கமல் காசரைப் பற்றி பேசுவதில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை.ஆனால் behindwoods தளத்தில் கேபிரியல் தேவதாஸ் H ராஜாவுடன் நடத்தும் இந்த நேர்காணல், கேபிரியல் எந்தவொரு முன்தயாரிப்பும் தரவுகளும் இல்லாமல் நடத்துகிற அரைவேக்காட்டுத் தனத்தை காட்டுகிறதென்றே நினைக்கிறேன். இதை முந்தைய சந்தர்ப்பங்களிலும் கோடிகாட்டி எழுதி இருக்கிறேன்.
அதைவிட அபத்தம் இந்த வீடியோவுக்கு வைத்திருக்கும் தலைப்பு! H ராஜாவிடம் சீறும் Gabriel அப்படி என்ன சீறி விட்டாராம்? பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன் கமல் காசர் பள்ளப்பட்டி இஸ்லாமியர் மத்தியில் 71 வருடங்களுக்கு முன்னால் நடந்த காந்தி கொலைக்கு நியாயம் கேட்டு வந்ததைப் பற்றி, அந்த அபத்தமான வரலாற்றுத் தகவல்பிழையை கேள்விகேட்க எந்தவொரு ஊடகமும் முன்வரவில்லை. பிரிவினைக்குச் சற்று முன்னால் வங்காளத்தில் நடந்த நவகாளிப் படுகொலைகளைப் பற்றி இப்போதாவது இந்த சமூகம் தெரிந்து கொள்ள முன்வந்திருக்கிறதா?
ஹிந்துநாளிதழில் இன்றைக்கு சுரேந்திரா வரைந்திருக்கும் கார்டூன் இது.
ஆனால் தலையங்கம் வேறுமாதிரி எழுதுவார்கள்! எதிர்க் கட்சிகளின் ஊதுகுழலாக, தேர்தல் ஆணையத்தைக் குறை சொல்வார்கள். EVM மீது பழியைப் போடுவார்கள்.
காங்கிரஸ் கட்சி ஜனங்களை நம்பியிருந்த காலம் எல்லாம் போயேபோச்சு! இந்தத் தேர்தலில் மிகப்பரிதாபமாக #வழக்கறிஞர்அணி யை மட்டுமே நம்பியிருப்பதாகத் தற்போது வரும் செய்திகள் சொல்கின்றன.
Integrity of EVMs by matching with sample VVPATs has to be done at the start of the counting. Doing so after the trends are declared makes it infructuous and is likely to lead to protests and a possible law and order situation from the affected candidates.
காங்கிரசுக்கு அனுசரணையாக மார்க்சிஸ்டுகள் கலவரம் செய்யத் தயாராகி விட்டார்கள்!
மின்னம்பலம் தளம் இப்போது தினத்தந்தி தளத்தோடு செம போட்டி! வேறெதில்? புருடா விடுவதில்தான்! திமுக ஆதரவுக்காக 5000 கோடி ரூபாய் தர அமித் ஷா பேரம்! ஆடிப்போன ஸ்டாலின் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இந்த மாதிரி செய்தி வெளியிட்டுக் குஷிப்படுத்த யார் எவ்வளவு தருகிறார்கள் என்பது யாருக்கேனும் தெரியுமா?
ஆனால் ஓட்டுப் போட்டு அந்த ஒரு நாளில் ஒருவிரல் புரட்சி செய்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் வாக்காளர்கள் இப்போது எப்படியிருக்கிறார்களாம்? என்ன நினைக்கிறார்களாம்?
நாளைய பொழுது நல்லபொழுதாக விடியும் என்கிற நம்பிக்கையுடன்! மீண்டும் சந்திப்போம்!
மதி கார்ட்டூன்தான் டாப்!
ReplyDeleteகஷ்டப்பட்டு காணொளியும் பார்த்து விட்டேன்.
கஷ்டப்பட்டுப் பார்க்கிற அளவுக்கு கொடுமையாகவா இருந்தது காணொளி? கேபிரியல் தேவதாசுக்கு அலாரம் பெல் அடிச்சுட வேண்டியதுதான் ஸ்ரீராம்! :))))
DeleteSir, if possible can you publish Sahil Misra's cartoon (PGurus) here.
ReplyDeleteதிரு. கோபால்சாமி! PGurus தளக் கார்டூன்களை அவ்வப்போது இந்தப்பக்கத்தில் பகிர்வது வழக்கம்தான்! எந்தக் கார்டூனை மனதில்வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள், தெரியவில்லையே!
Delete//அமித் ஷா பேரம்! ஆடிப்போன ஸ்டாலின் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இந்த மாதிரி செய்தி வெளியிட்டுக் குஷிப்படுத்த யார் எவ்வளவு தருகிறார்கள் என்பது யாருக்கேனும் தெரியுமா?// - யார் மின்னம்பலம் தளத்தை வழிநடத்துவது என்று கூர்ந்து கவனியுங்கள். Thatstamil தளமும் அதைப் போன்றதுதான். அவர்கள் இருவரும் தளம் நடத்துவதே வியாபாரத்துக்கு. அங்கு நேர்மைக்கும் நியாயத்துக்கும் வேலை இல்லை. Indirectly Paid News என்றுதான் எனக்கு அவர்களின் பல்வேறு கட்டுரைகளைப் படிக்கும்போது தோன்றும்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி! எல்லாவற்றையுமே கவனிக்க முடிவதில்லை என்கிற குறை இதுமாதிரி interact செய்வதில்தான் தீருகிறது!
Delete