Saturday, May 25, 2019

பக்தாள் நிலைமையென்ன? ஒரு பின்னூட்டக் கவலை!

இங்கே முந்தைய பதிவுக்கு நண்பர் ரஹிம் கொஞ்சம் விரிவாகவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். பின்னூட்டங்களில் பதிலாக எழுதுவதும் கூடப் பல சமயங்களில் கேள்விகளாக இருந்துவிடுவதுண்டு. இங்கேயும் அதேபோலத்தான் என்பதால்  அவர் சொன்னதை  அப்படியே இங்கே தருகிறேன். அதற்கு என்னுடைய பதில் என்றில்லாமல், இங்கே வரும் நண்பர்கள் பதில் சொல்ல முனைந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். எப்போதுமே ஒரு கை  ஓசை என்றே இருந்துவிடக்கூடாது அல்லவா?



பிஜேபி வென்றாலும் பக்தாக்களை பதட்டப்பட வைக்கும் கவலைகள்!



1. இது ஒன்றும் புது அரசு இல்லை. 2014 ன் தொடர்ச்சிதான். இவர்கள் என்ன செய்வார்கள் என பிஜேபி எதிரணிக்கு பழக்கம்தான். உண்மையில் இவர்களை எதிர்கொள்ள எதிரணிக்கு ஆற்றலும் அனுபவமும் அதிகம்.

2. ஒடுக்கபட்டோருக்கு குரல் கொடுக்கும் திருமா, சுப்பராயன், வெங்கடேசன், தமிழச்சி, ரவிக்குமார் போன்றோர் கடந்த அதிமுக பொம்மைகளை விட வீரியமான உறுப்பினர்கள். இது ஒரு பார்லியை பதற வைக்கும் ட்ரீம் டீம்.

3. இந்திய இந்து மயமாகிறது என்பது அளவுக்கு மீறிய கற்பிதம். இந்துத்துவம் ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தது என்பதை தவிர மிதமிஞ்சிய பயம் தேவை இல்லை. வடஇந்தியாவில் பதிவான வாக்குகளே 50 முதல் 55 சதமே. பாதி நபர்கள் வாக்களிக்க வில்லை. அதில் (50 இல்) 30 முதல் 40 சதம் மட்டும் BJP நிரந்தர வாக்கு வங்கி. BJP வாங்கியது 50 சதம். அதாவது மேலதிகமாக 10 சதவீத நடுநிலை வாக்குகள் சென்றுள்ளன. மீதம் 50 சதம் எதிர்வாக்குகளே. 10 சதம் நடுநிலை வாக்குகள் திரும்ப வெல்லவும் 50 சத எதிர் வாக்குகள் ஒருமுகப்படுத்தவும் ஒரு உத்தி மட்டும் தேவை. இந்தியா இன்னும் ஒரு பன்முக நாடுதான்।

4. இந்துத்துவமும் தேசிய வெறியும் ஓட்டுக்களை வாங்கி தந்தாலும், தேசிய பிரச்சனைகளான வேலை வாய்ப்பும், விவசாய அழிவும் இந்த அரசை தாக்கும். இந்துத்துவம் நீண்ட நாளைக்கு மக்களுக்கு சோறு போடாது. இந்திய பொருளாதாரம் இதை தெளிவாக உணர்ந்துள்ளது. கூர்ந்து கவனித்தால் பங்கு சந்தை இதை எதிரொலிப்பதை காணலாம். BJP மிருக பெரும்பான்மை பெற்ற 23-May அன்று, முன்காலத்தில் நடக்காத அளவு பங்குச்சந்தை 'தேமே' என உயராமல் இருந்தது. ஆனால் நிபுணர்கள் 10 டு 15 சதம் உயருமென கணித்திருந்தார்கள்.

5. இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கோட்ஸேயின் கொடூர வரலாறு, சுதந்திரப்போரில் BJP ன் பங்கு, கேடி அண்ட் அல்லக்கைகள் அறிவுக்கூர்மை (கேன்சருக்கு மூத்திரம், மேகமூட்டத்தில் ரேடாரில் தப்புவது, இத்யாதி) ஒரு பொது விவாதத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூலம் பலரும் விழிப்படைய ஒரு வாய்ப்பு.

