ராஜ்யசபா டிவியில் நிறைய உபயோகமான தகவல்கள் விவாதங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என்று பலமுறை இந்தப்பக்கங்களில் எழுதியிருக்கிறேன். Raisina Dialogue என்றொரு மூன்றுநாள் நிகழ்வை Obeserver Research Foundation என்ற அமைப்பும் நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஒருங்கிணைந்து 2016 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கொருமுறை நடத்திவருவதைப் பற்றி அறிந்திருக்கிறோமா? Raisina Dialogue 2020 நேற்று புதுடில்லியில் தொடங்கிய செய்தியைப் பார்த்து அப்படியே கடந்து போனதாவது நினைவுக்கு வருகிறதா? அதெல்லாம் நமக்கெதற்கு என்று ஒதுங்கி விடாமல் தகவலைத் தெரிந்துகொள்கிற மாதிரி ஒரு 24 நிமிட நிகழ்ச்சியை ராஜ்யசபா டிவி நேற்றைக்கு ஒளி பரப்பியிருக்கிறது. என்னவென்று பார்க்கத்தயாரா?
Raisina Hills என்பது புதுடில்லியில் உள்ள ஒரு பகுதி. நம் ஜனாதிபதி மாளிகை உட்பட மத்திய அரசின் முக்கியமான நிர்வாக அமைப்புக்கள் இருக்கிற பகுதி. அதிலிருந்து Raisina அப்புறம் ஒரு கலந்துரையாடல் என்பதைக் குறிக்கும் Dialogue சேர்ந்து Raisina Dialogue! சிங்கப்பூரில் நடக்கும் Shangri La Dialogue நிகழ்ச்சியை அடியொற்றி இங்கேயும் ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் இருந்தும் பார்க்கிற விதமாகக் கலந்துரையாடல்/ முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சியாக அல்லாமல் விஷயஞானம் உள்ளவர்கள் பலரும் கூடி ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை ஆழமாக விவாதிக்கிற முறை. வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களே இப்படி think tank என்கிற விஷயஞானம் உள்ளவர்களைக் கூப்பிட்டு, வெளியுறவுக்கொள்கையோ, பாதுகாப்போ, பொருளாதாரமோ அரசின் கொள்கைகளோ இப்படி எதை வேண்டுமானாலும் விவாதிக்கிற முறை இந்தியாவிலும் வளர்ந்துவருவதன் ஒரு வெளிப்பாடு தான் இது என்று வைத்துக் கொள்ளலாமா?
இந்த வருட உரையாடல்களின் theme, 21@20 : navigating the alpha century! 21 ஆம் நூற்றாண்டின் முதல் 20 வருடங்கள், அடுத்துவரும் பத்தாண்டுகள் எப்படியிருக்கும்? இதுதான் விவாதங்களின் மையக்கரு. நேற்றைக்கு நடந்த துவக்கநாளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டு வெளிநாட்டுப் பிரமுகர்கள் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? காணொளி 64 நிமிடம் இப்போது நடந்துகொண்டிருப்பதை நேரலையில் பார்க்க
JNU என்கிற ஓசிச்சோறு இடதுகள் கூடாரம் உருவான கதையை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இந்த சிறு வீடியோவில் விளக்கி விடுகிறார். ஒன்று திருத்தப்பட வேண்டும் அல்லது மூடப்படவேண்டும் என்று JNU இடதுகள் சீரழித்ததில், இன்றைக்கு வந்துநிற்கிற நிலை என்னவென்று சொல்கிறார். தவறென்ன இருக்கிறது?
திமுக தலீவருக்கு வேட்டுவைக்க வெளியிலிருந்து யாருமே வரவேண்டாம்! இந்த இரண்டரை நிமிட வீடியோவை ஒன்றே முக்கால் நிமிடத்திலிருந்து பாருங்கள்! சிரித்துக்கொண்டே கத்தி சொருகும் கலை, தைரியம் ரெண்டுமுருகன் தவிர வேறு யாருக்கு வரும்? ஒருவேளை ரெண்டுமுருகன் வகையறாவுக்கு முடியாமல் போனால், மூன்றாம் கலீஞர் எதற்கு இருக்கிறார்!?
எப்படிப் போனாலும் துரைமுருகன் விலாநோகச் சிரிப்பதற்கு உதவியாகத்தான் இருக்கும் என்பது ஒரு பயனுள்ள தகவல்தானே! என்ன சொல்கிறீர்கள்? நல்ல நாளும் அதுவுமாக அரசியலை ரொம்பவும் நீட்ட வேண்டாமே என்று கொஞ்சம் சுருக்கமாக! அவ்வளவு தான்! அரசியல் பேசாமல் நம்மால் இருக்க முடியாது!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment