன் என்றால் பாலையாதான் என்று நின்று களமடியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் எல்லிஸ் .டங்கன் சதிலீலாவதி ,அம்பிகாபதி , மீரா என தன் படங்களில் பாலையாவை தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறார். இவரது திறமையை இனங்கண்டு கொண்டதையும் தன் நடிப்புக்கு உயிர் தண்ணீர் ஊற்றியதையும் நன்றியுடன் நினைவு கூருகிறார் பாலையா .

`பி எஸ் வீரப்பா & எம் `ஆர்`ராதா போன்றோர்களுக்கு முன்னோடி வில்லனாக துலங்கியவர் .செறிவான கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடுங்கள் பாலையாவை என்ற நிலையில் இருந்திருக்கிறார் . உதாரணமாக அண்ணாவின் வேலைக்காரி நாடகம் படமாக்க பேச்சுவார்த்தை நடந்தபோது , இயக்குனரிடம் அண்ணா இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறார் அதில் ஒன்று யாருக்கு முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தை கொடுக்கப்போகிறீர்கள் என்பது ! "பாலையா" என்றதும் நிறைவாய் ஒப்புக்கொண்டுள்ளார்.ஆரம்பகாலங்களில் பாலையாவின் பெயருக்கு பின்னேதான் எம்ஜிரின் பெயர் திரையில் தோன்றுமென்பதிலிருந்து அவரின் செல்வாக்கு நமக்கு புரிகிறது . இருவரும் ஒன்றாக "சதிலீலாவதி "யில் அறிமுகமானவர்கள் , எம்ஜியார் முக்கியநட்சத்திரமாக 20 ஆண்டுகள் ஆனது . பாலையாவுடன் இணைத்து நடிக்கையில் அவரே ரசிகர்களை ஆக்ரமிக்கிறார் என்று ஒரு கட்டத்தில் அவருடன் நடிப்பதையே தவித்திருக்கிறார் எம்ஜிஆர் .

பாலையாவின் நடிப்பில் அடிப்படையிலேயே நகைச்சுவை தொனி உண்டென்பதை ஆரம்பகாலங்களில் சில வில்லன் கதாபாத்திரங்களில் பளிச்சிட செய்தவர் ,ஒரு கட்டத்தில் கொடூர வில்லனிலிருந்து குணச்சித்திர நடிப்புக்கு நகர்ந்திருக்கிறார் அதற்கு தகுந்தாற்போல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்திருக்கிறது பிற்காலத்தில் AP நாகராஜன் ,ஸ்ரீதர், K .பாலசந்தர் போன்றோர் அவரின் மகோன்மதம் உணர்ந்து தங்கள் படைப்பில் பயன்படுத்தியுள்ளனர் .

காதலிக்க நேரமில்லையில் அந்த கதாபாத்திரத்திற்கு பாலையாதான் என்ற முடிவோடு பாலையாவை பார்க்க போகும் ஸ்ரீதரிடம் ரேஸ் ஆர்வமுள்ள பாலையா சனி ஞாயிறு படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற விஷயம் சொல்லப்படுகிறது . கதையை சொல்லி ஒப்புகொள்ளவைத்துவிட்டு பாலையாவிடம் கேட்டேவிடுகிறார் . ஆமாப்பா உண்மைதான் எனக்கு கிண்டில மனச வச்சிக்கிட்டு ஸ்டுடியோக்குள்ள நிக்கமுடியாதப்பா , என்னையும் ஏமாத்திகிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு எதுக்கு . அதான் படப்பிடிப்புக்கு போறதில்லை என்கிறார் பாலையா .புரியுது இருந்தாலும் இந்த படத்துக்கு நீங்க சனி ஞாயிறும் படப்பிடிப்புக்கு வரணும். உங்க கதாபாத்திரம் படம் முழுதும் இருக்கு . கொஞ்சம் யோசிச்சவர் . சரி வரேன் என்றவர் சொன்னபடி காலத்தால் அழியாத அந்த கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆரம்ப அத்தியாயமாக விளங்கியவர் .தனது 58 வயதில் மரணமடைந்தார் .

மீண்டும் சந்திப்போம்  

Wednesday, April 8, 2020

கொஞ்சம் சீரியசாக! ஒரு பழைய படத்துக்கு புது விமரிசனம்! ஹே ராம்!

கமல் காசரை நான் ஒரு நல்லநடிகனாக மட்டும் பார்க்கிறேனே தவிர அரசியலில் வெறும் ஜீரோ தான் என்று உறுதியாக நம்புகிறவன். கமல் காசருடைய தந்தை பரமக்குடி வக்கீல் சீனிவாசன் அந்தநாளைய காங்கிரஸ்காரராக இருந்தவர் என்பதனாலேயே கமலுக்கும் காங்கிரசைப் பற்றியோ நடப்பு அரசியலைப்பற்றியோ கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என்று நம்புவது மிகக் கொடூரமான ஜோக்காக மட்டுமே இருக்கும். 2000 ஆம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படம் கமல் காசருடைய அரசியல் ஞானத்தைச் சொல்வதாக இங்கே இணையத்தில் நிறையப் பீற்றல்கள் உலாவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.


 "தேடிப்பாத்தேன் காந்தியத் தான்  காணோம்காந்தியத்தான் காணோம்ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி!" இந்தப் பாட்டைக் கமல் ஹாசன் சொந்தக் குரலில் பாடியிருப்பதைக் கேட்கிற  தருணங்களில் பரமக்குடி வக்கீல் ஸ்ரீநிவாசன் நினைவு வரும் என்று எழுதியது 2009 காந்தி ஜெயந்தி அன்று.  இப்படிப்பாடி நடித்தது 1998 இல், அடுத்த இருவருடங்களுக்குள் ஹே! ராம் மாதிரித் தெளிவான அரசியல் படம் எடுக்கிற அளவுக்கு கமல் காசருக்கு ஞானம் பிறந்து விட்டதா என்ன? !! என்னபாவம் செய்தேன் யான்? என்னை அரசியலுக்கு அழைக்கிறார்களே! என்று சிலவருடங்களுக்கு முன்பு டிவிட்டரில் புலம்பிய சரித்திரம் கமல் காசருக்கே மறந்துவிட்டது என்றால் என்னத்தை  சொல்ல?  இப்படி கமல் காசர், அடிப்பொடிகள் பற்றி  யோசித்துக் கொண்டிருந்த போது முகநூலில் திரு B R  மகாதேவன் எழுதிய ஹே! ராம் திரைப்பட விமரிசனம் கண்ணில் பட்டது. 

