குடியரசுதினக் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகிற விதமாக, தலைநகருக்கு வந்த ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் தங்களுடைய இருப்பிடத்துக்குத் திரும்ப அழைக்கப்படும் இசைமுழக்கமாக இப்போது நடந்து கொண்டிருப்பதை நேரலையில் பார்த்துக் கொண்டே இதை எழுதுகிறேன்.
16ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ரோந்துப் பணியில் இருக்கும் படைப் பிரிவுகளை கோட்டைக்குத் திரும்ப அழைக்கும் வழக்கமாக இருந்தது,
இது பழசு
இந்தியாவில் 1950 இல் தான் முதல் குடியரசு தினக் கொண்டாட்டம் முடிந்த மூன்றாவது நாள் ஜனவரி 29 அன்று முப்படைகளின் வாத்தியக் குழுக்கள் பங்குபெறும், இசைக்கொண்டாட்டமாக, ஆரம்பித்தது. இதன் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனாதிபதியே இருக்கிறார். சுமார் ஒன்றரை மணிநேரம் நடக்கிற இசைக் கோலாகலத்தைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment