Showing posts with label தேர்தல் களம். Show all posts
Showing posts with label தேர்தல் களம். Show all posts

Wednesday, November 11, 2020

#தனிக்கச்சேரி பீஹார் தேர்தல் முடிவுகளும் ரீல் அறுந்து தொங்கும் காங்கிரசும்!

பீஹார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கொஞ்சம் லேட்டாக வந்தாலும், முக்கியமான சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்கிற மாதிரி வந்திருக்கிறது. இதை பிஜேபியின் வெற்றியாகப் பார்க்கப் பொறுக்காத சில ஊடகங்கள் பீஹாரின் சாணக்கியர் நிதீஷ் குமாரின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்தது என்று ஆரம்பித்து, அப்புறம் தான் பிஜேபியும் வெற்றிக்கு இன்னொரு காரணம் என்று இழுவையாகச் சொல்ல முயன்றதை இன்று பார்க்க முடிந்தது. ஒரு சாம்பிளுக்கு பர்கா தத்! 


பெரும்பாலானஇந்திய ஊடகங்கல்  நேர்மையான செய்திகளை  வழங்கியதே இல்லை என்பதை 2004 முதலே பார்த்திருக்கிறோம் இல்லையா! பர்கா தத் இப்படியென்றால் இன்னொரு ஊடகத்தில் கீழே! 


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்களில் தேஜஸ்வி யாதவ் தான் பீஹார் முதல்வராகிறார் என்று தம்பட்டமடித்த அதே ஊடகங்கள் தான்  இப்படி சாமர்த்தியமாக தேர்தல் முடிவுகள் இப்படித்தான், எந்த மாற்றமும் இல்லை என்கிற மாதிரிப் பூசிமெழுகப் பார்த்தன. ஆனாலும் இந்தத் தேர்தல் முடிவுகளில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக அசாதுதீன் ஒவைசி தலைவராக இருக்கும் AIMIM கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு முதல்முறையாக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது. சிறுபான்மைக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் லாலுவின் RJD, காங்கிரஸ் கட்சிகளைத் தாண்டி இஸ்லாமியர்களின் வாக்குகள் ஒரு இஸ்லாமியக் கட்சிக்கு கிடைத்திருப்பது கூர்ந்து கவனித்தால் புரியும். 


Big Parties Treated Me Like Untouchable: says Asaduddin Owaisi வீடியோ 10 நிமிடம்  

இங்கே காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 19 சீட்டுகள் என்று சொல்லும் போது CPIML கட்சி 11 இடங்களிலும் வலது, இடது கம்யூனிஸ்ட் காட்சிகள் முறையே 2 மற்றும் 3 இடங்களில் ஜெயித்திருப்பது இன்னொரு ஆச்சரியம். 70 தொகுதிகளில் கடந்த 2015 தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி பெற்றது இப்போதும் அதே 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களை மட்டுமே வெற்றி என்று ராகுல் காண்டியின் முகத்துக்கு, பிரசாரத்துக்கு கிடைத்த சறுக்கல் என்று நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

2015 தேர்தலை விட இந்தத்தேர்தலில் பிஜேபி 74 (+21) இடங்களில்  வெற்றி பெற்றிருக்கிறது. நிதீஷ் குமாரின்JDU வெறும் 43 (-28) இடங்கள் பெற்றிருக்கிறது. சென்ற தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற கூட்டணி உதிரிகள் இப்போது 9 இடங்களில் வெற்றி பெற்று மொத்தம் 125 என்று மெஜாரிடி கிடைத்து இருக்கிறது தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடியே பிஜேபி இப்போதும் தங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்தான் என்று தனது கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது இது இப்போது மட்டுமல்ல 2005 தேர்தல்களிலும் நிதீஷ் குமார் கட்சியை விட பிஜேபி அதிக இடங்களில் ஜெயித்திருந்த போதிலும் தேர்தலுக்கு முன் அறிவித்திருந்தபடியே நிதீஷ் குமாரை முதல்வராக்கியது என்பதோடு ஆனால் நிதீஷ் குமார் அப்படி நடந்து கொண்டதில்லை.என்பதையும் சேர்த்து இந்த நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும்!. 

சிராக் பாஸ்வானுடைய LJP எதிர்பார்த்தபடியே நிதீஷ் குமாரை நிறையவே பஞ்சர் செய்திருக்கிறது. நிறையத் தொகுதிகளில் வெற்றி மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் என்பதே சாட்சி! உதிரிக் கட்சிகளால் இந்தமாதிரி பஞ்சர் செய்யத்தான் முடியும், உருப்படியாக வேறு எதையும் செய்ய முடியாது என்பதை நான் பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறேன்.

இந்தத் தேர்தலின் இன்னொரு ஆச்சரியம் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்! லல்லு பிரசாத் யாதவின் மோசமான இமேஜையும் மீறி, கொஞ்சம் நம்பிக்கையளிக்கிற மாதிரியான தேர்தல் செயல்பாடுகள்! கொஞ்சமும் சளைக்காமல் தேர்தல் பிரசாரம் செய்தவிதம் பாராட்டியே ஆக வேண்டும்! ராகுல் காண்டி எதையும் கற்றுக்கொள்கிற பிறவி இல்லை என்பதால் News 18 தளத்தில் ஜோ பைடன், தேஜஸ்வி யாதவ் இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதியது வெறும் நப்பாசை தான்!         

Naysayers may have rejected the Modi government’s plan to provide free ration to more than eight crore people of Bihar, but by doing this, the Prime Minister has ensured that not a single person goes hungry to the bed in the night. Out of the 4.7 crore accounts opened under the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) in Bihar, more than 2.5 crore belong to women. The government has transferred more than Rs 13,000 crore into these accounts. It became difficult even for leaders of the opposition parties to discount these welfare measures that have benefitted a large segment of the population. The opening up of academic institutions of eminence such as AIIMS, Nalanda University and NIFT among others, and infrastructure development like airport in Darbhanga, will transform the lives of the people of Bihar.

Prime Minister Modi has asserted that the development of India is incomplete without the development of Bihar. 

இப்படி ஒரு கருத்து வெளியாகியிருப்பது சேகர் குப்தாவின் The Print தளத்தில் தான் என்றால் அது மிகப் பெரிய ஆச்சரியம். 

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, February 18, 2020

Your Attention Please! கொஞ்சம் #செய்தி கொஞ்சம் #விமரிசனம்

நம்மூர் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு தொழிலதிபர்களாகவும், கல்வித்தந்தைகளாகவும், திரைப்படத் தயாரிப்பாளர்களாகவும் மாறிவிட்டார்கள் என்பது வியப்புக்குரிய செய்தியில்லைதான்! ஆனால், பிரசாந்த் கிஷோர் மாதிரியான ஆசாமிகள் தங்கள் தொழிலையே அரசியலாகவும், சம்பாத்தியமாகவும் மாற்றிக்கொள்வதை மட்டும் எதற்காக அதிர்ச்சியோடு செய்தியாகப் பார்க்கவேண்டுமாம்?


இந்த பீகாரி பாண்டே, வருகிற வியாழன் முதல் பாட் பீஹாரி கி என்று 100 நாட்களில் பீகார் மாநிலத்தில் ஒரு புதிய (அரசியல்) தலைமையின் தேவையை வலியுறுத்தி மக்களைச் சந்திக்கப்போகிறாராம்! நிதீஷ் குமாருடைய வளர்ச்சி அஜெண்டாவில் பீகார் கொஞ்சம் முன்னேறியதென்னவோ வாஸ்தவம்! ஆனால் குஜராத்,  ஹரியானா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் பீஹார் இன்னும் ஏழை மாநிலமாகத்தானே இருக்கிறது என்பது நிதீஷ் குமாருக்கு அவர் போடும் கொக்கி! இந்தவருடக் கடைசியில் வரவிருக்கும் பீஹார் சட்டசபைத் தேர்தல் களத்தில் முதல் ஆளாக பிரசாந்த் கிஷோர், பிஜேபி, JDU கட்சிகளுக்கெதிராகக் குதித்து விட்டார். So What ??

       
மூன்று மாதங்களே ஆகிற மகாராஷ்டிரா ஆகாதி கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்ட மாதிரித் தான் தெரிகிறது. உத்தவ் தாக்கரே பாம்பும் நோகாமல் தடியும் நோகாமல் அடிக்கிற வித்தையைக் கற்றுக் கொண்டுவிட்டார் என்றும் தெரிகிறது. CAA வுக்கு எதிர்ப்பில்லை! NRC பற்றிப் பேச்சில்லை! சரத் பவார் கொட்டிய பிறகு 2018 பீமா கோரேகான் கலவரத்தை விசாரிக்க NIAவை அனுமதிக்கப்போவதில்லை என இன்று  அம்பேத்கார் ஆதரவாளர்களைக் குளிர்வித்திருக்கிறார். ஆனால் அதன் மூலமான எல்கர் பரிஷத் விவகாரத்தை NIA விசாரணைக்கு விட்டுவிட்டு இவர்களும் ஒரு சிறப்பு விசாரணையை நடத்துவார்களாம்! கொஞ்சம் காமெடியான முடிவுதான்!


தவ்லீன் சிங்! கொஞ்சநாட்களுக்கு முன்புவரை மோடி ஆதரவாளராக இருந்தவர். இவரைப்பற்றிக் கொஞ்சம் இந்தப் பக்கங்களில் முன்பு எழுதியது இவரைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கலாம். சமீபத்தில் Messiah Modi? என்ற தலைப்பில் ஒரு கேள்விக் குறியோடு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்றதும் காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் ஓவர்டைம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. பர்கா தத் முதற்கொண்டு விலைபோன ஊடகக்காரர்கள் இவரது நேர்காணலை சுடசுட வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மூன்று வீடியோக்களைப் பார்த்துச் சலித்துப்போய், இந்த 14 நிமிட சுருக்கமான வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

நம்மூரில் அரசியல்களம் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறது. என்னமோ தேர்தல் வருகிற நேரம்தான் சூடாக, சுறுசுறுப்பாக ஆகிறதோ என்ற சந்தேகமே வேண்டாம்! சாம்பிளுக்கு கொஞ்சம் செய்திகள், அதனுடன் விமரிசனமும் சேர்த்து.

மீண்டும் சந்திப்போம்.            

Thursday, February 13, 2020

தெளிவாகப்பேசும் பானு கோம்ஸ்! தெளிவில்லாத தந்தி டிவி!

பிரசாந்த் கிஷோருடைய உத்தி டில்லி தேர்தலில் எடுபடவில்லையா? என்று அந்தப்பக்கங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னால் எழுதிய பதிவு, சில பயனுள்ள பின்னூட்ட விவாதமாக ஆரம்பித்ததில் ஒரு மனநிறைவு! பதிவுகள் வெறும் அரட்டைகளாக குறுகிப் போய்விடாமல், வாசிப்பதில்  கொஞ்சம் பயனுள்ள உரையாடலாகவும் இருக்கவேண்டும் என்கிற என் ஆசை எப்போதாவது இதுமாதிரி நடந்து விடும்!


அரவிந்த் கெஜ்ரிவால் இந்துத்துவ அரசியலை கையில் எடுக்கிறார் -பானு கோம்ஸ் இதுதான் யூட்யூப் தளத்தில் இருக்கும் தலைப்பு! ஆனால் மேலே பார்த்தால் பாஜக செஞ்ச தப்பு,  - பானுகோம்ஸ் என்றிருப்பதன் உள்நோக்கம் என்னவென்று புரிந்துகொள்ள முடியாதா என்ன? அதை விடுங்கள்! ஆனால் பானு கோம்ஸ் இந்த 39 நிமிட நேர்காணலில் டில்லி தேர்தல் முடிவுகளைக் குறித்து மிகத்தெளிவாகத் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். நண்பர் ஜோதி ஜிக்குப் பரிந்துரை செய்யத்தகுந்த வீடியோ இது. யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவுக்கு வந்த கமென்டுகளில் விஜய் சந்திரன் என்பவர் பிஜேபி தன்னுடைய ஆதரவு வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வருவதில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டது என்கிறார். 8 தொகுதிகளில் :100 ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில், 19 தொகுதிகளில் :100 - 1,000 ஓட்டு வித்தியாசத்தில் 9 தொகுதிகளில் :1,000 - 2,000 ஓட்டு  வித்தியாசத்தில், ஆக மொத்தம் 36 (8+19+9) தொகுதிகளில் 2,000 ஓட்டுகளுக்கு குறைவான வித்தியாசத்தில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது என்கிற அவரது ஆதங்கம், பின்னூட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் புள்ளிவிவரம் தவறானது என்று சொல்கிறார்கள் இங்கே 

 


இன்னொரு விவாதம், தேசியக்கட்சிகள் வெர்சஸ் மாநிலக்கட்சிகள் என்ற தலைப்பில் தந்திடிவி ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நேற்று நடத்தியிருக்கிறது.ஒரு சரியான தலைப்புதான்! ஆனால் பங்கேற்றவர்கள் தலைப்பை சரியாகப்புரிந்து கொண்டுதான் விவாதம் செய்தார்களா என்பது சந்தேகம் தான்! வீடியோ 42 நிமிடம். முதல்வரியில் சுட்டி கொடுத்திருக்கிற பதிவில் நண்பர் பந்துவுக்கு பதிலாகச் சொன்னது இது: 


டில்லித் தேர்தல் முடிவுகளை தேசியக்கட்சி வெர்சஸ் மாநிலக்கட்சி என்று குறுக்கிப்பார்ப்பதற்கு முன்னால் இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்னென்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டால், நடப்பு அரசியலின் கோளாறுகளை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். கொஞ்சம் பார்க்கலாமா? 1962களில் தேசியப்பிரச்சினைகளில் மட்டுமே அக்கறை காட்டிய நேரு மாதிரியே மாநிலங்களிலும் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசுகளும் செயல்பட்டதற்கான எதிர்வினையாக மாநிலக் கட்சிகள் உருவாகி வளர்ந்தன. ஆக மாநிலக்கட்சிகள் ஒரு தேசியப்பார்வை இல்லாமலேயே வளர்ந்தன என்று பொதுமைப்படுத்தலாம். தேசியக்கட்சிகள் , மாநிலக்கட்சிகளுடைய வருகைக்குப் பின்னராவது மாநிலப் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தினவா என்றால் இல்லை. இந்திரா காலத்தில், மாநிலத்தில் நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குத் தோள்கொடு என்பதாகக் குறுகிப் போனது. 1977 இல் இந்திராவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனதா கட்சி என்று ஒன்றிணைந்த மாநிலக் கட்சிகள், ஒரு சரியான தேசியப்பார்வை இல்லாத ஒரே காரணத்தால் சிதறி, 1980 இல் மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வர உதவுகிற மாதிரி ஜனதா கட்சி பரிசோதனை தோல்வியடைந்தது.

அப்புறம் மாநிலக்கட்சியாக ஆட்சியைப் பிடித்தவை என்ன சாதித்தன என்பதைக் கொஞ்சம் பட்டியலிட்டால், சாதனைகள் கொஞ்சம்! வேதனைகள் நிறைய என்று பார்க்க வேண்டும்! உதாரணத்துக்கு, இங்கே இலவசங்களை வாரியிறைப்பதற்கு முன்னால் அதற்கான நிதியாதாரங்களை எப்படித் திரட்டுகிறார்கள் என்பதைப்பற்றி, அவர்களும் கவலைப்படுவதில்லை, இலவசங்களில் மயங்குகிற ஜனங்களும் கவலைப்படுவதில்லை. கருணாநிதி 3000-3500 பெறுமானமுள்ள இலவச டிவி கொடுத்தார். சுமங்கலி கேபிள் விஷன் வழியாக மாறன் குடும்பத்தினர் வருடாவருடம் 2400 வரை கேபிள் கட்டணமாக சம்பாதித்துக் கொண்டார்களே! அதற்கு பதிலாக வீட்டுக்கொரு கழிப்பறை கட்டித்தர எந்தமாநிலக்கட்சியாவது யோசித்ததுண்டா? இலவசங்களுக்கு பதிலாக கிராமத்தில் சோலார் மின்விளக்கு, பொதுக் கழிப்பிடங்கள், குடிநீர்வசதி இவைகளைப் படிப்படியாகச் செய்திருக்கலாமே!, செய்தார்களா? இப்படி யோசித்துப் பாருங்களேன்!

இலவச மின்சாரம் கொடுத்தார் கேஜ்ரிவால்! சந்தோஷம்! ஆனால் மின்சாரம் இலவசமாகக் கிடைப்பதில்லையே! யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ஜனங்களைத் தயார்ப்படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. கேஜ்ரிவால் அதைச் செய்தாரா? ஒரு மாநிலக் கட்சியாக இருப்பது, பொறுப்பில்லாத்தனத்துக்கு கொடுக்கப்படும் லைசன்சாகவே இந்தியச்சூழலில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?

கொஞ்சம் விரிவாகப்பேச வேண்டிய விஷயம் இது.           

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, February 11, 2020

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள்! எப்படிப்புரிந்து கொள்வீர்கள்?

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் நான் தெரிந்து கொள்ள விரும்பிய விஷயங்களில்  IPAC பிரசாந்த் கிஷோர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்னமாதிரி image makeover செய்து விடுவார் என்பதும் ஒன்று! ஏனெனில்   அரவிந்த் கேஜ்ரிவாலுடைய இமேஜ் என்னைப் பொறுத்தவரை, மிகவும் கேலிக்குரியதாகவே எப்போதும் இருந்திருக்கிறது. அன்னா ஹஸாரேவுடன் கூட இருந்து தன் மீது அதிகவெளிச்சம் படுகிற மாதிரி பார்த்துக் கொண்ட நாட்களில் இருந்தே அவரை ஒரு சீரியசான அரசியல்வாதியாகப் பார்க்க முடிந்ததில்லை. ஒரு டிராமா பார்ட்டியாகவே தான் இப்போதும் அரவிந்த் கேஜ்ரிவால், மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்துவருவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.


தேர்தல் முடிவுகளில் வாக்காளர் மனோநிலை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அதிக விவரங்கள் தேவைப்படுவதில், ஆம் ஆத்மி கட்சியின் ரிப்பீட் வெற்றியைப் பற்றி என்னென்ன முதற்கட்ட கருத்து, விவாதங்கள் வருகிறது என்பதைப் பொறுமையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

 
   வீடியோ 25 நிமிடம் 

உள்ளூர் அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி ஒருவர்தான் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்கிற மாதிரி எடுத்துக்கொண்டு தன்னுடைய கருத்தைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். தெளிவான பதில் இருந்ததா என்றால் கொஞ்சமும் இல்லை!
                                                       

  
இந்தப்புள்ளிவிவரம் ஆனந்த் ரங்கநாதனுடைய ட்வீட்டர் செய்தியில் இருந்து எடுக்கப்பட்டது.  தேர்தல் கமிஷன் தளத்தில் சரிபார்க்க வேண்டும்.

இப்படி உள்ளூர் விமரிசகரே 25 நிமிடம் பீட்டர் விடுவாரென்றால் காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா எப்படி வானத்துக்கும் பூமிக்குமாகத் தவ்விக் குதிப்பார்?

                                              வீடியோ 39 நிமிடம் 

சேகர் குப்தா சொல்வதில் சிலபகுதிகளுடன் உடன்பட முடிந்தாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. மாநிலத்தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கையோ மக்களவைத் தேர்தல் அடுத்துவரும்போது அவரது வெற்றி வாய்ப்பையோ பாதிக்காது என்றும் சொல்வதில், சொல்ல விடுபட்ட அல்லது நாம் புரிந்து கொள்ளத் தவறும் வேறுசங்கதிகளும் இருக்கின்றன.

இந்திய அரசியல்களம், அதில் எத்தனை குற்றம் குறை சொல்லமுடிந்தாலும், ஆச்சரியமூட்டும் பல அம்சங்களையும் கொண்டது என்பதாலேயே அரசியல் என்னை மிக அதிகமாக ஈர்க்கிறது. எழுத வைக்கிறது.
                                                   
         
அரசியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை விடுங்கள்! இங்கே என்ன காரணம் என்று இருவர் ட்வீட்டரில் ஆராய்கிறார்கள்! இதற்கு என்ன சொல்வீர்கள்?

மீண்டும் சந்திப்போம். 
                                                          

Sunday, February 9, 2020

#550 டில்லி தேர்தல்! ராஜ் தாக்கரே! பானு கோம்ஸ்!

டில்லி சட்டசபைத்தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னாலேயே காங்கிரசின் பவிசும் மவுசும் பல்லிளித்து நின்றது தெரிந்தது தான்! ஆனால் காங்கிரசின் ராஜ்யசபா எம்பியும் வழக்கறிஞருமான KTS துளசியின் ஒப்புதல் வாக்குமூலம், நிலைமை எந்த அளவுக்குப் பரிதாபம் என்பதைக் காட்டுவதாக இருக்கிறதே!

வீடியோ 3 நிமிடம் 

காங்கிரஸ் தன்னுடைய கேவலமான தோல்வியை ஒப்புக் கொள்ளாதுதான்! அதற்காக இப்படியா? என்னவோ வாக்காளர்களும் காங்கிரசின் ராஜதந்திர நடவடிக்கையைப் புரிந்துகொண்டு, பிஜேபி வரவே கூடாதென்று வாக்களித்தார்களா என்ன!? ஆனால் பிஜேபிக்கு கடந்தமுறையை வீடாக கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக அல்லவா எக்சிட் கணிப்புகளில் தகவல் சொல்கிறார்கள்! காங்கிரசுக்கு இருக்கும் துக்கிணியூண்டு வாக்குகளை மாற்றிவிட்டுத் தான் AAP ஜெயிக்கிறதாமா? வழக்கறிஞர் அல்லவா! சரமாரியாக பொய்யும் சால்ஜாப்பும் வராமல் இருக்குமா என்ன! 


என்னதான் எல்லா எக்சிட் கணிப்புகளுமே AAP ஆட்சிதான் என்று சொன்னாலும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உள்ளூர ஒரு உதறல் இருந்துகொண்டே இருக்கிறமாதிரித்தான் அவருடைய  ட்வீட்டர் கீச்சில் இன்றைக்கு தெளிவாகவே வெளிப்படுகிறதோ?


சிவசேனா காலிசெய்த இடத்தை நிரப்ப உத்தவ் தாக்கரேவின் பங்காளி ராஜ் தாக்கரே, பிஜேபியுடன் நெருங்க முயல்வது, NRC, NPR இவைகளுக்கு ஆதரவாக  இன்றைக்கு அவரது MNS, மும்பையில் ஒரு பேரணி நடத்திக் காட்டியிருப்பதில் வெளிப்பட்டது 


ஆனால் சிவசேனாவின் பொருமல் கட்சியின் நாளிதழ் சாம்னாவில் ஜின்னா பாகிஸ்தானில் சந்தோஷமாக இருக்கிறார் ; இந்தியாவிலோ காந்தி அவமானப் படுகிறார் என்பதாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரிஜினல் காந்தி மீது சிவசேனாவுக்கு எப்போதிலிருந்து கரிசனம் பிறந்ததென்று தெரியவில்லை! ராகுல் காண்டியை மனதில் வைத்துச் சொல்லியிருந்தால், ரொம்பவும் பரிதாபம் தான்!  

வீடியோ 45 நிமிடம் 
   
புதிய தலைமுறை சேனல் விவாதங்களில் நெறியாளர் பல்பு வாங்குவதையும் காட்டியாகவேண்டிய அளவுக்குப் போய்விட்டதோ? விவாதத்தில் பானு கோம்ஸ் ரஜனி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரைத்தானே கூப்பிட வேண்டும்? என்னுடையகருத்திக் கேட்பதற்குத் தான் கூப்பிட்டீர்கள் என்றால் நான் இதைத்தான் சொல்வேன் என்று முகத்தில் அறைகிறமாதிரிச் சொல்கிறார்! அறை கொஞ்சம் பலமாகத்தான் விழுந்திருக்கும் போல!

பானுகோம்ஸ், தமிழருவி மணியன் இப்படி வரிசை கட்டி புதிய தலைமுறையையே கலாய்க்கிறார்களே! என்ன ஆயிற்று!   

மீண்டும் சந்திப்போம். 

Saturday, February 8, 2020

டில்லி அசெம்பிளி தேர்தல் #2020 எக்சிட் கணிப்பு வேடிக்கைகள்!

ஒருவழியாக இன்று டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்ததில், 2015 தேர்தலை விட மிகக் குறைவான வாக்குசதவீதம் என்று தற்போதைய செய்திகள் சொல்கின்றன.பலதொகுதிகளில் 45% - 48% என்ற அளவிலேயே மாலை 6 மணி நிலவரப்படி இருந்ததாம்! 

ஆனால் 7 மணி நிலவரப்படி வாக்குசதவீதம் குறையவில்லை கொஞ்சம் கூடியிருக்கிறதாம்!
  
பலதொகுதிகளில் 45 முதல் 48% வாக்குகளே பதிவாகி இருப்பதாக இப்போதைய செய்திகள் சொல்வதில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் 2015 தேர்தலோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் சறுக்கல்தான்! எக்சிட் கருத்துக் கணிப்புகளில் பிஜேபிக்கு அதிகபட்சமாக 26 சீட்டுகள் கிடைக்கலாம் என்று ஒரு கருத்து கணிப்பு சொன்னாலும், காங்கிரசுக்கு ஆறுதலாக ஒரே ஒரு சீட் கிடைக்கும் என்று இரண்டு  எக்சிட் கணிப்பு  சொல்கிறது. 



தேர்தல் கருத்துக்கணிப்பில் முன்னொருகாலத்தில் நம்பர் ஒன்னாக இருந்து, இப்போது பத்தோடு பதினொன்று என்றாகிப்போன NDTV என்ன சொல்கிறது என்று பார்க்காமல் போனால் பாவம் இல்லையா?

  
மூன்றே நாட்கள் தான்! 11 ஆம் தேதி முழுரிசல்ட்டும் அதிகாரபூர்வமாக வரும்போது இந்த எண்ணிக்கை கூட கொஞ்சம் மாறலாம்!  அப்படி வருகிற வரை பொழுது போக வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.  

Friday, February 7, 2020

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது?

காங்கிரஸ் தோற்றுக் கொண்டே இருப்பது ஏன் என்பதற்கும் நரேந்திர மோடி ஜெயித்துக் கொண்டே வருவதற்கும் ஒரே காரணம் இல்லை என்றால் நம்புவீர்களா? சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் அதைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். தெளிவாக உறைக்கிற மாதிரிச் சொன்னாரா என்பதை நீங்களே கேட்டுவிட்டு கொஞ்சம் சொல்லுங்களேன்!   


தேசியம் தேசியவாதம், வலதுசாரிகள் உலக அளவில் வளர்ந்து கொண்டிருப்பது எதனால் என்ற கேள்வியை முன்வைத்து எழுதிய முந்தைய மூன்று பதிவுகளின் தொடர்ச்சி இது என்றே வைத்துக் கொள்ளலாம். காங்கிரஸ் பலவீனப்பட்டு, தோற்றுக் கொண்டே வருவதற்கு பிஜேபி, நரேந்திரமோடி தவிர முக்கியமான காரணம் வேறு என்னவாக இருக்க முடியும் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?


CAA வுக்கு எதிராக முதலில்  கொந்தளித்த மாநிலம் அஸ்ஸாம். அதற்கான காரணங்களே வேறு. கலவரம் எதிர்ப்பென்று ஒரு பக்கம் இருந்தாலும், அமைதியாக இருந்து போடோ ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செயல் படுத்தி, அஸ்ஸாமில் அமைதியை மத்திய அரசு நிலை நாட்டியிருக்கிறது. அஸ்ஸாமில் போடோ மக்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். காஷ்மீரில் எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் எதிர்பார்த்த படி  கடந்த ஆறு மாதங்களில் கலவரம் எதுவும் வெடிக்கவில்லை. டில்லியில் இருமாதங்களாக ஏதோ ஒருவகையில் ஊதிப்பெரிதாக்கப்படும் CAA NPR இவைகளுக்கெதிரான போராட்டங்களும் பிசுபிசுத்து வருவதைப்  பார்க்க முடிகிறது.

மீண்டும் சந்திப்போம்.       

Friday, January 24, 2020

இலக்கியம் அப்புறம்! அரசியல் பார்வையைத் தொடரலாமா?

முந்தின பதிவில் சங்க இலக்கியம் பேசியது, ஒரு புத்தக அறிமுகம் எப்படி இருந்தது என யாராவது வந்து சொல்வார்கள் என்று ஒருநாள் காத்திருந்தேன். எதையும் காணோம்! வழக்கமான அரசியல் பார்வையைத் தொடரலாமா?  ஆதன் தளத்தில் ஒரு வித்தியாசமான நேர்காணல்!


இந்த 37 நிமிடவிவாதத்தில் முதல் ஆச்சரியம், பங்கு கொண்டவருடைய பெயர் ஸ்ரீராம் சேஷாத்ரி! இப்படி ஒரு அரசியல் விமரிசகர் இருப்பதே எனக்கு இந்த விவாதத்தைப் பார்த்தபிறகுதான் தெரிய வந்தது! அதைவிட, மிகுந்த ஆச்சரியம் அவர் ரஜனி பேச்சு  குறித்து கொஞ்சம் விவரத்தோடு பேசிய விதம்! நெறியாளர் மாதேஷ் மற்ற சேனல்களை போல. தோன்றினாலும் அடிக்கடி குறுக்கிடுவதில்லை என்று எனக்குத்  தோன்றினாலும், யூட்யூப் தளத்தில் ஒரு கமென்ட் வித்தியாசமாக!  

ramesh karthik  13 hours ago (edited)

மாதேஷ் மூன்று முக்கிய குறிப்புகளை நீ தடுத்து விட்டாய்.

