சென்ற டிசம்பரில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர் போராட்டம் என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் JNUவை இழுத்து மூடுங்களேன் என்றொரு பதிவை எழுதியது எவ்வளவு சரியானது என்பதை நிரூபிக்கிற மாதிரி நேற்றைய தினம் JNU பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வன்முறை சம்பவங்கள் இருக்கின்றன. இடதுசாரி மாணவர் அமைப்புக்களும் ராகுல் காண்டியும் எப்போதும் போல ஆளும் தரப்பின் மீதே குற்றம் சாட்டி அறிக்கைகள் விட ஆரம்பித்திருக்கிறார். பிள்ளைப்பூச்சி அரவிந்த் கேசரிவாலு கூடப் பொடி வைத்து ட்வீட்டரில் ஒரு செய்திபோட்டிருக்கிறார்.
எப்போதுமில்லாத அதிசயமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் போலீஸ் உதவியை நாடியிருக்கிறது. அதைவிட பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டிருக்கிற அறிக்கையில் விடுதிக்கட்டணம், செமெஸ்டர் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து ஏழெட்டு வாரங்களாகப் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தரப்பு கடந்த சில நாட்களாகவே வளாகத்துக்குள் உள்ள பல கட்டடங்களை மூடி வைத்து, போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்களை குளிர்கால செமெஸ்டருக்காக அந்தக் கல்விக் கூடங்களுக்குள் நுழைய விடாமல் கைகலப்பில் இறங்கியதே பிரச்சினையின் ஆரம்பம் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது.
நேற்றுவரை பொருளாதார மேதையாக மட்டுமே வேடம் போட்டுவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா பானாசீனா JNU விவகாரத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் அவதாரமும் எடுத்திருக்கிறார் It's act of impunity, can only happen with support of govt: P Chidambaram on JNU clash என்கிறது இந்தச் செய்தி ஆக இடதுசாரிகளும் காங்கிரசும் பிணந்தின்னிக் கழுகுகளாக, சிறு பிரச்சினை எங்கே எழுந்தாலும் ஊதிப்பெரிதாக்கிக் கலவரம், வன்முறையைத் தூண்டுகிற அரசியல் செய்ய மத்திய அரசின் நிதியுதவி, நேரடி நிர்வாகத்தில் உள்ள பல்கலைக்கழங்களைப் பாழாக்கத் துணிந்துவிட்டார்கள் என்பது அடுத்தடுத்து நடக்கும் அர்த்தமில்லாத கலவரங்கள் போராட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த இரண்டு புள்ளிகளுக்கும் மாணவர்கள் மீது எழுந்திருக்கிற திடீர்ப் பாசம் நம்பக்கூடியது தானா? இல்லை , மாணவர்களைத் தூண்டிவிட்டுத் தங்கள் தேர்தல் அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்கிற சுயநலம்தானா?
JNUவுக்கு சளிபிடித்தால், நாடெங்குமா தும்மல் வரும்? விளையாட்டுப்பிள்ளைகளான மாணவர்கள் தங்களை அரசியல்வாதிகள் ஒரு கருவியாகப் பயன் படுத்திக்கொள்வதை அறியாமல், ஆதரவு, போராட்டம், புண்ணாக்கு என்றே தொடர்ந்தால், எதிர் காலம் என்னாவது?
மாணவர்களை அரசியல்படுத்துவதால் என்ன பெரிய நன்மைகள் இதுவரை கிடைத்திருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!
மாணவர்களைப் பாழாக்கும் அரசியல் தொடர்ந்தால் JNU பல்கலைக்கழகத்தை சிலகாலம் மூடிவைப்பது மட்டுமே சரியாக இருக்கும், முதலில் சுட்டி கொடுத்திருக்கிற பழைய பதிவை எதற்கும் ஒரு முறை படித்துப்பார்த்துவிடுங்கள்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment