தமிழக நிதியமைச்சர் (பி.டி.ஆர். பழனிவேல்) தியாகராஜன் தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் என்னுடைய தாத்தா முதல்வர், தந்தை அமைச்சர் என்று சொல்லி வரும் நிலையில், தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன் வெறும் 143 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தவர் என்று தகவலைத் துருவி எடுத்துப் போடிருக்கிறது அதிமுகவின் ஐடி விங்க். ‘1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பொப்பிலி அரசர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் கப்பல் பயணம் என்பதால், அவர் மீண்டும் முதல்வர் பணிக்குத் திரும்ப 4 மாதங்கள் ஆகும் என்பதால் இடைக்கால முதல்வராக பி.டி.ராஜனை அமரவைத்துவிட்டுப் போனார். அதாவது இரா.நெடுஞ்செழியன் போல இடைக்கால முதல்வராக மட்டுமே இருந்திருக்கிறார் அவர்’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது மதுரை அதிமுக ஐடி விங். திமுகவின் ஐடி விங் செயலாளருக்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள் அதிமுக ஐடி விங் என்று ஹாட்லீக்ஸ் செய்தியாகப்போட்டுச் சிரித்திருக்கிறது இந்து தமிழ்திசை!
டபுள் வாட்ச் டக்ளஸ் பீற்றிக்கொள்வது எல்லாமே இப்படி உடனுக்குடன் பங்ச்சர் செய்யப் படுவதால், இப்போது எல்லாம் ஒருகையில் மட்டுமே வாட்ச் அணிகிறாரோ?நண்பர் நெல்லைத்தமிழன் மாதிரியே மாமல்லனும் நிறைய எதிர்பார்க்கிற மாதிரி இருக்கிறது! தியாக ராஜன், சேகர்பாபு, மா சுப்ரமணியன் போன்ற பக்கவாத்தியங்கள் செய்கிற அலப்பறைகளில், இசுடாலின் எங்கே ஜனங்கள் தன்னுடைய சாயத்தை துவைத்தெடுத்து விடுவார்களோ என்ற பயம் குறைந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்படி சிலர் காப்பான் ஆக இருக்கும்போது அவர்கள் மீது கைவைப்பதற்கு இசுடாலினுக்கு எப்படி மனம் வரும் என்று நினைப்பது?
டபுள் வாட்ச் டக்ளஸ் இன்னமும் ஒன்றியம் ஒன்றிய அரசு என்று அர்த்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிற வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. செங்கோட்டை ஸ்ரீராம் கடந்த மாத மத்தியிலேயே இந்த அக்கப்போருக்கு ட்வீட்டியிருந்த செய்தி மேலே! மக்களுடன் ஒன்றிய அரசு எது, ஒன்றாமல் வெட்டி அக்கப்போர்களில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிற அரசு எது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!
இயேசு மீட்கிறார் என்ற பெயரில் மதமாற்ற வியாபாரம், ஜெப ஊழியம், மோடி எதிர்ப்பு, அப்புறம் சத்தியம் டிவி எனப்பல தொழில்களையும் நடத்திவரும் மோகன் சி லாசரஸ் இன்று தமிழக முதல்வரைச் சந்தித்து கொரோனா நிதியாக ஒன்றரைக்கோடிக்கான காசோலையை அளித்தாராம்! தூத்துக்குடி எம்பி கனிமொழியும் உடனிருந்தார் என்பது செய்தி விசேஷம்.
இந்த வார துக்ளக் அட்டைப்பட நையாண்டியை விட உள்ளே வெளியாகியிருக்கும் கருத்துப்படம் சிறப்பு!
ஆயிரம் அரசியல் காமெடி இருந்தாலும் சீனாதானா செட்டியார் காமெடி மாதிரி வருமா? இந்தமனிதரை பொருளாதார மேதை அப்படி இப்படியென்று தலையில் தூக்கிவைத்து ஆடும் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களை என்ன செய்யலாம்? யோசித்து வையுங்கள்.
மீண்டும் சந்திப்போம்.
கொறிக்கக் கொறிக்க. கூடியது சிரிப்பு..நாங்களும் அமெரிக்க டயம் எப்போதும் தெரிந்திருக்க வேண்டிய சூழலில் இருப்பவர்கள்...இந்த ரெண்டு வாட்ச் காமெடி ஏனோ எங்களுக்குத் தோணவே இல்லை..
ReplyDeleteகாமெடி எல்லாம் ஒரு டைமிங்கில் வருவது! சாதாரணமாக எல்லோருக்கும் வராதது.
Deleteபழைய கேசியோ வாட்சில் இரண்டு டைம் ஜோன் செட் செய்துகொள்கிற வசதி இருந்ததே! எல்லோரும் கிண்டல் பண்ண ஆரம்பித்ததில் இருவாட்சி இப்போது ஒருவாட்சி என்று மாறி விட்டாராம்!
வாயால் பேசுவதைவிட செயலால் பேசுவது சிறந்தது என்று பிடிஆர் வாரிசுக்கு எப்போது தெரியப்போகிறது? பி டி ஆர் வாரிசு என்பதால் நானும் ரொம்ப எதிர்பார்த்திருந்தேன்.
ReplyDeleteதீபக் திவாரி பதில் கண்டு சிரித்து விட்டேன்!
'இதுமாதிரி' சமயங்களில் கனிமொழி கட்டாயம் உடனிருப்பார்தானே!
சோவும் கூட ஒரு நேரம் பசியை பொருளாதாரத்தில் புலி என்று சொல்லி இருந்த நினைவு.
பழனிவேல் ராஜன் மட்டும் அப்படி என்ன சாதித்துவிட்டார் ஸ்ரீராம்? அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளையாக்கும் தியாகராஜன்!
Deleteதீபக் திவாரியின் பதில் சிரிப்பை வரவழைத்தது, சரி! அதற்குமேல் நிறைய யோசிக்கவும் வைத்ததே!
இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கனிமொழியும் ஆதரவாளர்களும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் என்பது நிலவரம்.
பானாசீனாவின் பொருளாதார மேதைமை பற்றி அவரது உளறல்களே சாட்சியம் சொல்லும்!