 முதலாவது குறிப்பு பெரியாரின் இந்து மத எதிர்ப்பை பற்றி அவர் பேசினார் அதை நீ தடுத்து பேச்சை திசை திருப்பி விட்டாய்.

 இரண்டாவது குறிப்பு இந்து மதம் என்றாலே சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு தோற்றம் அதை ரஜினி உடைக்க நினைக்கிறார் அதைப்பற்றி பேச வரும்போது அதையும் நீ தடுத்து வேறு ஒரு கேள்வியை மடத்தனமாக கேட்டு விட்டாய்.

மூன்றாவது அவர் எல்லோருக்குமான அரசியல் எல்லோருக்குமான ஆன்மீகம் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் 3 மாதங்களிலும் அவரவர் தெய்வங்களை வணங்கலாம் அதைப் பற்றி விளக்கம் தரும்போது அதையும் நீ தடுத்து விட்டாய்.

பிறகு எவ்வாறு ஒரு கருத்தை ஒரு விருந்தினர் உன்னிடம் தெளிவுபடுத்த முடியும்?.

 எல்லாத்தையும் நீ முழுமையாக கேட்காமல் பிஜேபி, பிஜேபி , பிஜேபி  என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் நீ மடை கட்டினால் எவ்வாறு பேசுவது?.

பொதுவாக யூட்யூப் தளத்தில் கமென்ட் பார்த்தீர்கள் என்றால், வெறுப்பைக் கக்கும் அநாகரிகமான வார்த்தைகளில் இருக்கும், அவைகளுக்கு கொஞ்சம் எதிர்க்கருத்தும் இருக்கும். திரௌபதி பட ட்ரெய்லருக்கு வந்த 24000+ கமென்டுகளில் 99.5% ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் இருந்ததை, ஒரு விதிவிலக்காக எடுத்துக் கொண்டுபார்த்தால் ஒரு அரசியல் விவாதத்தை முழுதாகப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு தெளிவான கமென்ட் செய்திருப்பதை பார்ப்பது இதுவே முதல் முறை என்பது இந்த வீடியோ விவாதத்தில் மிகப்பெரிய வித்தியாசம், சிறப்பு! ஸ்ரீராம் சேஷாத்ரி, இதர சேனல்களில் பார்த்திராத சங்கதிகளையும் இதில் பேசியிருக்கிறார் என்பதால் பார்க்கும்படி நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.  

 வீடியோ 27 நிமிடம் 

தமிழருவி மணியன்தான் ரஜனிக்கு குருவா? அப்படி என்றால் பிஜேபியை எதற்காக ரஜனியோடு சம்பந்தப் படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? இந்து தமிழ் திசை எதற்காக ரஜனியை அரசியலுக்கு வராமல் தடுக்க இந்த  அச்சுறுத்தல் என்று தலைப்புக் கொடுத்து, என்ன சொல்ல வருகிறார்கள்? 

இந்த இரு விவாதங்களையும் முழுமையாகப் பார்க்கும் படி கேட்டுக்கொள்ளத்தான் என்னால் முடியும். ஆனால் பார்ப்பதும் நடப்பு என்ன என்பதை யோசித்து முடிவு செய்வதும் உங்களிடம்தான் இருக்கிறது. என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்கலாமா? கூடாதா?  

மீண்டும் சந்திப்போம்.                      

Saturday, October 19, 2019

தேர்தல் களம்! கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கும் போல!

எது எழுத்து என்கிற கேள்விக்கு விடைதேடுவதில் நண்பர்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வருகிறார்கள் வந்து கருத்தும் சொல்கிறார்கள் என்பதால், முந்தைய பதிவின் தொடர்ச்சியை கொஞ்சம்   இடைவெளிவிட்டுப் பேசலாம்! அதுவரை என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது தேர்தலும் அரசியலும்!

   
மஹாராஷ்டிரா, ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் சட்ட சபைத்தேர்தல்கள் வருகிற திங்கட்கிழமை நடக்க இருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. பிஜேபி சிவசேனா கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் தேவேந்திர ஃபட்னவிஸ் முன்னிறுத்தப் படும் அதே நேரம் காங்கிரஸ் NCP கூட்டணியில் அப்படி  யாருமே இல்லை என்பது ஒரு விசித்திரம் என்றால் , ராகுல் காண்டியின் இமேஜ் ஹரியானாவில் மட்டுமல்ல, மஹாராஷ்டிராவிலும் கூடக் காங்கிரசுக்கு பாதகமாகத்தான் இருப்பது இன்னொரு விசித்திரம்! ஷரத் பவார் மட்டும் தான் இன்று கொட்டும் மழை என்றாலும் சதாரா தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் சளைக்காமல் இறங்கியதாக செய்திகள் சொல்கின்றன.  


முன்பு சலாம்போட்டு காசுவாங்கிக் கொண்டு  கூவிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது சோனியாG ராகுல் காண்டி கும்பலுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! The Print தளத்தின் சேகர் குப்தாவின் முறை இப்போது! இதற்கு முன்னால் பர்கா தத் ஆவேசமாக உபதேசம் செய்துகொண்டிருந்ததை சொன்ன நினைவிருக்கிறதா?  இந்த 10 நிமிட வீடியோவில்  சேகர் குப்தா, இந்திராவிடமிருந்து அரசியலைக் கற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்கிறார்! இதை  National Interest எனத் தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது காமெடிக் கொடுமை! 


ஹரியானா மஹேந்திரகார் தொகுதியில் நேற்றைக்கு சோனியா பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்தில் சோனியா கலந்துகொள்ளவில்லை. பதிலியாக ராகுல் காண்டி கலந்துகொண்டு பேசினார் என்பதில் கிளிப்பிள்ளை மாதிரி அதே ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதுதான் என்றாகிப் போனதால் என்ன பெரிய நஷ்டம்? எப்படி இருந்தாலும் தோற்பதுதான், அது சோனியா பேசித் தோற்றால் என்ன? ராகுல் காண்டி உளறிக்கொட்டித் தோற்றால் தான் என்ன?


