Sunday, January 12, 2020

மம்தா பானெர்ஜியின் அதிரடி! இடது -காங்கிரசுக்கு உதறல் ஏன்?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜியிடம் நிறைய மாறுதல்கள் தெரிவதாக ஊடகச் செய்திகள் சொல்வது நிஜம்தானா? பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த தேர்தல் உத்திகளின் வெளிப்பாடா? காங்கிரஸ் கட்சிக்கு யோசிப்பதற்கெல்லாம் துப்பில்லை. என்னோடு சேரவில்லையா? நீயும் என் எதிரியே! நீயும் மோடியின் அடிமைதான் என்று கொஞ்சம் கூடத் தயங்காமல் பேசிய வினோதமும் நேற்று நிகழ்ந்தது. காங்கிரஸ் தான் உளறுவாயர்களுடைய கட்சியென்று சொல்வீர்களே, இப்போது காங்கிரஸ் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா என்று கேட்கிறீர்களா?


நேற்று பிரதமர் மோடியுடன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கையோடு மம்தா பானெர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் நடத்திக் கொண்டிருந்த CAA  NRCக்கு எதிரான தர்ணாவுக்குத் திரும்பிவிட்டார். இடதுசாரி மாணவர்கள் மம்தாவுக்கு எதிராக ஆசாதி. சீ சீ (வெட்கம் வெட்கம் என்று அர்த்தமாம்) கோஷங்கள் எழுப்பி ரகளை செய்தனர். அவர்களை சமாதானப் படுத்த மம்தா சொன்னதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மோடியை இப்போது எதற்காக சந்திக்கப் போகவேண்டும் என்பது அவர்களுடைய கேள்வி. மம்தா கட்சியினர் தர்ணா நடத்திக் கொண்டிருந்த இடத்துக்கு எதிரிலேயே போட்டி தர்ணா நடத்த அமர்ந்துவிட்டனர் என்கிறது செய்தி.

Mamata Banerjee has done the unpredictable once again. What may have appeared like a political flip more than a decade ago has now taken the character of a wise, prudent manoeuvre என்று இதை சிலாகிப்பது வங்கிகளிடம் கடன் வாங்கித் திருப்பித்தராமல் 8000 கோடி ரூபாய்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற Deccan Herald நாளிதழ் தான் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும்!  மேலே என்ன சொல்கிறார்கள்?

கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரசும் சேர்ந்து CAA வைத் திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை மம்தா ஏற்க மறுத்துவிட்டார். போதாக்குறைக்கு ஜனவரி 8 அன்று காங்கிரசும் கூட்டாளிகளும் CAA வுக்கு எதிராக பாரத் பந்த் நடத்தியதில் கலந்துகொள்ளவும் மறுத்து விட்டார். ஜனங்கள் பொருளாதாரம் பாதிக்கப் படுவதை ஏற்க முடியாது என்பது மம்தா சொன்னது அதற்கும் மேலாக சோனியா காண்டி CAAவுக்கு எதிராகக் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் மறுத்துவிட்டார் .CAA வை வைத்து காங்கிரஸ் அசிங்கமான அரசியல் செய்கிறது என்று வேறு சொல்லிவிட்டாரா!? காங்கிரசுக்கும் இடதுகளுக்கும் அப்படி ஒரு எரிச்சல்! காய்கிறார்கள்! ஒப்பாரி வைக்காதகுறையாக மம்தா மீது சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள்! Peeved by her stand, both the Congress and the Left chose the disturbed Murshidabad district to incite passion against the central and state governments. At Sujapur, in the same district, people set a police vehicle on fire, pelted stones at the police. மாநிலமெங்கும் வன்முறையைப் கட்டவிழ்த்து விட்டு இடதுசாரிகளும் காங்கிரசும் ஓய்ந்தார்கள். அப்போது மம்தா பானெர்ஜி சொன்னதுதான் உச்சம் It was in these circumstances that Mamata Banerjee accused the Congress-Left combine — ‘two dead forces’,  in her words —  of resorting to vandalism. 

இனிமேற்கொண்டு CAA, NRC இவைகளுக்கெதிராக தனியாகத்தான் போராட்டம் என்று மம்தா பானெர்ஜி தெளிவாக அறிவிக்கவும் செய்துவிட்டார். ஆக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்கிற ஆக்சிஜன் வென்டிலேட்டர் சப்போர்ட் போச்சே என்று காங்கிரஸ் கதறுவதன் காரணம் புரிகிறதா? இடதுசாரிகளும் சேர்ந்து ஊளையிடுவது இந்தவாரம் நடந்து கொண்டு இருக்கும் ஆகப்பெரிய அரசியல் காமெடி! 

Mamata Got Orders From Above, We Know From Whom: Cong Accuses WB CM For Skipping Oppn Meet என்று இத்தனை அட்சர சுத்தமான உளறலைக் காங்கிரஸ்காரனால் மட்டுமே செய்யமுடியும் என்பதில் இன்னும் கூட சந்தேகமா?ஜனவரி 13 சோனியா கூட்டத்திற்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மம்தா பானெர்ஜி அறிவித்தால் காங்கிரஸ்காரன் உளறாமல்  இருந்தால் மட்டுமே ஆச்சரியம்! 

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)