Showing posts with label ஒளி பொருந்திய பாதை. Show all posts
Showing posts with label ஒளி பொருந்திய பாதை. Show all posts

Wednesday, November 18, 2020

எனக்கென்ன மனக்கவலை! என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை?!



 "இதுவும் கடந்து போகும்."

எப்போது?

ஹரிமோகனுடைய கனவைப் படிக்க ஆரம்பித்தபோதுஏதோ என்னுடைய சொந்தக் கதையைப் படிக்கிற மாதிரியே இருந்ததுபடித்து முடித்த போதுஇந்த அனுபவம்இந்தக் கனவு என்னுடையதாக இருக்கக் கூடாதா என்கிற ஏக்கமே பெரிதாக இருந்தது.

"இதுவும் கடந்து போகும்என்ற வார்த்தை மறுபடி என்னுள் எதிரொலித்தது.

ஒரு ஜென் கதை.

ஒரு ஜென் ஞானிஒரு மலையடிவாரத்தில் அமர்ந்து எதிரே தெரிகிற மலையையும்வானத்தையும் பார்த்துக் கொண்டே இருப்பார்தினமும் அவர் மௌனமாகஇப்படி பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தவர்கள்ஆவலை அடக்க மாட்டாமல் அவரிடமே கேட்டு விட்டார்கள்:

"அங்கே என்ன தான் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

"அங்கே பாருங்கள்வானத்தில் மேகத்திரள் இருக்கிறதல்லவாஓரிடத்தில் திரளாகஇன்னோரிடத்தில் அங்கே ஒன்றுஇங்கே ஒன்று என்றிருக்கிறதல்லவாஅதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்." அந்த ஜென் துறவி அமைதியாகச் சொன்னார்மறுபடி மேகங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கேள்வி கேட்டவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லைஇன்னொரு கேள்வி கேட்டார்கள்.

"வானத்தில் மேகங்கள் காணப் படுவது இயற்கை தானேஇதில் என்ன அதிசயம் இருக்கிறது?"

"அங்கே பாருங்கள்கூட்டமாக இருந்த மேகத்திரள்காற்று வீச வீசஅப்படியே கலைந்து கடந்து போகிறதல்லவாஆனால்மலை அங்கேயேஅப்படியே தான் இருக்கிறதுஅது போலவேநமக்குள் எண்ணங்களும் ஒருசமயம்கூட்டமாகவும் இன்னொரு சமயம் தனியாகவும் வருகிறதல்லவாஇதுவும் அந்த மேகத்தைப் போலவே கடந்தும் போகிறதல்லவாஅதைத் தான்உள்ளேயும் பார்த்துக் கொண்டிருந்தேன்."

ஞானியின் இந்த பதில் சிலபேருக்குப் புரிந்ததுபல பேருக்குப் புரியவில்லைமறுபடிமறுபடி கேள்வி கேட்டார்கள்ஞானி மூன்றே வார்த்தைகளில் சொன்னார்:

"இதுவும் கடந்து போகும்."

"நான் யார்என்று கேட்டுப் பார்இந்த உடலாமாறிக்கொண்டே இருக்கிறமனமாகண்போன போக்கிலே இழுத்துச் செல்கிற இந்திரியங்களாஎண்ணங்களாஎன்னுடையது என்று எண்ணுகிற எதுவுமே உண்மையிலேயே என்னுடையது தானா இப்படி அமைதியாக விசாரம் செய்துகொண்டுதன்னை அறிகிற வழியை உபதேசித்தார் பகவான் ஸ்ரீ ரமணர்.

ஸ்ரீ அரவிந்தர், இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்பிய போது, விஷ்ணு பாஸ்கர லீலே என்கிற யோகியைச் சந்திக்கிறார். லீலே, உன் மனத்தையே கவனித்துப் பார், எண்ணங்களும், ஆசைகளுமாக ஏராளமானவை உள்ளே ஓடிக் கொண்டிருப்பதைப் பார். இதில் எதுவெல்லாம் உன்னுடையது என்று அறிந்து, மற்றவற்றை வெளியே துரத்திவிடு என்றார். ஸ்ரீ அரவிந்தர், யோகி லீலே சொன்னபடியே செய்து வர, மூன்றே நாளில், எண்ணம், ஆசைகள் என்று எதுவுமே இல்லாமல் மனம் நிர்மலமாக, ஒருஸ்படிகத்தைப் போல இருப்பதைக் கண்டார். எத்தனையோ ஆண்டுகள் தவமிருந்தும், கை கூடாத இந்த நிலையை ஸ்ரீ அரவிந்தர் மூன்றே நாட்களில் சாதித்ததைப் பார்த்து வியந்தார் யோகி லீலே.

ஆனாலும், இது ஒரு ஆரம்பம் தான்.

விதையிலிருந்து இலைகிளை என விரிந்து மரமாகிமறுபடி ஒரு விதைக்குள் சுருங்கி மறுபடி முளைத்துஇந்தசிருஷ்டி மேலோட்டமாக ஒரே மாதிரி தெரிந்தாலும்பரிணாம வளர்ச்சி மென்மேலும் விரிந்து வளர்ந்து கொண்டே இருப்பதை இந்தக் கதையில் வரும் ஞானி மாதிரி அமைதியாகப் பார்க்கிற பொறுமை நம்மில் அனேகமாக எவருக்குமே இல்லைநாம் விரும்புவதெல்லாம்திடீர்த் திருப்பங்கள்சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடியான sensationalism தான்.

ஒரு கொலை என்கிற வன்முறைச் சம்பவத்தை 'சதக்' ' சதக்என்று பதினாறு தடவை 'சதக்போட்டு கத்தியால் குத்தினான்..சம்பவ இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார் என்கிற மாதிரியான தினத்தந்தி டைப் விஷயங்கள் பரிணாம வளர்ச்சியில் சன் டி.வீஜெயா டி.வீஇன்னும் பிற டி.வீக் காரர்கள் புண்ணியத்தில் மெகா சீரியல் ஆக வளர்ந்துஇருக்கிற கொஞ்ச நஞ்சம் common sense ஐயும் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில்,

நான் யார்நான் படைக்கப் பட்டது எதற்காக?

இந்தக் கேள்விகளை கேட்டுக் கொள்வதற்கே நம்மில் பலருக்குப் பல நூறுஆயிரம் பிறவிகள் வேண்டியிருக்கின்றனகேள்வியைக் கேட்பதிலும் சரியான பதிலை அறிந்துகொள்வதிலும் நுட்பம் நிறைய இருக்கிறது என்பதால்இந்த ஆட்டத்திற்கே நான் வரவில்லை சாமிஆளை விடு என்கிற மாதிரித் தான்நம்முடைய புலன்கள்சோம்பேறித்தனமானஅது அதற்கே பழக்கப் பட்டுப் போன தளைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கின்றன.

அதனால் தான் மனமற்ற நிலை, அல்லது மனமிறந்த நிலை என்று சொல்லப் படுகிற நிலை ஒன்று இருப்பதையே நாம் அறிந்திருப்பதில்லை. அறிந்தால் அல்லவா, அதை எட்ட வேண்டும் என்கிற வேட்கையும், முயற்சியும் தொடங்கும்?

ஒளித்துஒளித்து வைத்துமறந்தே போன ஆன்மீக ரகசியங்களைகேட்கத்தயாராக இருந்த அனைவருக்கும் வாரி வாரி வழங்கினார் ஞான சிம்ஹமான சுவாமி விவேகானந்தர்.

அவருக்கும் முன்னாலே, "ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார்என்று ரகசியமெதுவும் இல்லைஇதோ பெற்றுக்கொள் என்று பெரும் கருணையோடு கேட்டவர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினார் பகவத் ஸ்ரீ ராமானுஜர்.