கமல் தன்னை காந்தியின் சீடனாகச் சொல்லிக்கொள்வதுபோன்ற அபத்தம், அபாயம் வேறெதுவும் இல்லை. அவர் உண்மையில் முஹம்மது அலி ஜின்னாவின் சீடர்.ஹேராம் திரைப்படத்தைத் தனது அரசியல் ஞானத்தின் உரைகல்லாகவும் அவரும் அவருடைய ரசிகக் கண்மணிகளும் சொல்லிக் கொள்வது வழக்கம்.

அந்தப் படம் உண்மையில் காந்தியிஸத்தை அல்ல; ஜின்னாயிஸத்தையே உயர்த்திப் பிடிக்கிறது.

அஹிம்சையே உயர்ந்த தர்மம். அதே நேரம் தர்மத்தை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் ஹிம்சை அதைவிட உயர்ந்தது.

இது அதர்மம் தலை தூக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட வன்முறையைக் கையில் எடுத்த தெய்வத்தின் குரல். காந்தியின் குரல் அல்ல.

காந்தி எந்நிலையிலும் இந்திய அளவில் ஆயுதத்தை ஏந்தச் சொல்லவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் குழந்தையை இஸ்லாமியக் குழந்தையாகவே வளர்த்துவா என்று தன் குழந்தையைப் பறிகொடுத்த இந்து தந்தைக்குச் சொன்னவர்.

ஹே ராம் படத்தில் தன் மனைவியை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றதால் கோபம் கொள்ளும் சாகேத ராம், தான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்து சமூகமே இப்படி பாதிக்கப்பட்டிருப்பது கண்டு குமுறுகிறான். காந்தியின் அஹிம்சையே இதற்குக் காரணம் என்று காந்தியைக் கொல்லப் புறப்படுகிறான்.

அந்த இடத்தில் தற்செயலாகத் தன் இஸ்லாமிய நண்பனைப் பார்க்கிறான். பல இஸ்லாமிய அப்பாவிகள் இந்து அடிப்ப்டைவாதிகளால் தாக்கப்படவிருப்பதையும் பார்க்கிறான். அவர்களைக் காப்பாற்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறான்.

இது காந்தியத்துக்கு முற்றிலும் எதிரானது.

காந்தி எந்த நிலையிலும் யாரையும் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை.

ஜாதி விஷயத்தில் மேல் ஜாதியினரே தமது தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்யவேண்டும் என்று சொன்னார்.

மத விஷயத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வன்முறையைக் கையில் எடுத்தால் பேரழிவு ஏற்படும் என்பதால் பொறுத்துக்கொண்டு போகச் சொன்னார். ஆனால், யாரைக் காப்பாற்றவும் ஆயுதத்தை அவர் பரிந்துரைக்கவே இல்லை. ஆயுதத்தை ஏந்தச் சொன்னது ஜின்னா.

சாகேத ராம் அதைத்தான் செய்கிறான். ஆனால், அதை காந்திய சிந்தனையின்படி வந்தடைந்ததாகவும் சொல்கிறான். முழு மடத்தனம்.

பத்து அப்பாவி இஸ்லாமியர்களைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது சரி என்றால் 100 இந்துக்களைக் காப்பாற்ற அதே ஆயுதத்தை ஏந்துவதும் சரியாகத்தானே ஆகும். அப்படியானால், சாகேத ராம் கையில் இருக்கும் ஆயுதம் யாரைப் பார்த்து நீண்டிருக்கவேண்டும்.

அப்பாவிகளைக் கொல்ல வந்த அடிப்படைவாதிகளிடம் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். என்னை முதலில் கொல் என்று நிராயுதபாணியாக முன்னால் வந்து நின்றிருப்பார். துப்பாக்கியை எடுத்துச் சுட்டிருக்கமாட்டார்.

காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கமல்ஹாசன் செய்தது அப்பட்டமான அசட்டுத்தனமான அபாயகரமான தீவிரவாத ஆதரவு நிலைப்பாடுதான்.

ஒருவகையில் அப்பாவிகளைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது நிச்சயம் சரிதான். காந்தியம் தோற்கும் இடம் அது. மேலும் அந்த நியாயம் இஸ்லாமிய அப்பாவிகளைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தக்கூடாது. ஆனால் ஹேராமில் அதைத்தான் செய்திருக்கிறார் கமல். அப்படியாக அவர் ஜின்னாவின் சீடராகவே அன்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதென்றால், முதல் மனைவி இறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது (இது ரசிகர்களுக்காகச் செய்த கிளுகிளுப்பு), இயக்கத்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருக்க இரண்டாந்தாரம் கட்டிய சாகேத ராமையே அந்த இயக்கம் காந்தியை கொல்வது போன்ற மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்தது (அதற்கு சப்பைக் காரணம் வேறு சொல்லியிருப்பார்) என ஏகப்பட்ட குறைகள் இருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதானால், தான் எந்த அரசியலைப் பின்பற்றுகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூட வக்கில்லாத நபும்சகமே கமலிடம் வெளிப்படுகிறது.

 திரு B R  மகாதேவன் சொல்வது எனக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது என்பதால் இங்கே அவர் அனுமதியில்லாமலேயே பகிர்ந்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.  


