ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல! மக்களவைத் தேர்தலில் திமுக செய்த தவறுகள் என்ன என்னவென்று கேட்டால் இப்படிப் பாட்டாகவே பாடிவிடலாம் தான்! நாம் பாடவேண்டிய அவசியமே இல்லாமல் இந்தக் கேள்விக்கு ரங்கராஜ் பாண்டே இன்று ஒரு வீடியோப் பதிவில் பதில் சொல்லி இருக்கிறார்.
கூடாநட்பு கேடாய் முடிந்தது என்று கருணாநிதியாலேயே வர்ணிக்கப்பட்ட காங்கிரசோடு கூட்டணி வைத்ததும், முந்திக் கொண்டு 10 சீட்டுக்களை ஒதுக்கியதே மோசமான ஓப்பனிங் என்றால் ராகுல் தான் அடுத்த பிரதமர் என்று இசுடாலின் இன்றுவரை தொடர்ந்து சொல்லிவருவது திமுக தலீவருடைய அரசியல் ஞானமும் எதிர்காலமும் எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.
2016 சட்டசபைத் தேர்தலில் தலா முக்கால் சதவீதத்துக்கும் குறைவாகவே ஓட்டு வாங்கிய விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டு சீட்டுகளும் மதிமுகவுக்கு 1+1 கொடுத்திருப்பதும் இந்தத் தேர்தலை திமுக சீரியசாகத்தான் எடுத்துக்கொண்டு போட்டியிடுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இவர்கள் கதை இப்படியென்றால் இவர்கள் மலைபோல நம்பி இருக்கிற காங்கிரசின் கதை என்னவாம்?
காங்கிரசின் விவசாயக்கடன்கள் அடியோடு ரத்து வாக்குறுதி பொய்யாகிப்போன கதையை ஏற்கெனெவே பானாசீனா வாக்குமூலத்தைத் தொட்டுச் சொல்லியிருந்தேன். இங்கே அருண் ஜெயிட்லி ராகுல் காண்டிக்கு ஆயுதபேரங்களில் தொடர்பு இருந்ததை அம்பலப்படுத்தி கிழிகிழியென்று கிழிக்கிறார்.
கூடாநட்புடன் கூட்டணி வைத்த நேரம் சரியில்லை! அவ்வளவு தான்!
மீண்டும் சந்திப்போம்.
எனக்குத் தோன்றுவது, ரங்கராஜ் பாண்டேவின் அனாலிசிஸ் தவறாகத்தான் முடியும்னு. பார்க்கலாம். என்னுடைய கணக்கு 33 ஒர் 35+ சீட்டுகள் திமுகவுக்கு நிச்சயம். 40 வந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
ReplyDeleteஆசைகளெல்லாம் குதிரைகளானால் (வாக்காய் விழுந்தால்) ஆண்டியும் கூட அரசன்தான்! (இசுடாலின் கூட முதல்வர்தான்!)
Deleteகண்ணுக்குத் தெரிவது, கட்சிகள் தான்.
ReplyDeleteஒவ்வொரு கட்சியையும் சார்ந்திருப்பவர்கள் பெருங்கூட்டம். இந்தக் கூட்டம் தான் யார் ஆட்சிக்கு வருவது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். வெகுஜன மக்களுக்கு 'இது தான் நமக்கு நல்லது' என்ற கருத்தை பல தளங்களில் உருவாக்குபவர்கள் இவர்கள் தான்.
அதற்கேற்பவே தேர்தல் முடிவுகள் அமையும். நாட்டுக்கு நல்லது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் என்று கூட சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் கணக்குக்கே வராது என்று கூட சொல்லலாம்.
அதனால் தான் எல்லா கட்சிகளுமே வாககளிக்கிற வெகுஜனத்தைக் கவர்கிற ஏதோ ஒரு எக்ஸ்ட்ரா விஷயத்தைத் துணையாகக் கொண்டிருக்கின்றன. இந்த எட்ஸ்ட்ரா துணை, கட்சிக்கு கட்சி வேறுபடும். வேறுபட்டாலும் வாக்குக்கான தூண்டிலாக அவை திகழும்.
ஜீவி சார்! இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எக்ஸ்ட்ராவாக அல்ல மெயினாக எடுத்துக் கொண்டிருப்பதே மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்கிற ஒற்றை அஜெண்டாதானே! அளவுக்கு மீறிச் செய்யப்படும் மோடிவெறுப்பே ரிசல்ட்டை நிறையவே மாற்றும் என்பது ஒரு கணக்கு.
Deleteஒரு செயல் நடந்து முடிந்த பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்வது எளிது. ஆனால் முன்னதாக கணக்கிடுவது கடினம் என்று தோன்றுகிறது!
ReplyDeleteபோஸ்ட் மார்ட்டம் செய்வதில் தோற்றவர்களுக்கு வேண்டுமானால் ஏன் தோற்றோம் என்று தெரிய வரலாம்! ஜனங்களுக்கு அதிலென்ன சுவாரசியம் இருக்க முடியும் ஸ்ரீராம்? ஜனங்களுக்கு எதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்வதில் இருக்கும் சுவாரசியம் போல வருமா?
DeletePsephology என்கிற தேர்தல் முடிவுகளை முன்கூட்டி கணிக்க முடிகிற ஒரு அறிவியல்பூர்வமான துறை. முறையாகக் கையாண்டால் கணிப்புகள் பொய்யாவதில்லை.