சேற்றில் சிக்குண்டு முதலைவாய்ப்பட்ட யானையின் கதையைச் சொல்லும் போதுமுதலைக்கும்யானைக்குமாய் நடந்த இழுபறிப் போராட்டம் ஆயிரம் வருடம் நடந்ததாகக் கதை சொல்லுவார்கள்யானை தன் பலத்தில் நம்பிக்கை வைத்துப் போராடிக் கொண்டிருந்த போதுஇறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.என் செயலாவதொன்றுமில்லை என்று உணர்ந்த பிறகுஅதே யானை "ஆதிமூலமேநாகணையாய்வந்து என் ஆரிடறை நீக்காய்" என்று முறையிட்ட போதுஇறைவன்அரை குலைய நிலை குலையயானையைக் காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்தானாம்கதையாகச் சொன்ன விஷயத்திலும்ஒரு ஆன்மீக ரகசியம் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.

நான் எனது என்கிற நிலையில் இருந்து உயர்ந்தால் ஒழியநம்மைப் பீடித்திருக்கிற நோவுகளில்தளைகளில் இருந்து விடுபட வழியே இல்லை.

நானேஎனதே என்றிருந்த இவனையும் ஒரு பொருளாக நயந்துஇவனுக்கும் பல வெளிச்சக் கீற்றுக்களைக் காட்டிஒளிபொருந்திய பாதை ஒன்றிருக்கிறதேஇன்னமும் ஏன் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறாய் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லாமல் சொன்ன நிகழ்வுகளும் நடந்தன.

அம்மாஉன்னை வணங்குகிறேன்.


அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழிநடத்த வரும்போது எனக்கு என்ன கவலை
?

2009 மார்ச் மாதம் அங்கே எழுதியதன் மீள்பதிவு. 

Friday, April 24, 2020

அன்னை என்னும் அற்புதப் பேரொளி! நிலையாகத் தங்க வந்த நாளின் நூற்றாண்டு நிறைவு!

இன்று ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கத்  திரும்பிய நாளின் நூற்றாண்டு நிறைவு .ஒவ்வொரு ஆண்டுமே ஏப்ரல் 24 பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரம தரிசனநாளாக இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையை தியானிக்க உதவியாக ஒரு வீடியோ 25 நிமிடம் 

 

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன். எங்கள் ஹ்ருதயத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருந்து திருவருள் செய்யவேண்டும்! தாயே! உனது பிரியத்துக்குத் தகுதியானவர்களாக எங்களை ஆட்கொள்ள வேண்டும். 

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம   

Friday, March 29, 2019

ஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரிக்கு வந்த தினம் இன்று!

மார்ச் 29! ஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரிக்கு முதன் முதலாக வந்த தினம்!


ஸ்ரீ அரவிந்தராலும்பிறகு எல்லோராலும் அன்னை என்று அழைக்கப் பட்ட அற்புதப் பேரொளியைக் கண்டு கொள்கிற தருணம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதுநாம் தான்தேடி வருகிற இறையருளை உணராமல் இருக்கிறோம்.  அறியாமைஆர்வமின்மைநானே எனதே என்று பழக்கங்களின் பிடியில் சிக்கி புலன்களுடைய அடிமையாகவே இருப்பது இப்படிநிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இறையருள்நம்மை விட்டு விலகுவதே இல்லைஅதே நேரம்நம் மீது நம் விருப்பத்திற்கு மாறாகத் தன்னை திணித்துக் கொள்வதும் இல்லைநாமாகவிரும்பி அழைப்பதற்காகஏற்றுக் கொள்வதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறதுஒவ்வொரு தருணத்திலும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை நமக்களித்து விட்டுஅந்தந்த முடிவுக்குத் தகுந்த பலனையும் அனுபவத்தையும் தந்து கொண்டேஅதிலிருந்தேஉள்ளார்ந்த ஒரு ஆன்மீக அனுபவத்திற்கான பாதையையும் திறந்து வைக்கிறதுநம்மை அறியாமலேயேஅல்லதே அறிந்தே கூடக் கிணற்றுக்குள் தான் விழுவேன் என்று பிடிவாதமாக விழுந்தாலும் கூட,கிணற்றில் விழுந்த பிறகு அதிலிருந்தே வேறொரு பாதையில் இறையருள் வழிநடத்துகிறது.

நல்லவை என்பன மட்டும் அல்லமிகத் தீயவை என்று சொல்லப் படுபவையும்தெய்வ சித்தத்தின் படி இயங்கும் கருவிகளாகவே இருப்பதை அப்போது தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது"வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்று அனுபவித்துப் பாடிய வரிகளின் பொருள் அப்போது தான் அவரவர் பக்குவத்துக்கேற்றபடி புரிகிறது.

இப்படித்தான் 1965-66 களிலேயே ஸ்ரீ அரவிந்த அன்னைஎன்னுடைய அன்னையாகவே தோன்றித் தன்னை அறிவித்துக் கொண்டாலும்என் ஈர்ப்புகவனமெல்லாம் வேறு எதில் எதிலேயோ இருந்ததால்தேடி வந்த அன்னையை அறியவில்லைஸ்ரீ அரவிந்தரோடு அணுக்கமாக இருந்த நண்பர்களே `ஆரம்ப காலங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையை 'அன்னையாக' அறிந்திருக்கவில்லை. அவரும் ஏதோ தங்களைப் போலவே, ஸ்ரீ அரவிந்தருடைய இன்னொரு சீடர் என்ற அளவிலே தான் நினைத்திருந்தார்கள். 

ஸ்ரீ அரவிந்தர் ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில் அன்னையைப் பற்றி, அவருடைய அவதார நோக்கங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். 'மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்காதே, அந்த பராசக்தியே தான் இங்கே மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாள்' என்று உறுதியாகச் சொல்கிறார். ஆசிரமத்தில் இருக்கும் இந்த அன்னையைப் பற்றியா சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று உறுதிபடச் சொல்கிறார்.

"அன்னை" என்ற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதங்களின் [மொத்தம் ஆறு] தொகுப்பு, அதையொட்டி சாதகர்களுக்கு எழுந்த கேள்விகளுக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பதில்கள், இவைகளைத் தமிழில் தொடர்ந்து தரவும் விருப்பம். ஸ்ரீ அன்னை திருவுள்ளம் உகந்தால் அதுவும் கை கூடும்.

முப்பது, முப்பத்திரண்டு  வருடங்களுக்குப் பின்னால்வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் தானாகவேஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அழைத்துச் செல்வதாக அமைந்தனஅப்போதும் கூடஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் அன்னையிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன் என்று சொல்ல முடியாது

அப்போது மட்டுமில்லைஇப்போதும் கூடத்தான் என்று உள்ளேயிருந்து ஒரு மூலையில் ஒரு குரல் ஒலிக்கிறது அதைப் பொருட்படுத்தாதே அன்னையிடம் உன்னை முழுமையாக சமர்ப்பணம் செய்து கொள்ளத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இரு, ஆக வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள் என்றும் ஒரு நம்பிக்கைக் கீற்று அவநம்பிக்கையை, என்னை அன்னை ஏற்றுக் கொள்வாளா, எனக்கு அருள் புரிவாளா என்ற சந்தேகங்களை விரட்டி அடித்துக் கொண்டும் இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை தன்னை ஒரு போதும் ஒரு குருவாக அறிவித்துக் கொண்டதில்லைமாறாகதன்னிடம் வருபவர்களுக்குச் சொன்னதெல்லாம்இது தான்:  

"என்னிடம் வரும் போதுஅன்னையிடத்திலே தானாகவே ஆர்வத்தோடு ஓடி வருகிற குழந்தையின் மனப்பாங்கோடு வாஅப்படி வருவதுஎண்ணற்ற தடைகள்கஷ்டங்களில் இருந்து உன்னைக் காப்பாற்றும்"


"Try to be spontaneous and simple like a child in your relation with me- it will save you from many difficulties.”- The Mother

