இந்தப்பக்கங்களில் எழுத்துரு மிகச் சிறிதாக இருக்கிறது என்ற குறைபாட்டை எங்கள் Blog . கௌதமன் முந்தையபதிவில் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏற்கெனெவே இதை ஸ்ரீராமும் சொல்லியிருந்தார் இப்போது font size normal என்று வைத்துப் படங்களோடு கொஞ்சம் அரசியலாகப் பதிவு எழுதியிருக்கிறேன். Chrome browser இல் எழுதப்படும் பதிவுகள் firefox browser இல் optimise ஆவதில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன
கமல் காசர் இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பேசு பொருளாக இருப்பார் என்பதும் அவரது ஒரு உளறல் பேச்சு தமிழ்நாட்டின் இதர அபத்தங்கள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டு முன்னணியில் இருப்பது தமிழர்களாகிய நம்முடைய ரசனை மட்டம் என்னவென்று காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாமா?
சோனியா G அழைத்துவிட்டார்! ஐமுகூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 3.0 ஆரம்பமா? என்ற கேள்விகளோடு இருக்கையிலேயே இங்கே பல உபிக்களுக்கு கனவும் கற்பனையும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது, சரி! அடுத்த வாரிசுக்குமா?
கோடை வெய்யில் ஜாஸ்தியாக இருப்பதில் இப்படிக் கோளாறுகளும் வருமா என்ன? ஹிந்து நாளிதழின் சுரேந்திரா என்ன வரைந்து சொல்கிறார் என்பதையும் பார்த்துவிடலாமா?
இது காங்கிரஸ் வாரிசு பற்றியது! காங்கிரஸ்மற்றும் கழக வாரிசுகள் கணக்கில் எவ்வளவு வீக் என்பதை வருகிற வியாழனன்று தெரிந்துகொள்ளத்தானே போகிறோம்!?
இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடுவார் என்று பார்த்தால் திருப்பரங்குன்றத்தில் செருப்பு வீச்சு, கரூர் வேலாயுதம்பாளையத்தில் முட்டை வீச்சு, கல்வீச்சு என்று கையைப் பிடித்து இழுத்துவந்து அரசியலில் நீடிக்க வைத்துவிடுவார்கள் போலயே!
தேவையில்லாமல் கமல் காசரைப் பெரிய ஆளாக வளர்த்துவிட்ட வேண்டாமே!
மீண்டும் சந்திப்போம்!
கமல ஹாசனுக்கு வாக்கு வங்கி கிடையாது 5 சதவிகிதமும் தாண்டாதுன்னு நினைக்கிறேன். அதுல எத்தனை ரஜினி வந்தால் காணாமல்போகுமோ தெரியாது. அரசியல் சினிமா அல்ல, 'குரான் படித்துவிட்டு குண்டு வைத்தான்' என்று படத்தில் காட்சி வைத்து, பிரச்சனையை உண்டாக்கி படத்தை வெற்றிபெறச் செய்ததுபோல அரசியலில் செய்யமுடியாது.
ReplyDeleteரிசல்ட் வருகிற வரை தினகரன், சீமான், கமல் மூவருமே கறுப்புக் குதிரைகள் தான்! ஜனங்கள் என்னமாதிரிப் பார்க்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியவரும். ரஜனியைப் பொறுத்தவரை அவர் இனிமேல் வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன கேஸ்தான்!
Deleteஎழுத்துரு பிரச்சனை இப்போ இல்லை. சரியாகவே இருக்கு.
ReplyDeletefirefox இல் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லையே!
Delete