Monday, February 17, 2020

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது? -2

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது? ஒரு பத்துநாட்களுக்கு முன்னால் இந்தப் பக்கங்களில் எழுதியது ஞாபகமிருக்கிறதா? இடது சாரிகள் சொல்லிவைத்தமாதிரி உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்தியாவிலும் தேய்ந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிருப்பதும், வலது சாரிகள் குறிப்பாக வலதுசாரி தேசியவாதம் எல்லா இடங்களிலும் வளர்ந்துகொண்டிருப்பதும் தற்செயலானது அல்ல. வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது என்ற கேள்வியைக் கொஞ்சம் ஆழமாகப் பரிசீலிப்பது, இடதுசாரிகள் எல்லாக் காலங்களிலும்  மாற்றம் முன்னேற்றத்துக்கான அடையாளமாக இருப்பதில்லை என்பதோடு வலதுசாரி தேசியவாதம் என்பது இடதுசாரிகள் கூவுவதுபோல ஃபாசிச பூச்சாண்டியுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.


இந்த 77 நிமிட விவாதத்தைப் பொறுமையாகப் பார்க்க முடியுமானால், வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது என்ற கேள்வியை இந்தியச் சூழ்நிலையோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பதிவுகள் எழுதுவது ச்ச்சும்மா ஜாலிக்கு, ஜஸ்ட் டைம் பாஸ், இப்படி அரட்டை மடமாக மாற்றுவதில் எனக்கு சிறிதும் வல்லமை இருந்ததில்லை. இங்கே எழுதுவது கொஞ்சம் உரத்த சிந்தனையாகத்தான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

கேள்வியின் பரிமாணமும், உதவியாகக் கொடுத்திருக்கும் வீடியோவும் பெரியது என்பதால் பதிவை சுருக்கமாக இங்கே முடித்துக்கொண்டு .....

மீண்டும் சந்திப்போம்.       

 

Monday, January 6, 2020

JNU கலவரங்கள்! பல்கலையை இழுத்து மூட வேண்டிய நேரம்!

சென்ற டிசம்பரில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர் போராட்டம் என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் JNUவை இழுத்து மூடுங்களேன்  என்றொரு  பதிவை எழுதியது எவ்வளவு சரியானது என்பதை நிரூபிக்கிற மாதிரி நேற்றைய தினம் JNU பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வன்முறை சம்பவங்கள் இருக்கின்றன. இடதுசாரி மாணவர் அமைப்புக்களும் ராகுல் காண்டியும் எப்போதும் போல ஆளும் தரப்பின் மீதே குற்றம் சாட்டி அறிக்கைகள் விட ஆரம்பித்திருக்கிறார். பிள்ளைப்பூச்சி அரவிந்த் கேசரிவாலு கூடப் பொடி வைத்து ட்வீட்டரில் ஒரு செய்திபோட்டிருக்கிறார்.


எப்போதுமில்லாத அதிசயமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் போலீஸ் உதவியை நாடியிருக்கிறது. அதைவிட பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டிருக்கிற அறிக்கையில் விடுதிக்கட்டணம், செமெஸ்டர் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து ஏழெட்டு வாரங்களாகப் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தரப்பு கடந்த சில நாட்களாகவே வளாகத்துக்குள் உள்ள பல கட்டடங்களை மூடி வைத்து, போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்களை குளிர்கால செமெஸ்டருக்காக அந்தக் கல்விக் கூடங்களுக்குள் நுழைய விடாமல் கைகலப்பில் இறங்கியதே பிரச்சினையின் ஆரம்பம் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது. 


நேற்றுவரை பொருளாதார மேதையாக மட்டுமே வேடம் போட்டுவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா பானாசீனா JNU விவகாரத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் அவதாரமும் எடுத்திருக்கிறார்   It's act of impunity, can only happen with support of govt: P Chidambaram on JNU clash என்கிறது இந்தச் செய்தி   ஆக இடதுசாரிகளும் காங்கிரசும் பிணந்தின்னிக் கழுகுகளாக, சிறு  பிரச்சினை  எங்கே எழுந்தாலும் ஊதிப்பெரிதாக்கிக் கலவரம், வன்முறையைத் தூண்டுகிற அரசியல் செய்ய மத்திய அரசின் நிதியுதவி, நேரடி நிர்வாகத்தில் உள்ள   பல்கலைக்கழங்களைப் பாழாக்கத் துணிந்துவிட்டார்கள் என்பது அடுத்தடுத்து நடக்கும் அர்த்தமில்லாத கலவரங்கள் போராட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

    
இந்த இரண்டு புள்ளிகளுக்கும் மாணவர்கள் மீது எழுந்திருக்கிற திடீர்ப் பாசம் நம்பக்கூடியது தானா? இல்லை    , மாணவர்களைத் தூண்டிவிட்டுத் தங்கள் தேர்தல் அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்கிற சுயநலம்தானா? 


JNUவுக்கு சளிபிடித்தால், நாடெங்குமா தும்மல் வரும்? விளையாட்டுப்பிள்ளைகளான மாணவர்கள் தங்களை அரசியல்வாதிகள் ஒரு கருவியாகப் பயன் படுத்திக்கொள்வதை அறியாமல், ஆதரவு, போராட்டம், புண்ணாக்கு என்றே தொடர்ந்தால், எதிர் காலம்  என்னாவது? 

மாணவர்களை அரசியல்படுத்துவதால் என்ன பெரிய நன்மைகள் இதுவரை கிடைத்திருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!

மாணவர்களைப் பாழாக்கும் அரசியல் தொடர்ந்தால் JNU பல்கலைக்கழகத்தை சிலகாலம் மூடிவைப்பது மட்டுமே சரியாக இருக்கும், முதலில் சுட்டி கொடுத்திருக்கிற பழைய பதிவை எதற்கும் ஒரு முறை படித்துப்பார்த்துவிடுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.          

Saturday, October 26, 2019

அடடே! வாருங்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அடடே! மதி வரைந்த படத்தோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 


உறவு, சுற்றம், நட்புகளோடு இந்தத் தீபாவளித் திருநாள் மிக மகிழ்ச்சியான நாளாக அமைய இதயபூர்வமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!


வாழி நலம் சூழ!

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, September 12, 2019

வண்டி உருண்டோட அச்சாணி தேவை!

