Friday, May 24, 2019

பதிவர்கள் பார்வையில் தேர்தல் முடிவுகள்! பாவம் டோலர்கள்!

முகநூலில் கவிஞர் போகன் சங்கர் சொல்வது : 
நான் எந்த ஒரு தனிப்பட்ட கட்சியின் வெற்றி தோல்வியையும் விட அதிகம் அஞ்சுவது இந்த ஸ்வீப்களுக்குத்தான்.இந்திய வாக்காளர்களின் மிகப்பெரிய உளவியல் பிரச்சினை இது.
இங்கே திமுக ஸ்வீப்.(இது முன்பு அதிமுகவாய் இருந்தது) கேரளத்தில் காங்கிரஸ்.ஆந்திரத்தில் ரெட்டி.இந்தியாவின் பிற பகுதிகளில் பாஜக ஸ்வீப்.
இந்த அசுர அல்லது முழு வெற்றிகள் கொடுக்கிற அதிகாரம் அது தருகின்ற திமிர் மட்டுமே இந்தியாவின் பல பிரச்சினைகளுக்குக் காரணம்.
போகனுடைய இந்த அவதானிப்பு சரியானதல்ல என்றே நான் கருதுகிறேன். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் திமுக மோடி பூச்சாண்டி காட்டி ஓட்டுகளை வாங்கமுடிந்தது ஒருவிதம்! வடக்கே, கிழக்கே, மேற்கே, மத்தியில் சௌகிதார் சோர் ஹை என்ற காங்கிரசின் கூவலுக்கு ஏற்றமாதிரி ஜனங்கள் அதை நிராகரித்து வாக்களித்திருக்கிறார்கள். ஜனங்கள் இப்படி மொத்தமாக  வாக்களித்திருப்பதில் குழப்பமோ தவறோ இல்லை. ராகுல் காண்டி அமேதியில் தோற்றார் என்பதில் பிரியங்கா வாத்ரா Smriti who என்று ஆணவத்தோடு கேட்டதற்கான விடையும் அளிக்கப் பட்டுவிட்டது! 

ஆந்திரா...
சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்து தோல்வியை தழுவி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவை பொறுத்தவரையில்..செயல்திறன் மிக்க முதல்வர் நாயுடு. அவருக்கு பதிலாக ஜெகன்மோகன் ரெட்டி என்பது மக்களின் தேர்வில் தெரியும் முரண்.
ஆந்திர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் உள்ள ஒற்றுமை தெரியும் தருணங்கள் இவை
சந்திரபாபு நாயுடு அதிர்ச்சிகரமாகத் தோல்வியடைந்துவிட்டார் என்று ஒரு பெரிய பத்திரிகையின் தளத்தில் செய்திக் கட்டுரை படித்தேன்.அதை யாருமே எதிர்பார்க்கவில்லையாம்.அதை எழுதியவரும் நாயுடுவும் வேண்டுமானால் எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம்.இந்த ஊடகங்கள் எந்த உலகத்தில்தான் இருக்கிறார்கள்?
ஜெகமோகன் ரெட்டிக்கு என் டி ராமராவுக்கு இணையான ஒரு காவிய நாயக அந்தஸ்து எண்ணற்ற நாட்டுப்பாடல்கள் மூலமும் அவர் செய்த யாத்திரைகள் மூலமாகவும் உருவாக்கப்பட்டது ஆந்திர அரசியல் பற்றிய குறைந்த பரிச்சயம்.உள்ளவர்கள் கூட அறிந்த விஷயம்.
பேஸ்புக்கில் இருந்துகொண்டே செய்தி சேகரித்து அதே பேஸ்புக்கிலேயே வெளியிட்டுக் கொண்டிருந்தால் இப்படி எல்லா செய்திகளுமே அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
ஆந்திர அரசியலை இருவேறு நண்பர்கள் இப்படி அலசி இருக்கிறார்கள். கிணற்றுத்தவளைகளாகவே இருந்து விடாமல் அடுத்தவீட்டுச் செய்திகளையும் படித்துப் புரிந்துகொண்டு நாலுவரி விமரிசனமாகவும் எழுதுவது பார்க்கவும் படிக்கவும் நல்ல அனுபவமாக இருக்கிறது.
மய்யம் கமல் காசரை இப்படி அநியாயத்துக்கு வச்சு செஞ்சிருக்க வேண்டாம்! 
பதிவான மொத்த வாக்குகளில் அமமுக வேட்பாளர்களுக்கு 5.20% வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு 3.91% வாக்குகள் கிடைத்துள்ளன.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு 3.79% வாக்குகள் கிடைத்துள்ளன.


கூட்டாளி திமுக ஆட்சிக்காலத்திலேயே ஏரி குளம் குட்டைகள் எல்லாவற்றையும் தான் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக்கி விட்டோமே! அப்புறம் தாமரை எங்கே தமிழகத்தில் மலருமாம் என்று கேட்கிறார் திருமாவளவன். 

தோழர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரம்! ஏற்கெனெவே திமுக ஆதரவில் ஜெயிக்கமுடிந்த டி கே ரங்கராஜனை ஜாதியைச் சொல்லி அர்ச்சித்தார் கலீஞர் என்ற  அனுபவம் இப்போது எப்படி ஆகப்போகிறதோ?

மீண்டும் சந்திப்போம்!  

3 comments:

 1. https://www.youtube.com/watch?v=Fh1asflmBxM பார்த்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. பார்த்துவிட்டு ஒதுக்கியதுதான்! ரவீந்திரன் துரைசாமி பலநாக்குகளில் பேசக்கூடிய அரசியல் விமரிசகர்!

   Delete
 2. பிஜேபி வென்றாலும் பக்தாக்களை பதட்டப்பட வைக்கும் கவலைகள்!  1. இது ஒன்றும் புது அரசு இல்லை. 2014 ன் தொடர்ச்சிதான். இவர்கள் என்ன செய்வார்கள் என பிஜேபி எதிரணிக்கு பழக்கம்தான். உண்மையில் இவர்களை எதிர்கொள்ள எதிரணிக்கு ஆற்றலும் அனுபவமும் அதிகம்.

  2. ஒடுக்கபட்டோருக்கு குரல் கொடுக்கும் திருமா, சுப்பராயன், வெங்கடேசன், தமிழச்சி, ரவிக்குமார் போன்றோர் கடந்த அதிமுக பொம்மைகளை விட வீரியமான உறுப்பினர்கள். இது ஒரு பார்லியை பதற வைக்கும் ட்ரீம் டீம்.

  3. இந்திய இந்து மயமாகிறது என்பது அளவுக்கு மீறிய கற்பிதம். இந்துத்துவம் ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தது என்பதை தவிர மிதமிஞ்சிய பயம் தேவை இல்லை. வடஇந்தியாவில் பதிவான வாக்குகளே 50 முதல் 55 சதமே. பாதி நபர்கள் வாக்களிக்க வில்லை. அதில் (50 இல்) 30 முதல் 40 சதம் மட்டும் BJP நிரந்தர வாக்கு வங்கி. BJP வாங்கியது 50 சதம். அதாவது மேலதிகமாக 10 சதவீத நடுநிலை வாக்குகள் சென்றுள்ளன. மீதம் 50 சதம் எதிர்வாக்குகளே. 10 சதம் நடுநிலை வாக்குகள் திரும்ப வெல்லவும் 50 சத எதிர் வாக்குகள் ஒருமுகப்படுத்தவும் ஒரு உத்தி மட்டும் தேவை. இந்தியா இன்னும் ஒரு பன்முக நாடுதான்।

  4. இந்துத்துவமும் தேசிய வெறியும் ஓட்டுக்களை வாங்கி தந்தாலும், தேசிய பிரச்சனைகளான வேலை வாய்ப்பும், விவசாய அழிவும் இந்த அரசை தாக்கும். இந்துத்துவம் நீண்ட நாளைக்கு மக்களுக்கு சோறு போடாது. இந்திய பொருளாதாரம் இதை தெளிவாக உணர்ந்துள்ளது. கூர்ந்து கவனித்தால் பங்கு சந்தை இதை எதிரொலிப்பதை காணலாம். BJP மிருக பெரும்பான்மை பெற்ற 23-May அன்று, முன்காலத்தில் நடக்காத அளவு பங்குச்சந்தை 'தேமே' என உயராமல் இருந்தது. ஆனால் நிபுணர்கள் 10 டு 15 சதம் உயருமென கணித்திருந்தார்கள்.

  5. இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கோட்ஸேயின் கொடூர வரலாறு, சுதந்திரப்போரில் BJP ன் பங்கு, கேடி அண்ட் அல்லக்கைகள் அறிவுக்கூர்மை (கேன்சருக்கு மூத்திரம், மேகமூட்டத்தில் ரேடாரில் தப்புவது, இத்யாதி) ஒரு பொது விவாதத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூலம் பலரும் விழிப்படைய ஒரு வாய்ப்பு.

  6. BJP ஆதரவாளர்களுடன் என்னுடன் உரையாடலில், BJP மேலுள்ள அபிமானத்தை விட காங்கிரஸ் மேலான கடுமையான வெறுப்பே இவர்களை BJP ன் பால் இழுக்கிறது. காங்கிரஸ் மாற்று தலையெடுக்கும்போது, BJP யை 'வேறு வழியில்லாமல்' ஆதரிக்கும் இவர்களில் பலர் BJP யை கழற்றி விடுவார்கள். காங்கிரஸுக்கு முட்டு கொடுப்பதை காங்கிரஸ் அபிமானிகள் நிறுத்த தொடங்கினால் இது இன்னும் விரைவில் சாத்தியமாகும்.

  ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (146) அரசியல் (140) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (66) புத்தகங்கள் (32) எண்ணங்கள் (30) மனித வளம் (30) செய்திகள் (21) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ரங்கராஜ் பாண்டே (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) செய்திகளின் அரசியல் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) திராவிட மாயை (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) புனைவு (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பதிவர் வட்டம் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பானாசீனா (2) பிரியங்கா வாத்ரா (2) பேராசையின் எல்லை எது (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)