முந்தின பதிவில் சங்க இலக்கியம் பேசியது, ஒரு புத்தக அறிமுகம் எப்படி இருந்தது என யாராவது வந்து சொல்வார்கள் என்று ஒருநாள் காத்திருந்தேன். எதையும் காணோம்! வழக்கமான அரசியல் பார்வையைத் தொடரலாமா? ஆதன் தளத்தில் ஒரு வித்தியாசமான நேர்காணல்!
ramesh karthik 13 hours ago (edited)
மாதேஷ் மூன்று முக்கிய குறிப்புகளை நீ தடுத்து விட்டாய்.
முதலாவது குறிப்பு பெரியாரின் இந்து மத எதிர்ப்பை பற்றி அவர் பேசினார் அதை நீ தடுத்து பேச்சை திசை திருப்பி விட்டாய்.
இரண்டாவது குறிப்பு இந்து மதம் என்றாலே சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு தோற்றம் அதை ரஜினி உடைக்க நினைக்கிறார் அதைப்பற்றி பேச வரும்போது அதையும் நீ தடுத்து வேறு ஒரு கேள்வியை மடத்தனமாக கேட்டு விட்டாய்.
மூன்றாவது அவர் எல்லோருக்குமான அரசியல் எல்லோருக்குமான ஆன்மீகம் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் 3 மாதங்களிலும் அவரவர் தெய்வங்களை வணங்கலாம் அதைப் பற்றி விளக்கம் தரும்போது அதையும் நீ தடுத்து விட்டாய்.
பிறகு எவ்வாறு ஒரு கருத்தை ஒரு விருந்தினர் உன்னிடம் தெளிவுபடுத்த முடியும்?.
இந்த 37 நிமிடவிவாதத்தில் முதல் ஆச்சரியம், பங்கு கொண்டவருடைய பெயர் ஸ்ரீராம் சேஷாத்ரி! இப்படி ஒரு அரசியல் விமரிசகர் இருப்பதே எனக்கு இந்த விவாதத்தைப் பார்த்தபிறகுதான் தெரிய வந்தது! அதைவிட, மிகுந்த ஆச்சரியம் அவர் ரஜனி பேச்சு குறித்து கொஞ்சம் விவரத்தோடு பேசிய விதம்! நெறியாளர் மாதேஷ் மற்ற சேனல்களை போல. தோன்றினாலும் அடிக்கடி குறுக்கிடுவதில்லை என்று எனக்குத் தோன்றினாலும், யூட்யூப் தளத்தில் ஒரு கமென்ட் வித்தியாசமாக!
மாதேஷ் மூன்று முக்கிய குறிப்புகளை நீ தடுத்து விட்டாய்.
முதலாவது குறிப்பு பெரியாரின் இந்து மத எதிர்ப்பை பற்றி அவர் பேசினார் அதை நீ தடுத்து பேச்சை திசை திருப்பி விட்டாய்.
இரண்டாவது குறிப்பு இந்து மதம் என்றாலே சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு தோற்றம் அதை ரஜினி உடைக்க நினைக்கிறார் அதைப்பற்றி பேச வரும்போது அதையும் நீ தடுத்து வேறு ஒரு கேள்வியை மடத்தனமாக கேட்டு விட்டாய்.
மூன்றாவது அவர் எல்லோருக்குமான அரசியல் எல்லோருக்குமான ஆன்மீகம் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் 3 மாதங்களிலும் அவரவர் தெய்வங்களை வணங்கலாம் அதைப் பற்றி விளக்கம் தரும்போது அதையும் நீ தடுத்து விட்டாய்.
பிறகு எவ்வாறு ஒரு கருத்தை ஒரு விருந்தினர் உன்னிடம் தெளிவுபடுத்த முடியும்?.
எல்லாத்தையும் நீ முழுமையாக கேட்காமல் பிஜேபி, பிஜேபி , பிஜேபி என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் நீ மடை கட்டினால் எவ்வாறு பேசுவது?.
பொதுவாக யூட்யூப் தளத்தில் கமென்ட் பார்த்தீர்கள் என்றால், வெறுப்பைக் கக்கும் அநாகரிகமான வார்த்தைகளில் இருக்கும், அவைகளுக்கு கொஞ்சம் எதிர்க்கருத்தும் இருக்கும். திரௌபதி பட ட்ரெய்லருக்கு வந்த 24000+ கமென்டுகளில் 99.5% ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் இருந்ததை, ஒரு விதிவிலக்காக எடுத்துக் கொண்டுபார்த்தால் ஒரு அரசியல் விவாதத்தை முழுதாகப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு தெளிவான கமென்ட் செய்திருப்பதை பார்ப்பது இதுவே முதல் முறை என்பது இந்த வீடியோ விவாதத்தில் மிகப்பெரிய வித்தியாசம், சிறப்பு! ஸ்ரீராம் சேஷாத்ரி, இதர சேனல்களில் பார்த்திராத சங்கதிகளையும் இதில் பேசியிருக்கிறார் என்பதால் பார்க்கும்படி நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.
வீடியோ 27 நிமிடம்
தமிழருவி மணியன்தான் ரஜனிக்கு குருவா? அப்படி என்றால் பிஜேபியை எதற்காக ரஜனியோடு சம்பந்தப் படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? இந்து தமிழ் திசை எதற்காக ரஜனியை அரசியலுக்கு வராமல் தடுக்க இந்த அச்சுறுத்தல் என்று தலைப்புக் கொடுத்து, என்ன சொல்ல வருகிறார்கள்?
இந்த இரு விவாதங்களையும் முழுமையாகப் பார்க்கும் படி கேட்டுக்கொள்ளத்தான் என்னால் முடியும். ஆனால் பார்ப்பதும் நடப்பு என்ன என்பதை யோசித்து முடிவு செய்வதும் உங்களிடம்தான் இருக்கிறது. என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்கலாமா? கூடாதா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment