Tuesday, May 28, 2019

மீண்டும் இடதுசாரிகள்! புரிதலுக்காக ஒரு விவாதம்!

காங்கிரசில் ராகுல் காண்டியின் ராஜினாமா ஸ்டன்ட் இன்னமும் முடிவுக்கு வராத குழப்பத்தைப் பற்றி என் அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா என்ன  சொல்கிறாராம்? 



உடைந்துபோன கையை ஒட்டுப்போட இன்னும் அதிக ராஜினாமாக்கள் வேண்டுமாம்! உருக்கமாகப் பேசிய பானாசீனா, காரியகமிட்டி கூட்டத்துக்கே வராத கமல்நாத், ராகுலை சமாதானப்படுத்த முயன்று தோற்ற அசோக் கெலாட்  இந்த மூவரும் ராஜினாமா செய்வதில்   பங்கெடுக்காமல் இன்னமும் கள்ளமௌனம் சாதிப்பது காங்கிரசில் மட்டுமே நடக்கக் கூடிய விசித்திரம்!   




ஹிந்து நாளிதழுக்கு நன்றியே இல்லையா? ராகுல் காண்டி ராஜினாமா செய்தெ ஆகவேண்டுமென்று குதிக்கிறதே!  

முடிவுகள் சொல்வதென்ன?-4
இந்தியா
இடதுசாரிகள்
மரத்தினில் நாகம், நிலத்தினில் வேங்கை என்ற நிலையில் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள். பாஜகவும் எதிரி. காங்கிரசும் எதிரி என்பது மட்டுமல்ல பிரசினை. தேர்தல் அரசியலா? சித்தாந்த அரசியலா என்று தீர்மானிக்க முடியாமல் பலப் பல ஆண்டுகளாகத் திணறிக் கொண்டிருக்கிறார்கள் இடதுசாரி அறிவுஜீவித் தோழர்கள்
மரத்தினில் நாகம் கதையில் வருவது போல இடறி விழுந்தவன் வாயில் தேன் கூட்டடிலிருந்து சிந்திய துளிகள் போல அவர்கள் ஐந்து இடங்களில் வென்றிருக்கிறார்கள். அதில் நான்கு திமுகவால், தமிழகத்தில் கிடைத்தது.
அவர்களின் வலுவான கோட்டைகளான வங்கம், திரிபுராவில் ஓரிடம் கூட அவர்களால் வெல்ல முடியவில்லை.கேரளத்தில் 10474 வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் வென்றிருக்கிறார். மற்ற மாநிலங்க்களில் ஒரு இடம் கூட இல்லை. ஊடகங்களால் கொண்டாடப்பட்ட இளம் தோழர் கன்னையா குமார் பிகாரில் களம் இறங்கி தோற்றுப் போனார்.
இடதுசாரிகளின் தோல்விகள் அவர்களுக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைக்குமா என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.
இடதுசாரிகளின் தோல்வி அவர்கள் சமூக யதார்த்தங்களிலிருந்து விலகி நிற்கிறார்கள் அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் அல்லது புரிந்து கொண்டாலும் ஏற்க மறுக்கிறார்கள் என்ற மூன்று வகையான கருத்துக்களை நண்பர்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட விவாதங்களில் சொன்னார்கள்.
மூன்றுமே காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் இனி சோஷலிச உலகத்திற்குத் திரும்ப இயலாது என்பதையும், உலகமயமாக்கல் மனிதர்களை வேரற்றவர்களாக ஆக்கும் போது அவர்கள் பாதுகாப்புணர்வின் காரணமாக ஏதேனும் ஓர் அடையாளத்தைப் பற்றிக் கொள்வார்கள் அது இந்தியா போன்ற தொன்மையான கலாசாரத்தில் முதன்மையான அடையாளமான மதமாக இருக்கும் சாத்தியம் அதிகம் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள்.
நான் கடந்த ஆண்டு சீனம் சென்றிருந்த போது பெய்ஜிங்க்கில் உள்ள ஒரு ஆலயத்திற்குச் சென்றிருந்தேன்.தாவோ மதப்பிரிவினரின் ஆலயம். அவர்களுக்கும் செல்வம் கொடுக்க, நோய் தீர்க்க, கல்வியில் சிறக்க என்று வெவ்வேறு வித புத்தர்கள் / கடவுளர்கள் உண்டு. இந்துக்களுக்கு தனம் தரும் லட்சுமி போல அவர்களுக்கு தாரா. அவர்களும் இந்துக்களைப்போல நேர்ந்து கொள்ளல், விரதம் இருத்தல், வேண்டிக் கொள்ளல், பெளர்ணமி அன்று சிறப்பு வழிபாடு இவற்றை மேற்கொள்ளுகிறார்கள். மாவோவின் மண்ணிலிருந்து மத நம்பிக்கைகளை கம்யூனிசத்தால் மாற்ற இயலவில்லை. வலதுசாரிப் பாதைக்குத் திரும்பியிருக்கிற இந்தியாவில் மக்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள், அடையாளங்களை, ஆதரவை எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.
இடதுசாரிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது அவர்களுடைய பலவீனமான அமைப்பு.கூட்ட்ணி இல்லாமல் அவர்களால் எந்தத் தேர்தலிலும் வெல்ல முடியாது. ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இல்லாதவர்களுக்கு கட்சி சாராத வாக்காளர்கள் வாக்களிக்கத் தயங்குவார்கள். இடதுசாரிகளுக்கு அரசு அமைக்கும் வாய்ப்பு (கேரளம் தவிர்த்து) எங்கும் இல்லை.
அவர்கள் பக்க வாத்தியமாகவே தொடர வேண்டிய நிலையில் இருக்கும் அவர்கள் தீட்டிய மரத்திலேயே பதம் பார்த்த வரலாறுகள் உண்டு. அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் அதிமுகவை எதிர்த்தது உண்டு. இன்று திமுக கூட்டணியில் இருப்பவர்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் அதை எதிர்த்தவர்கள். இது பொதுமக்களுக்கு அவர்கள் மீதானநம்பிக்கையைத் தகர்க்கிறதுநான்  
மீசையை எடுப்பதா, கூழைத் துறப்பதா என்ற முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்.
இடதுசாரிகள் பற்றி சரியான புரிதல் இல்லாமலேயே இடதுசாரிகளைப் பற்றி பொத்தாம் பொதுவாக மாலன் எழுதியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

