சென்னை புத்தகக்கண்காட்சியை இடதுசாரிகளும், திமுக அபிமானிகளும் எத்தனை கேவலப்படுத்த வேண்டுமோ அத்தனை அசிங்கங்களையும் அரங்கேற்றினார்கள். மதுரை மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி சுனாவெனா கீழடி பற்றிப் பேச வந்தவர், அதைப்பேசமாட்டேன் என்றுசொல்லி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசி அரசியல் கலப்படம் செய்தார். இடதுசாரி லூசுகள் எல்லாம் கூடி பபாசிக்கெதிராக வாயில் கருப்புத்துணிகட்டி கண்டன ஆர்ப்பாட்டம் செய்த வேடிக்கையை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் வீடியோ கொடுத்துப் பதிவு செய்திருக்கிறேன். மூன்றாவதாக பழ. கருப்பையா மகன் கரு.ஆறுமுகத்தமிழன் களத்தில் தனித்து இறங்கி இருப்பது இன்னும் அசிங்கமாக வெளிப்பட்டிருக்கிறது.
வீடியோ 46 நிமிடம் முழுதும் பார்க்க
வேண்டியதில்லை! முதல் 10 நிமிடமே
மொத்த சங்கதியின் யோக்கியதையைச்
சொல்லிவிடுகிறது.
ரெட் பிக்ஸ் தளத்தைத் தவிர இப்படிச் சம்பந்தமே இல்லாத தலைப்புக் கொடுத்து விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கிற சேனல் வேறில்லை என்பதை ஏற்கெனெவே பலமுறை சொல்லி அப்புறம் அவர்கள் வீடியோக்களைப் பகிர விருப்பமில்லாமல் இருந்தவனை இந்த அப்பட்டமான பொய்த்தலைப்பு கொஞ்சம் உசுப்பி விட்டது. வெகுண்டெழுந்த தமிழர்கள் என்கிறார்களே. அப்படி எத்தனைபேர் வெகுண்டெழுந்தார்களாம்? வீடியோவில் ஒரே ஒரு ஆசாமிதான் கண்டனம் தெரிவித்துப் பேசுகிறார்! திராவிடங்கள், நாம் தமிழர் கட்சி சொல்லி வருகிற பொய் புளுகுக்கு மேல் ரெட் பிக்ஸ் மாதிரி ஊடகப் புளுகுகள் இருக்கின்றன, தமிழர் மெய்ப்பொருளியல் என்று பேச வந்த ஆறுகத்தமிழன், தொடர்பே இல்லாமல் ரஜனி துக்ளக் ஆண்டுவிழாவில் பேசியது, குடியுரிமைச் சட்டத்திருத்தம் என்று அரசியல் கலந்து பேசியது சரிதானா? சரிதான் என்று யாராவது சொன்னால், அவர்கள் 200 ருபீஸ் உபிக்களோ, அல்லது இடதுசாரிக் குறுங்குழுக்களாகவோ தான் இருப்பார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்! வாசகர் கடிதங்கள் என்று இருபகுதிகளாக ஜெயமோகன் தளத்தில் வெளிவந்திருக்கும் கடிதங்கள் புத்தகக் கண்காட்சி தானாகவே தன்னை உருவாக்கிக் கொண்ட விதம், தினமணி முதலான நாளிதழ்களும், சமூக வலைதளங்கள் தான் வளர்த்தன என்பதைப் புட்டு வைக்கின்றன. கருணாநிதி ஏதோ பார்த்துச் செய்வார் என்று அவர்காலடியில் புத்தகக் கண்காட்சியை வைத்தவர்கள், கருணாநிதி புத்தகக் கண்காட்சிக்கு வந்தபோது, பழ.கருப்பையா (அவரை மிமரிசித்து எழுதியிருந்த) புத்தகம் கண்ணில் படாமல் ஒளித்து வைத்த கதையையும் சேர்த்தே தெருவில் இழுத்து விட்டிருக்கிறார்கள்!
சசி தரூர் திருமதி சுதா மூர்த்தியுடன் நடத்துகிற ஒரு சிறு நேர்காணல் வீடியோ 16 நிமிடம்தான்! முழுக்க முழுக்க சுதா மூர்த்தியின் புத்தகங்களைப் பற்றி மட்டுமே என்பது பார்க்க எத்தனை அழகாய் இருக்கிறது! இத்தனைக்கும் இது சென்ற ஆண்டு நிகழ்ந்த ஒரு உரையாடல் என்பது, நிகழ்ச்சியின் சுவையைக் குறைக்கிறதா ?! சுதா மூர்த்தியின் 200வது புத்தக வெளியீட்டு நிகழ்வின் முழு நிகழ்ச்சியும் இங்கே. வீடியோ 56 நிமிடம். இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், சசிதரூரும் காங்கிரஸ்காரர்கள் என்பது எங்காவது வெளிப்பட்டதா?
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் பேசட்டுமே! அதை விடுத்துக் கிறுக்கு மாய்க்கான்கள் எதற்காக வெற்றுக்கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்? வாய் இருக்கிறது என்பதற்காக எங்கு வேண்டுமானாலும் வந்து கரைச்சல் பண்ணுவார்களா?இதுமாதிரியான போக்குகளைக் கடுமையாகக் கண்டிப்பதன் மூலமே அடக்க முடியும்.
மீண்டும் சந்திப்போம்.
திருமதி சுதா மூர்த்தி- சசிதரூர் வீடியோ கொஞ்சம் வாட்ஸாப்பில் பார்த்தேன். அந்த அணுகுமுறை எல்லாம் இவர்களுக்கு வராது.
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
Deleteசசி தரூர் கூடக் கொஞ்சம் உளறுவாயர் தான்! ஆனால் உளறலை காங்கிரஸ் மேடையோடு நிறுத்திக் கொள்ளவும் தெரிந்தவர், அவ்வளவுதான்! இந்த நிகழ்ச்சியை நடத்தியது பென்குயின் பதிப்பகம். ஒரு வெளிநாட்டுப்பதிப்பகத்தோடு மோதிக் கொள்கிற தைரியம் சசி தரூருக்குக் கிடையாது என்றுவேண்டுமானால் சொல்லலாம்!