Showing posts with label Howdy Modi. Show all posts
Showing posts with label Howdy Modi. Show all posts

Monday, September 23, 2019

Howdy Modi! சீனாதானா! ராதா ரவி!

Howdy Modi நிகழ்ச்சி ஹூஸ்டனில் சிறப்பாக நடந்தேறி இருக்கிறது என்பதில் சோனியா காங்கிரசுக்குக் காய்ச்சல் வந்திருப்பது ஆச்சரியமா என்ன? போதாக்குறைக்கு இரு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டிருப்பதில் வாந்தி, பேதியும் சேர்ந்தே வந்திருக்கிற மாதிரித் தான்    தெரிகிறது! 


‘‘இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு என்பது எப்போதுமே கட்சி சார்புக்கு அப்பாற்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பேசிய மோடி அதிபர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் குடியரசு கட்சியினர், ஜனநாயக கட்சியினர் என தனிப்பட்ட கட்சிகள் சார்பாக இந்தியா எந்த நிலைப்பாட்டையும் எடுத்தது இல்லை. அவருக்கு பிரச்சாரம் செய்ய முனைந்துள்ளார். இது இந்திய - அமெரிக்க உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு தேர்தல் விவகாரங்களில் தலையிடுவது நமது நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியா மற்றும் அமெரிக்கா இருநாடுகளும் இறையாண்மை உள்ள ஜனநாயக நாடுகள் என்பதை மறந்து பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருக்கும்போது நீங்கள் இந்திய பிரதமர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் நட்சத்திர பிரசாரகர் அல்ல’’ 


இவ்வளவு நீளமாக அலுப்பூட்டுகிற உபதேசத்தை காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எவர் இத்தனை பொருமலுடன் சொல்லியிருக்க முடியும்? ஆனந்த் ஷர்மா இந்த வினோதமான  பொருமலுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.

   
இது கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவின் தூரிகைப் பொருமல்! 


வாசகர் கருத்தைச் சித்திரமாக்குவதாக சந்து கிடைக்கிற இடத்தில் சிந்துபாடுகிற பாணி இந்து தமிழ்திசை நாளிதழுக்கு இருக்குமானால் விக்கிரவாண்டி தொகுதியில் இளைஞரணிச் செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி போட்டியிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணியை வைத்து  விருப்ப மனு தாக்கல் செய்ய வைப்பது திமுகவினர் பாணியாக இருக்கக் கூடாதா? அப்படித்தான் ஒரு கூத்து இன்று நடந்திருக்கிறது! 

திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த மன்மோகன் சிங், சோனியா காந்தி: நன்றிக்கடன் பட்டுள்ளதாக கார்த்தி உருக்கம் என்கிறது செய்தி! தன் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதில் மட்டும் மும்முரம் காட்டிய, எச்சிற்கையால் ஈ கூட ஓட்டாத வள்ளல் சீனாதானாவை சந்தித்தார்கள் சரி! ஆனால் காங்கிரசுக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கைக்காசை (எல்லாம் முறைகேடாகச் சம்பாதித்ததுதான்!) செவவழித்த ஆபத்பாந்தவன் DK சிவகுமார் அதே சிறையில் பக்கத்திலேயே தானே இருக்கிறார், அவரைக் கட்சிப்பெருந்தலை சோனியா  ஏன் சந்திக்கவில்லை?   

அடுத்தவரிடம் கேள்வி கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தங்களை நோக்கி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி மாதிரி சீப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்க வேண்டியது தான் விதி! 

   

ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும்  அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால்,  கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!)

மீண்டும் சந்திப்போம்.          

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)