திமுக ஆட்சியின் 30 நாள் சாதனை என்ன? நிதி அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் சர்ச்சைக்குரியவர்கள் திமுகவினை தெருவில் இழுத்து விடுவார்கள் என்பது 30 நாளிலே தெரிகின்றது. திமுக ஆட்சியின் உச்சபட்ச சாதனை என்னவென்றால் யூடியூபில் பேசிகொண்டிருப்பவனெல்லாம் அரசு பணிக்கு வரமுடியும் எனும் அதிசயத்தை செய்தது. மற்றபடி நீட் ரத்து, நகைகடன் ரத்து, குடியுரிமை ரத்து, காஷ்மீர் சட்ட ரத்து,மதுகடை ரத்து இன்னும் எதை எல்லாம் ரத்து செய்வோம் என சொன்னார்களோ அந்த கோரிக்கை எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டார்கள், அதுதான் ஆகசிறந்த சாதனை
மணல் குவாரி தொடங்கி +2 தேர்வே இல்லா கல்லூரி அனுமதிவரை அனுமதிக்கப் படுகிறது, இது மிகபெரிய சுரண்டலை, வசூலை அவர்களுக்கு கொடுக்கும். இன்னும் என்னென்ன வகையில் அள்ள முடியுமோ அவ்வளவு வகையிலும் வாரி சுருட்டுவார்கள் இனி 5 வருடம் இதுதான் நடக்கும். ஆடாத ஆட்டம் ஆடி அடங்கிய சசிகலா கும்பல் போல் இனி இன்னொரு கும்பல் ஆட ஆரம்பிக்கும். ஆடட்டும், அவர்களுக்கு குறித்த காலம் முடியும் வரை ஆடட்டும். அதுவரை இதையெல்லாம் பார்த்து கொண்டிருப்பதை தவிர யார் என்ன செய்துவிட முடியும்? ஆனால் காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருகிறது, அந்த கணக்கு நிறைவேறும் பொழுது எல்லாம் மாறும், நிச்சயம் மாறும் என்று முகநூலில் தமிழகத்தில் ஆட்சி மாறிய 30 நாள் சாதனையை மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஸ்டேன்லி ராஜன்.
மீண்டும் சந்திப்போம்.
//யூடியூபில் பேசிகொண்டிருப்பவனெல்லாம் அரசு பணிக்கு வரமுடியும் எனும் அதிசயத்தை செய்தது. // - ஜெயரஞ்சன் அடுத்த அல்லக்கை. பதவிக்காக மனுஷன் என்னவெல்லாம் பேசி எழுதினார். நாய் வாலை ஆட்டுவது பிஸ்கெட்டுக்குத்தான் என்று எனக்கு அப்போதே தெரியும். திமுக ஆட்சிக்கு வந்ததும் பேசுவதை நிறுத்திவிட்டார். பேசினால் தமிழகத்தைப் பற்றிப் பேச முடியாதுன்னு தெரியும்
ReplyDeletejeyaranjanஜெயரஞ்சன் சுத்த வேஸ்ட் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் வேறொன்றைக் கவனிக்க மறக்கிறோமா? அதென்ன வளர்ச்சிக் கொள்கைக் குழு? குழுவில் இருப்பவர்கள் வளர்ச்சிக் கொள்கையை முடிவு செய்கிற தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள்தானா? அதைப்பற்றிய பேச்சே காணோமே! நர்த்தகி நடராஜ் என்ன வளர்ச்சிக் கொள்கையை சிபாரிசு செய்யப்போகிறார் என்பதில் யாருக்காவது ஒரு சிறு ஊகம் இருக்கிறதா ?
Deleteஇதெல்லாம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மன்னனுக்குத் துதி பாடும் கும்பல் தான்! சந்தேகமா என்ன?
முரசொலி என்ற பெயரில் அறக்கட்டளைக்கு 120 கோடி ஸ்வாஹா. தடுப்பூசிக்கு 500 ரூபாய் வீதம் வாங்குவதாக காணொளி பார்த்தேன் (ஸ்வாஹாவுக்கு). கோவில் வருமானத்தில் ஊர் உலகத்திற்கு 250 ரூபாய் செலவில் (ஒரு உணவு) வழங்குவதாக ஸ்வாஹா...
ReplyDeleteபத்தாண்டுகளாகக் காய்ந்து கிடந்தவர்கள் கம்பங்கொல்லைக்குள் புகுந்தமாதிரி ஆரம்பிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே! இவர்கள் யோக்கியமாக இருந்தால் மட்டுமே அதிசயம், உலகமகா அதிசயம் என்பதை ஓட்டுப்போடுகிற நேரத்தில் ஜனங்கள் மறந்துவிட்டார்களோ?
Deleteமுரசொலி விவகாரம் எனக்கு வாட்ஸாப்பில் வந்ததது. செய்தித்தாள்களில் பார்க்கவில்லை. பாவம், அவர்கள் கண்ணில் அது படவில்லை போல...
ReplyDeleteகண்ணில் பட்டாலும் அது வெளியே சொல்லிக் கொள்கிற சாதனையா என்ன? நிறைய விஷயங்களை சமூக ஊடகங்களில் இருந்துதான் தெரிந்து கொள்ள முடிகிறது ஸ்ரீராம்!
Deleteமுன்களப்பிணியாளார்கள் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே.