சிறிது காலம் முன்புவரை கூட நான் அர்ஜுன் சம்பத் என்கிற நபரை அவ்வளவாக அறிந்ததில்லை. பொன் மாலை பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் அடிக்கடி அர்ஜுன் சம்பத்தைக் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதுபோக ஒன்றிரண்டு வீடியோக்களில் பார்த்ததோடு சரி. நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ இன்று என் பார்வைக்கு வந்தது.
இந்த 23 நிமிட வீடியோவில் திமுகவை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரிக் கேள்வி கேட்கிறார். யூட்யூப் சேனல் வைத்திருந்தாலே ஊடகம் என்று அலப்பறை செய்கிற ஆசாமிகளுக்கு சூடும் வைக்கிறார் ரெட்பிக்ஸ் சேனல் தலைப்பு வைக்கிற மாதிரி சிவசங்கர் பாபாவைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை, சர்ச்சையைக் கிளம்புகிற மாதிரி எதையும் பேசவில்லை. ஆனால் அப்படித் தலைப்பு வைத்துத்தான் அவர்களும் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறது, பாவம் என்ன செய்வது? அர்ஜுன் சம்பத் குறிப்பிடுகிற லயோலா கல்லூரிப் பேராசிரியை பற்றி ஒரு 5 நிமிட வீடியோ.
ஸ்டேன்லி ராஜன் சொல்கிற நுண்ணரசியல் புரிகிறதா? ஆணையத்தலைவர் மாதிரி ஏதாவது வாங்கிக்கொள்! ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் ஆசைப் படாதே! அவ்ளோ தான்! பஞ்சாயத்து முடிந்தது
மன்மோகன் சிங் 10 ஆண்டு காலம் டம்மிப்பிரதமராக இருந்த ஐ மு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அதிகம் பேசப் பட்ட வார்த்தை கூட்டணி தர்மம். அதற்கு அர்த்தம் மிக சிம்பிள்! கொள்ளையடிப்பதில் உனக்கு எவ்வளவு எனக்கு எவ்வளவு என்கிற சதவீதக்கணக்கு. அவ்வளவு தானா? பானாசீனா மகனுடன் போய் முதல்வரை சந்தித்துவிட்டு வந்தது என்ன கணக்கு? மரியாதை நிமித்தமாக என்பது வெளியே சொல்லிக் கொள்வது மட்டும் தான்.
ஊகிக்க முடிகிறதா? மீண்டும் சந்திப்போம்.
பானா சீனா மகனுடன் முதல்வரைச் சந்தித்து விட்டு வந்த செய்தியே புதிதுதான். அர்ஜுன் சம்பத் காணொளி பின்னர் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஒரு மூலையில் சிறு செய்தியாக மட்டும் வந்திருந்தது ஸ்ரீராம்! சந்திப்பும் கால் மணி நேரத்துக்குள்ளாக முடிந்து விட்டதாக.
Delete