உங்களுடைய கருத்து என்ன? விவாதக்களம் திறந்தே இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.
    

4 comments:

  1. ஹிந்து பத்திரிகையின் ராம் தானே, மோடிக்கு எதிராக அரைகுறை ஆர்டிகிள், ஆவணங்கள் காங்கிரசுக்குக் கொடுத்தது? இப்போ மோடி வெற்றி பெற்றதால், ராகுல்தான் 'ஹிந்து ராம்', ஹிந்து பத்திரிகையிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என்று கேட்கணுமோ?

    ReplyDelete
    Replies
    1. ஹிந்து என் ராம் பத்திரிகைத்துறையில் ஒரு கோமாளி! கோமாளியை என்ன செய்ய முடியும்?

      Delete
  2. கம்யூனிஸ்டுகள், இந்தியக் கட்சியாக மாறி பல டிகேட்கள் ஆகிவிட்டன. கொள்கை என்ற ஒன்றை அவர்கள் மறந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அந்தக் கால புத்ததேவ் பட்டாச்சார்யாவே முதலாளித்துவத்துக்கு மாறி, வெளி முதலீடுகளை ஆதரித்தார் (ஜோதிபாசுவையும் அப்படிச் சொல்லுவார்கள்). அவர்கள் யாருக்கும் (ஒரு சிலரைத் தவிர) சித்தாந்தங்கள் என்று ஒன்று கிடையாது.

    தனியாக வெற்றி பெறமுடியாத மாநிலங்களில் அவர்கள் கூட்டணி (யார் சேர்த்துக்கொள்கிறார்களோ அவர்களிடம்) வைக்கிறார்கள். சட்டமன்ற இடங்கள் கொடுக்காவிட்டாலும், ராஜ்ஜிய சபா எம்.பி ஆவது வருந்திக் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள் (டேனியல் ராஜா ஒரு உதாரணம்... பிச்சை என்று நான் எழுதவில்லை). ஐயோ பாவம்... இப்போ ராஜாவுக்கு திமுகவிடம் எம்.பி. பதவி கேட்கமுடியாது. வேற என்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. புத்ததேவ் பட்டாசார்யா மேற்குவங்கத்தைத் தொழில்வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற சில முன்னெடுப்புக்களைச் செய்தார். அதில் டாட்டாக்களோடு நானோ கார் தொழிற்சாலைக்காக சிங்குர் கிராமத்தில் நிலமும் வரிச் சலுகைகளும் குறைந்தவட்டியில் மூலதனக்கடனும் தருவதாக ஒப்பந்தம் செய்தார் என்பதில் தவறேதுமில்லை. ஆனால் அதையே தனக்கான அரசியல்களமாக, போராட்டமாக மாற்றித் தடை செய்தது மம்தா பானெர்ஜி. இடதுசாரிகள் வளர்த்துவிட்ட தொழிற்சங்க லும்பன்கள் வேறு.

      இதில் சித்தாந்தங்களுடைய ரோல் எதுவுமில்லை. நிலச் சீர்திருத்தங்களேவளர்ச்சிக்குப் போதுமானவை என்று அதிலேயே தேங்கிப்போனது இடதுசாரிகளுடைய சரிவுக்கு ஆரம்பமாக இருந்தது. பரம்பரை வங்காளிகளுடைய ஆதரவு அவர்களுக்கு கிடைத்ததில்லை. எனவே வந்தேறி வாக்காளர்களைக் குறிவைத்தே அரசியல், எழுபதுகளில் வங்கதேச அகதிகள் என்று விரிவடைந்து, இன்றைக்கு அதே உத்தியை மம்தா பானெர்ஜியும் கையாளுகிற அளவுக்கு ஆகியிருக்கிறது. இடதுசாரிகளை விடத் தான் பெரிய பிஸ்தா என்று மம்தா பானெர்ஜி காட்டிக் கொண்டதில் இடதுசாரிகளுடைய 34 வருட ஆட்டம் முடிவுக்கு வந்தது.

      அம்மணியின் ஆட்டம் எட்டே வருடங்களில் முடிவுக்கு வந்துவிடும் அறிகுறிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)