Thursday, May 9, 2019

மண்குதிரை நம்பலாமா? தமிழக அரசியல் உதிரிகள்!

முகநூல் பகிர்வுகளில் இத்தனை வெளிப்படையாக போகன் சங்கர் அரசியல் பேசுவாரா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒரு பகிர்வை இன்று பார்த்தேன். ஏதோ ஓரிரு தருணங்களில் தொலைபேசி வழியாகப் பேசியிருக்கிறோம் என்பதைத் தவிர எனக்கு நேரடி அறிமுகம் இல்லாதவர். அவருடைய எழுத்தும் பகடியும் பிடிக்கும். என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்து விடலாமா?

   ஒண்ணா இருந்ததும் படமும் பழசு 

விசி மட்டுமில்லை பாமக கூட திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தான் ஆக மாற முயன்றுகொண்டிருக்கின்றன. அவை இயலாத போது அவர்களிடமே திரும்பப் திரும்பப் போய் நிற்க வேண்டி இருப்பதை அவை உள்ளூர விரும்பவில்லை. இக்கட்சிகள் அவற்றின் உள் முரண்பாடுகள் சில விதிவிலக்குகள் தாண்டி எப்படியோ பொது சமூகத்தினர் பங்கு கொள்கிற கட்சிகளாகவும் விளங்குகின்றன.
பாமக ,விசிக இரண்டுக்குமே வலுவான சாதிய அடித்தளம் இருந்தாலும் மற்ற சமூகங்களின் ஆதரவு இல்லாமல் இரண்டு கட்சிகளுமே அவை பலமாக உள்ள தொகுதிகளில் கூட திணறுவதை நாம் பார்க்கிறோம்.
பொது சமூகத்தின் நம்பிக்கையையும் பெற பாமக சில முயற்சிகளை முன்பு எடுத்து வெற்றி பெற முடியாமல் திரும்பிவிட்டது.விசிக அதை நோக்கி நகர முயல்கிறது இப்போது..
ஆனால் அது அறிவுஜீவிகளின் ஆதரவினால் மட்டும் நடப்பதல்ல.
கவிஞர் போகன் நன்றாகத்தான் அவதானித்திருக்கிறார் என்று மனதுக்குள் சிலாகித்துக் கொண்டே நகர்ந்தபோது இன்னொரு பகிர்வில்  விசிகவின் நிலையை இன்னும் ஆழமாக அலசிக் காயப்போட்டிருந்ததையும் பார்த்தேன்.  
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உருவாக்கம் மற்றும் நிலைபெறலைத் தொடர்ந்தே வட மாவட்டங்களில் பறையர்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பு உருவானது என்பது உண்மையே அல்ல. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் மீறியே நல்லிணக்கம் உருவானது என்பதுதான் உண்மை.
ஏனென்றால், அதற்கான முக்கிய காரணங்கள் பல. அதில் ஒன்று 1990களில் ஆரம்பித்த தாராளமயமாக்கல்.
இது ஏற்கனெவே வலிவிழந்துவிட்டிருந்த நில உடமை சமுதாயத்தையும் குலத்தொழில் மரபையும் மேலும் பலவீனமாக்கியது.
அதற்கு முன்பாகவே, இந்திய அரசியல் சாசனம் வழங்கிய இடப்பங்கீடுகள் மூலம் நந்தனின் குழந்தைகள் சமூகத்தின் மேலடுக்குக்கு நகர்ந்திருந்தனர்.
அதோடு வன்னியர்களுக்கு ராமதாஸ் இதே காலகட்டத்தில் இடப்பங்கீட்டில் கூடுதல் பலன் கிடைக்க வழி செய்திருந்தார். வட மாவட்டங்களின் ஜாதி சார்ந்த வெளிப்பாடுகள் முந்தைய காலகட்டத்தைப் போலல்லாமல், வேறு நிதானமான வடிவங்களை அடைய இவையே காரணம்.
வன்னியர்களைப் பெருமளவுக்குக் கொண்டிருந்த பாமகவின் தலைவர் ஜாதி நல்லிணக்கத்தின் முக்கியச் செயல்பாடுகளை முன்னெடுக்கவும் செய்தார். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த நபரின் இறுதிச்சடங்கு தொடர்பாக வந்த பிரச்னையில் ராமதாஸ் முன்னின்று செயல்பட்டதும் திருமாவளவன் அவருக்கு பட்டம்கொடுத்துக் கெளரவித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான் நடந்தது.
வட மாவட்டங்களில் மிக அதிக அம்பேத்கர் சிலையைத் திறந்தது பாமகவே. தனது கட்சியில் முக்கிய பதவிகளை பட்டியல் ஜாதியினருக்குத் தந்ததும் அதே பாமகதான்.