குடும்பமோ, தொழிற்சாலையோ, அல்லது ஒரு அரசியல் கட்சியோ இப்படி   எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அது சுமுகமான முறையில்  நடக்கவும், முன்னேறவும் அதற்கு  அடிப்படையான ஒரு விஷயம் தேவைப்படும்! என்னவென்று ஊகிக்க முடிகிறதா? முடியவில்லை என்றால் இந்தப்பாட்டை கொஞ்சம் கேளுங்கள்!


  
வண்டி உருண்டோட அச்சாணி தேவை!  இந்த அச்சாணி எப்படி இருக்கும் என்பது  மாட்டு வண்டிச்சக்கரத்தைப் பார்த்திருந்தால், வீடியோவில் மைனாவதி கையில் வைத்துக் கொண்டு பாடுகிறாரே, அதுதான் என்பது தெரிந்திருக்கும்! வீடியோவில் சரியாகத் தெரியவில்லையா? இங்கே படத்தில் பாருங்கள்!


அச்சாணி, கடையாணி என்று அழைக்கப்படும் இந்தக் கொண்டி தான் வண்டி ஓடுகிற வேகத்தில் சக்கரம் தனியாகக் கழன்று வெளியே போய்விடாமல் பாதுகாக்கும் அம்சமாக இருக்கிறது. Linchpin என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்! சேத் கோடின் இந்தத்தலைப்பிலேயே ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறார்.

நிறுவனங்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால், அங்கே பலவிதமான குணாதிசயங்களுடன் ஊழியர்கள் இருப்பார்கள். எவ்வளவு மெதுவாக வேலைசெய்ய முடியுமோ, அவ்வளவு மெதுவாகச் செய்வோமே என்ற மனோபாவத்துடன் பலர். அவர்களை வேலைவாங்குவதற்கென்றே மேற்பார்வையாளர் என்று சிலர் அதிகாரம் செய்துகொண்டிருப்பதையும் பார்க்க முடியும் இல்லையா? இந்த இரண்டுக்கும் நடுவே, மிகச்சில பேர் தங்களுடைய வேலையை, கூலிக்காகச் செய்வதுதானே என்றில்லாமல் முழு ஆர்வத்தோடு செய்துகொண்டு இருப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் தான் அந்த நிறுவனத்தின் அச்சாணிகள்! இந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்கிற சேத் கோடின் பதிவு இங்கே. 

இதை படித்த பிறகு நமக்கு நன்றாகப் பெயர் தெரிந்த டொயோடா கார் நிறுவனம்! Toyota Production System  (TPS) கார் தயாரிப்பதையே எப்படி ஒரு நுணுக்கமான மேலாண்மை முறையாக வளர்த்து வந்தது என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? சீனாவின் தரமற்ற உற்பத்தியும் மலிவுவிலையில் உலகெங்கும் கொட்டி வருவதும் இன்றைக்கு எப்படியெல்லாம் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது என்பதையும் யோசித்துப் பார்க்கிற விதமாக ....... 

வடிவேலு அடி வாங்கினா நமக்குக் காமெடி! டொயோடா சரிந்தால்.....! 

இப்படி டொயோடா கார் உற்பத்தி முறையைப் பற்றி, உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தர உத்தரவாதம் என்றிருந்ததற்கும், தரமே இல்லாமல் விலை மலிவு என்ற சாக்கில் குப்பைகளைத் தள்ளிவிட்ட சீனக் கதையையும் ஒப்பிட்டுச் சொல்லியிருந்ததை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்! அன்றைக்கு எழுதும் போது சீனப்பூச்சாண்டி பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் உலகத்தைப் பீடித்திருக்கும் பெரிய அபாயமாக  இப்போது நன்றாகப் புலப்படுகிறது.       


2009, 2010களில் எப்படி எதைப்பற்றியும் கவலை இல்லாமல் செய்திகளைத் தேடிப்படித்து, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு என்ற தலைப்புக்களில் வரிந்துவரிந்து எழுதிக் கொண்டிருந்தேன் என்று இப்போது திரும்பிப் பார்க்கையில்,  வெப் சீரீஸ், சினிமா என்று எவ்வளவு சோம்பேறி ஆகிவிட்டேனென்று எனக்கே மிகக்கேவலமாக  உறைக்கிறது.

மீண்டும் சந்திப்போம். 
       

Saturday, August 31, 2019

செய்திகளோடு கொஞ்சம் உலாவரலாம் வாங்க!

சீன அரசியலைப்பற்றியோ சீன அதிபராக இரண்டாவது முறையாகவும் தொடருகிற ஜி ஜின்பிங் பற்றியும் நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? என்ன கிண்டலா? பேசினால் காங்கிரசைப்பற்றியே பேசுவது இல்லாவிட்டால் ஏதாவது சீனா கொரியா அமெரிக்கப் பூச்சாண்டி காட்டுவது! இதெல்லாம் சரியில்லை என்று முனகுகிறீர்களா?



நேற்று முன்தினம் பிபிசி 2 சேனலில் ஒளிபரப்பான China: A New World Order என்கிற டாகுமென்டரியின் முதல் பகுதியை  (60 நிமிடம்) பார்க்கிற வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்தது. 

Rarely has the word-of-mouth surrounding a new Chinese star differed so dramatically from his official résumé. Xi Jinping was anointed in October as the likely successor to President Hu Jintao as party chief in 2012, and his canned bio says little about his family history. But China's gossip mills have been churning overtime. Turns out Xi's dad, revolutionary hero Xi Zhongxun, was purged three times by Mao Zedong and later became a pro-market reformer. He was also one of the few leaders to defend Hu Yaobang, a progressive party chief sacked in 1986, and to condemn the 1989 Tiananmen Square massacre—after which he was rarely seen in public again இப்படி 2012 இல் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச்செயலாளராகவும் அதனாலேயே by default சீன அதிபராகவும் ஆன கதையை ஜோனாதன் ஆன்ஸ்ஃபீல்ட் ஆரம்பிக்கிற  விதத்தை இப்போது திரும்பிப் பார்த்தால், அடுக்கடுக்கான பொய்களால் கட்டப்பட்டது சீன அரசியல் என்பது தெளிவாகவே புரிகிறது. சந்தேகமிருந்தால் நீலவண்ணத்தில் இருக்கிற பகுதியை இன்னொருமுறை படித்துப் பாருங்கள்!

ஜி ஜின்பிங் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அரசின் பிடி (கம்யூனிஸ்ட் கட்சியின் பிடி என்று வாசித்துக் கொள்ளவும்) நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இறுகிக் கொண்டே வரும் விதத்தை இந்த டாகுமெனடரி கொஞ்சம் எளிமையாகவே சொல்கிறது. அதிபர் பொறுப்புக்கு வந்தவுடனேயே ஊழலுக்கெதிரான நடவடிக்கை என்று பல்லாயிரக்கணக்கான ஜனங்களைச் சித்திரவதை செய்த நாடகம் என்று ஆரம்பித்து கட்சிக்குள்ளும் வெளியிலும் தனக்கு எதிரான குரலை ஒடுக்க ஆரம்பித்ததில் இருந்து,   ஹாங்காங்கில் வலுத்துவரும் போராட்டங்கள், ஜின் ஜியாங் பகுதியில் உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகள், என்று ஒருமணிநேரத்தில் கிடைத்த காணொளிகள், அதிருப்தியாளர்கள், சீன விவகார எக்ஸ்பெர்ட்களின் கருத்து என்று ஒரு நல்ல தொகுப்பாக இருந்தது. இதன் 2ஆம் பகுதி செப்டெம்பர் 5 அன்றும், 3வதும் இறுதியுமான எபிசோட் செப்டெம்பர் 12ஆம் தேதியும் ஒளிபரப்பாகிறதாம்! பார்க்க மனமிருப்பவர்களுக்கு மார்க்கமும் உண்டே!


ரிசர்வ் வங்கியின் உபரி இருப்பான 6.8% இலிருந்து 1.3# ஐ மத்திய அரசுக்குக் கொடுத்தது சுரேந்திராவுக்கு பொறுக்க முடியவில்லை என்றால் கீழே இவருக்கு வேறு மாதிரி!   


ங்கி ஊழியர் சங்கத்தலைவராக இருந்தால் காமெடிப் பீசாக இருக்கக்கூடாதென்று யார் சொன்னார்கள்? AIBEA வின் CHV என்று இனிஷியலால் அழைக்கப்படுகிற C H வெங்கடாசலம், "இந்த வங்கி இணைப்பு மூலம் எந்தவிதமான பலனும் கிடைக்காது. மாறாக, 5 துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த பின், வங்கியின் வாராக்கடன்தான் அதிகரித்துள்ளது.நிரவ் மோடியின் மோசடியை கண்டுபிடிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி தவறிவிட்டது, அப்படியிருக்கும் வங்கிகள் எவ்வாறு மிகப்பெரியதாக மாற்றும் போது, எவ்வாறு சிறந்த கண்காணிப்பில் ஈடுபடமுடியும்?". இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் வங்கி இணைப்பைக் கண்டித்து இன்று பிற்பகலில் சென்னையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கறுப்பு பட்டை அணிந்து பணிக்கு வருவார்கள் என்றும் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார் என்று இந்துதமிழ் திசை நாளிதழ் தகவல் சொல்கிறது. CHVயால் முடிந்தது ஆர்ப்பாட்டமும், அதிகபட்சம் ஓரிருநாள் வேலைநிறுத்தம் என்ற அடுத்தகட்ட காமெடி மட்டும் தான்!


இந்தவிவகாரத்தில் எனக்கொரு கருத்துமில்லை! ஆனால் முகநூலில் ஏதோ புகைந்து கொண்டே இருக்கிறது போல!
             

இந்த செய்தியைப் ஒட்டு பதிவர் வால் பையன் தனக்குத்தானே ஈரோட்டு Tao என்று பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! ஈரோடு என்றால் சாதாரணமாக நினைவுக்கு வருவது வெங்காயம் தானே! இது என்ன புதுசா?


துரை புத்தகத்திருவிழா நேற்றைக்கே ஆரம்பித்து விட்டது போல! எனக்குப் போய்வருகிற வாய்ப்பில்லை. யாராவது புத்தக அபிமானம் உள்ள மதுரைப்பதிவர் எவராவது தினசரி நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார்களா என்று பார்க்கலாம்! அதெல்லாம் சென்னைப் புத்தகக்  கண்காட்சிக்குத்தான் என்று சொல்கிறீர்களா?  டெல்லி அப்பளம் கான்டீன் அங்கே மட்டும்தானா?

மீண்டும் சந்திப்போம்.
                          

Friday, August 30, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் சினிமா! கொஞ்சம்போல விமரிசனம்!

ச்ச்சும்மா ஜாலிக்கு என்று ஆரம்பித்தாலும், பதிவின் முக்கியமான செய்தியே வேறு! என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்! இன்றைக்கு இரண்டு படங்கள், அதுவும் மிகப்பழைய படங்களை விமரிசனத்துக்கு எடுத்துக் கொள்ளப்போகிறோம்! விமரிசனம் என்றால் மிகச்சிறியதாக மட்டுமே! பயம் வேண்டாம்! 😂😱🙏  


ரிலீசாகி 71 வருடங்களை நிறைவு செய்யப்போகிற சபாபதி என்கிற நகைச்சுவைப் படத்தை இன்று பார்த்தாலும் கூட, வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது என்பது நான் தரும் காரண்டீ! மேலே சாம்பிளுக்குக் காட்டுகிற 39 நிமிட ஒளித் துண்டைப் பார்த்தீர்களானால் என்னைப்போல நீங்களும் கூட காரண்டீ கொடுப்பீர்கள்! 

சபாபதி! இது கதாநாயகன் TR ராமச்சந்திரன், அவரது வேலைக்காரன் காளி N ரத்தினம் இருவருக்கும் ஒரே பெயர்! கதாநாயகன் வசதியான, படிப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத, நண்பர்களோடு சீரியஸாக  லூட்டி அடிக்கிற ரகம்! வேலைக்காரன் படிப்பறிவே இல்லாத சொன்னதைச் சொன்னபடி செய்கிற தற்குறி! சொற்படி கேட்பது நல்லது தானே என்கிறீர்களா? சோடா உடைத்துக் கொண்டுவா என்று எஜமானன் சொன்னால் குண்டு சோடா பாட்டிலை சுத்தியலால் உடைத்துத் தட்டில் வைத்துக் கொண்டு வருகிற ரகம்! இப்படிக் கதாநாயகனும் வேலைக்காரனுமாக லூட்டி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி? கூடவே காமெடி லூட்டி அடிப்பதற்காக தமிழாசிரியர் சின்னசாமி முதலியாராக வரும்  K சாரங்கபாணி முதல் தோசை ராமன் என்கிற சின்னக் கேரக்டர் (நடித்தவர் பெயர் தெரியவில்லை) வரை ஒரு சின்னப் பட்டாளமே காமெடி செய்து கலக்குகிறது. 

படிப்பில் மந்தமான அம்மா செல்லம் கொடுத்துக் கெடுத்த மந்தபுத்தியுள்ள கதாநாயகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பெண் சிவகாமு (R பத்மா)   நன்றாகப் படிக்கிறவள். கதாநாயகன் திருமணமான பின்னும் கூட அதே மாதிரிப் பொறுப்பில்லாதவனாகத் தான் இருக்கிறான். கதா     நாயகி வீட்டு வேலைக்காரி குண்டுமுத்து (CT ராஜகாந்தம்) வேலைக்காரன் சபாபதியோடு காதலாகிறாள். இந்த இருபெண்களும் எப்படித் தங்கள் கணவன்மார்களை common sense உள்ளவர்களாக மாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கதாநாயகன் வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை பாஸ் .செய்து முடித்து விடுகிறான். வெறும் நாற்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் மொத்தப்படமும் முடிந்து AV மெய்யப்ப செட்டியாருக்குக் காசை அள்ளிக்  கொடுத்த படம் இது. படத்தில் PA பெரியநாயகி பாட வயலின் மிருதங்கம் இவற்றையும் பெண்களே வாசிக்கிற மினிகச்சேரி படத்தின் இன்னொரு ஸ்பெஷல் பம்மல் சம்மந்த முதலியார் 1908 இல் எழுதிய முதல் கதை என்பது கூடுதல் விசேஷம். யூட்யூபிலேயே தேடினால் முழுப்படமும் நல்ல பிரிண்டில் கிடைக்கும். 


சபாபதி படம் கொடுத்த வெற்றி, தெம்பில் AV M செட்டியார் அதேபோல இன்னொரு காமெடிப்படத்தைத் தயாரிக்க விரும்பி எடுத்த படம்  என் மனைவி 1942 இல் வெளியான படம் K சாரங்கபாணி மனைவி மீது சந்தேகம் கொள்வதில் எழுகிற சம்பவங்களைக் காமெடியில் கோர்த்து எடுத்த படம். ஒரு மராத்தி கதையை பட இயக்குனரே திரைக்கதை எழுதி எடுத்த படம்  12 பாடல்கள் என்று வஞ்சனையே இல்லாமல் பாடல்களோடு வந்த படம்.

  
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் என்ற இந்தப்படப்பாடல் மிகவுமே பிரபலமானதாக இருந்ததாம்.


அறுபது வயது முதியவரான இந்தப் பழம்பெரும் கிழம் சாரங்கபாணி எந்தச் சிங்காரியை ஒய்யாரியை மயக்க இப்படித் தன்னை அலங்கரிக்கிறது என்று தான் தெரியவில்லை! என்ற குறிப்போடு நாம் இருவர் படத்திலிருந்து இந்த அரைநிமிட வீடியோவை வலையேற்றிய Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI அதிசயிக்கிறார் பாருங்கள்! அதுதான் இந்தப்பதிவில் பேச வந்த முக்கியமான சங்கதி!

கும்பகோணத்துக்காரரரான கே சாரங்கபாணி 1904 இல் பிறந்தவர். இசை வேளாளர். நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்.கலைவாணர் NS கிருஷ்ணனைப் போல பன்முகத்திறமை கொண்டவர். 1935 இல் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தயாரித்த பக்த ராம்தாஸ் படத்தில் தான் திரைப்பட அறிமுகம். பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களிலேயே நடித்திருந்தாலும், சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் கூட  நடித்திருக்கிறார். எண்பது வயது வரை வாழ்ந்த கே சாரங்கபாணி நடிகர் தியாகுவின் தாத்தா என்பது தெரியுமோ? 


தில்லானா மோகனாம்பாள் படத்தின் இந்த கிளிப் சாரங்க பாணி பாவத்தோடு தவில் வாசிப்பதில் இருந்துதான் ஆரம்பம்.

Randor Guy என்ற புனைபெயரில் சினிமா விஷயங்களை மிக சுவாரசியமாக எழுதுகிற எழுத்தாளர் கே  சாரங்கபாணி பற்றியும்  சில  தகவலைச் சொல்கிறார். 

Sarangapani played 10 roles in a short film known in those days as ‘farces,’ which was screened along with the main movie. In some cases, the farces were more interesting than the main film! Sarangapani even played female roles in the ‘Milagaipodi’ farce! (Milagaipodi means red chilli powder!) His very first appearance in the farce was a hit, as he was already a noted theatre comedian.   

ஒரு நல்ல கலைஞனை நினைவு படுத்திக் கொள்வதற்காக.

மீண்டும் சந்திப்போம். 
  

Monday, August 26, 2019

கொஞ்சம் திரைப்படங்கள்! கொஞ்சம் சீரியல்கள்!

சில திரைப்படங்களுக்கு ஊடகங்கள் கொடுக்கிற அதீத பில்டப்பை நம்பிப்படம் பார்க்கப்போனோமேயானால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்பதை பலமுறை அனுபவித்துப் பார்த்திருந்தாலும் ........!



