அக்கினிநட்சத்திரம், அரசியல்களம் என்று பேசப் புகுவதற்கு முன்னால் கொஞ்சம் வாய்விட்டுச் சிரிக்கிற மாதிரியான ஒரு கேள்வி பதிலைப் பார்த்துவிடலாம்! வேறெங்கே? மவுசு இழந்து போன ஜுனியர் விகடன் கழுகார் பதிலில் இருந்துதான்!
டி.கே.மோகன், ஆதம்பாக்கம்.
இனி, தி.மு.க-வில் செயல் தலைவர், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவிகள் யார் யாருக்கு அமையும்?
இப்போதைக்குச் செயல்படும் தலைவர் இருப்பதால், செயல் தலைவர் பதவி காலியில்லை. ஆனால், ‘ஆருயிர் அண்ணன்’, ‘கன்னக்குழி மன்னன்’, ‘புதிய தளபதி’ உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்கக் காத்திருக்கிறது இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவி.
@சுந்தரவடிவேலு, மஸ்கட்.
கமல் - டிடிவி தினகரன் இருவரும், எதிர்கால எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்கிறேன். கழுகாரின் கருத்து என்னவோ?
எம்.ஜி.ஆர் - கருணாநிதி ‘படா மாஸ்’. கமல் - டி.டி.வி ‘பொடி மாஸ்’.
அக்கினி நட்சத்திரத்தாக்கம் பதிவுகளில் வெளிப்பட வேண்டாமே என்று கொஞ்சம் தணித்து எழுதியது.
மீண்டும் சந்திப்போம்.
இனி, தி.மு.க-வில் செயல் தலைவர், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவிகள் யார் யாருக்கு அமையும்?
இப்போதைக்குச் செயல்படும் தலைவர் இருப்பதால், செயல் தலைவர் பதவி காலியில்லை. ஆனால், ‘ஆருயிர் அண்ணன்’, ‘கன்னக்குழி மன்னன்’, ‘புதிய தளபதி’ உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்கக் காத்திருக்கிறது இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவி.
@சுந்தரவடிவேலு, மஸ்கட்.
கமல் - டிடிவி தினகரன் இருவரும், எதிர்கால எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்கிறேன். கழுகாரின் கருத்து என்னவோ?
எம்.ஜி.ஆர் - கருணாநிதி ‘படா மாஸ்’. கமல் - டி.டி.வி ‘பொடி மாஸ்’.
அச்சுப்பிச்சு குமுதம் தெரிந்துதான் கேட்கிறதா? அல்லது புரியாமலா? கேசரிவாலுக்கு ஊடகவெளிச்சம் எப்போதும் தன் மீதுபட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்பதற்காகத் தானே செட்டப் செய்துகொள்கிற ஸ்டன்ட் இது. ஒருவகை மனவியாதியும் கூட.
மோடி..ராஜிவ் காந்தியை ஊழல்வாதி என்று சொல்லி விட்டார். 1991-ல் இறந்துவிட்டவரை இழிவு செய்துவிட்டார் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி பேசிக் கொண்டிருக்கிறது.
இந்த அறிவு..
நாட்டின் பிரதமரை ..அதிலும் குறிப்பாக ''மக்களால் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப் பட்ட'' பிரதமரை..பிரதமர் ஒரு திருடன் என்றும்..நாட்டின் காவலாளி ஒரு திருடன் என்றும் பெருங் குரலில் ராகுல் காந்தி தொடர்ந்து தன்னுடைய பரிவாரங்களோடு கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது எங்கே போயிற்று ?
ராகுல் எதை விதைத்தாரோ..அதை அறுவடை செய்கிறார்.
மோடி வாஜ்பாயுமல்ல. நேரு குடும்ப வாரிசு என்று அண்ணாந்து பார்த்து தவறுகளை கண்டுகொள்ளாமல் கடந்து போகும் தலைமுறையை சேர்ந்த அரசியல்வாதியுமல்ல.
மோடி 200% அரசியல்வாதி. நேரு குடும்பம், வாரிசு போன்ற பெருமையெல்லாம் அவரிடம் எடுபடுவதில்லை என்பதே எதார்த்த நிலை.
"சாதாரண காலிலேயே சதிராட்டம் ஆடும் மம்தாவுக்கு, சமீபகாலமாக சலங்கை வேறு கட்டி விட்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள். அதாவது, மம்தாவின் ஆங்கிலம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனாலென்ன, `R' எழுத்தை மட்டும் மிஸ் செய்துவிடுவார். அதைக் குறிப்பிட்டு, ‘ Poplem, Theat, Poposal' என்று போட்டு, `R' எழுத்தை மீட்டெடுக்க மார்க்சிஸ்டுகளுக்கு வாக்கு அளியுங்கள் என்று கேட்டு வருகிறார்கள் கம்யூனிஸ்ட்கள். சீனக் கம்யூனிஸ்ட்கள் அமெரிக்கா கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்கு இங்கே `R’ எழுத்தை மீட்க வேண்டுமாம். இப்படியே பேசிக் கொண்டிருக்கட்டும், வங்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு மொத்தமாக ‘RIP போடப்போகிறார் மம்தா. அப்போதும், அதில் ‘R’ மிஸ்ஸிங் என்று ‘கனசக்தி’யில் காட்டமாக கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார்கள். கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணுவதில், கோர்பசேவ் வாரிசுகளை அடித்துக்கொள்ள ஆளே இல்லை!" இப்படி ஒரு பாராவைப் படித்ததுமே போதுமடா சாமி என்றுதான் மனதில் பட்டது. குஜராத் லயன் Vs பெங்கால் டைகர் - மோடியுடன் மோதும் மம்தா! இப்படித் தலைப்புடன் முழுக்கட்டுரையையும் வாசிக்கத் துணிச்சல் உள்ளவர்கள் தலைப்பைக் க்ளிக் செய்து படித்துவிட்டு, தெம்பு இருந்தால் கட்டுரை எப்படி என்று கருத்தைச் சொல்லுங்கள்!
உயிரைப் பற்றிக் கவலைப்படாத தைரியம் மிக்க ஒரே பிரதமர் என்று இந்திராவைப் பற்றி ஒரு புகழஞ்சலி கட்டுரை NDTV தளத்தில் வந்திருந்ததைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது.CIA தன்னைக் கொல்லச் சதி செய்கிறது என்று புலம்பியவர், கேள்விகள் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை CIA agent என்று குற்றம் சாட்டியவர் இந்திரா.
அந்தநாட்களில் சுதந்திராக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிலு மோடி தன் கழுத்தில் நான் ஒரு CIA ஏஜென்ட் என்ற வாசகங்களுடனான அட்டையைக் கட்டிக்கொண்டு அவைக்குள்ளேயே அங்குமிங்கும் உலாவி கோ ரப்பெண்மணியின் வாய்ச்சவடாலை கேலிக்குரியதாக ஆக்கியவர் என்ற வரலாறு கண்முன்னே வந்து போகிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment