ஒருவழியாக நாடாளுமன்றத் தேர்தல் முறைகள் 542 தொகுதிகளில் முழுதாக நடந்துமுடிந்து விட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது, மிச்சமிருக்கிற அந்த ஒரு தொகுதி ரெண்டு முருகன் வகையறாவால் புகழ் வெளிச்சத்துக்கு வந்த வேலூர் தொகுதி என்று தனியாக நினைவு படுத்தவேண்டியதில்லை. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்க கொள்வதற்காக ஒரு சப்பாத்தி சாங் கேட்டுவிடலாம்? அதென்ன சப்பாத்தி சாங்? சில காலத்துக்கு முன்னால் லுங்கிடான்ஸ் பாட்டு ஆட்டம் எல்லாம் அதகளப்பட்டதே, அதற்குப் போட்டியாகத் தானாம்!
ஒரு வலைப்பதிவை சுவாரசியமாக்க என்னென்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது?😄😎 ஆனால் நம்மூர் ஊடகங்கள் நம்மைச் சும்மா இருக்க விடாமல் அரசியல் விவகாரங்களுக்கே கையைப் பிடித்து இழுக்கின்றனவே! தேர்தல் நடந்து முடிந்தால் என்ன? நாங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் குழப்போ குழப்பு என்று குழப்புவோமே என்று exit poll பண்டிதர்களாகக் காட்ட ஆரம்பித்து விட்டன. இந்தியா டுடே கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 முதல் 38 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று சொன்னால் ரெண்டு முருகன் எவ்வளவு கொந்தளித்துப் போவார் என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா?
இந்தக் கணிப்புகளில் தமிழ்நாடு ரிசல்ட் மட்டும் மிக வித்தியாசமாக இருப்பது வெளிப்பட்டிருக்கிறது. தென் மாநிலங்களில் எதிர்பார்க்கப்பட்டது போல, பிஜேபி என்னதான் கூடுதல் வாக்குகளை வாங்கினாலும் சீட்டுகளாக மாறுமா என்ற கேள்வி அப்படியே நிற்கிறது.
ஒருவிஷயம் எல்லாக் கணிப்புகளிலும் தெளிவாக்கப் பட்டிருக்கிறது. அடுத்து அமையப்போவது பிஜேபி கூட்டணி ஆட்சிதான்! மம்தா பானெர்ஜியை விட, மாயாவதி, அகிலேஷ் கூட்டணி அதிக சீட் பெறும் என்று கணிப்புகள் சொல்கின்றன. மம்தாவின் கனவுகளுமே கூட இசுடாலின் நிலைமைக்கு ஒப்பானதுதான்!
இதற்கு மேல் பேச, உறுதியான செய்திகளுடன் வியாழன் வரை காத்திருக்காமல் மீண்டும் விரைவிலேயே சந்திப்போம்!
சப்பாத்தி சாங் ரசித்தேன்.
ReplyDeleteஸ்ரீராம் இங்கே வரவேண்டுமென்றால் இந்தமாதிரி ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது! சப்பாத்தி சாங் கேட்டதில் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று எக்சிட் கணிப்புகள் விஷயத்தைப் பார்க்கவே இல்லை போல இருக்கிறது! : )))
Delete