ஆர்டிகிள் 15! இந்தப்படத்தை சமூக ஊடகங்களில் ஆஹா ஓஹோவென தலையில் தூக்கிக் கொண்டாடுவதைப் பார்த்து நானும் சிக்கிக்கொண்டேன்! சப் டைட்டில்களுடன்தான் படத்தை பார்த்தேன் என்றாலும், இந்தப்படத்தை  ஒரு போலீஸ் கிரிமினல் விசாரணை த்ரில்லராகவோ அல்லது தம்பட்டமடிக்கப்பட்ட  மாதிரி உத்தர பிரதேசத்தில் நிலவும் ஜாதிப் பிரச்சினையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டின படமாகவோ எனக்குப் படவில்லை.


படத்தின் துவக்கத்தில் சயானி குப்தா ஒரு குழுவோடு சேர்ந்து  இந்தப் பாடலைப் பாடுவதாக வருகிறது. பாடல் என்னவோ பழசுதான்! ஒரு தலித் பெண்ணாக இந்த தேசத்தில் வசதிபடைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி குறித்த ஒரு பிரசார பாடலைப்     பயன் படுத்தி இருக்கிறார்கள்! இந்தப்பாடல் குறித்து யூ ட்யூபில் விவரம் தேடினால்  நவம்பர் 2011 இல் வலையேற்றி இருப்பதாகத் தகவல் சொல்கிறது. அடுத்து  பாப் டைலன் ஆல்பத்தில் இருந்து இந்தவரிகளில் ஆரம்பிக்கும் பாடலும் ஒலிக்கிறது. அந்தஆங்கிலப்பாடலும் அதே உள்ளவன் இல்லாதவன் இடைவெளி பற்றிச் சொல்வதுதான். 

How many roads must a man walk down
Before you call him a man?
How many seas must a white dove sail
Before she sleeps in the sand?
Yes, 'n' how many times must the cannon balls fly
Before they're forever banned?
The answer, my friend, is blowin' in the wind

The answer is blowin' in the wind 


இந்த இரண்டு பாடல்களை வைத்துக் கொண்டு  ஒரு கதையை பின்னினால் எப்படி இருக்கும்? கமல் காசர் formula படி மானே தேனே சேர்க்கிறமாதிரி காவிக்கொடியுடன்  கும்பலைக் காட்டி என்னவோ அரசியலும் சேர்த்திருக்கிறார்கள்.இதுதான் படம் என்று சொன்னால் சப்பென்று ஆகிவிடாதா? அப்படித்தான் சப்பென்று ஆகியிருக்கிறது!


பொதுவாக, கொஞ்சம் ஆங்கில சீரியல்களைப் பார்க்கிற வியாதி என்னுடைய மகனிடமிருந்து தொற்றிக்கொண்டது தான் என்றாலும் Netlix இல் ஸ்ட்ரீமிங் வீடியோக்களாகப் பார்ப்பது ஒரு addiction என்றே ஆகிவிட்டது. இஸ்தான்புல் பின்னணியில் The Protector என்றொரு வெபசீரீஸை ஆங்கில சப்டைட்டில்களுடன் பார்த்துக் கொஞ்சம் அதிசயித்தேன். அதென்னவோ முதல் சீசன் நன்றாக இருக்கிறதே என்று அடுத்த சீசனைப் பார்க்கப்போனால் நன்றாக வைத்துச் செய்து விடுகிறார்கள்!  The Protector சீசன் 2 என்னைப் பொறுத்தவரை ஏமாற்றமே! ஏமாந்த கதையை யாராவது விலாவாரியாகச் சொல்லிக்கொள்வார்களா என்ன?!


அப்படியானால்  தமிழில் சீரியல்களே பார்ப்பதில்லையா? கலர்ஸ் டிவியில் பேரழகி, திருமணம் என்று இரண்டு சீரியல் நடுவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்! பேரழகி கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பித்தார்களே என்று பார்க்க ஆரம்பித்ததில்,இதுவும் சேர்ந்து கொண்டது. ஆங்கிலத்தில் அது ரெகுலர் சீரியலாக இருக்கட்டும், வெப்சீரீஸாக இருக்கட்டும் ஒரு சீசன் 13 எபிசோடைத்தாண்டாது. கதையை நன்றாகக் கூறுபோட்டு, இந்த சீசனுக்கு இதுவரைதான் என்று திட்டமிட்டு கதையை நகர்த்திக் கொண்டுபோகிற உத்தி மிகவும் வெற்றிகரமாக எடுபட்டதை நம்மூர் தயாரிப்பாளர்கள் லட்சியம் செய்வதே இல்லை. கொஞ்சம் நன்றாகப் போகிறது என்று தெரிந்து விட்டால் போதும் , சவ்வாக இழுத்து ஆயிரம் எபிசோடுக்கும் மேலேயும் போகிற பேராசை! போன வருடம் மே மாதம் ஆரம்பித்ததாக நினைவு, பேரழகி போன சனிக்கிழமை 394 வது எபிசோடைத் தொட்டுவிட்டார்கள்!

ஆரம்ப நாட்களில் பொதிகையில் வாரம் ஒருநாள்தான், 13 வாரங்களில் எத்தனைபெரிய கதையாக இருந்தாலும் முடித்துவிடுவார்கள்! அகிலனின் சித்திரப்பாவையாகட்டும், ஆளவந்தார் கொலைவழக்காகட்டும் 13 எபிசோடுதான்! இந்த மெகா மெகா சீரியல் என்று சவ்வாக இழுக்கிற கொடுமையை சன் டிவிதான் ஆரம்பித்து வைத்து இன்றைக்கும் அமோகமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

கொஞ்சம் மாறுதலுக்காக.இப்படியும் எழுதிப்பார்க்கலாமே! 

மீண்டும் சந்திப்போம்.
                                

Thursday, August 22, 2019

சிதம்பரம் கைது! சில பார்வைகள்!

