அனேகமாகத் தேர்தல் முடிவுகள் வெளிவருகிற வரையில் கமல் காசர் உளறல் மட்டுமே இங்கே செய்திகளில் சேனல் விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஊடகங்களுக்கு இங்கே செய்திகளுக்கான வறட்சி இருப்பது தெளிவாகப் புலப்படுகிறதே, கவனித்துப் பார்க்கிறீர்களா?
இங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் தன்னுடைய சொந்தக் கட்சியின் கொலைவெறித் தாண்டவங்களை மறந்துவிட்டுப் பேசுகிறாரா? மறைத்துவிட்டுப் பேசுகிறாரா? கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து, அதன் வலது சந்தர்ப்பவாதம் பிடிக்காமல் கட்சியை விட்டு வெளியேறி, ஒரு புதிய கட்சியைத் தொடங்கியதற்காக T P சந்திரசேகரன் என்கிற உள்ளூர்ப் பிரமுகர் ஏழு வருடங்களுக்கு முன்னால் 2012 மே மாதம் 4 ஆம் தேதி மார்க்சிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியது தானா? கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக இன்றைய கேரளா முதல்வர் அன்றைக்கு கேரள மாநிலக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பிணராயி விஜயன் பெயரும் அடிபட்டது. “The T P murder was pre-planned and is blood chilling and monstrous. The aim of the murder is not personal vendetta. The way the murder was conducted is not only inhuman but is also brutal and savage. It not only shocks the conscience of the court, but it also shocks the conscience of the entire society.” இது சந்திரசேகரன் கொலைவழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வாசகங்கள். “It is true that the deceased (T P Chandrasekharan) was a public figure in the locality. He was the leader of an emerging political party. Motive of the murder was political animosity. Accused 1 to 7 were tools in the hands of the persons who entertained political enmity towards the deceased.... The murder in this case was cold blooded, pre-planned and brutal. The motive of the crime was not any personal enmity. The manner in which the murder was committed reveals extreme depravity. The action of accused not only was inhuman but ruthless and barbaric. It shocks not only the judicial conscience but the collective conscience of the society.” இதுவும் நீதிமன்றம் சொன்னதுதான் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் குறிப்பாகக் கண்ணூர்ப் பகுதியில் நடத்திய கொலைவெறித்தாண்டவம் குறித்தான செய்திகள் இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அருணன் போன்றவர்களுக்காக இதை சொல்ல முற்படவில்லை, மார்க்சிஸ்டுகள் எவ்வளவு பொய்யர்களோ அதை போலவே கொலைவெறி பிடித்தாடுகிறவர்களும் கூட என்பதைச் சொல்வதற்காக மட்டுமே. இந்தக் கொலை பற்றிய விரிவான தகவல்களுக்கு
நிலை இன்னமும் மோசம் அடைந்திருக்கிறது.வங்காளத்தில் ஒரே ஒரு எம்பி இடது சாரிகளுக்குக் கிடைக்கலாம்.30 வருடங்களாக ஆண்ட மாநிலத்தில்! கேரளத்தில் 5 கிடைத்தால் பாக்கியம்.உலகின் முதல் ஜன நாயக இடது அரசு அமைந்த நிலம்.
இடதுசாரி சிந்தனை மேற்கு நாடுகள் போல பல்கலைக்கழக வளாகங்கள்,அறிவு ஜீவிகளுக்கு நடுவில் மட்டுமே புழங்கும் ஒரு fad ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது.
Its not the ascent of right but the almost complete absence of left in the picture that worries me .They can only be the counterbalance not the regional parties.But everybody has climbed on their wagon except the left.They are not even on the platform .worry.
நண்பர் போகன் சங்கர் கவலைப்படுவதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இப்போதைய மோசமான சரிவுக்கு இடதுசாரிகளே முழுமுதற்காரணம் என்பதை மறந்துவிட்டுப் பேசுவது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்?
