#டிக்கிசிங் என்கிற திக்விஜய் சிங் இந்தத் தேர்தலில் செய்கிற பித்தலாட்டங்கள் அப்போதைக்கு அப்போதே வெளிப்பட்டு மிகக் கேவலமான வழிமுறைகளாக இருக்கிறதென்று செய்திகள் சொல்கின்றன. அவரோடு சேர்ந்து காங்கிரஸ் படும்பாடும் அந்த அளவுக்கு மோசமாகத்தான் இருக்கிறது. 1984 போபால் விஷவாயு விவகாரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்த நிலையில், யூனியன் கார்பைட் ஆண்டர்சனை மத்தியப்பிரதேச முதல்வர் அர்ஜுன்சிங் காரில் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்த பழைய சரித்திரம் இப்போது வந்து ஊழ்வினையாக உருத்தூட்டுகிறது
ராகுல் காண்டிக்கு துண்டு சீட்டு எழுதிக் கொடுப்பது யார் என்று தெரியவில்லை. ராஜீவ் காண்டியை ஒரு தியாகி என்றும் மோடி அவரை அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் எலிகள் கூட்டமாகப் பொங்கியதும் 1984 இல் இந்திரா மரணத்துக்குப் பிறகு அரங்கேற்றப்பட்ட சீக்கியர் படுகொலை விவகாரம் ராஜீவ் காண்டி அதை நியாயப்படுத்தியது இப்போது முன்னுக்கு வந்து நிற்கிறது.கர்மா பற்றி ராகுல்காண்டிக்கு என்ன தெரியுமோ? தந்தையின் புகழ் இப்போது ஊழ்வினையாக வந்து உருத்தூட்டுகிறது.
/
கடைசி இரண்டுகட்டத் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், டில்லி ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் சீக்கியர்கள் வாக்கு அதிகம், பிரதமர் நரேந்திரமோடி கடைசி இரண்டுகட்டத் தேர்தல்களில் ராஜீவ் காண்டியை முன்னிறுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்யத் தயாரா என்று சவால் விட்டதற்கு காங்கிரஸ்தரப்பு பதிலெதுவும் சொல்லமுடியாமல் திகைத்து நிற்கிறது.
மதிமுக திமுக அதிமுக அமமுக மறுபடியும் திமுகவுக்கே வந்து கரூர் மாவட்ட திமு கழகத்தையே கலக்கிக் கொண்டிருக்கிற செந்தில் பாலாஜியின் பழைய கதையை சுருக்கமாகச் சொல்கிறார்கள், இதுவரை ஏறுமுகமாக இருந்ததென்னவோ நிஜம்! மே 19 தேர்தலன்றும் இருக்குமா?
இன்னும் 15 நாட்கள்தானே! பார்த்துவிடுவோம்!
No comments:
Post a Comment