6. BJP ஆதரவாளர்களுடன் என்னுடன் உரையாடலில், BJP மேலுள்ள அபிமானத்தை விட காங்கிரஸ் மேலான கடுமையான வெறுப்பே இவர்களை BJP ன் பால் இழுக்கிறது. காங்கிரஸ் மாற்று தலையெடுக்கும்போது, BJP யை 'வேறு வழியில்லாமல்' ஆதரிக்கும் இவர்களில் பலர் BJP யை கழற்றி விடுவார்கள். காங்கிரஸுக்கு முட்டு கொடுப்பதை காங்கிரஸ் அபிமானிகள் நிறுத்த தொடங்கினால் இது இன்னும் விரைவில் சாத்தியமாகும்.

ஆறே பாயிண்டுகள்தான்! உங்களுடைய கருத்து என்ன? இன்றொரு நாள் காத்திருந்து, நண்பர்கள் பதிலெதுவும் தராவிடில், நாளை மறுநாள் இந்தப் பதிவிலேயே என்னுடைய பதில்களைத் தருகிறேன். 
  

கூட்டணிகள்,  தொகுதிப்பங்கீடுகள் எந்த அளவுக்கு செல்லுபடியாகக் கூடியவை என்பதைக் கொஞ்சம் யோசித்து வையுங்களேன்! தொடர்ந்து அரசியல் பேச உதவியாக இருக்குமே! அப்படியே இந்த வீடியோவையும்!

    
மீண்டும் சந்திப்போம்.

10 comments:

  1. Krishnamoorthy sir, just wanted to clarify that the term hindutva is not meant to denigrate hindhu religion but to refer to vote politics in its name. I love the vast majority Hindu brothers of my country and proud of our mutual understanding.

    ReplyDelete
    Replies
    1. திரு ரஹிம்! உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன்! நான் பிறப்பால் வளர்ப்பால் ஒரு ஹிந்து. அதே நேரம் sufi ஞானிகளிடம் பெருமதிப்பு உள்ளவன். என்னுடைய இன்னொரு வலைப்பக்கத்தில் ரூமி கவிதைகளை மொழிபெயர்த்துப் போட்டதும் உண்டு. அது வேறு. இங்கே அரசியல் நடப்புக்களை ஒரு விவாதத்திற்காக எடுத்துக் கொண்டு பேசுகிறோம் என்பது பிரித்துப் பார்ப்பதற்காக அல்ல.

      Delete

  2. 1. இது ஒன்றும் புது அரசு இல்லை. 2014 ன் தொடர்ச்சிதான். இவர்கள் என்ன செய்வார்கள் என பிஜேபி எதிரணிக்கு பழக்கம்தான். உண்மையில் இவர்களை எதிர்கொள்ள எதிரணிக்கு ஆற்றலும் அனுபவமும் அதிகம்.

    கடந்த ஐந்து வருடங்களில் என்ன செய்தார்கள் என்று தெரிந்தால் இனி என்ன செய்வார்கள் என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். அப்படி ஒன்றும் கிழித்ததாக தெரியவில்லை!

    2. ஒடுக்கபட்டோருக்கு குரல் கொடுக்கும் திருமா, சுப்பராயன், வெங்கடேசன், தமிழச்சி, ரவிக்குமார் போன்றோர் கடந்த அதிமுக பொம்மைகளை விட வீரியமான உறுப்பினர்கள். இது ஒரு பார்லியை பதற வைக்கும் ட்ரீம் டீம்.

    பாதி உண்மை. வீரியமான உறுப்பினர்கள். ஆனால் பதற வைக்குமா என்றால் இல்லை. பார்லிமென்டில் ஆக பூர்வமான விவாதங்கள் நடைபெறுகின்றனவா என்ன? ஒடுக்கப்பட்டோருக்கு குரல்.. நகைச்சுவை.

