"நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. என்னுடைய பேச்சை முழுவதுமாகக் கேட்காமல் அதன் நுனியைக் கத்தரித்துப் போட்ட ஊடகத் தோழர்கள், என் மேல் என்ன குற்றம் சாட்டுகிறார்களோ அதற்கு அவர்களும் தகுதியானவர்கள். நான் ஒருமுறைதான் சொன்னேன். வாலையும் தலையையும் வெட்டி 200 தடவை போட்டுவிட்டனர். ஐ.பி.சி பிரிவுகள் ஊடகத் தோழர்களுக்கும் பொருந்தும்" என்று திருப்பரங்குன்றம் தொகுதிக்குப் பிரசாரம் செய்யவந்த கமல் காசர் பேசியதாக விகடன் தளச் செய்தி சொல்கிறது.
"தீவிரவாதி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.நான் நினைத்திருந்தால், பயங்கரவாதி என்று சொல்லியிருக்கலாம். நான் பேசுவதில் வன்முறை இல்லை" என்று விரிவுரையும் கொடுத்தாராம்!
கமல் காசர் மாதிரிப் பக்கம் பக்கமாக வஜனம் பேசாமல் முகநூலில் ஒரே போடாகப் போட்டிருக்கிறார் ராமமூர்த்தி சங்கர்!
இதுபற்றி H ராஜா மட்டும் பேசக்கூடாது என்பது
நியாயமில்லை, அல்லவா?
#Breaking | நடிகர் கமல் மீதான வழக்குப்பதிவை ரத்து செய்ய இயலாது - கமல் தரப்பில் தொடர்ப்பட்ட முறையீடு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
* தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்
* விடுமுறை கால நீதிமன்றத்தில் வழக்குப்பதிவை ரத்துசெய்ய கோரும் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது
#KamalHaasan | #HighCourt
#KamalHaasan | #HighCourt
எது எதற்கெல்லாம் சில்வர் ஜூபிலி கொண்டாடுவது, வாழ்த்துவது என்ற வரைமுறை, விவஸ்தை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதில், இந்த வாழ்த்து கொஞ்சம் வித்தியாசமாக!
பானாசீனா, KDbrothers இவர்களெல்லாம் நீதிமன்றத்தில் விசாரணைக்கே ஆஜராகாமல் ஜாமீன் வாங்குவதெப்படி என்ற விஷயத்தை ஒரு கலையாகவே வளர்த்து வைத்திருக்கிறார்கள். ஏன் எந்தவொரு பல்கலைக்கழகமும் இவர்கள் சாதனைக்காக டாக்டர் பட்டம் கொடுத்துக் கௌரவிக்கவில்லை? #இன்றையடவுட்டு
கமலஹாசனுக்கு அரசியல் வியாபாரம் போரடித்துவிட்டது. வாக்கு வாங்கணும் என்ற எண்ணம் இல்லை. தன்னை ஆட்டுவிக்கிற ஸ்டார் சேனலுக்கு அடிபணிந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.
ReplyDeleteதேர்தல் முடிவுகள்வரட்டும், நெல்லை! கமல் காசருக்கு போரடித்து விட்டதா ஜனங்களுக்கு கமல் பேசுவது போர டித்துவிட்டதா என்று பார்க்கத்தானே போகிறோம்?!
Delete