காங்கிரசுக்கு சமீபநாட்களில் கிடைத்திருக்கும் ஒரே நல்ல சேதி என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அனில் அம்பானி காங்கிரஸ், மற்றும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை மீது உத்தேசித்திருந்த 5000 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருப்பது தான் அந்த நல்ல சேதி.
அம்பானிகள் தேர்ந்த வியாபாரிகள்! காங்கிரசையும் ஒரேயடியாகப் பகைத்துக் கொள்ளாமல், தங்கள் வேலை என்னவோ அதை பார்த்துக் கொண்டு போக முடிவு செய்துவிட்டதாகத் தான் தோன்றுகிறது.
இன்று சந்திரபாபு நாயுடுவும் காங்கிரசும் முன்னெடுத்த எதிர்க் கட்சிகளின் கூட்டத்தின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது முன்னாடியே தெரிந்துவிட்டதால் பிசுபிசுத்துப் போன ஒன்றுதான் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. பிரதான தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இரண்டாவது மூன்றாவது மட்டத் தலைவர்களை வைத்து ஒப்பேற்றி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் நாளை மறுநாள் வாக்கு எண்ண ஆரம்பிப்பதற்கு முன்னால் இன்னின்னது செய்தாகவேண்டும் என்ற கோரிக்கையை ஒப்பாரியாக வைப்பது என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அப்போதைக்கு அப்போது கிளப்பி விடப்படும் புரளிகள் ஒவ்வொன்றுக்கும் சரியான பதிலைச் சொல்லிவருவதில் காங்கிரஸ் நாயுடு வகையறா முயற்சிகள் செயல்வடிவம் பெறுவதற்கு முன்னாலேயே பிசுபிசுத்துப்போய்க் கொண்டிருப்பது இன்றைக்கும் தொடர்கிற பரிதாபம்!
ஆசைகளெல்லாம் குதிரைகளானால் ஆண்டியும் கூட அரசன்தான் என்றொரு வழக்குண்டு. அதுபோல இங்கே அனேகமாக விலைபோய்விட்ட ஊடகங்கள் கூவுவது போல மட்டும் நடந்துவிட்டால் அடடே!மதி கார்டூனில் நக்கலாகச் சொல்வதும் கூட நடந்திருக்கும். ஆனால் ஊடகமோ தனிநபரோ, நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? !!
இந்த ட்வீட்டரில் உள்ள நக்கல், நையாண்டியைக் கொஞ்சம் அனுபவித்துப் பாருங்கள்! அவனவன் எவ்வளவு காய்ந்துபோய்க்கிடக்கிறான் பிரசாந்த் பூஷன் மாதிரி என்பது நன்றாகப்புரியும்!
எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்தால் அவர்கள் ஓட்டு எண்ணிக்கை அன்று நாடு முழுவதும் மாபெரும் களேபரத்தை நடத்தி ஓட்டு எண்ணிக்கையை தடை செய்ய முயற்சிப்பதுபோல் தோன்றுகிறது....
அப்படி ஏதும் நடந்தால் அதைவிட கீழ்த்தரமானமான செயல்பாடு ஏதும் இருக்காது
அவர்களையெல்லாம் நம்நாட்டின் அரசியல்வாதிகள் எனச் சொல்வது படுகேவலம்
😡😡😡
கண்டு கொள்வோம் கழகங்களை! காங்கிரஸ் மற்றும் நாயுடு கூட்டாளிகளை என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்ன?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment