Wednesday, June 30, 2021

ஒரு தலையங்கக் கொட்டு! ஒரு சப்பைக்கட்டு! என்னா உருட்டு!

ஆனந்த விகடன் தலையங்கம்: செய்ய முடிவதைச் சொல்லுங்கள்!


‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது இப்போது சாத்தியமில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றிக் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம், ‘எப்போது குறைக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் தேதி ஏதாவது போட்டிருக்கிறதா?’ என்றும் கேட்டிருக்கிறார்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைப்பதன் மூலமே அவற்றின் விலையைக் குறைக்க முடியும். ‘செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலமே பெட்ரோலியப் பொருள்களின் வரிகள் சமீபகாலத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டன. இவற்றில் மாநில அரசுகளுக்குப் பங்கு வருவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாட் வரியைக் குறைப்பதால் மாநிலத்துக்கு இழப்பு ஏற்படும். இப்போது விலையைக் குறைக்க முடியாது என்றாலும், எங்கள் ஆட்சிக்காலத்துக்குள் இதைச் செய்வோம்’ என்பது நிதியமைச்சரின் வாதம்.
மாநிலத்தின் நிதிநிலைமை அவர் அறியாதது அல்ல. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களில் கலந்துகொண்டவர் அவர். சொல்லப்போனால், தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே ‘மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பது தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்கியவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் நேர்மறையான அணுகுமுறைகள் மூலம் தி.மு.க அரசு பாராட்டைப் பெற்றுவருகிறது. ஜெயரஞ்சன் தலைமையில் தமிழக அரசின் மாநிலக் கொள்கை வளர்ச்சிக் குழுவை அமைத்தது முதல் இப்போது ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரெஸ், எஸ்.நாராயண் ஆகியோரை தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்தது வரை எல்லாமே வரவேற்பு பெற்ற அறிவிப்புகள்.
பால் விலைக்குறைப்பு, பெண்கள் மற்றும் திருநர் சமூகத்துக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் எனத் தேர்தல் வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குறைப்பு விவகாரம் முதல் சறுக்கலாக அமைந்துள்ளது. ‘சொன்னதைச் செய்வோம்... செய்வதையே சொல்வோம்’ என்பது தி.மு.க-வின் தேர்தல் முழக்கம். ‘செய்ய இயலாததை ஏன் சொல்ல வேண்டும்’ என்ற கேள்வியை இப்போது நிதியமைச்சரின் அறிவிப்பு எழுப்பியுள்ளது. தி.மு.க கொடுத்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் பலவும் அரசுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துபவை. அவற்றின் நிலை என்ன ஆகும் என்ற சந்தேகம் இந்தத் தருணத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒவ்வொரு மாதத்தின் முதல் பணிநாளன்றும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆய்வு செய்வார். அதைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து அரசின் ரிப்போர்ட் கார்டை வழங்குவார்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க குறிப்பிட்டிருந்தது. அதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. (ஆனந்த விகடன், 30.06.2021)


தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுத்தது யார் என்பது இன்னமும் தெளிவாகாத விஷயம். புதுச்சேரி பிஜேபி அமைச்சர்களும் ஒன்றிய அரசு எனச்சொல்லியே பதவிப் பிரமாணம் செய்ததாக இங்கே செய்திகள் பரவலாக வெளியானபிறகு, தமிழிசை இத்தனை தாமதமாக மறுத்திருப்பதே ஒருவிதமான சப்பைக்கட்டு மாதிரித் தான் இருக்கிறது. (இந்து தமிழ்திசை உள்ளிட்ட ஊடகங்களில் முன்னர் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு, வீடியோக்கள் கிடைக்கிறதா என்று தேடினேன். உறுதி செய்யப்படாத தகவல் என்று நினைத்ததால் இந்தப் பக்கங்களில் அதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.) இதில் தமிழில் பதவியேற்ற பெருமையை மறைப்பது எங்கே இருக்கிறது?
இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என்று சொல்லிப் பதவியேற்பு உறுதிமொழியை ஆரம்பித்துவைத்தவருக்கு, பக்கத்தில் தமிழ்நாட்டில் இந்த ஒன்றியம் என்கிற வார்த்தை கிடந்து படாத பாடு படுவது தெரியாமல் போயிற்று என்றால் நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது?  


