Showing posts with label JNU. Show all posts
Showing posts with label JNU. Show all posts

Wednesday, January 15, 2020

கொஞ்சம் பயனுள்ள தகவல்கள், விவாதங்கள்!

ராஜ்யசபா டிவியில் நிறைய உபயோகமான தகவல்கள் விவாதங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என்று பலமுறை இந்தப்பக்கங்களில் எழுதியிருக்கிறேன். Raisina Dialogue என்றொரு மூன்றுநாள் நிகழ்வை Obeserver Research Foundation என்ற அமைப்பும் நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஒருங்கிணைந்து 2016 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கொருமுறை நடத்திவருவதைப் பற்றி அறிந்திருக்கிறோமா?  Raisina Dialogue 2020 நேற்று புதுடில்லியில் தொடங்கிய செய்தியைப் பார்த்து அப்படியே கடந்து போனதாவது நினைவுக்கு வருகிறதா? அதெல்லாம் நமக்கெதற்கு என்று ஒதுங்கி விடாமல் தகவலைத் தெரிந்துகொள்கிற மாதிரி ஒரு 24 நிமிட  நிகழ்ச்சியை ராஜ்யசபா டிவி நேற்றைக்கு ஒளி பரப்பியிருக்கிறது. என்னவென்று பார்க்கத்தயாரா?

  
Raisina Hills என்பது புதுடில்லியில் உள்ள ஒரு பகுதி. நம் ஜனாதிபதி மாளிகை உட்பட மத்திய அரசின் முக்கியமான நிர்வாக அமைப்புக்கள் இருக்கிற பகுதி. அதிலிருந்து Raisina அப்புறம் ஒரு கலந்துரையாடல் என்பதைக் குறிக்கும் Dialogue சேர்ந்து Raisina Dialogue! சிங்கப்பூரில் நடக்கும் Shangri La Dialogue நிகழ்ச்சியை அடியொற்றி இங்கேயும் ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் இருந்தும் பார்க்கிற விதமாகக் கலந்துரையாடல்/ முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சியாக அல்லாமல் விஷயஞானம் உள்ளவர்கள் பலரும் கூடி ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை ஆழமாக விவாதிக்கிற முறை. வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களே இப்படி think tank என்கிற விஷயஞானம் உள்ளவர்களைக் கூப்பிட்டு, வெளியுறவுக்கொள்கையோ, பாதுகாப்போ, பொருளாதாரமோ அரசின் கொள்கைகளோ இப்படி  எதை வேண்டுமானாலும் விவாதிக்கிற முறை இந்தியாவிலும் வளர்ந்துவருவதன் ஒரு வெளிப்பாடு தான் இது என்று வைத்துக் கொள்ளலாமா?

இந்த வருட உரையாடல்களின் theme, 21@20 : navigating the alpha century! 21 ஆம் நூற்றாண்டின் முதல் 20 வருடங்கள், அடுத்துவரும் பத்தாண்டுகள் எப்படியிருக்கும்? இதுதான் விவாதங்களின் மையக்கரு. நேற்றைக்கு நடந்த துவக்கநாளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டு வெளிநாட்டுப் பிரமுகர்கள் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? காணொளி 64 நிமிடம்   இப்போது நடந்துகொண்டிருப்பதை நேரலையில் பார்க்க   


JNU என்கிற ஓசிச்சோறு இடதுகள் கூடாரம் உருவான கதையை  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இந்த சிறு வீடியோவில் விளக்கி விடுகிறார். ஒன்று திருத்தப்பட வேண்டும் அல்லது மூடப்படவேண்டும்  என்று JNU இடதுகள் சீரழித்ததில், இன்றைக்கு வந்துநிற்கிற நிலை என்னவென்று சொல்கிறார். தவறென்ன இருக்கிறது?


திமுக தலீவருக்கு வேட்டுவைக்க வெளியிலிருந்து யாருமே வரவேண்டாம்! இந்த இரண்டரை நிமிட வீடியோவை ஒன்றே முக்கால் நிமிடத்திலிருந்து பாருங்கள்! சிரித்துக்கொண்டே கத்தி சொருகும் கலை, தைரியம்  ரெண்டுமுருகன் தவிர வேறு யாருக்கு வரும்? ஒருவேளை   ரெண்டுமுருகன் வகையறாவுக்கு  முடியாமல் போனால், மூன்றாம் கலீஞர் எதற்கு இருக்கிறார்!? 

எப்படிப் போனாலும் துரைமுருகன் விலாநோகச் சிரிப்பதற்கு உதவியாகத்தான் இருக்கும் என்பது ஒரு பயனுள்ள தகவல்தானே! என்ன சொல்கிறீர்கள்? நல்ல நாளும் அதுவுமாக அரசியலை ரொம்பவும் நீட்ட வேண்டாமே என்று கொஞ்சம் சுருக்கமாக! அவ்வளவு தான்! அரசியல் பேசாமல் நம்மால் இருக்க முடியாது!  

மீண்டும் சந்திப்போம்.         

Monday, January 6, 2020

JNU வில் நடப்பது என்ன? வன்முறைக்கு யார் காரணம்?

JNU விவகாரத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குவதில் சில அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு விலைபோன பல ஊடகங்களும் மும்முரமாக இருப்பதைப் போல, அங்கே நடப்பதென்ன என்பதை விவாதிக்க சில ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மதன் ரவிச்சந்திரன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சுறுசுறுப்பாக விவாதக்களங்களை சுடச்சுட நடத்துவதில் பயன் படுத்திக் கொண்டு வருகிறார்.விவாதிக்க வரும் பங்கேற்பாளர்கள் எவரும் மக்களுக்கு அறிமுகமானவர்கள் என்று சொல்ல முடியாது. கட்சியிடமிருந்தும் சேனல்களிடமிருந்தும் காசு வாங்கிக் கொண்டு பேசிவரும் தொழில்முறைப் பேச்சாளர்களுக்கு  காசுகொடுக்கும் அளவுக்கு வளர்ந்த சேனலாக வின் தொலைக்காட்சி இல்லை என்பதும் பிரபலமான முகங்களைப் பார்க்க முடியாததற்கு ஒரு முக்கியமான காரணம்.


JNU வில் நடப்பது என்ன? வன்முறைக்கு யார் காரணம்? என்ற தலைப்பில் இன்றிரவு சுடச்சுட  ஒரு விவாதம்! எவருக்கும் எழுகிற இயல்பான சந்தேகங்கள் கேள்விகள் எல்லாவற்றையும் தொட்டு இந்த விவாதம் நகர்வது சிறப்பு. வீடியோ 54 நிமிடம் 

JNU இடதுசாரிகள் பிடியில்  நீண்டநாட்களாக இருந்து ஈரல் முதல் எல்லாமே சீரழிந்து கிடப்பதைத் தொட்டுப் பேசும் முந்தைய பதிவைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்!


மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய பதிவுகள்

JNU வை இழுத்து மூடுங்கள்!



Monday, December 9, 2019

JNU வை இழுத்து மூடுங்கள்!

ஜவஹர்லால் நேரு பெயரை வைத்ததனாலேயே என்னவோ டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குழப்பங்களின் உச்சமாக ஆகிக் கொண்டிருக்கிறது. தறுதலைகளாகிப்போன இடது சாரி அரசியலும் ஓசிச்சோறும் பல்கலைக்கழகத்துக்கு வருவது படிப்பதற்காக அல்ல வெட்டி அரசியலும் ரகளைகளும் செய்வதற்காகவே என்றபோக்கு சமீப காலமாக வளர்ந்து விட்டது.


விடுதிக்கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து 40 நாட்களுக்கும் மேலாக JNU மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று ஜனாதிபதி மாளிகை நோக்கிப் பேரணி நடத்துவதற்காகத் திரண்ட மாணவர்கள் மீது டில்லிப் போலீஸ் லேசாகத் தடியடி நடத்தியதை வீடியோவில் தெளிவாகவே பார்க்க முடிகிற போதிலும் செய்தியாளர் திரும்பத் திரும்ப போலீஸ் மிருகத்தனமாக தடியடி நடத்தி மாணவர்களைத் தாக்கியதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்பது தான் இங்கே சோனியா காங்கிரசுக்கு விலைபோன ஊடகங்களுடைய யோக்கியதை. படிக்கப் போகிறவனுக்கு படிப்பு முக்கியமில்லை, முழுநேர அரசியலில் இறங்குவதுதான் பிழைப்பு என்றாகிப் போன சீர்கேடடைந்த JNUவை ஒருசில வருடங்களுக்கு மூடி வைத்தால் என்ன? ஓசிச்சோற்றில் உடல்வளர்க்க இடதுசாரிகளுக்கு தங்கப்   புற்றையும் கொடுத்து தினமும் பாலும் முட்டையும் கொடுப்பானேன்? விரட்டி அடித்து துரத்திவிட்டு, சிலகாலம் மூடி வைத்தால் என்ன தவறு? கொஞ்சம் சொல்லுங்களேன்!

மாணவர்கள் அரசியல் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. ஆனால் படிப்பைக் கோட்டை விட்டு, முழுநேர அரசியல் செயல்பாடு அவசியமா? Catch them young என்று மாணவர்களிடையில் புகுந்து ஆள்பிடிப்பது இடது சாரிகளுக்குக் கைவந்த கலை, அப்புறம் காங்கிரஸ், பிஜேபி என்று பிற அரசியல்கட்சிகளும் களத்தில் குதித்தன. இடதுசாரிகள் செய்திருக்கிற பிழைகளில் மாணவர்களை அரசியலுக்கு இழுத்தது மிகப்பெரும் பிழை என்றுதான்  இத்தனை ஆண்டுகால அனுபவத்தில்  என்னால் சொல்ல முடிகிறது.

மாறுபட்ட கருத்து இருப்பவர்க.ளும்,  ஆரோக்கியமான உரையாடலைத்   தொடர விரும்புகிறவர்களும் கமென்ட் பாக்சில் வரலாம். வரவேற்கிறேன்  

மீண்டும் சந்திப்போம்.  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)