எனவே, திருமா தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டதால் வடமாவட்டங்களில் பதற்றம் குறையத் தொடங்கியது என்பது காக்காய் உட்கார்ந்ததால்தான் பனம்பழம் விழுந்தது என்று சொல்வதற்கு இணையானதுதான்.
(விசிகவினரின் செயல்பாடுகள், திருமாவளவனின் திமிரான பேச்சுகள் போன்றவை பிரச்னையை மட்டுப்படுத்துபவையாக இருந்திருக்கவில்லை. அவை அந்தந்த நேர உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும் இருந்திருக்கவில்லை).
*
திருமாவளவன் ஆரம்பத்திலிருந்தே தவறான வழியில் செயல்பட்டவரே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆரம்ப நிறுவனர்களில் ஒருவரான தடா பெரியசாமி, நந்தனார் வழியில் பறையர் இன மீட்சிக்கு இந்து மதத்துக்குள்ளாக இருந்தே சீர்திருத்தத்தை முன்னெடுத்தார். கிறிஸ்தவ அடிப்பட்டைவாத சக்திகள் திருமாவளவனை வளர்த்துவிட்டு தடா பெரியசாமியை ஓரங்கட்டின.
திருமாவளவனும் இந்து விரோத அடிப்படையிலேயே கட்சியையும் இயக்கத்தையும் முன்னெடுத்து வருகிறார். அதனால்தான் பறையர்கள் மத்தியிலேயே பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத தலைவராக அவர் இருக்கிறார். பறையர்களில் பலரும் அதிமுக பக்கம் இருப்பதற்கும் அதுவே காரணம்.
பாமக-விசிக கூட்டணி உருவாகாமல் போகவும் அதுவே காரணம். இந்துத்துவம் கூட அல்ல; சனாதன இந்து தர்மமே தனது எதிரி என்று கிறிஸ்தவ-இஸ்லாமிய சக்திகளின் அரசியலையே திருமாவளவன் முன்னெடுத்தார். பாமக இந்த அரசியலை (இதுவரை) விரும்பவில்லை.
சிலர் சொல்வதுபோல் இந்த இந்து எதிர்ப்பு அரசியலை அம்பேத்கரிடமிருந்து திருமாவளவன் பெற்றிருக்கவில்லை. ஏனென்றால், அம்பேத்கர் இஸ்லாமிய-கிறிஸ்தவ சக்திகளையும் முற்றாக நிராகரித்தார். அம்பேத்கரைவிடத் தனக்கு அரசியல் ஞானம் அதிகம்; இந்து மதத்தை எதிர்க்க இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளை நட்பாக்கிக் கொண்டாகவேண்டும் என்று புதியதொரு அரசியலையே திருமாவளவன் முன்னெடுக்கிறார்.
இது உண்மையில் அம்பேத்கரையும் தாண்டிய திருமாவளவனின் கண்டடைதல் அல்ல. கிறிஸ்தவ-இஸ்லாமிய சக்திகளின் கைப்பாவையாக அவர் இருக்கிறார் என்பதுதான் உண்மை.
ஒருவகையில் அவர் இந்த இந்து விரோத அரசியலை ஈ.வெ.ரா.விடமிருந்து பெற்றிருக்கக்கூடும். ஆனால், அது உண்மையென்றால் முந்தையதைவிட இது மிகவும் பரிதாபத்துக்குரியது. ஏனென்றால், ஈ.வெ.ராவின் அரசியல் என்பது இடைநிலை ஜாதிகளின் ஆதிக்க அரசியல். பட்டியல் ஜாதியினரின் அரசியல் என்பது உண்மையில் இடைநிலை ஜாதியினருக்கு எதிரான அதிகாரப் போராட்டமே.
ஈ.வெ.ராவின் வழியில்தான் இந்து மதத்தை எதிர்க்கிறார் என்றால், அதன் மூலம் திராவிட இடைநிலை ஜாதிகளின் அரசியலைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார் என்றே அர்த்தம்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட கிடைத்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் திமுகவின் சின்னத்தில் போட்டியிடவேண்டிய அவலம், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் பிரசாரத்துக்குக்கூட விடுதலைச் சிறுத்தையினரை அழைக்காத அவமானம் என மிக சமீபத்திய காறித் துப்பல்களைக்கூட துடைத்துக்கொண்டுதான் இயங்கவேண்டியிருக்கிறது.
திமுக அவமானப்படுத்தினால்கூட சனாதனத்தின் மேல் பழியைப் போட்டுத்தான் அரசியல் செய்தாகவேண்டிய துர்பாக்கிய நிலையிலேயே விசிக இருக்கிறது. இதற்கு முழு காரணம் திருமாவளவனே.
*
பாஜக வட மாநிலங்களில் செல்வாக்கு பெறத் தொடங்கியதை அடுத்து தென் மாநிலங்களிலும் கால்பதிக்க விரும்பியது. ஏற்கெனவே நாடார் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் பாஜக டாக்டர் கிருஷ்ண சாமி மூலம் தேவேந்திரகுல வேளாளர்களின் நன்மதிப்பைப் பெற முயற்சி செய்தது.