உதயநிதி உருட்டுவதற்கெல்லாம் இது உறைபோடக் காணாது தான்! ஆனாலும் ஒரு நல்ல உருட்டோடு பதிவை முடித்துக் கொள்ளலாம் இல்லையா?

மீண்டும் சந்திப்போம்.

9 comments:

  1. விகடனை நம்பாதீர்கள். தன்மேல் போர்த்தப்பட்ட திமுக கொடியில் ஒளிந்துகொண்டு லுலுவாயிக்கு இப்படி எழுதுகிறது. வாக்குறுதிகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற வரிகளிலேயே பூனை வெளியில் வந்தது தெரியவில்லையா? மத்திய அரசிடம் 60 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி 99 ரூபாயில் விற்பவர் யார்? நீட் தேர்வு விலக்குதல், மாதம் ஆயிரம் ரூபாய், திமுக மதுத்தொழிற்சாலை மூடப்படல்.. இன்னும் லிஸ்டுகள் நீளுமே

    ReplyDelete
    Replies
    1. விகடனை நான் நம்புகிறேன் என்று யார் சொன்னது? ஆனாலும் நீங்களே எடுத்துக் காட்டியமாதிரி அதில் என்னென்ன பூசிமெழுகிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை இங்கே வருகிற நண்பர்களும் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு நெல்லைத்தமிழன் சார்!

      விகடன் மட்டுமில்லை இங்கே பெரும்பாலான ஊடகங்கள் திமுக வீசும் எலும்புத் துண்டுகளுக்காக விலைபோய் நீண்ட நாட்களாகிறது. செய்தியின் வேரைப் பிய்த்துப் பாருங்கள் என்று ஹேஷ்டாக் போட்டே நிறையப்பதிவுகள் எழுதியிருக்கிறேன்.

      Delete
    2. //செய்தியின் வேரைப் பிய்த்துப் பாருங்கள்// செய்தியின் வேரைப் பிடித்துப் பாருங்கள் என்றிருக்க வேண்டும். பிழைக்கு வருந்துகிறேன்.

      Delete
  2. விகடன் அவர்கள் கைக்குப் போய் சில வருடங்கள் ஆகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தந்தி தொலைக்காட்சியின் 75 சதவிகித பங்குகள் கேடி பிரதர்ஸ் கலாநிதி மாறனிடம் இருக்கிறதாம். எப்போ திமுகவுக்கு எதிராகத் திரும்புவார்களோ அப்போது தேவைப்படும் அளவு பத்திரிகைகளை வளைத்துப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

      Delete
    2. NDTV ஹிந்து கூட்டு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட சேனலை அவர்களால் நடத்த முடியாமல் தினத் தந்தி அதை வாங்கியது. ரங்கராஜ் பாண்டே தந்தி டிவிக்கு கொஞ்சம் மரியாதையை சம்பாதித்துக் கொடுத்தார். இசுடாலினுக்காக பாண்டேவை வெளியேற்றினார்கள். ஆனால் சேனல் பங்குகளை மாறன்களுக்கு விற்கிற அளவுக்கு தினத்தந்தி ஓனர் வறுமையில் வாடவில்லையே! இது எனக்குப் புதிய செய்தி, நெல்லைத்தமிழன் சார்!

      Delete
  3. நீங்கள் நினைத்ததில் தவறேதுமில்லை ஸ்ரீராம்! ஒட்டுமொத்தமாக வாங்கிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பெரிய அளவுக்கு அனுசரித்துப் போகிற அளவுக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். விகடனில் கொஞ்சம் பெயரெடுத்தவர்களை சன், கலைஞர் என்று தங்கள் சேனல்களுக்கு இழுத்துக்கொள்வதற்கு வசதியாக, ஒரு பயிற்சித்தளமாக குறுகி விட்டார்கள், அவ்வளவுதான்!

    ReplyDelete
  4. ஆனந்த் விகடனை எல்லாம் மறந்து வெகு வருடங்களாகின்றன...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஆனந்த விகடனைப் பார்த்திருப்பீர்கள் துரை செல்வராஜு சார்!

      இப்போதிருப்பது அந்தப்பெயரில் உலவிவரும் வெறும் ஆவி!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)