ஈவெரா மீதான ஒரு சிந்தனையாளர், சீர்திருத்தவாதி இன்னபிற கட்டமைக்கப்பட்ட மாயபிம்பங்கள் கலைந்து. ஈரோட்டு வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் மிஞ்சாமல் போவது போல ஆகிக் கொண்டே வருகிறது. இந்த மாயை களைய பலகாலமாகவே நிறையப்பேர் முயன்று வந்தாலும், கழகங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஒரு சித்தாந்த முகமூடி தேவைப்பட்டதில், ஈவெராவை ஒரு புனித பிம்பமாக ஆக்கப்பட்டார். ஆனால் ஒரு பொய்யை எத்தனைநாளைக்குத்தான் நீட்டித்துக் கொண்டே போகமுடியும்? துக்ளக் ஆண்டுவிழாவில் 10 நாட்களுக்கு முன்னால் ரஜனிகாந்த் யதார்த்தமாகப் பேசியது ஒரேயடியாக அந்தப் பொய்ப்பிம்பம் உடைக்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து போனது.
,
சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய அநாகரிகமான பேரணியில் நடந்த சம்பவங்களை அரைகுறையாக மறைப்பதற்கு ஒரு பக்கம் முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தாலும், இதுவரை மறக்கடிக்கப் பட்ட விஷயங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டே இருப்பதை ரங்கராஜ் பாண்டே இந்த 23 நிமிட வீடியோவில் தெளிவாகத் தொகுத்துச் சொல்கிறார்.
ஆக, ஈவெரா என்கிற மாய பிம்பத்தை உடைத்த தனிப் புகழை ரஜனிகாந்த் தட்டிச் சென்றுவிட்டார். தமிழருவி மணியனும், ரவீந்திரன் துரைசாமியும் சொல்வதைப் பார்த்தால், தனக்குத் தோதான ஒரு நேரத்தில் ஈவெரா ஒரு பெரியார் தான் என்று ரஜனிகாந்த் மிகவும் அழுத்தமாக மாற்றியும் சொல்வார் என்றுதான் தோன்றுகிறது!
திமுக தலீவர் இந்த விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்க நினைத்தாலும், அது ரவீந்திரன் துரைசாமிக்குப் பொறுக்கவில்லை! முந்தைய வீடியோக்களில் சொன்னதுதான்! ஆனால் சில அதிமுக அமைச்சர்கள் துள்ளிக்குதிப்பது ஏன், இந்தக் கேள்விக்காவது தெளிவாகப்பதில் சொன்னாரா? அதுவுமில்லை! இன்னொரு வீடியோவில் இதே மாதிரி சொதப்பினால் ர. து.வையும் ஆதன் தளத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடவேண்டியது தான்! வீடியோ 29 mts
இன்றைய தினமணியில் 1971 பதிவு, இரண்டாவது நாளாக. இந்த செய்திகளைத் தேடும் போது இன்னொரு விஷயம் தெரிந்தது. ஈ.வே.ரா.வின் நாத்திக பிரசாரத்தையும் துக்ளக் இதழ் பறிமுதல் செய்யப் பட்டதையும் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் கண்டித்தனர். அந்த எழுச்சியைக் கண்டு ஈ.வே.ரா.வும் தி.க. தி.மு.க. கட்சிகளும் மிரண்டதும் உண்மை.
ஆனால் ஜனங்களை எப்படித் திசைதிருப்புவது, போக்கு காண்பிப்பது என்பது கருணாநிதிக்குத் தெரிந்திருந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியவில்லை. அதேநேரம் கருணாநிதி கூட இன்றும் அதே சாமர்த்தியத்துடன் இந்த விவகாரத்தைக் கையாண்டிருக்க முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதுதான்!
மீண்டும் சந்திப்போம்.
//தனக்குத் தோதான ஒரு நேரத்தில் ஈவெரா ஒரு பெரியார் தான் என்று ரஜனிகாந்த் மிகவும் அழுத்தமாக மாற்றியும் சொல்வார் என்றுதான் தோன்றுகிறது!//
ReplyDeleteஎனக்கும் தோன்றியது. நல்ல அவதானிப்பு!
வாருங்கள் ஸ்ரீராம்!
Delete//தமிழருவி மணியனும், ரவீந்திரன் துரைசாமியும் சொல்வதைப் பார்த்தால், தனக்குத் தோதான ஒரு நேரத்தில் ஈவெரா ஒரு பெரியார் தான் என்று ரஜனிகாந்த் மிகவும் அழுத்தமாக மாற்றியும் சொல்வார்//
.
இது என்னுடைய அவதானிப்பு இல்லை தமிழருவி மணியன் ரஜனியின் அரசியல் ஆலோசகராக அறியப்படுகிறவர் . ரவீந்திரன் துரைசாமி எல்லாம்தெரிந்த அரசியல் விமரிசகர் தான் சொல்வதில் பத்துக்கு எட்டு பழுதில்லாமல் இருக்கும் என்றும் சொல்லிக்கொள்கிறார். ரெண்டுபேர் வீடியோவும் இந்தப்பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது.
ரஜனியின் முந்தைய பல்டிகள் இவர்கள் சொல்வதற்கு வலு சேர்க்கிறது, அவ்வளவுதான்! .