The Mother’s First Arrival at Pondicherry —March 29
The Mother came to Pondicherry on March 29, 1914, and met Sri Aurobindo for the first time. The Mother, after Her first meeting with Sri Aurobindo, wrote in Her diary:
“It matters little that there are thousands of beings plunged in the densest ignorance, He whom we saw yesterday is on earth; his presence is enough to prove that a day will come when darkness shall be transformed into light, and Thy reign shall be indeed established upon earth.”
The day, March 29, 1914, was also the beginning of what has now grown into the Sri Aurobindo Ashram and a worldwide spiritual movement.
The Mother came to the earth with a great spiritual mission. Sri Aurobindo has said that:
“The Mother comes in order to bring the Supramental.”
“Her embodiment is a chance for the earth-consciousness to receive the Supramental into it and undergo the transformation necessary for that to be possible.”
The Mother first met Sri Aurobindo in the year 1914, soon after her arrival. After their meeting, Sri Aurobindo said that he had never seen anywhere a self-surrender so absolute and unreserved as that of the Mother. Later, Sri Aurobindo mentioned about the significance of the presence of the Mother on earth in the following words:
“The great work of the Avatar is to manifest the Divine Grace upon earth. To be a disciple of the Avatar is to become an instrument of the Divine Grace. The Mother is the great dispensatrix – through identity – of the Divine Grace with a perfect knowledge – through identity – of the absolute mechanism of Universal Justice.
And through her mediation each movement of sincere and confident aspiration towards the Divine calls down in response the intervention of the Grace.”
There will be a collective meditation at 7:45 pm in the Ashram playground on this day.
~ Courtesy : Sri Aurobindo Society, Pondicherry / Facebook page.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!


Thursday, March 14, 2019

காரடையான் நோன்பும்! ஒளி பொருந்திய பாதையும்!

வைகறை! இருளகன்று ஒளிபரவும் தொடக்கம்!
நாளை  காரடையான் நோன்பு!   

உருகாத வெண்ணையும்ஓரடையும் நான் தருவேன் என்று சொல்லிப் பெண்கள், இனிப்பு அடை , கொழுக்கட்டை, வெண்ணெய் முதலானவற்றைப் படையலிட்டு, தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்ப் பிரார்த்தனை செய்து கொள்ளும் நாள். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிராமல், ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழ வேண்டியது தான் வாழ்க்கைஎன்பதைக் கொஞ்சம் நினைவு படுத்துகிற நாளும் கூட!

இந்த காரடையான் நோன்பு என்பது தமிழ் நாட்டிலும்
, கர்வா சௌத் என்கிற பெயரில் வடக்கிலும்பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்க வேண்டும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேற்கொள்கிற விரதம் தான் இது.  

கதையாகச் சொல்லி, அதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே அதை ஒரு சடங்காகவும், விரதமாகவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி வழியாகத் தொடருகிற மரபு. காலப் போக்கில், கதைகள் அங்கே அங்கே கொஞ்சம் திரிந்து, வெறும் சடங்காக மட்டுமே குறுகிப் போய் நிற்கிறது.

மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளையில்அதாவது மாசி மாதம் முடிவடைகிற நேரத்திற்கும்,பங்குனி மாதம் பிறக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில்திருமணமான பெண்கள் விரதம் இருந்துகார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும்வெண்ணையும் நிவேதனம் செய்துநோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர்சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன்ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்வது மரபு.

அப்புறம், காலப்போக்கில் அங்கே அங்கே கொஞ்சம் இடைச் செருகல்கள் , இது காமாக்ஷியை நினைத்துச் செய்யப் படுவது...அப்படி இப்படி என்று localise பண்ணுவதும், பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிற ஒரு தரப்பு இதெல்லாம் வெறும் மூடப் பழக்கங்கள், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக, இட்டுக் கட்டிய கட்டுக் கதை என்று கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்ட் போல சொல்லிக் கொண்டிருப்பதுமாகச் சுருங்கிப் போயிருக்கிறது.


" மாசிச் சரடு பாசி படரும்என்பதற்கேற்பபுதியமாங்கல்யச் சரடை அன்றைய தினம் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வதும்கன்னிப் பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற மணவாளன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதும் நம்முடைய மரபு.

