இந்து தமிழ்திசையில் இன்று ராணிப்பேட்டை ரங்கன் என்பவர் மூன்றாவது அணி எனும் அபத்தச் சடங்கு என்றொரு சுவாரசியமான அலசலைக் கொஞ்சம் பொருமலோடு எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலும் இங்கே மூன்றாவது அணியைப் பற்றி எதிர் பார்ப்புகள் கிளப்பிவிடப்படுவதும், ஒருகட்டத்தில் அது அப்படியே அனாதையாக விடப்படுவதும் வாடிக்கை தான்! ஆனால் தென் மாநிலங்களில் மட்டும் என்னவோ மாநிலக்கட்சிகளின் பிடியில் தான் அரசியல்! அதை மீறித் தாமரையோ காங்கிரசின் கையோ உயரவே உயராது என்று ஒரு விசித்திரமான லாஜிக் கட்டமைக்கப் படுவதுமே கூட சமகாலக் காமெடிதான்!
இசுடாலின் என்னதான் செய்வாராம்?
தேர்தலுக்கு முந்தைய காட்சியாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இருவரும் மூன்றாவது அணிக்கு முன்கையெடுத்தார்கள். அதில் சந்திரபாபு நாயுடு கை ஆரம்பத்தில் ஓங்கியிருந்த மாதிரித் தெரிந்தாலும், இன்றைக்கு ஆந்திராவில் மறுபடியும் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதே சந்தேகத்துக்குள்ளாகி இருக்கிறது. அதே கதைதான் நாடாளுமன்ற சீட்டுகள் கெலிப்பதிலும் தொடரும் என்றே தெரிகிறது. 21 எதிர்க்கட்சி ஆண்டிகள் கூடி மடம் கட்ட முனைந்ததில், இன்றைய கணக்கு, மாயாவதி, மம்தா பானெர்ஜி, மற்றும் சந்திரசேகர் ராவ் மூவர் மட்டும் தான் போட்டியில் இருக்கிறார்கள்.மம்தா பானெர்ஜிக்கு, கேசிஆருக்கு காங்கிரஸ் ஆதரவு தருமா என்பது சந்தேகமே என்ற நிலையில் மாயாவதி ஒருவர் மட்டும் ரேசில் முந்துகிற மாதிரியான தோற்றம் இருக்கிறது.
கமல் காசரும் சர்ச்சைகளும் புதிதல்ல. மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் எந்த அளவுக்கு எடுபடும் என்பதே தெரியாமல் இருக்கிற நிலையில், சர்ச்சைகளில் வேண்டுமென்றே சிக்கிக் கொண்டு விளம்பரம் தேடுகிறாரா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. ஆனால் இது எதற்கான விளம்பரம்? #BiggBoss 3வது சீசன் ? தேவர் மகன் 2 ?
கமல் காசர் உளறலுக்கெல்லாம் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டுமா என்ன? கொலைகாரனுக்கும் பயங்கரவாதிக்கும் வித்தியாசம் தெரியாதவருக்காக அல்ல, இந்தமாதிரிப் பிரபலங்கள் சொன்னால் அதையும் நம்புகிற ஊமைச்சனங்கள் இங்கே அதிகம், அவர்களுக்காகவாவது தெளிவுபடுத்தித் தானாக வேண்டும்!
மீண்டும் சந்திப்போம்!
Arumai
ReplyDelete