ஒரு சினிமா நடிகன்! ரஜனி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லிக்கொண்டே இருப்பதைத்தவிர, இன்னமும் செயல்வடிவத்துக்கு வருகிறமாதிரிக் கூட அறிகுறிகள் இல்லை! ஆனால் அவர் வந்து விடுவாரோ என்கிற அச்சம் திராவிடக்கட்சிகளுக்குப் பிடித்து ஆட்டுகிறது. கடந்த 14 ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் சோ ராமசாமியுடைய தைரியத்துக்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போக, ஒருவாரகாலமாக திருமாவளவன் உட்பட அநேகமாக எல்லோருமே பேசித்தீர்த்துவிட்டார்கள். இன்று காலை ரஜனிகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசியது வெறும் இரண்டே நிமிடங்கள் தான்! தான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது.(ஈவெரா பற்றி) பேசியதற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று சுருக்கமாக, அதே நேரம் இத்தனை காலமாக கட்டமைக்கப்பட்ட பெரியார் என்பதான ஒரு மாயபிம்பத்தின் மீது நேரடியாகவே ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
1968 கீழவெண்மணி விவசாயக்கூலிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரைப்படி கூலி உயர்வு கேட்டுப்போராடியதில், 44 பேர் நிலச் சுவான்தார்களால் எரித்துக் கொல்லப்பட்ட சமயத்தில் கூட ஈவெரா நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாகத் தான் பேசினார் கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள் என்று பேசிய கதையை, சத்தமே இல்லாமல் ஹைஜாக் செய்து கூலிப் போராட்டத்தை தலித் மக்கள் மீதான ஆணவ ஜாதி வன்முறை என்று திசைதிருப்பிவிட்ட கதையை. எந்த மார்க்சிஸ்டுகள் மீது ஈவெரா பழிசுமத்தினரோ, அந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட ஈவெரா புகழ் ஓங்குக என்று ஜிங்சக் அடித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய நகைமுரண்! இந்த முகநூல் பக்கம் கொஞ்சம் நினைவு படுத்துகிறது
பங்ச்சர் ஆனது ஆனதுதான்! இப்போது எனக்கிருக்கும் ஒரே கேள்வி, ரஜனிகாந்த் தொடர்ந்து 2வது முறையாக ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார் என்பதில் வருகிற நாட்களில் தமிழக சேனல்கள் விவாதங்களில் என்ன மாதிரிக் கதறப்போகிறார்கள் என்பதுதான்!
மீண்டும் சந்திப்போம்.
இங்கே திராவிடக்கட்சிகளுக்கு, சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிதாக, கொள்கை கோட்பாடு என்றெல்லாம் இருந்ததில்லை. ஈவெரா ஒரு சமூக சீர்திருத்த புரட்சியாளர், சிந்தனைச்சிற்பி, தத்துவஞானி என்றெல்லாம் தொடர்ந்து பரப்புரைகளில் கட்டப்பட்ட ஒரு மாயபிம்பத்தை முன்னிறுத்தி, தங்களுடைய பித்தலாட்டங்களைச் செய்துவந்த கதை சமீபகால வரலாறுதான்! 1949 இல் மணியம்மை ஈவெரா திருமணத்துக்குப் பின்னால் அண்ணாதுரை , நெடுஞ்செழியன் ஈவிகே சம்பத் முதலானோர் திராவிட கழகத்திலிருந்து வெளியேறி திமு கழகம் என்று தனிக் கடை ஆரம்பித்த நாட்களிலிருந்து ஈவெரா திமுக இடையிலான , விரோதம் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த விபத்து நடந்தபிறகுதான் கொஞ்சம் மாறியது.
ஆளுகிற தரப்பின் பக்கமே சாய்ந்து காரியத்தை சாதித்துக் கொள்கிற ஒரே ஒருவிஷ்யத்தை நிரந்தரக் கொள்கையாக வைத்திருந்த ஈவெரா-திகவுக்கு, கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் ஓவராக ஆட்டம் போட வாய்ப்புக் கிடைத்தால் என்னென்ன செய்திருப்பார்கள்? 1971 இல் சேலம் பேரணியில் அதுதான் நடந்தது.
ஆனால் ரஜனி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படி ஒரு அதிரடி வரும் என்பதை கழகங்கள் யோசித்துக்கூடப் பார்க்கவில்லை! அடி கொஞ்சம் பலமாகவே விழுந்திருப்பது, இன்று இசுடாலின் கொஞ்சம் தணிவாக. ஈவெரா பற்றிப் பேசும்போது நண்பர் ரஜனி கொஞ்சம் யோசித்துப் பேசவேண்டும் என்று ஹீனசுரத்தில் சொன்னதிலிருந்தே தெளிவாகியிருக்கிறது.

புதியதலைமுறை மாறிவிட்டதோ என்று சந்தேகமெல்லாம் அனாவசியம்! உண்மைக்கு
இப்படி ஒருநிமிடம் மட்டும் ஒதுக்குவார்கள்!
மறக்க அடிப்பதற்கு திருமாவளவன்,
லூசு அருணன் கூவுவதைத் திரும்பத் திரும்ப
ஒளிபரப்பித் தங்கள் விசுவாசம் எங்கே என்பதைக்
காட்டியும் கொள்வார்கள்!
பங்ச்சர் ஆனது ஆனதுதான்! இப்போது எனக்கிருக்கும் ஒரே கேள்வி, ரஜனிகாந்த் தொடர்ந்து 2வது முறையாக ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார் என்பதில் வருகிற நாட்களில் தமிழக சேனல்கள் விவாதங்களில் என்ன மாதிரிக் கதறப்போகிறார்கள் என்பதுதான்!
மீண்டும் சந்திப்போம்.
அடி மிக பலமாக விழுந்திருக்கிறது. ஏற்கனவே எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலை. இப்போது கேட்கவே வேண்டாம்!
ReplyDeleteரஜினி .. ஆரம்பமே அமர்க்களம்!
வாருங்கள் பந்து!
Deleteஈவெரா என்பது வெறும் ப்ராண்ட், வியாபார அடையாளமாக வைத்து மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்துக்கு ரஜனி நேரடியாகவே ஒரு சவால் விட்டிருக்கிறார் என்பது வரை சரி. ஆனால் இந்த நிலைபாட்டில் தொடர்ந்து நிற்பாரா, அரசியலுக்கு வருவாரா, வந்தால் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுப்பார் என்பது இன்னமும் கேள்விக்குறிகளாகவே இருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறதே!