தமிழக நிதியமைச்சர் (பி.டி.ஆர். பழனிவேல்) தியாகராஜன் தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் என்னுடைய தாத்தா முதல்வர், தந்தை அமைச்சர் என்று சொல்லி வரும் நிலையில், தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன் வெறும் 143 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தவர் என்று தகவலைத் துருவி எடுத்துப் போடிருக்கிறது அதிமுகவின் ஐடி விங்க். ‘1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பொப்பிலி அரசர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் கப்பல் பயணம் என்பதால், அவர் மீண்டும் முதல்வர் பணிக்குத் திரும்ப 4 மாதங்கள் ஆகும் என்பதால் இடைக்கால முதல்வராக பி.டி.ராஜனை அமரவைத்துவிட்டுப் போனார். அதாவது இரா.நெடுஞ்செழியன் போல இடைக்கால முதல்வராக மட்டுமே இருந்திருக்கிறார் அவர்’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது மதுரை அதிமுக ஐடி விங். திமுகவின் ஐடி விங் செயலாளருக்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள் அதிமுக ஐடி விங் என்று ஹாட்லீக்ஸ் செய்தியாகப்போட்டுச் சிரித்திருக்கிறது இந்து தமிழ்திசை!
டபுள் வாட்ச் டக்ளஸ் பீற்றிக்கொள்வது எல்லாமே இப்படி உடனுக்குடன் பங்ச்சர் செய்யப் படுவதால், இப்போது எல்லாம் ஒருகையில் மட்டுமே வாட்ச் அணிகிறாரோ?
நண்பர் நெல்லைத்தமிழன் மாதிரியே மாமல்லனும் நிறைய எதிர்பார்க்கிற மாதிரி இருக்கிறது! தியாக ராஜன், சேகர்பாபு, மா சுப்ரமணியன் போன்ற பக்கவாத்தியங்கள் செய்கிற அலப்பறைகளில், இசுடாலின் எங்கே ஜனங்கள் தன்னுடைய சாயத்தை துவைத்தெடுத்து விடுவார்களோ என்ற பயம் குறைந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்படி சிலர் காப்பான் ஆக இருக்கும்போது அவர்கள் மீது கைவைப்பதற்கு இசுடாலினுக்கு எப்படி மனம் வரும் என்று நினைப்பது?
டபுள் வாட்ச் டக்ளஸ் இன்னமும் ஒன்றியம் ஒன்றிய அரசு என்று அர்த்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிற வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. செங்கோட்டை ஸ்ரீராம் கடந்த மாத மத்தியிலேயே இந்த அக்கப்போருக்கு ட்வீட்டியிருந்த செய்தி மேலே! மக்களுடன் ஒன்றிய அரசு எது, ஒன்றாமல் வெட்டி அக்கப்போர்களில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிற அரசு எது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!
மாதத்துக்கு 30 கோடி தடுப்பூசிகளை மோடி அரசு உறுதிப்படுத்தி இருக்கவேண்டுமாம்! அசாதுதீன் ஒவைசிக்கு எல்லாமே அவசரம் தான்! தடுப்பூசி தயாரிப்பதென்பது தலாக் தலாக் தலாக் என்று 3 முறை சொன்னவுடனேயே விவாகரத்தாகி விடுவதைப் போல் அவ்வளவு சுளுவானதா என்ன? தீபக் திவாரி சரியாகத் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இயேசு மீட்கிறார் என்ற பெயரில் மதமாற்ற வியாபாரம், ஜெப ஊழியம், மோடி எதிர்ப்பு, அப்புறம் சத்தியம் டிவி எனப்பல தொழில்களையும் நடத்திவரும் மோகன் சி லாசரஸ் இன்று தமிழக முதல்வரைச் சந்தித்து கொரோனா நிதியாக ஒன்றரைக்கோடிக்கான காசோலையை அளித்தாராம்! தூத்துக்குடி எம்பி கனிமொழியும் உடனிருந்தார் என்பது செய்தி விசேஷம்.
இந்த வார துக்ளக் அட்டைப்பட நையாண்டியை விட உள்ளே வெளியாகியிருக்கும் கருத்துப்படம் சிறப்பு!
ஆயிரம் அரசியல் காமெடி இருந்தாலும் சீனாதானா செட்டியார் காமெடி மாதிரி வருமா? இந்தமனிதரை பொருளாதார மேதை அப்படி இப்படியென்று தலையில் தூக்கிவைத்து ஆடும் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களை என்ன செய்யலாம்? யோசித்து வையுங்கள்.
தமிழகத்தில் பிஜேபியின் கால்நகம் கூடப் பதிய விட மாட்டோமென்று பானாசீனா காரைக்குடியில் பேசி ஐந்துநாட்கள் கூட ஆகவில்லை. வெட்டிப்பேச்சுக்குப் பெயர்போன சீனாதானா செட்டியார் அடுத்த உளறலை வாந்தியெடுக்க ஆரம்பித்திருக்கிறார்."எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம இது. அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது" என்று இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நேற்றைக்குஉளறிவைத்திருப்பது இங்கே செய்தியல்ல.உலகத்தின் பலநாடுகளில் 2வது, 3வது அலையாக கொரோனா நோய்த்தொற்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவில் கடந்த ஆறேழு மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா நோய்த்தொற்று கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஒவ்வொருநாளும் புதிதாக ஒருலட்சம் பேருக்கு மேல் என்று கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்து வருகிறது.
சீனாதானா செட்டியார் போன்ற ஊழல் அரசியல் வாதிக்கு வேண்டுமானால் இதுமாதிரி நோய்த்தொற்றும் உயிரிழப்பும், அரசியல் செய்யக் கிடைத்த இன்னுமொரு கல்லெறிதல் தான்! ஆனால் ஜனங்களாகிய நமக்கு? இந்த 4 நிமிடப் பாடலைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள்! மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வது, அனாவசியமாகக் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது, மருத்துவர்கள் ஆலோசனைகளைப்பின்பற்றுவது என ஜனங்கள் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.
உச்சக்கட்ட கேவலமான அரசு எது என்றால் மஹராஷ்டிராவின் மஹாவிகாஸ் அகாடி நடத்தும் அரசுதான். அங்கு வாழும் மக்களின் உயிர்களோடு அந்த அரசு விளையாடுகிறது.
எங்குமே வாக்ஸின் குறைவாக இல்லை. பொய்யை வாந்தியெடுத்து மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி அரசியல் செய்கிறது அந்த அரசு. இப்படி அரசியல் செய்து மத்திய அரசின் மேல் வெறுப்பை உருவாக்க முயல்கிறார்களாம் இந்த எலெக்ட்ரானிக்ஸ் யுகத்தில். இந்த ஐடியாவை காங்கிரஸில் இருக்கும் ஏதோ ஒரு கிழ அரசியல்வாதிதான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். சிறையில் 106 நாட்கள் இருந்து ஜாமீனில் வெளி வந்திருக்கும் அந்த திருட்டு கிழ நரிதான் டிவிட்டரில் வாய்க்கு வந்தபடி பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
08/04/2021 பகல் 12:30 வரை 15 லட்சம் யூனிட் வாக்ஸின் இருப்பில் இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால்.. கோவிட் 19 வாக்ஸினை பல மருத்துவமனைகளில் நிறுத்திவிட்டு குறைவாக ஸ்டாக் உள்ளதாக மஹராஷ்டிரா அரசு பொய் சொல்கிறது. மஹா விகாஸ் அகாடியின் 100 கோடி கமிஷன் கதை வெளியில் வந்ததும் அதை மடை மாற்ற நடத்தப்படும் நாடகமே இது..!என்று முகநூலில் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
சீனாதானாக்கள் மட்டுமல்ல அவர்கள் சங்காத்தம் வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும் நாட்டுக்குக் கேடு நினைப்பவர்களே! நோய்த்தொற்று வராமல் எப்படி நம்மைப்பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமோ அதேபோல சீனாதானா மாதிரியான கெடுமதியாளர்களை ஒதுக்கி வைப்பதும் மிகமிக அவசியம்.
நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிருக்கிறார். நிமு (லடாக்) பகுதியில் நமது வீரர்களிடம் நமது பிரதமர் பேசியவிதம், வெளியுறவுக் கொள்கை, மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்தான அடிப்படை சித்தாந்தம் இவைகளில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை எதிரொலித்திருக்கிறது. வீரர்களுடைய தியாகம், போர்க்குணம் குறித்துப் பெருமிதம் தெரிவித்து மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்--எனநான்கே ஏமம் படைக்கு.என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர் விஸ்தரிப்பு முயற்சிகள் வரலாற்று ரீதியாகத் தோற்றே வருவதாகவும் சொல்லியிருக்கிறார். கல்வான் பிரதேசம் நம்முடையது, அதில் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதிபடச் சொல்லி இருக்கிறார்.
வழக்கம்போல காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு பிரதமருடைய பேச்சு புரியவில்லை. ஊழல் திமிங்கலம் பானாசீனா மூன்றாவது முறையாகவும் பிரதமர் சீனாவைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லையே என்று குறை சொல்கிறார். ராகுல் காண்டியோ வழக்கம்போல ட்வீட்டரில் அக்கப்போர் செய்துகொண்டிருக்கிறார் என்பது தேசம் அனுபவித்து வரும் சாபக்கேடு.
ஆனால் பாரதப் பிரதமருடைய நேற்றைய பேச்சு புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது என்பது சீனாவின் எதிர்வினைகள் தெளிவாகக் காட்டி விட்டன என்பது காங்கிரஸ் மண்டூகங்களுக்கு இன்னும் உறைக்கவில்லை. In the face of Chinese attempts to change the status quo at the Line of Actual Control, and the lack of substantive movement through negotiations at the military and diplomatic level, India had a choice. One option was to underplay the incursions, keep the issue in cold freeze, and slowly normalise the India-China relationship. The other option was to recognise the threat, decide to take on the adversary irrespective of potential costs, and reframe the entire framework of the relationship to impose costs on China. PM Modi has made his choice by picking the second option என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கம். நேருவைப்போல ஒரு அரசியல் கோழையாக இல்லாமல் பிரதமர் மோடி எண்ணித் துணிந்து ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட்டார் என்பதிலேயே இந்தியா பாகிஸ்தான் சீனா! திரண்டு வரும் போர்மேகங்கள்!என்று எழுதிய பதிவில் நண்பர்கள் பந்து மற்றும் திருப்பூர் ஜோதிஜி எழுப்பிய சில கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் கிடைத்து விட்டமாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது.
Addressing a luncheon attended by Japanese and Indian industrialists, Modi said: “Today, we see all around what happened in the 18th century… there is expansionism visible… kisi desh mein encroachment karna, kahin samundar mein ghus jaana, kabhi kisi desh ke andar ja kar kabza karna… in cheezon ki pravritti chal rahi hai (some country is encroached upon, one enters the seas somewhere, sometimes go inside a country and capture territory, we are witnessing such tendencies) This expansionism cannot be beneficial for mankind in the 21st century… development is essential and I believe that in the 21st century, if Asia is to lead the world, India and Japan should together raise the prestige of the path of development.”
இது செப்டெம்பர் 1, 2014 இல் பிரதமர் மோடி இந்திய ஜப்பானிய தொழிலதிபர்களிடையே பேசியது.
This theme, of expansionism versus development, was one of his key themes today. If in Ladakh he said that the era of expansionism is over and development is the engine of the future, in Tokyo, he had foreshadowed this. “The world is divided into two streams… one of Vistaarvaad (expansionism) and the other of Vikasvaad (development). Vikasvaad is the way ahead,” he had said in Tokyo. “We have to decide whether we want the world to be caught in the clutches of expansionism or…on the path of development. Those who follow the path of peace, those who believe in development, they guarantee peace and progress.” என்று ஐந்தேமுக்கால் வருடங்களுக்கு முன் டோக்யோவில் பிரதமர் மோடி பேசியது தான் நேற்றைக்கு லடாக் - நிமுவில் பேசிய போதும் எதிரொலித்திருக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சுபஜித் ராய் மற்றும் ரவீஷ் திவாரி இருவரும் சேர்ந்து எழுதிய செய்திக்கட்டுரை சொல்கிறது. அதை மட்டும் தானா?
Invoking Lord Krishna from Mahabharata – through his references to ‘Bansuridhari’ and ‘Sudarshan Chakradhari’ – Modi reinforced the message that India stands for peace but will not hesitate if there’s a confrontation, if its hand of friendship is misread as weakness. His remark that “strength is a pre-condition” for peace also sought to assert that India will continue to upgrade its infrastructure along the LAC and keep adding to its military strength. His “veer bhogya vasundhara” remark was a clear underlining of the principle that India will talk from a position of strength.
இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் சீனாவுடனான உறவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாக முடிவெடுத்து விட்டது என்றுதான் பார்க்க முடிகிறது. துப்பாக்கிகள் முழங்குவதற்கு முன்னாலேயே பொருளாதார ரீதியிலான சில அடிகளைச் சீனாவுக்குக் கொடுத்து அதிரடியான ஆட்டத்தையும் இந்தியா ஆரம்பித்து வைத்திருக்கிறது.
சீனாவையே நம்பியிருக்கிற வியாபாரிகளும், இந்தியத் தொழில்துறையும் தங்களை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். மாற்றத்தை அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கும் நல்லது, வலியும் குறைவாகவே இருக்கும்.
சீனாவிடம் சிக்கித் தவிக்கிற பல உலகநாடுகளுக்கும் இந்தவிஷயத்தில் இந்தியா ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.
கொரோனா வைரஸ் தொற்றை மேலும் பரவவிடாமல் தடுக்க மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறைகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற இந்தநேரத்தில் சிலர் செயல்பாடுகள் பாராட்டப்பட வேண்டியதாக இருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் C விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.
பீலா ராஜேஷ் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் பேட்டி கொடுப்பதாக #பணப்பசி பானாசீனா பாராட்டுப்பத்திரம் கொடுத்திருப்பது என்ன மாதிரி ஆகப்போகிறதோ? இந்த ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் ராணி வெங்கடேசன் முன்னாள் காங்கிரஸ் சமஉ என்பதால் இந்தப் பாராட்டா என்பதை பானாசீனாவின் ட்வீட்டர் செய்தியை வைத்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
முகநூலில் எழுதப்போவதில்லை என்று முடிவெடுத்திருந்த பானு கோம்ஸ் மறுபடியும் அங்கே எழுத ஆரம்பித்திருக்கிறார் என்பது கொஞ்சம் நல்ல செய்தி. மிகைப்படுத்தல் இல்லாமல் செய்திகளைச் சொல்கிறவர் என்று பெயரெடுத்த ஒரு பெண்மணி திடீரென நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று சொன்னதில் ஏக அதிர்ச்சி. திரும்பவந்திருப்பதில் மகிழ்ச்சி.
சீன வைரஸ் ஆரம்பித்தது முதல் உலகம் முழுவதும் பரவியது வரையிலான தேதி குறிப்பிட்டு வெளிப்படுத்தும் காணொளி. இரண்டு பாகங்களாக இருக்கிறது.
காணொளியை வெளியிட்டிருப்பவர் பெயர் Jennifer Zeng. சீனாவின் labour camp-லிருந்து தப்பித்து அமெரிக்காவில் சரணடைந்திருப்பவர். இப்போது நியூயார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
வைரஸ் விவகாரத்தில் சீனாவின் மர்மமான நடவடிக்கைகள், அடக்குமுறைகள், உயிர் பலிகள் குறித்த அனைத்தையும் உலக மக்களின் பார்வைக்கு தொடர்ந்து கொண்டுவருவதில் ஜென்னிபரின் பங்கு மிக மிக முக்கியமானது.
அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சென்ற அக்டொபர் இறுதி முதலே...சீன வைரஸ் குறித்த பல உண்மைகளை ..காணொளிகளோடு வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த வீடியோ இணைப்பைக் கொடுத்திருப்பதும் மேலே உள்ள முகநூல் செய்தியில் தான்.
எகனாமிக் டைம்ஸில் ராகுல் காண்டியின் உளறல் ஒரு 38 செகண்ட் வீடியோவாகப் பார்த்தபோது, முதலில் இதையெல்லாம் ஒரு அரசியல் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ற ஒரு சலிப்பு, வெள்ளிக்கிழமைப் பதிவில் KG கௌதமன் பின்னூட்டத்துக்குப் பதில் சொன்ன போதே எழுந்தது.
இப்படி அவதூறுகளிலேயே அரசியல் செய்வதைக் காங்கிரஸ் 1980களின் மத்தியிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக்கதையை இங்கே கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அன்றைக்கு ராஜீவுக்கு Rediffusion போல ஒரு விளம்பர ஏஜென்சி மூளையைக் கசக்கிக் கொண்டு விளம்பரங்களை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் மகன் ராகுல் காண்டிக்கு Rediffusion போல எதுவும் தேவையிருந்ததில்லை. வாய்க்கு வந்ததைப் பேசுவது, வாயிலேயே வடை சுடுகிற கலை போதும் என்று உளறுவது வாடிக்கையாகி விட்டது.
சர்வதேச சமூகம் இந்தியாவை ’கற்பழிப்பு தலைநகரம்,’ என்று ஏளனம் செய்வதாக, தனது வயநாடு தொகுதி விஜயத்தின்போது சொற்பொழிவாற்றியுள்ளார் பப்பு. நமக்குத் தெரிந்து வயநாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயநாட்டிலிருந்தும் இப்படியொரு பழிச்சொல் வந்ததாகத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் வாயிலிருந்து உண்மையை எதிர்பார்ப்பது, அறிவாலயத்திலிருந்து மூலப்பத்திரம் வருமென்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும் என்றாலும், கொஞ்சம் பின்னோக்கிப் போனால், காங்கிரஸின் யோக்யதை எப்பேர்ப்பட்டது என்பதையாவது புரிந்து கொள்ளலாம் என்பதாலேயே இப்பதிவு.
ஹைதராபாத் கொடூரம் நிகழ்ந்தபிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ராஜஸ்தானில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் என்ன கூறினார் தெரியுமா?
”சிறார்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்கள் கருணைமனு அளிக்க அனுமதிக்கக் கூடாது” இந்தச் செய்தி எல்லா ஊடகங்களிலும் பரவலாக பரப்பப்பட்டுள்ளதால் சுட்டி தரவேண்டிய நிர்ப்பந்தமில்லை.
சரி, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இப்படி; காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் எப்படியென்பதையும் சற்றுப் பார்ப்போமா?
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பண்ட்டூ… 6 வயது சிறுமியை நாசமாக்கிக் கொன்ற சதீஷ்.. 10 வயது சிறுமியைக் கூட்டு வன்புணர்ச்சியில் சிதைத்துக் கொன்ற மோலாய் ராம் மற்றும் சந்தோஷ் யாதவ்… சிறுமியைக் கெடுக்கிற முயற்சியில் அவளது குடும்பத்தையே கொன்று குவித்த தர்மேந்திர சிங் மற்றும் நரேந்திர யாதவ்…
மேற்கூறிய காமக்கொடூரர்களின் கருணை மனுவைப் பரிசீலித்த புண்ணியம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, காங்கிரஸால் நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீலுக்கு உண்டு.
(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா-20-டிசம்பர்-2012-search: Presidential pardon saved rapists the noose)
அது மட்டுமா?
மறைந்த ஷீலா தீட்சித் டெல்லி முதலமைச்சராக இருந்தபோது, தில்லியில் சௌம்யா விஸ்வநாதன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டபோது, ‘அதிகாலை 3 மணிக்கு டெல்லியில் ஒரு பெண் தனியாக வெளியே வரலாமா?’ என்று கேட்டவர்தான் ஷீலா தீட்சித். அப்போது, பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். நடந்து கொண்டிருந்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி.
நிர்பயா கொடூர சம்பவம் நினைவிருக்கிறதா? தில்லியையும், இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிப்போட்ட அந்தக் கோர நிகழ்வுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சொன்னது என்ன தெரியுமா?
”ஒப்புக்கொள்கிறேன். உண்மையிலேயே டெல்லிதான் கற்பழிப்புத் தலைநகரம்.”
(ஆதாரம்:இந்தியா டுடே; 21 டிசம்பர் 2012 –search: Sheila Dikshit admits Delhi is rape capital, says 'no courage to meet the gangrape victim, I am ashamed')
ஆனால், பின்னாளில் ‘நிர்பயா சம்பவத்தை ஊதிப் பெரிது படுத்தி விட்டார்கள்,’ என்று சொன்னவரும் இவர்தான். (ஆதாரம்: டைம்ஸ் நௌ-5-மே-2019-search: '2012 Gang-rape was blown out of proportion by media', Former Delhi CM Sheila Dikshit)
பின்னாளில் இதே ஷீலா தீட்சித் ’டெல்லியில் வசிப்பது பாதுகாப்பற்றது என்று என் மகளே கருதுகிறாள்’ என்று என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
(ஆதாரம்: என்.டி.டிவி 08-மார்ச்-2013-search: My daughter feels insecure in Delhi: Sheila Dikshit to NDTV)
இந்த லட்சணத்தில்தான் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு இருந்து வந்தது. இவனுகளுக்கெல்லாம் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்றுதான் புரியவில்லை. (ராகுல் காந்தி மீதே உ.பியில் கூட்டு வன்புணர்ச்சி குற்றச்சாட்டு இருக்கிறது என்பது கூடுதலான செய்தி!)
காந்தியைப் பெயரில் சேர்த்துக்கொண்டிருக்கும் ராகுல் போன்றவர்களெல்லாம், பிரிவினை சமயத்திலும், நவகாளி சமயத்திலும், அஸாம் கலவரத்தின்போதும், நெருக்கடி நிலையின்போதும், சீக்கியர் கலவரத்தின் போதும் எத்தனை பெண்கள் சூறையாடப்பட்டனர் என்ற வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவது, மிச்சம் மீதமிருக்கிற அவர்களது மானத்துக்கு நல்லது. மொத்தமாக மானமில்லையென்றால், இது போன்று உளறுவதற்கு டிக்-டாக் வீடியோ போட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்ளட்டும்.
பகிர்வுக்கு வந்த ஒரு பின்னூட்டம்
Kavitha Hariharanவரலாற்றை படிக்கறதா? பெண் டாய்லெட் ன்னு வாசிக்க தெரியாம நுழைந்த மேதாவி. அவ்ளோ புத்தி இருந்தா கண்டபடி உளற மாட்டான். இவனையும் தலைவர் னு கூவற கூமுட்டைகளை தான் எதாவது சொல்லனும்..
முகநூலில் இப்படி ஒரு வார்த்தை விளையாட்டு!
ராகுல் உளறலுக்குப் பிறகு இப்படி ஒரு காமெடிக் கொடுமை! காங்கிரஸ் ஏன் தேறவே மாட்டேன் என்கிறது? காரணம், கோளாறு எங்கே என்று புரிகிறதா?
அப்பச்சியின் வாய்க்கொழுப்பு எப்படிப்பட்டது என்பது தெரிந்த விஷயம் தான்! தெரியாதவர்கள் இந்த 15 நிமிட வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் பொய் சொல்வது, புள்ளிவிவரங்களைத் திரிப்பது சீனாதானாவுக்குக் கைவந்த கலை. ஊழல் குற்றத்தில் சிறைக்குப் போனதை வெட்கமே இல்லாமல் வஉசியுடன் எப்படித் தன்னை ஒப்பிட்டுக் கொள்வார் எப்படி பாரதியாரின் கவிதை வரிகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்பச்சி எப்படித் தேனொழுக வாயில் வடை சுடுவார் என்ற கலையை அவரிடமிருந்து தான் ராகுல் காண்டி கற்றுக் கொள்ள வேண்டுமோ?
சால்வை அழகர் பானாசீனாவுக்கு ஒருவழியாக நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு ஜாமீன் வழங்கி இருக்கிறது. இரண்டுவழக்குகளிலும் ஜாமீன் வழங்கப் பட்டுவிட்டதால் சீனாதானா இனி சுதந்திரப்பறவை தானா? டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறாராம்?
இந்த இரண்டுமட்டும்தானா? இன்னும் பல வழக்குகள் இருக்கின்றனவே! அவைகளில் கைது செய்வதற்கு எந்தத் தடையுமில்லையே! உள்ளே வெளியே உள்ளே என்று சிறைக்குப் போய்வந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் என்கிறார் டாக்டர் சுவாமி. கேட்கவே கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது!
திஹார் ஜெயிலுக்குப் போய் பெயில் கிடைத்து வெளியே வந்தால் மானாட மயிலாடத் தாரைதப்பட்டை கிழிய வரவேற்பெல்லாம் கிடையாதா? வெறுமனே ஹோய் ஹோய் கூச்சல் போடுகிற கூட்டம் மட்டும் தானா? வீடியோ 14 நிமிடம்.
ஏன் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா மற்றும் வதேரா இவர்களுக்கு SPG பாதுகாப்பு தேவையில்லை என்று விளக்கப்பட்டது...இவர்கள் அனைவரும் தங்களது நடவடிக்கை மூலம் தங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று SPG பாதுகாப்பை அலட்சியம் செய்து நடந்து வந்தது மட்டுமே காரணம்...
இதைக் குறிப்பிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா...
* சோனியா காந்தி குடும்பத்தில் உள்ள ஒருவர் இரவு கடந்த நேரங்களில் லுட்டின்ஸ் வீதிகளில் மணிக்கு 100 கிமீ க்கும் மேல் இரு சக்கர வாகனத்தில் பறந்து பறந்து ஓட்டிச் செல்பவரை துரத்தி துரத்தி பாதுகாப்பு தர வேண்டிய நிலைக்கு SPG பாதுகாப்பு படையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அப்படி சென்றவர் யார் என்பதை உங்களுக்கு விட்டு விடுகிறேன் என்று விடுகதை போட்டு அமித் ஷா பேசுகையில் நிறுத்திய போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கூச்சல் போட்டனர்...இப்படி நள்ளிரவு நேரத்தில் சென்றவர் வதேரா என்பது குறிப்பிடத்தக்கது...
* 2015 முதல் ராகுல் காந்தி...247 வெளி நாட்டு பயணத்தில்...1892 உள் நாட்டு பயணத்தில்...SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை....
* சோனியா காந்தி...29 முறை வெளிநாட்டு பயணத்தில்...50 முறை டெல்லியில்... 13 முறை உள்நாட்டு பயணத்தில் SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை...
* பிரியங்கா வதேரா....94 வெளிநாட்டு பயணத்தில்...339 முறை டெல்லியில்... 64 முறை உள்நாட்டில்...SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை....
காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங்க்கு SPG பாதுகாப்பு விலக்கப்பட்ட போது ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு அளிக்கும் பாதுகாப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதே தவிர வாபஸ் பெறவில்லை...Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார் அமித் ஷா...
இவர்களது நடவடிக்கை அனைத்தும் SPG பாதுகாப்பு படையினரை அவமதிப்பு செய்து தங்களது பின்னால் அவர்கள் ஓடி வர வேண்டும் என்று கேவலமான முறையில் சோனியா குடும்பத்தினர் நடந்து கொண்டது தான்...
இன்னமும் சோனியா குடும்பத்தினர் திருந்தவே இல்லை மற்றும் டெல்லி சுல்தான்கள் போல நடந்து வருகின்றனர்.இவர்களது நடவடிக்கைகளே தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது போலவும் தங்களுக்கு SPG பாதுகாப்பு தேவையில்லை என்பது போலவும் நடந்து கொண்டது தெரியவந்துள்ளது....
பிரியங்கா வதேரா நாடகம்...மீண்டும் SPG பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பிரியங்கா வதேரா வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்...
நான்கு தினங்களுக்கு முன் தனது வீட்டிற்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்து விட்டது என்று புகார் தெரிவித்தார் பிரியங்கா வதேரா...
என்ன நடந்தது என்றால் காலை 9 மணிக்கு கருப்பு நிற SUV காரில் ராகுல் காந்தி வருவதாக பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தரப்பட்டது. எனவே ராகுல் காந்தியின் கார் சோதனை இல்லாமல் உள்ளே அனுமதி தருவது நடைமுறையில் உள்ளது...
இதை தவறான முறையில் பயன்படுத்தி கறுப்பு நிற SUV காரில் மீரட் காங்கிரஸ் கட்சி தலைவர் சாரதா தியாகி அதே 9 மணிக்கு வந்ததும் காரை உள்ளே செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது என்ற உண்மை தற்போது வெளியே வந்து விட்டது... பிரியங்கா வதேரா நாடகம் அம்பலமானது...
டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராஜ்ய சபாவில் பேசுகையில்....SPG பாதுகாப்பு பிரதமர் மற்றும் அவருடன் உள்ள உடனடியாக உள்ள குடும்பத்தினருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது...ஆனால், இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியவர்களுக்கு SPG சட்டத்தை திருத்தம் செய்து பாதுகாப்பு தரப்பட்டுள்ளது..இந்திரா காந்திக்கு தனது மெய் காவலர்கள் மூலம் உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை புறக்கணித்து விட்டதால் தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.
ராஜிவ் காந்தியை படுகொலை செய்த 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று திமுகவின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதிக்கு காங்கிரஸ் ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டது...
மேலும், கொலை குற்றவாளிகளை அவர்களது உறவினர்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறைகளை மீறி பிரியங்கா வதேரா நளினியை சிறையில் சென்று சந்தித்து பேசினார்..இதனால் விடுதலைப் புலிகள் மூலம் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்...
மேலும் தனக்கே உரித்தான பாணியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அவர் மீது உள்ள ஊழல், முறைகேடுகள் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மூலம் தண்டனை விதித்து சிறையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி....
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் மற்றும் அவரது வசிக்கும் உடனடி குடும்பம் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு பதவி விலகிய பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கப்படும் என்ற SPG சட்டத் திருத்தம் நிறைவேறியது....
உச்சநீதிமன்றத்தில் இன்று பானாசீனாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்ததில் இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிமன்றம் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறது. ஆக, சீனாதானா வெற்றிகரமாக தன்னுடைய திகார் சிறை வாழ்க்கையை இன்று 100வது நாளாகத் தொடர்கிறார்.
வெற்றிகரமாக இதுவே 25வது வாரம், 50வது வாரம் என்று தொடர, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாகச் சேர்ந்து வாழ்த்துவோம்! ஜஸ்டிஸ் பானுமதி அமர்வில் இருக்கிறாரே , வாழ்த்து பலிக்குமா என்று கேட்கிறீர்களா? திருப்பூர் ஜோதி ஜி கூட இப்படி 100 நாள் தொடர்ந்து சால்வை அழகரை உள்ளே வைத்து விட முடியும் என்று ஆரம்ப நாட்களில் நம்பவில்லை.
காயத்ரி ரகுராம்! ஒரு கட்சியாக பிஜேபி செய்யத் தவறியதை தனி ஒரு மனுஷியாக திருமாவளவனைத் தட்டிக் கேட்டிருக்கிறார். விசிகவின் திருமாவளவன் இந்துக் கோவில்களைப் பற்றி இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த காயத்ரி ரகுராமுக்கு எதிராக விசிகவினர் ஆபாச மிரட்டல்கள்,வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு திருமா பெண்களை இழிவு படுத்துகிற மாதிரி ஸ்டேட்மென்ட் விட்டதையும் இங்குள்ள அரசியல் கட்சிகளோ மாதர் சங்கங்களோ ஒப்புக்குக் கூட கண்டிக்க முன்வரவில்லை என்பது தமிழக அரசியலின் ஈரல், மூளை இப்படி எல்லாமே கெட்டுச் சீரழிவுக்குஆளாகியிருப்பதன் அடையாளம். H.ராஜா ஒருவர்தான் காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.
என்னுடைய நல்லநேரம், ராஜதீப் சர்தேசாய், பர்கா தத் போன்ற ஊடகத் தறுதலைகளிடமிருந்துதான் அரசியல் நடப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற அவசியம் இல்லை! அந்த 39 நிமிட முழுநீளக் காமெடியில், நான் கவனிக்கத் தவறிய ஒரு செய்தி ஸ்க்ரோலில் வருகிறது. சோனியா, ராகுல் காண்டி, மம்தா பானெர்ஜி, கேஜ்ரிவால் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் எவருமே உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு வைபவத்தில் கலந்துகொள்ளவில்லையாம்! இலவுகாத்த கிளியாக இங்கே என்னமோ தத்துப்பித்து அரசியல் செய்து கொண்டிருக்கிற இசுடாலின் மட்டும் தான் கலந்து கொள்ளப்போகும் ஒரே பெத்த பேரு என்கிறார்கள் பாருங்கள்! அதுதான் அடிக்கோடிட்டுக் காண்பிக்க விரும்பிய செய்தி.
Howdy Modi நிகழ்ச்சி ஹூஸ்டனில் சிறப்பாக நடந்தேறி இருக்கிறது என்பதில் சோனியா காங்கிரசுக்குக் காய்ச்சல் வந்திருப்பது ஆச்சரியமா என்ன? போதாக்குறைக்கு இரு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டிருப்பதில் வாந்தி, பேதியும் சேர்ந்தே வந்திருக்கிற மாதிரித் தான் தெரிகிறது!
‘‘இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு என்பது எப்போதுமே கட்சி சார்புக்கு அப்பாற்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பேசிய மோடி அதிபர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் குடியரசு கட்சியினர், ஜனநாயக கட்சியினர் என தனிப்பட்ட கட்சிகள் சார்பாக இந்தியா எந்த நிலைப்பாட்டையும் எடுத்தது இல்லை. அவருக்கு பிரச்சாரம் செய்ய முனைந்துள்ளார். இது இந்திய - அமெரிக்க உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு தேர்தல் விவகாரங்களில் தலையிடுவது நமது நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியா மற்றும் அமெரிக்கா இருநாடுகளும் இறையாண்மை உள்ள ஜனநாயக நாடுகள் என்பதை மறந்து பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருக்கும்போது நீங்கள் இந்திய பிரதமர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் நட்சத்திர பிரசாரகர் அல்ல’’
இது கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவின் தூரிகைப் பொருமல்!
வாசகர் கருத்தைச் சித்திரமாக்குவதாக சந்து கிடைக்கிற இடத்தில் சிந்துபாடுகிற பாணி இந்து தமிழ்திசை நாளிதழுக்கு இருக்குமானால் விக்கிரவாண்டி தொகுதியில் இளைஞரணிச் செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி போட்டியிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணியை வைத்து விருப்ப மனு தாக்கல் செய்ய வைப்பது திமுகவினர் பாணியாக இருக்கக் கூடாதா? அப்படித்தான் ஒரு கூத்து இன்று நடந்திருக்கிறது!
திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த மன்மோகன் சிங், சோனியா காந்தி: நன்றிக்கடன் பட்டுள்ளதாக கார்த்தி உருக்கம் என்கிறது செய்தி! தன் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதில் மட்டும் மும்முரம் காட்டிய, எச்சிற்கையால் ஈ கூட ஓட்டாத வள்ளல் சீனாதானாவை சந்தித்தார்கள் சரி! ஆனால் காங்கிரசுக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கைக்காசை (எல்லாம் முறைகேடாகச் சம்பாதித்ததுதான்!) செவவழித்த ஆபத்பாந்தவன் DK சிவகுமார் அதே சிறையில் பக்கத்திலேயே தானே இருக்கிறார்,அவரைக் கட்சிப்பெருந்தலை சோனியா ஏன் சந்திக்கவில்லை?
அடுத்தவரிடம் கேள்வி கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தங்களை நோக்கி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி மாதிரி சீப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்க வேண்டியது தான் விதி!
ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும் அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால், கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!)
இன்று செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படுகிற, தேச விடுதலைக்காகப் போராடிய வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய பிறந்தநாள். சொந்தநலன்களைத் தியாகம் செய்து விடுதலைப்போரில், ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்ட கொடுமையைத் தாங்கிக் கொண்டவர்! வ உ சியைப் பற்றி கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய ஒரு சிறுபகுதியை இந்தப் பக்கங்களில் முன்னர் பார்த்திருக்கிறோம்.
நாட்டுவிடுதலைக்காகப்போராடி வெள்ளையரால் அடக்கு முறைக்கு ஆளான தியாகிகளுக்கும், இப்போதிருக்கிற சோனியாG காங்கிரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இன்று திஹார் சிறை சென்றிருக்கும் செட்டிநாட்டு ஜாமீன் மோசடிப்பேர்வழி பற்றிப் பார்க்கலாம்.
காசுக்காரக் காங்கிரஸ் வக்கீல்களுடைய வாதங்களையும் மீறி 15 நாள் நீதிமன்றக்காவலில் சீனாதானா சகல வசதிகளோடு திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்கிறது NDTV
சுப்ரமணியன் சுவாமி சந்தோஷமாக உணர்கிறார் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே! ஆனால் கோர்ட்டில் எடுபடாத காரணங்களை எல்லாம் இங்கே டிவி முன்னால் ஜம்பமாகப் பேசுகிறார் அபிஷேக் மனு சிங்வி! சரி!
இதற்கு முன்னால் கோர்ட் வளாகத்திலேயே அஞ்சுவிரலைக் காட்டி சீனாதானா நிருபர்களுக்கு என்னமோ சொன்னாராமே! சதீஷ் ஆசார்யா கரீக்ட்டா ஞாபகம் வைத்து, அஞ்சுல ரெண்டு போக மூணு மிச்சமா என்று கணக்குப் போடுகிறார்! அந்த மூணு யார் யாராயிருக்கலாம்? ஏதாச்சும் புரிஞ்சுதா?
சிறைக்கு போவது பற்றி எனக்கு வருத்தமில்லை ஆனால் நாட்டின் பொருளாதாரம் இவளவு சீரழிந்த நிலையில் இருக்கும்போது ஒன்றும் செய்ய விடாமல் இப்படி சிறையில் அடைக்கிறார்களே என்பதை நினைக்கும் போது என் கண்ணில் ரத்தம் தான் வருகிறது
திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து, வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று (செப்.,5) முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும் , ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த வழக்கில், பொருளாதார குற்றங்கள் நடந்துள்ளன. சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி என்றார்.
இதன்பின்னர், சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது. சாட்சிகளை கலைக்கவில்லை. எனவே, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது. ஆதாரத்தை கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டிற்கு சிபிஐ ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. நீதிமன்ற காவலுக்கு அனுப்பினால், அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாகும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் சரண் அடைய தயாராக உள்ளார். வேண்டும் என்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யட்டும். நீதிமன்ற காவலுக்கான காரணத்தை சிபிஐ முன் வைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் 15 நாள் விசாரணை நடத்தினர். என வாதிட்டார்.
இதனை விசாரித்த பின்னர் நீதிபதி, வரும் 19ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், திஹார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, திஹார் சிறையில் படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை ஏற்று கொண்ட கோர்ட், சிதம்பரத்திற்கு திஹார் சிறையில் தனி அறை வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
இதன் பின்னர், அமலாக்கத்துறையிடம் சரண் அடைய தயாராக உள்ளதாக , சிதம்பரம் தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு குறித்து செப்., 12க்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இவ்வளவுதான் கேட்டாரா அல்லது வேறு சௌகரியங்களுமா? #TheNationantsToKnow
இந்திய அரசியலில் மக்கள் செல்வாக்கு இல்லாமலேயே தன் கிரிமினல் புத்தியால் முன்னணிக்கு வந்தவர் செட்டி நாட்டு இளவல், கலீஞரின் வார்த்தைகளில் சிவகங்கை சின்னப்பையன், சீனாதானா இப்போது நாடுமுழுக்க அறியப்படும் கேலிப்பொருளாகி இருக்கிறார்! நேரலையில் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அதே பல்லவி அதே வாதங்களைவைத்து ஜாமீனில் வெளியே எடுக்க முயற்சி செய்துகொண்டிருப்பது பற்றிய செய்திகளைக் கேட்டுக் கொண்டே சிதம்பரத்தின் கைதுவிவகாரம் என்னென்ன தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பதில் சில சுவாரசியமான பார்வைகள் இங்கே
சிதம்பரம் என்ன தியாகியா? அல்லது மக்கள் செல்வாக்குள்ள தலைவரா? இந்தக்கேள்விகளுடன் கருத்தைச் சொல்கிறார் ரவீந்திரன் துரைசாமி வீடியோ 10 நிமிடம்.
