ஒருவழியாக இன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் ஐந்தாவது கட்டமாக 51 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வன்முறை வெறியாட்டங்களோடு அதிகபட்ச வாக்குப் பதிவை நடத்தி முடித்திருக்கிறது. இன்றைய தேர்தலில் காங்கிரஸ் ஓனர்கள் சோனியா போட்டியிடும் ரே பரேலி ராகுல் காண்டி போட்டியிடும் அமேதி இரண்டு தொகுதி முடிவுகள் முக்கியமான திருப்பத்தைத் தருமா என்ற கேள்விக்கு விடை விரைவிலேயே கிடைத்துவிடும். ஜம்மு காஷ்மீரில் சென்ற தேர்தலை விட மிகக் குறைவான சதவீத வாக்குப்பதிவு என்று ஆரம்பகட்ட செய்திகள் சொல்கின்றன. அபிமான கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா என்ன சொல்கிறார்?
பாவம்! இந்தக் கார்டூனில் கூட பப்புவும் பப்பியும் அகில இந்திய அளவில் முக்கியப்படுத்தப் படவில்லை! ஆனால் ரெண்டு முருகன் மட்டும் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் பேசும்போது என்னமோ இசுடாலின் முன்மொழிந்ததாலேயே இந்தத் தேர்தலில் மோடியா அல்லது ராகுலா என்றாகிவிட்ட மாதிரி ஒரு பீலா விட்டிருக்கிறார்! இல்லாவிட்டால் மோடியா அல்லது யாரோவா என்றாகியிருக்குமாம்! ஆனால் ரெண்டு முருகன் சத்தமில்லாமல் இன்னொரு குசும்பையும் அதே கூட்டத்தில் அரங்கேற்றியிருக்கிறார்!
அப்படியானால் வருகிற ஜூன் 3 ஆம் தேதி முதல்வராகிற இசுடாலின் கனவு கானல்நீர்தானா?
கார்டூனிஸ்ட் சுரேந்திரா வரைந்திருப்பதைப் பார்த்தால் கூடிய சீக்கிரமே கூடாநட்பு கேடாய் முடிந்தது வெர்ஷன் இரண்டைப் பார்க்கலாம் என்கிற மாதிரி இருக்கிறதே!
விடுவிக்கப்படாத உலகமர்மங்கள் ஏழில் என்னென்ன இருக்கிறதாம்?
இந்தக் கிருஷ்ணா நானில்லை! நான் நாத்திகனுமில்லை! ஆனாலும் சரியான கொக்கி ஒன்றைப் போட்டிருக்கிறாரே!
அதெப்படி தேர்தல் சமயத்தில் மட்டும் கேசரிவாலு அறைவாங்குகிற சீன் ஓடுதாம்? அட ஆமால்ல!
தேர்தல் முடிவுகள் அறிய 23 ஆம் தேதி வரைக் காத்திருக்கப் பொறுமை வேண்டும்! துமு என்னமோ சொல்லப்போக நீங்கள் வரிகளுக்கு இடையில் வாசிக்கிறீர்கள்!
ReplyDeleteரெண்டு முருகனுடைய லந்து, குசும்பு எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்தால் வரிகளுக்கிடையில் வாசிக்க வேண்டியாவசியமே இல்லை ஸ்ரீராம்! அன்னாரது அங்கசேஷ்டைகளே நிறையவிஷயங்களை சொல்லும்!
Deleteகிருஷ்ணா பட்டியலிட்டிருக்கும் நகைச்சுவைப் பகிர்வுச் சந்தேகத்தில் கூட நம் 'இரும்பு மனுஷி' மரணம் சந்தேக லிஸ்ட்டில் வரவிலையே?!!
ReplyDeleteஇரும்பு மனுஷி மரணம் உள்ளூர் சமாசாரம்! கேசரிவாலு கோமாளித்தனம் உலகப் புகழ்பெற்றது என்று நினைக்கிறாரோ என்னவோ!
Delete