இந்திய அரசியலில் மக்கள் செல்வாக்கு இல்லாமலேயே தன் கிரிமினல் புத்தியால் முன்னணிக்கு வந்தவர் செட்டி நாட்டு இளவல், கலீஞரின் வார்த்தைகளில் சிவகங்கை சின்னப்பையன், சீனாதானா இப்போது நாடுமுழுக்க அறியப்படும் கேலிப்பொருளாகி இருக்கிறார்! நேரலையில் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அதே பல்லவி அதே வாதங்களைவைத்து ஜாமீனில் வெளியே எடுக்க முயற்சி செய்துகொண்டிருப்பது பற்றிய செய்திகளைக் கேட்டுக் கொண்டே சிதம்பரத்தின் கைதுவிவகாரம் என்னென்ன தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பதில் சில சுவாரசியமான பார்வைகள் இங்கே  


சிதம்பரம் என்ன தியாகியா? அல்லது  மக்கள் செல்வாக்குள்ள தலைவரா? இந்தக்கேள்விகளுடன் கருத்தைச் சொல்கிறார் ரவீந்திரன் துரைசாமி வீடியோ 10 நிமிடம்.

ப.சிதம்பரம் கைது ஆவாரா, மாட்டாரா என்பது பற்றியே எல்லோரும் பேச வேண்டும். காஷ்மீர் பற்றியோ, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பற்றியோ யாரும் பேசி விடக் கூடாது. இதுதான் மோடி வித்தை! #PChidambaram #DMK #Kashmir
10:25 AM · Aug 21, 2019
அவரவர் கவலை அவரவருக்கு! #ஓசிச்சோறு 


டில்லி ஜந்தர் மந்தரில் திமுக எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கலீஞர் செய்திகளில் தவிர வேறெந்த சேனலும் இதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்த மாதிரி எனக்குத் தெரிந்து இல்லை. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களை விடுதலை செய் என்று கோஷமிட்டவர்கள் மறந்ந்துபோய்க் கூட சிதம்பரத்தை விடுதலை செய் என்றோ அவரது கைதுக்கு கண்டனமோ தெரிவிக்கவில்லை. ஒருநிமிட வீடியோ   


ஊழல் செய்ததும் கொள்ளையடித்ததும் நாட்டுக்கு அவமானம் இல்லையாம்! சிதம்பரம் வீட்டுச் சுவரேறிக்குதித்து சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்ததுதான் நாட்டுக்கு அவமானமாம்!இது இசுடாலின் காமெடி! வீடியோ 4 நிமிடம்.


கராத்தே தியாகராஜன் வேறுவிதமாகக் கத்தி போடுகிறாரோ? காங்கிரஸ் முதலாளிகள் ஏற்கெனெவே இந்த வில்லங்கமான சீனாதானா தங்களை எங்கே கைகாட்டிவிடுவாரோ என்று பயந்து கொண்டிருக்கையில் காங்கிரசாவது சிதம்பரத்தைக் கைகழுவுவதாவது!! வீடியோ 9 நிமிடம் 


இந்த வாதப்பிரதிவாதங்களை சற்றுக் கேலியுடனேயே பார்க்க முடிந்தாலும் கலீஞரின் ராசியான மகள் கனிமொழி சிறையில் இருந்த அந்த நாட்களில் ஜெயிலா பெயிலா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது; இங்கே அந்தக் கேள்வியே இல்லை! விசாரணைக்காக கஸ்டடியில் 5 நாட்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் ஏஜென்சிகளின் வாதம்! நானொரு சீனியர் வக்கீல்! சட்டம் என் கையில்!  என்பது சிதம்பரம் தரப்பு வாதம் என்பதையும் நினைவுபடுத வேண்டி வருகிறதே!   

வழக்கறிஞர்களைப் பற்றி ஒரு கருத்து உண்டு. பாதி உண்மை மட்டுமே பேசத்தெரிந்தவர்கள் என்று ஒரு வழக்கறிஞரே சொன்னதாக ஞாபகம். எதற்காக இப்போது இது? இன்னும் சற்று நேரத்தில் சிதம்பரத்துக்கு சிபிஐ கஸ்டடியா அல்லது ஜாமீனா என்பதை நீதிமன்றம் எப்படித் தீர்ப்பளிக்கப் போகிறது என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கையில், கொஞ்சம் நமது தரப்பு வாதத்தையும் ரெடி பண்ணிக் கொள்ள வேண்டாமா?  சாமானியர் என்றால் ஜட்ஜ் தீர்ப்பை டிக்டேட் செய்து நீதிமன்றத்தில் சொல்ல 30 நிமிடங்களே போதும். ஆனால் சட்டம் என் கையில் என்று மமதையோடு திரிந்தவர் விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடுமா?  

சிதம்பரம் கைது விவகாரத்தினை ஆர்வமாக எழுதுகின்றவர்கள் வாழ்க‌
ஆனால் சி பி ஐ மத்திய உள்துறை அமைச்சக நிர்வாகக் கட்டுப்பாட்டில் வருவதாக யூகித்துக் கொண்டு இன்றைய உள்துறை அமைச்சரையும் கைதாகியிருக்கும் முன்னாள் உள்துறை அமைச்சரையும் துறை சார்ந்து கொக்கி போட்டு எழுதுவதற்கு முன்பு சிபிஐ வலைத் தளத்தையும், உள்துறை வலைத் தளத்தையும் ஒரு முறை விஜயம் செய்துவிட்டு எழுதவும்
சிபிஐ Prevention of Corruption Act, 1988 கீழ் குற்றங்களை விசாரிக்கும் போது அதனை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மேற்பார்வை செய்யும். பிற சங்கதிளுக்கு சிபிஐ Department of Personnel & Training (DOPT) in the Ministry of Personnel, Pension & Grievances of the Government of India.கட்டுப்பாட்டிலும் வருகிறது            

இது எனக்குப் புதுத்தகவல். மீண்டும் சந்திப்போம்.

டிஸ்கி: இப்போதைய செய்தியாக சிதம்பரம் தரப்பு வாதங்கள் நிராகரிக்கப்பட்டு 26ஆம்தேதி வரை சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்கலாமென்று  நீதிமன்றம் உத்தரவு 6.42 PM IST .  
        

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)