மாங்கல்ய பலம் வேண்டிப் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்திற்குப் பின்னணியாக ,மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதை இருக்கிறதுசாவித்திரி என்றவுடனேயே எமனிடமிருந்து கணவனைப் போராடி மீட்ட பெண் என்ற அளவுக்காவது நம்மில் பலருக்கு அந்தக் கதை கொஞ்சம் தெரிந்திருக்கும்.

மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதி அவனது ஒரே மகள் சாவித்திரிதிருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தை.மகளும்தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில்அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள்அவன்சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும்சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன் உறவினர்களுடைய சதியால் அரசிழந்துபார்வையும் இழந்துதன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன்கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.

தந்தையிடம் திரும்பும் சாவித்திரி சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள்விசாரிக்கும் போதுசத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறதுசாவித்ரியின் தாய் கலங்குகிறாள்மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள்ஆனால்சாவித்திரிசத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.

சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறதுகணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள்அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறதுஆம்ஒரு வருடம் நிறைகிறதுகணவனும் மனைவியுமாககானகத்தில் கனிகிழங்குகளை சேகரிக்கப் போகையில்கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.

சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள் உனது நாள் இன்னமும் இருக்கிறது,திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும்பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல்தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன்தொடர்ந்தே வருவேன் என்கிறாள். 

இடையில்பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடுநீ வேண்டிய வரங்களைத் தருகிறேன்திரும்பப் போய் விடு என்கிறான்.என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரிஎதுவானாலும் கேள்தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

வரமோவாக்கோ எதுவானாலும்தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும்மனிதர்களும்ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது. என்ன சாபத்தினாலோவாக்குறுதி என்பது மீறப் படுவதற்காகவேஏமாற்றுவதற்காகவே என்று செயல்படும் அரசியல் கட்சிகள், தலைவர்கள்,  கொஞ்சம் கூடப் பொறுப்போ, அக்கறையோ இல்லாத அதிகார வர்க்கத்தையும், எங்கே என்ன நடந்தால் நமக்கென்ன என்று விட்டேற்றியாக இருந்து விட்டுப் போய்விடுகிற மக்களையும்  கொண்டதாகச் சிறுமைப் பட்டுப் போயிருக்கிறது இன்று.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.

'தந்தேன்' என்றான் எமன்

பாசக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது .சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம்மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறதுஇழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது என்று இந்தக் கதை முடிகிறது.

மஹாபாரதத்தில்போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர்இந்தக் கதைவேதங்களின் திரண்ட உட்பொருளைசிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. 

சாவித்திரி மகா காவியத்தை இணையத்தில் படிக்க இங்கே!

சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று சாவித்திரிசூரியனின் மகளாகவே கருதப்படுகிறாள்பன்னிரண்டே மாதங்களில்கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும்மனம் கலங்காது உறுதியுடன் மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள்அன்பே அவளது பலமாக இருப்பதைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

ஸ்ரீ அரவிந்தர் 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும்,யோக சாதனையாகவும் ஆனதுஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரிஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது1930 களில் "சாவித்திரிஒரு கதையும் அதன் தரிசனமும் என்று வெளியானது 
தொடர்ந்து மெருகேறிSAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

"நான் சாவித்ரியை மனதளவில் துவங்கினேன்ஒவ்வொரு முறையும் நான் மேல் நிலையை அடையும்போது அந்த நிலையிலிருந்து மறுபடியும் எழுதினேன்உண்மையில் நான் சாவித்ரியை ஒரு செய்யுள் என்ற உணர்வில் எழுதி முடிக்க விரும்பவில்லைஆனால்ஒரு செய்யுளை ஒருவரின் யோகநிலையிலிருந்து எப்படியெழுதி அதை ஒரு சிறந்த சிருஷ்டியாக்க முடியும் என்ற மனதுடன் செயல்பட்டேன்."