ப.சிதம்பரம் கைது ஆவாரா, மாட்டாரா என்பது பற்றியே எல்லோரும் பேச வேண்டும். காஷ்மீர் பற்றியோ, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பற்றியோ யாரும் பேசி விடக் கூடாது. இதுதான் மோடி வித்தை! #PChidambaram#DMK#Kashmir
Translate Tweet
10:25 AM · Aug 21, 2019
அவரவர் கவலை அவரவருக்கு! #ஓசிச்சோறு
டில்லி ஜந்தர் மந்தரில் திமுக எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கலீஞர் செய்திகளில் தவிர வேறெந்த சேனலும் இதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்த மாதிரி எனக்குத் தெரிந்து இல்லை. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களை விடுதலை செய் என்று கோஷமிட்டவர்கள் மறந்ந்துபோய்க் கூட சிதம்பரத்தை விடுதலை செய் என்றோ அவரது கைதுக்கு கண்டனமோ தெரிவிக்கவில்லை. ஒருநிமிட வீடியோ
ஊழல் செய்ததும் கொள்ளையடித்ததும் நாட்டுக்கு அவமானம் இல்லையாம்! சிதம்பரம் வீட்டுச் சுவரேறிக்குதித்து சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்ததுதான் நாட்டுக்கு அவமானமாம்!இது இசுடாலின் காமெடி! வீடியோ 4 நிமிடம்.
கராத்தே தியாகராஜன் வேறுவிதமாகக் கத்தி போடுகிறாரோ? காங்கிரஸ் முதலாளிகள் ஏற்கெனெவே இந்த வில்லங்கமான சீனாதானா தங்களை எங்கே கைகாட்டிவிடுவாரோ என்று பயந்து கொண்டிருக்கையில் காங்கிரசாவது சிதம்பரத்தைக் கைகழுவுவதாவது!! வீடியோ 9 நிமிடம்
இந்த வாதப்பிரதிவாதங்களை சற்றுக் கேலியுடனேயே பார்க்க முடிந்தாலும் கலீஞரின் ராசியான மகள் கனிமொழி சிறையில் இருந்த அந்த நாட்களில் ஜெயிலா பெயிலா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது; இங்கே அந்தக் கேள்வியே இல்லை! விசாரணைக்காக கஸ்டடியில் 5 நாட்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் ஏஜென்சிகளின் வாதம்! நானொரு சீனியர் வக்கீல்! சட்டம் என் கையில்! என்பது சிதம்பரம் தரப்பு வாதம் என்பதையும் நினைவுபடுத வேண்டி வருகிறதே!
வழக்கறிஞர்களைப் பற்றி ஒரு கருத்து உண்டு. பாதி உண்மை மட்டுமே பேசத்தெரிந்தவர்கள் என்று ஒரு வழக்கறிஞரே சொன்னதாக ஞாபகம். எதற்காக இப்போது இது? இன்னும் சற்று நேரத்தில் சிதம்பரத்துக்கு சிபிஐ கஸ்டடியா அல்லது ஜாமீனா என்பதை நீதிமன்றம் எப்படித் தீர்ப்பளிக்கப் போகிறது என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கையில், கொஞ்சம் நமது தரப்பு வாதத்தையும் ரெடி பண்ணிக் கொள்ள வேண்டாமா? சாமானியர் என்றால் ஜட்ஜ் தீர்ப்பை டிக்டேட் செய்து நீதிமன்றத்தில் சொல்ல 30 நிமிடங்களே போதும். ஆனால் சட்டம் என் கையில் என்று மமதையோடு திரிந்தவர் விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடுமா?
சிதம்பரம் கைது விவகாரத்தினை ஆர்வமாக எழுதுகின்றவர்கள் வாழ்க
ஆனால் சி பி ஐ மத்திய உள்துறை அமைச்சக நிர்வாகக் கட்டுப்பாட்டில் வருவதாக யூகித்துக் கொண்டு இன்றைய உள்துறை அமைச்சரையும் கைதாகியிருக்கும் முன்னாள் உள்துறை அமைச்சரையும் துறை சார்ந்து கொக்கி போட்டு எழுதுவதற்கு முன்பு சிபிஐ வலைத் தளத்தையும், உள்துறை வலைத் தளத்தையும் ஒரு முறை விஜயம் செய்துவிட்டு எழுதவும்
சிபிஐ Prevention of Corruption Act, 1988 கீழ் குற்றங்களை விசாரிக்கும் போது அதனை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மேற்பார்வை செய்யும். பிற சங்கதிளுக்கு சிபிஐ Department of Personnel & Training (DOPT) in the Ministry of Personnel, Pension & Grievances of the Government of India.கட்டுப்பாட்டிலும் வருகிறது
இது எனக்குப் புதுத்தகவல். மீண்டும் சந்திப்போம். டிஸ்கி: இப்போதைய செய்தியாக சிதம்பரம் தரப்பு வாதங்கள் நிராகரிக்கப்பட்டு 26ஆம்தேதி வரை சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்கலாமென்று நீதிமன்றம் உத்தரவு 6.42 PM IST .