வட மாவட்டங்களில் விசிக-பாமக இரண்டையும் ஒன்று சேர்த்து திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டவும் பாஜக செயல்திட்டம் தீட்டியது. கழகங்கள் இல்லா தமிழகம் என பாமக அதற்குத் தயாராக இருந்தது. ஆனால், விசிகவோ பாஜகவை முற்றாக எதிர்த்தது. விசிகவை வழிநடத்திய கிறிஸ்தவ சக்திகளின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தமிழகத்தில் இல்லாத இந்துத்துவத்தை எதிர்த்துத்தான் இன்றுவரை செயல்பட்டுவருகிறது. ராஜபக்சேவுக்குப் பொன்னாடை போர்த்தியதுகூட இத்தாலிய அன்னை சோனியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கில்தான்.
சமீபகாலமாக, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுடனும் விசிக நட்பு பாராட்டி வருகிறது. அதனால்தான் பொன்னமராவதிக்கு இணையான வன்முறையான தேனியில் பொம்மிநாயக்கன்பட்டி - இந்திரா காலனியில் இஸ்லாமியர்களால் பட்டியல் ஜாதியினர் தாக்கப்பட்ட சம்பவத்தை திருமா எங்கும் பேசுவதே இல்லை. நம் பார்ட்-டைம் அறச்சீற்ற எழுத்தாளர் கூட்டமும் அந்த இஸ்லாமிய வன்முறையை எதிர்த்துக் குரல் எழுப்பியதே இல்லை.
பாமக மட்டும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால் இந்த எதிர்ப்புகூட இருந்திருக்காது. இது முழுக்க முழுக்க இந்துத்துவ எதிர்ப்பு மட்டுமே. அதனால்தான் பாமகவையும் சனநாயப்படுத்த விரும்புவதாக காருண்ய வசனங்கள் பேசப்படுகின்றன.
அடிப்படையில், பறையர்-வன்னியர் நட்பானது இந்துத்துவக் குடையின் கீழ் நடக்கக்கூடாது; அது கிறிஸ்தவ-இஸ்லாமிய குடையின் கீழ்தான் நடக்கவேண்டும் என்று விசிக விரும்புகிறது. அதாவது, கிறிஸ்தவ-இஸ்லாமிய எஜமானர்களுக்கு இசைவாக நடந்துகொள்ளவேண்டும் என்பதில்தான் திருமாவளவனுக்கு ஆர்வம் இருக்கிறதே தவிர பறையர்களின் நலன் என்பதில் எந்த அக்கறையும் இல்லை.
அது இருந்திருக்குமானால், இந்து அரசியல் கட்சியான பாஜகவின் மேடையில் விசிகவும் பாமகவும் இணைந்து வடமாவட்ட ஜாதிப் பிரச்னையை கணிசமான அளவுக்கு மேலும் குறைத்திருக்க முடியும்.
பாஜகவை விட்டு பாமக வெளியேறாததுவரை வட மாவட்ட ஜாதிப் பிரச்னை முடிவுக்கு வரவே செய்யாது. இது நிச்சயம். திருமாவளவன் இஸ்லாமிய-கிறிஸ்தவ சக்திகளுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு. பறையர் குலத்தில் பிறந்தோம் என்பது திருமாவளவனுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு. பரஸ்பரம் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டுவருகிறார்கள். பறையர்களின் நலன்தான் அம்போவென்று நடுத்தெருவில் நிற்கிறது. அப்பறம் இருக்கவே இருக்கிறது. பறையர்களின் பிரச்னைகளுக்கு சனாதன இந்து சமூகமே காரணம் என்ற பழைய ஏற்பாட்டு சுவிசேஷ வசனங்கள்.
நாடார்களின் எழுச்சி, தேவேந்திரகுல வேளாளர்களின் சுய கெளரவ மீட்டெடுப்பு போன்ற செயல்திட்டம் எதுவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இல்லை. உத்தரபிரதேச மாயாவதி ஃபார்முலாகூட திருமாவளவனிடம் இல்லை.
அந்தவகையில், கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளாலும் அவர்களுடைய ஊடக மற்றும் பிற அதிகார எகோ சிஸ்டங்களிலானலும் தூக்கி நிறுத்தப்படும் சோளக்கொல்லை பொம்மையே திருமாவளவன்.
அந்த சோளக்கொல்லை பொம்மையை மாபெரும் போர் வீரனாகச் சொல்லும் டான் க்யிசாட்தான் ஜெயமோகன் (இந்த விஷயத்தில் மட்டும்).