இங்கே பதிவுகளில் சரியான தரவுகள் ஆதாரங்களோடுதான் அவைமீதான் என்பார்வையைச் சொல்லிவருகிறேன். மாற்றுக கருத்து இருந்தால் சரியான காரணங்கள், தரவோடு எழுதினால் அதையும் இங்கே வெளியிடத் தயாராகவே இருக்கிறேன். 2014 இல் போகன் சங்கர் சொல்லியிருக்கிற கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இதே கவலையைப் பல வருடங்களுக்கு முன்னால் ராமச்சந்திர குகாவும் வருத்தப் பட்டுச் சொல்லியிருந்தார். வலதுசாரிச் சிந்தனையுடன் இங்கே பிஜேபி வளர்ந்து வருவதற்கு சரியான மாற்றாக இடதுசாரிகளால் மட்டுமே இருக்க முடியும். காங்கிரசோ, மாநிலக் கட்சிகளோ அந்த இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது.
மீண்டும் சந்திப்போம்.
கம்யூனிஸ்டுகள் அரசியலில் எந்தப் பெரிய தாக்கத்தையும் விளைவித்த மாதிரி எனக்குத் தோன்றவில்லை.
ReplyDeleteஆனால், தொழிற்சாலைகளில், தொழிலகத்தில், எங்கெல்லாம் உழைப்பாளிகள் இருக்கிறார்களோ, அவர்களுக்கு சி.ஐ.டி.யூ போன்ற தொழிற்சங்கங்கள் மிகவும் உதவியிருக்கின்றன, தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டிருக்கின்றன. அவைகள் மற்ற அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் போல இல்லை. (அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்குப் பாடுபட்டதில்லை..ஆனால் அதனை வைத்து அரசியல் செய்யவும் தங்கள் கட்சியை வளர்க்கவும் பாடுபட்டிருக்கின்றன. அத்தகைய தொழிற்சங்கங்கள் வந்த பிறகுதான், வேலை செய்யாமல், யூனியன் வேலை என்று சொல்லிக்கொண்டு பெரிய கும்பலும், தொழிலாளர்கள் சரியாக உழைக்காமல் மேனேஜர்களை மிரட்டி வெட்டியாக சுற்ற்க்கொண்டிருப்பதும் ஆரம்பித்தன. சிஐடியூ அப்படிப்பட்ட தொழிற்சங்கம் கிடையாது. தொழிலும் நடக்கணும், தொழிலாளிகளும் வாழணும் என்று நினைத்தவை கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள்.
கம்யூனிஸ்டுகள் ஏன் எந்தவொரு அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை? இந்தக் கேள்விக்கு அவர்களாக நேர்மையான சுயவிமரிசனம் செய்துகொண்டால் ஒருவேளை விடைதெரிய வரலாம்.
Delete#நோக்குகூலி என்று கேள்விப்பட்டதுண்டா? கேரளாவில் CITU சார்புள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆரம்பித்து வைத்த அராஜ!கம்! மேற்குவங்கத்தில் இன்னும் என்னென்ன செய்திருப்பார்கள் என்பதெல்லாம் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம், ஆனால் நிஜம்
அவங்க சிஐடியு வா? +2வின்போது திருவனந்தபுரத்தில், எங்கள் வீட்டிலிருந்த சாமான்களை (பெட்டி) பின் பக்க வீட்டிற்கு (இரண்டும் எங்களதுதான்) மாற்ற முயற்சித்தவரை, ஒன்று நாங்க மாத்தறோம், கூலி கொடுக்கணும், இல்லைனா, கூலி கொடுத்துட்டு நீங்களே மாத்திக்கோங்க என்று தெரு முனையில் இருக்கும் சங்கம் சொல்லித்து என்றார்கள். அராஜகம்தான்.
Deleteபாவம்... கமலஹாசன்.... படமும் ஊத்திக்கொள்ளும். அரசியலும் ஊத்திக்கொள்ளும். அவருடைய பொதுவாழ்க்கை, திரைப்படக் காலம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.
ReplyDeleteகமல் காசர் பற்றி பேசுவதில் எனக்கு விருப்பமிருந்ததில்லை. ஆனால் என் மகன் வயதை ஒத்த இளைஞர்கள் கமலை மாற்றத்த்துக்கான கருவி என்று நம்புவதை பார்க்கையில், எரிச்சல் தாங்க முடியாமல் எழுத வேண்டியதாகிப்போகிறது.
Delete