என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுத ஆரம்பித்த அனுவவத்தை விவரிக்கிறார்ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால யோக சாதனையின் வெளியீடாக, "சாவித்திரிஎன்னும் பெரும் காவியம் இருக்கிறதுஇது வெறும் காவியம் என்றோஎழுதியவரின் அனுபவக் குறிப்பு என்கிற அளவோடோகுறுகி நின்று விடாமல்அதை படிக்கிற நமக்கும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தை அளிக்கிற மந்திர சித்தியையும் கொண்டிருக்கிறது.

ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட கவிஞர்கள் கூட, இவ்வளவு விரிவாகக் கவிதை இயற்றியதில்லை! மானுடம் சந்தித்த தத்துவார்த்தக் கேள்விகள் அத்தனையையும் ஒரு சேரத் திரட்டி விடை காண முயற்சித்த நூல் எதுவுமில்லை.  வெறும் புனைவு, ஊகம் என்பதில் இருந்து விலகி, இங்கே சாவித்ரி மகாகாவியம், ஸ்ரீ அரவிந்தரின் தவத்தில் விளைந்த அனுபவங்களின் திரட்டு என்றே சொல்லக் கூடிய அளவில் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது.  ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்பும் எவருக்கும், உதவுகிற படிக்கட்டுக்களாக சாவித்திரி மகா காவியம் இருக்கிறது.


On Savitri 

If you are depressed, if you feel miserable, if you do not succeed in what you do or else if what happens is always the contrary of what you expect, however you try - if it has come to such a pass that you lose your temper, life becomes disgusting and you are unhappy, then immediately take Savitri and, after a moment's concentration, open it at any page and read. You will see that all your misery disappears like smoke. And you will have the strength to overcome the worst sorrows; you will no longer feel that which was tormenting you. Instead you will feel a strange happiness, a reversal of consciousness along with the energy and force to conquer everything, as though there were nothing impossible. And you will feel this inexhaustible joy that purifies all. 
  
Read just a few lines and that is enough to establish the contact with your inmost being. Such is the extraordinary power of Savitri.
Or else, after having read some lines, if you concentrate deeply, then too you will find the solution to what was tormenting you. You have only to open Savitri just at random without thinking and you will have the answer to your problems. Do this with faith and simplicity, the result is certain.”

The Mother
5-11-1967
சாவித்திரி காவியத்தைப் படிப்பதே ஒரு உன்னதமான அனுபவம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை! ஸ்ரீ அரவிந்தர் அரும்பாடு பட்டு இயற்றிய தவம், யோக சாதனைகளின் அனுபவம் சாவித்திரி காவியத்தின் ஒவ்வொரு வரியிலும் முழுமையாக நிறைந்திருக்கிறது. படிக்க ஆரம்பிக்கும்போது, நம்மிடம் மூடிக் கிடக்கும் கதவுகள் திறப்பதையும், அதுவரை விடைதெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை வரிசையாகக் கிடைப்பதையும், மனச்சோர்வும் சலிப்பும் நிறைந்து நிராதரவாக நிற்கிற தருணங்களில், உற்ற துணையாகவும் பேராதரவாகவும் இருந்து வழி நடத்துவதையும், அனுபவத்தில் தான் கண்டுகொள்ள முடியும். அப்படி ஸ்ரீ அரவிந்தரது யோகத்தைத் துணைகொண்டு நடக்கும் பாதையை ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

காரடையான் நோன்பு என்பது, வெறும் சடங்கு அல்ல! மரணமில்லாப் பெருவாழ்வு என்று திருவருட்ப்ரகாச வள்ளலார் பெருமான் சொல்கிறாரே, அந்த மரணமில்லாப் பெருவாழ்வின் திறவுகோலும் கூட! வெறும் சடங்கு என்ற அளவோடு குறுகி நின்றுவிடாமல், அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ளத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒளிபொருந்திய பாதையாக முன்னே இருக்கிறது. 

பயணம் செல்லத் தயார் தானே!


**இது ஒரு மீள்பதிவு. முதலில் 2009 இலும் பிறகு 2015 இல் கொஞ்சம் மாற்றி விரிவுபடுத்தி இந்தப்பக்கங்களில் எழுதப்பட்டது.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)