    3. இந்திய இந்து மயமாகிறது என்பது அளவுக்கு மீறிய கற்பிதம். இந்துத்துவம் ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தது என்பதை தவிர மிதமிஞ்சிய பயம் தேவை இல்லை. வடஇந்தியாவில் பதிவான வாக்குகளே 50 முதல் 55 சதமே. பாதி நபர்கள் வாக்களிக்க வில்லை. அதில் (50 இல்) 30 முதல் 40 சதம் மட்டும் BJP நிரந்தர வாக்கு வங்கி. BJP வாங்கியது 50 சதம். அதாவது மேலதிகமாக 10 சதவீத நடுநிலை வாக்குகள் சென்றுள்ளன. மீதம் 50 சதம் எதிர்வாக்குகளே. 10 சதம் நடுநிலை வாக்குகள் திரும்ப வெல்லவும் 50 சத எதிர் வாக்குகள் ஒருமுகப்படுத்தவும் ஒரு உத்தி மட்டும் தேவை. இந்தியா இன்னும் ஒரு பன்முக நாடுதான்।

    சந்தேகமே இல்லை. பன்முக நாடு தான்.

    4. இந்துத்துவமும் தேசிய வெறியும் ஓட்டுக்களை வாங்கி தந்தாலும், தேசிய பிரச்சனைகளான வேலை வாய்ப்பும், விவசாய அழிவும் இந்த அரசை தாக்கும். இந்துத்துவம் நீண்ட நாளைக்கு மக்களுக்கு சோறு போடாது. இந்திய பொருளாதாரம் இதை தெளிவாக உணர்ந்துள்ளது. கூர்ந்து கவனித்தால் பங்கு சந்தை இதை எதிரொலிப்பதை காணலாம். BJP மிருக பெரும்பான்மை பெற்ற 23-May அன்று, முன்காலத்தில் நடக்காத அளவு பங்குச்சந்தை 'தேமே' என உயராமல் இருந்தது. ஆனால் நிபுணர்கள் 10 டு 15 சதம் உயருமென கணித்திருந்தார்கள்.

    பங்கு சந்தை எப்போதுமே சில நாட்களுக்கு முன்னேயே விளைவை காட்டும். எக்ஸிட் போலிலேயே அதிகமாகி விட்டதால் 23 மே எந்த விளைவும் வரவில்லை. Anticipation of the event has more effect than the event in stock market, always!

    5. இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கோட்ஸேயின் கொடூர வரலாறு, சுதந்திரப்போரில் BJP ன் பங்கு, கேடி அண்ட் அல்லக்கைகள் அறிவுக்கூர்மை (கேன்சருக்கு மூத்திரம், மேகமூட்டத்தில் ரேடாரில் தப்புவது, இத்யாதி) ஒரு பொது விவாதத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூலம் பலரும் விழிப்படைய ஒரு வாய்ப்பு.

    கண்டிப்பாக. இந்த பைத்தியக்காரத் தனமான வாதங்கள் தன்னாலே குறைந்துவிடும்!

    6. BJP ஆதரவாளர்களுடன் என்னுடன் உரையாடலில், BJP மேலுள்ள அபிமானத்தை விட காங்கிரஸ் மேலான கடுமையான வெறுப்பே இவர்களை BJP ன் பால் இழுக்கிறது. காங்கிரஸ் மாற்று தலையெடுக்கும்போது, BJP யை 'வேறு வழியில்லாமல்' ஆதரிக்கும் இவர்களில் பலர் BJP யை கழற்றி விடுவார்கள். காங்கிரஸுக்கு முட்டு கொடுப்பதை காங்கிரஸ் அபிமானிகள் நிறுத்த தொடங்கினால் இது இன்னும் விரைவில் சாத்தியமாகும்.

    பாதி உண்மை. ஆனால் bjp ஐ 'வேறு வழியில்லாமல்' ஆதரிப்பதாக நினைக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Bandhu sir - Agree with most of your responses except Godse

      Delete
  3. //இவர்களை எதிர்கொள்ள எதிரணிக்கு ஆற்றலும் அனுபவமும் அதிகம்// - இவர்கள் கத்தினதைத் தவிர வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்ததில்லை. எதிரணியின் ஆற்றல், ஜாமீனில் இருப்பதும், அரசாங்கத்தை ஏமாற்றுவதும், இந்தியச் சொத்தை வெளிநாட்டுக்குக் கொண்டுபோவதும். காங்கிரசுக்கு ஜால்ரா தட்டும் ரஹீம், எந்த விதத்தில் ராபர்ட் வாத்ராவுக்கு ஏர்போர்ட்டில் செக்கிங் கிடையாது என்று சட்டம் போட்டார்கள் என்பதையும் சொல்லுவாரா?

    //ஒடுக்கபட்டோருக்கு குரல் கொடுக்கும் திருமா// - பார்த்தேனே.... பல்லிளித்து ராஜபக்‌ஷேவின் காலில் விழுந்து காசு வாங்கியதை. 'ஒடுக்கப்பட்டோர்' என்ற பெயரால் தீவிரவாதத்தை ஆதரிக்கும் முதல் அரசியல்வாதி திருமா.

    //கோட்ஸேயின் கொடூர வரலாறு,// - இந்தப் பொய்யை எத்தனை வருடங்கள் நம்பப்போகிறார்கள் இந்த கோயபல்ஸுகள். முதல் தீவிரவாதி ஜின்னா & டீம். இரண்டாவது பிரிவினையின்போது இந்துக்களைக் கொலை செய்தவர்கள். இதனை காந்தி தட்டிக்கேட்காமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததுதான் தேசத்தின் முதல் தீவிரவாதச் செயலைச் செய்ய கோட்சேவைத் தூண்டியது. அவர் செய்தது தவறு, அதற்கு சட்டம் தண்டனை கொடுத்துவிட்டது. கோட்சே, அப்பாவிகளை குண்டுவைத்துத் தகர்க்கவில்லை, இந்துக்களுக்கு எதிரான குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இல்லை. இந்த நாட்டில் தீவிரவாதச் செயல்களுக்கு டிரெயினிங் கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவிடவில்லை. (இது வி.புலிகளுக்கும், தற்போது நடந்த இலங்கை குண்டுவெடிப்புக்கும் பொருந்தும்) தேசப்பிதாவை வன்முறையால் கொலை செய்தது அவரது மாபெரும் தவறு, அதற்கேற்ற தண்டனை அவருக்குக் கிடைத்துவிட்டது.

    இந்துத்துவா வோட் பாலிடிக்ஸ் - என்றால் 'சிறுபான்மையினர்' என்று ஏகப்பட்ட சலுகைகளை அனுபவிப்பது பாலிடிக்ஸ் இல்லையா? ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டே எவ்வளவு கல்லூரிகளை சிறுபான்மையினர் நடத்துகிறார்கள்? அது ஏமாற்றுத்தனம் இல்லையா? 'ஒடுக்கப்பட்டவர் என்ற போர்வையில் மறைந்திருக்கும் சிறுபான்மையினர்' வோட் பாலிடிக்ஸ் இந்தியாவில் 60+ வருடங்களாக இருப்பதுதான் இந்துத்துவாவின் தற்போதைய வளர்ச்சிக்குக் காரணம்.

    'கடவுள் இல்லை' என்று ஸ்டாலின், கி.வீரமணி அல்லக்கைகள் சொல்லும்போது இஸ்லாமியர்கள் மகிழ்கின்றனர். அப்போது அவர்கள் 'இந்துக்கள்' சகோதரர்கள் என்ற நினைப்பில் இல்லை. தாங்கள் பாதிக்கப்படும்போது, 'இந்துத்வா' என்று கூவினால், யார் அதனை மதிப்பார்கள்?

    //காங்கிரஸ் மேலான கடுமையான வெறுப்பே // - இது எந்த மாதிரியான வெறுப்பு? இந்துக்களைப் புறக்கணித்து மற்ற மதத்தினரை 'சிறுபான்மையினர், இந்துக்கள் ஆட்சிக்கு வரக்கூடாது' என்று மூளைச் சலவை செய்து சிறுபான்மையினரின் வாக்குகளை வாங்கி, நாட்டைக் கூறுபோட்டு விற்பதால் (இதில் ஸ்டாலின் கம்பெனி, முஸ்லீம் லீக் எல்லாம் உண்டு) வந்த வெறுப்பு. நாடு எக்கேடு கெட்டுப் போனால் எங்களுக்குக் கவலை இல்லை, முஸ்லீம்களுக்கு தொடர்ந்து சலுகை தரவேணும், எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று சிறுபான்மையினர் நினைக்க நினைக்க, காங்கிரஸ் வெறுப்பு பொதுமக்களுக்குத் தொடரத்தான் செய்யும்.

    இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அதில் ஒரு பிரிவினர், தங்களைத் தனித் தீவாகக் கருதி தங்களுக்கு மென்மேலும் சலுகைகள் கேட்டுக்கொண்டே போகப் போக, வோட் பாலிடிக்ஸில் அரசியல் கட்சிகள் அதனை ஆதரிக்க ஆதரிக்க, இந்துத்துவா வளரத்தான் செய்யும். ஏன் அது வளர்கிறது என்று பார்க்கவேண்டியது சிறுபான்மையினரின் கடமை. அவர்கள்தாம் தாங்களும் இந்தியர்கள், மற்றவர்களைவிட உசந்தவர்கள் அல்ல என மாற்றிக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Nellaithamizhan sir, there are some differences with some of your views. Will try to make my points later

      Delete
  4. ரஹ்மான் சார்! நான் பிஜேபி ஆதரவாளன் இல்லை. இருந்தாலும் ஒன்றுபட்ட இந்தியா என்கிற concept-ல் அதீத நம்பிக்கை கொண்டவன். இது உங்கள் மொழியில் தேசிய வெறி என்று வர்ணிக்கப் படுகிறதா? தெரிந்து கொள்ள ஆசை.

    2. நம்மிடமிருந்து பிரிந்த பாக்கிஸ்தானுடனான நல்லுறவை காலாதிகாலமாகத் துண்டித்து வைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் பிஜேபி நாட்டை ஆண்ட காலங்களிலெல்லாம் பாக்கிஸ்தானின் நடைமுறைத் தவறுகளை சரிசெய்து அந்நாட்டுடனான நல்லுறவைப் பேணவே முயற்சி செய்திருக்கிறது. இப்படியான நடைமுறைத் தவறுகளைக் களைய வேண்டும் என்ற உணர்வுகள் அந்த நாட்டிலும் மேளோங்கும் பொழுதெல்லாம் சில நிர்பந்தங்களினால் செயல்பட முடியாமல் போகிறது என்பதன் புரிதலே பாக்கிஸ்தானுடனான நல்லுறவை பேணிக் காக்க வேண்டும் என்ற நமது நிலைக்கு வலுவூட்டுகிறது.

    வாஜ்பாயி காலத்தில் ஆரம்பித்த இந்த நல்லுறவுக்கான ஆரம்பம் எத்தனையோ இடையூறுகளைச் சந்தித்தும் அடிப்படை நோக்கம் சிதையாது இருக்கிறது. இன்றைய பிரதமரின் ஆட்சியில் இஸ்லாமிய நாடுகளுடனான நல்லுறவைப் பேண நிலையான முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. இஸ்லாமிய நாடுகளுடனான நல்லுறவு நம் எரிபொருள் எண்ணைய் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும். இஸ்லாமிய நாடுகளுடனான நல்லுறவு பாக்கிஸ்தானையும் உள்ளடக்கியதாக நாளடைவில் நடைமுறை உண்மையானால் அதை விட பேறு இந்திய நாட்டிற்கு வேறு எதுவும் இல்லை.

    நம் அண்டை நாடுகளுடனான நல்லுறவின் மூலமே ஆசிய ஒற்றுமையைப் பேணி உலக அரங்கில் நாம் பல்வேறு துறைகளில் மேம்பட வேண்டும் என்ற அசையாத நம்பிக்கை கொண்டுள்ள எந்தக் கட்சியையும் ஆதரிக்க இந்திய மக்கள் கடப்பாடு உடையவர்கள். அதன் மூலமே வல்லரசுகளின் வேண்டாத பிரச்னைகளை சமாளிக்க முடியும். இந்தக் கடப்பாடுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஆட்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டியது நம் கடமை. அது பிஜேபியாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி.. இதில் எது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    இப்போதைக்கு இது போதும்.

    ReplyDelete
  5. பெயர்கள் எப்பொழுதுமே எனக்கு முக்கியமானதில்லை.. கருத்துக்கள் தாம்.

    ரஹ்மான் சார்! என்று நான் விளித்ததை ரஹீம் சார் என்று மாற்றி வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. GV sir - Rahman and Rahim are both the names of God. So technically you are correct :)

      Delete
  6. Correct. God is not created or identified merely by names!.. You are correct. கண்ணனும் ஒருவரே; கோவிந்தனும் ஒருவரே.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)