#brexit உடன்பாடு கிட்டத்தட்ட ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப் பட்டாலும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக, விவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஒன்றரை நிமிட வீடியோ. பிரதமர்  போரிஸ் ஜான்சன் அவரது அஜெண்டாவில் தெளிவாக இருக்கிறார் என்றால், எம்பிக்கள் அவரவர் அஜெண்டாவில் உறுதியாக இருக்கிறமாதிரித்தான் இழுபறியாக இருக்கும் போல!

மீண்டும் சந்திப்போம்.       
       

Thursday, May 16, 2019

கூடாநட்பு கேடாய் முடிந்தது! மீண்டும் அரங்கேற்ற வேளை!

இங்கே இடதுசாரிகளுக்கு இருக்கிற மவுசு என்னவென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்களைப் பற்றி எழுதுகிற பதிவுகளுக்கு வருகிற நண்பர்கள் எண்ணிக்கை என்ன என்று பார்த்தாலே போதுமென்கிற அளவுக்குத்தான் இருக்கிறது. ஒருகாலத்தில் மரியாதையோடு பார்க்கப்பட்ட இடதுசாரி இயக்கம், தோழர்களை நினைத்தால் எனக்கே மிகவும் வேதனையாகத் தான் இருக்கிறது.ஆனால், மாற்றம், மாற்று அரசியல் என்று பேச ஆரம்பித்தால் இடதுசாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டுப்பேச முடியாது. இந்தத் தேர்தல் முடிவுகளும்  2014 ஐ விட  இடதுசாரிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத்தான் தரப்போகிறது என்கிற செய்திகள் உறுதியாகிக் கொண்டே வருகின்றன.
     
  
மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியின் கொழுப்பு இம்முறை கணிசமாகக் குறைக்கப்படும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் இந்து தமிழ்திசை நாளிதழ்களில் செய்தி வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இடதுசாரி வாக்குகளில் கணிசமான பகுதி பிஜேபிக்கு அப்படியே மாறுமென்று திரிணாமுல் கட்சியின் தேர்தல் பண்டிட்டுகள் இப்போதுதான்  கண்டுபிடித்து இருக்கிறார்களாம்!  The internal reports and feedback of TMC suggest that the Left’s vote — as much as 30% in the 2014 general election — is shifting to some extent to the Bharatiya Janata Party (BJP) as the latter is recognised as a key challenger to the Trinamool என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். யார் ஜெயிப்பார்களென்று தோன்றுகிறதோ அவர்களுக்கே ஓட்டுப் போடுவதென்ற பாமரத்தனம் வங்காளிகளையும் விட்டு வைக்கவில்லை. “Our prospects now hinge on the level of shift of the Left vote. We hope to get more than 30 seats but if the Left loses more than 10% of its share, we may even go down to 25,” said a Trinamool leader on condition of anonymity. The party leaders also fear that in at least 15 seats where the minority concentration is low, the BJP has garnered considerable strength to take on the Trinamool. And any addition, particularly from the Left’s vote base, will give the BJP further recognition among the Bengali middle class.முழுச் செய்தியும் இங்கே


கேரள நிலவரம் எப்படியிருக்கிறதாம்? ராகுல் காண்டி வயநாடு தொகுதியில் நிற்பதால் காங்கிரசுக்கு மூன்று தென் மாநிலங்களில் மவுசு கூடுகிறது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று கதைத்தார்களே, இப்போது என்ன சொல்கிறார்களாம்? The candidacy of Suresh Gopi as the NDA candidate in Thrissur, was a setback, said congress leader and UDF candidate T N Prathapan. The activities of the RSS were strong. The Hindu votes may have gone to the BJP, he made the statement at the UDF meet convened here today   என்கிறது கேரள கௌமுதி ஹிந்து ஓட்டுக்கள் காங்கிரசுக்கு இல்லை என்பதுபோலவே இடது சாரிகளுக்கும் இல்லை என்ற முடிவுக்கு வந்தால் தவறில்லை. சபரிமலை விவகாரத்தில் இடதுமுன்னணி அரசு எடுத்த நிலை ஹிந்து மக்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தியது என்பது வாக்களிப்பதிலும் பிரதிபலித்திருக்க நிறையவே வாய்ப்புண்டு.    


இங்கே தமிழ்நாட்டில் 4 சீட்டுகளில் ஒன்று தேறினாலே அதிசயம்! அந்த அதிசயம் மதுரையில் நடக்க வாய்ப்பில்லை.
  
இந்தத் தேர்தலில் ராகுல் காண்டியும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, மோடிக்கெதிராகப் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டதைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. அந்தப்பொய்களும் உடனுக்குடன் அம்பலப் பட்டு பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன என்பதில் அவர்களுக்கு வெட்கம் ஏதுமில்லையாம்!
   


ராகுல் காண்டி பிரதமராகமுடியவில்லை என்றாலுமே எந்தப் பிரச்சினையுமில்லை என்று குலாம் நபி ஆசாத் சொல்லி இருப்பதும் 23 ஆம் தேதி சந்திப்புக்கு  எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு சோனியா G கடிதம் எழுதி அழைத்திருப்பதும் இன்றைக்கு  பேசுபொருளாகி இருக்கிறது. இந்த அழைப்பு இதைக் காட்டுகிறதாம்? it seems to have finally dawned on the Congress that its own revival, aggressively being pursued by the Gandhi siblings in states like UP - can wait; survival is at stake if it does not play its part in stopping the Modi juggernaut.இப்படி எழுத சுவாதி சதுர்வேதியை விட்டால் வேறு யார் இருக்கமுடியும் சொல்லுங்கள்! அதுவும் NDTV தளத்தில்!   காசுக்கு கூவுகிற ஊடகக்காரர்கள், சமயங்களில் இதுமாதிரி உபதேசங்கள் செய்வது அந்தக்காலம் தொட்டு நடப்பதுதான்!  

இடதுசாரிகள் சோனியாவின் அழைப்பை ஏற்கப் போகிறார்களா? நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி, கே சந்திரசேகர ராவ் இந்த மூவரும் எப்படி respond செய்யப் போகிறார்கள்? தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காய் நகர்த்தக் காத்திருக்கும் மம்தா பானெர்ஜி என்ன செய்வார்? மாயாவதி, அகிலேஷ் யாதவ் முதலானோர் என்ன செய்வார்கள்? காங்கிரசோடு இன்னமும் ஒட்டிக் கொள்வது ஹராகிரி / தற்கொலை செய்துகொள்வதாகி விடுமே என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறதா?

இத்தனை கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரியாது. ஆனால் இந்திய அரசியலில் முட்டாள்கள் என்ன செய்வார்கள் என்பதும்  காங்கிரசை நம்பிப் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்தவர்கள் கதை என்னவாயிற்று என்பதும் நன்றாகத் தெரியும்.

மீண்டும் சந்திப்போம்.
            

கமல் காசர்! அப்புறம் இடதுசாரிகளின் வீழ்ச்சி!

அனேகமாகத் தேர்தல் முடிவுகள் வெளிவருகிற வரையில் கமல் காசர் உளறல் மட்டுமே இங்கே செய்திகளில் சேனல் விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஊடகங்களுக்கு இங்கே செய்திகளுக்கான வறட்சி இருப்பது தெளிவாகப் புலப்படுகிறதே, கவனித்துப் பார்க்கிறீர்களா? 


இங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் தன்னுடைய சொந்தக் கட்சியின் கொலைவெறித் தாண்டவங்களை மறந்துவிட்டுப் பேசுகிறாரா? மறைத்துவிட்டுப் பேசுகிறாரா? கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து, அதன் வலது சந்தர்ப்பவாதம் பிடிக்காமல் கட்சியை விட்டு வெளியேறி, ஒரு புதிய கட்சியைத் தொடங்கியதற்காக T P சந்திரசேகரன் என்கிற உள்ளூர்ப் பிரமுகர்    ஏழு வருடங்களுக்கு முன்னால் 2012 மே மாதம் 4 ஆம் தேதி மார்க்சிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியது தானா? கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக இன்றைய கேரளா முதல்வர் அன்றைக்கு கேரள மாநிலக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பிணராயி விஜயன் பெயரும் அடிபட்டது. “The T P murder was pre-planned and is blood chilling and monstrous. The aim of the murder is not personal vendetta. The way the murder was conducted is not only inhuman but is also brutal and savage. It not only shocks the conscience of the court, but it also shocks the conscience of the entire society.”  இது சந்திரசேகரன் கொலைவழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வாசகங்கள். “It is true that the deceased (T P Chandrasekharan) was a public figure in the locality. He was the leader of an emerging political party. Motive of the murder was political animosity. Accused 1 to 7 were tools in the hands of the persons who entertained political enmity towards the deceased.... The murder in this case was cold blooded, pre-planned and brutal. The motive of the crime was not any personal enmity. The manner in which the murder was committed reveals extreme depravity. The action of accused not only was inhuman but ruthless and barbaric. It shocks not only the judicial conscience but the collective conscience of the society.” இதுவும் நீதிமன்றம் சொன்னதுதான்  கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் குறிப்பாகக் கண்ணூர்ப் பகுதியில் நடத்திய கொலைவெறித்தாண்டவம் குறித்தான செய்திகள் இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அருணன் போன்றவர்களுக்காக இதை சொல்ல முற்படவில்லை, மார்க்சிஸ்டுகள் எவ்வளவு பொய்யர்களோ அதை போலவே கொலைவெறி பிடித்தாடுகிறவர்களும் கூட என்பதைச் சொல்வதற்காக மட்டுமே. இந்தக் கொலை பற்றிய விரிவான தகவல்களுக்கு 

நிலை இன்னமும் மோசம் அடைந்திருக்கிறது.வங்காளத்தில் ஒரே ஒரு எம்பி இடது சாரிகளுக்குக் கிடைக்கலாம்.30 வருடங்களாக ஆண்ட மாநிலத்தில்! கேரளத்தில் 5 கிடைத்தால் பாக்கியம்.உலகின் முதல் ஜன நாயக இடது அரசு அமைந்த நிலம்.
இடதுசாரி சிந்தனை மேற்கு நாடுகள் போல பல்கலைக்கழக வளாகங்கள்,அறிவு ஜீவிகளுக்கு நடுவில் மட்டுமே புழங்கும் ஒரு fad ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது.
Its not the ascent of right but the almost complete absence of left in the picture that worries me .They can only be the counterbalance not the regional parties.But everybody has climbed on their wagon except the left.They are not even on the platform .worry.  

நண்பர் போகன் சங்கர் கவலைப்படுவதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இப்போதைய மோசமான சரிவுக்கு இடதுசாரிகளே முழுமுதற்காரணம் என்பதை மறந்துவிட்டுப் பேசுவது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்? 

இங்கே பதிவுகளில் சரியான தரவுகள் ஆதாரங்களோடுதான் அவைமீதான் என்பார்வையைச் சொல்லிவருகிறேன். மாற்றுக கருத்து இருந்தால் சரியான காரணங்கள், தரவோடு எழுதினால் அதையும்  இங்கே வெளியிடத்  தயாராகவே இருக்கிறேன். 2014 இல் போகன் சங்கர் சொல்லியிருக்கிற கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இதே கவலையைப் பல வருடங்களுக்கு முன்னால் ராமச்சந்திர குகாவும் வருத்தப் பட்டுச் சொல்லியிருந்தார். வலதுசாரிச் சிந்தனையுடன் இங்கே பிஜேபி வளர்ந்து வருவதற்கு சரியான மாற்றாக இடதுசாரிகளால் மட்டுமே இருக்க முடியும். காங்கிரசோ, மாநிலக் கட்சிகளோ அந்த இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது.

மீண்டும் சந்திப்போம்.
                        

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)