இந்தத் தேர்தலில் அதிகம் இழக்கப்போகிறவர்கள் என்று கோரா தளத்தில் ராஜகோபாலன் என்பவர் பத்து நாட்களுக்கு முன் சில கருத்துக்களை சொல்லியிருந்தார், தேர்தல் முடிவுகள் இன்னும் ஐந்தே நாட்களில் வெளிவரவிருக்கும் நிலையில் என்னென்ன கூத்துக்கள் அரசியல் களத்தில் அரங்கேறிவருகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?
இந்தத் தேர்தல்,தேர்தல் முறைகளைப்பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? நாம் இந்தத் தேர்தலில் ஒட்டுப் போடுவதென்னவோ ஏதோ ஒரு கட்சியின் வேட்பாளர் அல்லது சுயேட்சைக்குத்தான்! பிரதமரை நம்முடைய வாக்கு நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் அதிகபட்சம் 17 சீட்டில் மட்டுமே ஜெயிக்க முடிகிற தெலங்கானாவோ 42 சீட்டுகளை மட்டுமே கொண்ட மேற்குவங்கமோ எப்படிப் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய முடியும் என்ற கேள்வியிலேயே westminster தேர்தல்முறைகளில் உள்ள கோளாறுகள் ஈயென்று இளித்துநிற்பதை பார்க்க முடியும். பார்க்கிறோமா? கேள்வி எழுப்புகிறோமா?
இந்தத் தேர்தலில் செம அடி வாங்கப்போகும் கட்சிகளில் முதலிடம் அரவிந்த் கேசரிவாலுவின் ஆம் ஆத்மி கட்சி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகிவருகிறது. டில்லியில் 7 சீட்டுகளிலும் தோல்வி அதற்கு காரணம் 48 மணி நேரத்தில் முஸ்லீம் ஓட்டுகள் காங்கிரசுக்கு மாறியது தான் என்று கேசரிவாலு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது ஒன்று, இப்போதைய பரபரப்புச் செயதியாக தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாலேயே கொல்லப் படலாம், பிஜேபி நினைத்தால் தன்னுடைய கதையை இரண்டே நிமிடங்களில் முடித்துவிடும் என்று ஒப்பாரி வைத்திருப்பது, இரண்டு. இந்தக் கேணைக்கு முட்டுக்கு கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி முன்வந்திருப்பது #AKவாலு ஒப்பாரியை இன்னமும் பெரிய கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.
அரசியலில் இன்னமும் வயதுக்கே வராத பப்பு ராகுல் காண்டிக்கும், முதிர்ச்சியோடு பேசுகிற நரேந்திர மோடிக்கும் என்ன வித்தியாசம்? அர்னாப் கோஸ்வாமி கொஞ்சம் சுருக்கமாக உறைக்கிற மாதிரி சொல்கிறார்,
மீணடும் சந்திப்போம்.
.
No comments:
Post a Comment