அரசியலில் விசிக, பாமக, மதிமுக, இடதுசாரிகள் என்று ஈசல் மாதிரி உதிரிக்கட்சிகள்  பெருகிக் கொண்டே போவதை ஆதரிக்காதவன் என்ற வகையில், மகாதேவன் நன்றாகவே ஆராய்ந்து எழுதியிருக்கிறார் என்று சொல்ல முடிகிறது.இந்த மாதிரி உதிரிக்கட்சிகளால் தேசிய அரசியலில் குழப்பத்தைத் தவிர வேறொன்றையும் சாதிக்க முடிந்ததில்லை என்பது கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் அனுபவம். 
என்னுடைய கருத்து ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதல்லவா முக்கியம்!         
நீண்ட பகிர்வைப் படித்து முடித்ததும் எனக்கு வேறொரு சந்தேகம் எழுந்தது.இது திருமாவளவனை விமரிசிக்கிற பகிர்வுதானா அல்லது  ஜெயமோகன் விமானம் பிடித்து வந்துநிகழ்ந்த  இலக்கியவாதிகளோடு கூட்டமாய்ச் சேர்ந்து வல்லுவ்வாய்  கண்டனம் தெரிவிக்க வந்தாரே, அதை விமரிசிப்பதற்காக அலசித் துவைத்துக் காயப்போட்டதா?  
#டவுட்டு க்ளியர் ஆகாமலேயே பதிவை முடிக்கிறேன்.
  

2 comments:

  1. திருமாவளவன், தேவையில்லாமல் அதீதமாக பாஜக எதிர்ப்புக் கொடி பிடித்தபோதே எனக்குச் சந்தேகம். அதுவும் டூ டூ மச்சாக மோடி எதிர்ப்பு (உள்ளூர் கவுன்சிலர் எலெக்‌ஷனில் தனியாக வெற்றிபெற முடியாதவர் ஏன் அகில இந்தியக் கட்சியை இப்படி எதிர்க்கிறார் என்ற சந்தேகம்).

    பிறகு, ராஜபக்‌ஷேவிடம் பல்லைக் காட்டி பரிசில் பெற்றது.

    அப்புறம்தான் தோன்றியது... அவர் யாரோ ஆட்டுவிக்கும் பொம்மை என்று.

    ReplyDelete
    Replies
    1. B R மகாதேவன் முகநூலில் நன்றாகவே தோலுரித்துக் காட்டியிருக்கிறாரே! :)))

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)