JNU விவகாரத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குவதில் சில அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு விலைபோன பல ஊடகங்களும் மும்முரமாக இருப்பதைப் போல, அங்கே நடப்பதென்ன என்பதை விவாதிக்க சில ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மதன் ரவிச்சந்திரன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சுறுசுறுப்பாக விவாதக்களங்களை சுடச்சுட நடத்துவதில் பயன் படுத்திக் கொண்டு வருகிறார்.விவாதிக்க வரும் பங்கேற்பாளர்கள் எவரும் மக்களுக்கு அறிமுகமானவர்கள் என்று சொல்ல முடியாது. கட்சியிடமிருந்தும் சேனல்களிடமிருந்தும் காசு வாங்கிக் கொண்டு பேசிவரும் தொழில்முறைப் பேச்சாளர்களுக்கு காசுகொடுக்கும் அளவுக்கு வளர்ந்த சேனலாக வின் தொலைக்காட்சி இல்லை என்பதும் பிரபலமான முகங்களைப் பார்க்க முடியாததற்கு ஒரு முக்கியமான காரணம்.
JNU வில் நடப்பது என்ன? வன்முறைக்கு யார் காரணம்? என்ற தலைப்பில் இன்றிரவு சுடச்சுட ஒரு விவாதம்! எவருக்கும் எழுகிற இயல்பான சந்தேகங்கள் கேள்விகள் எல்லாவற்றையும் தொட்டு இந்த விவாதம் நகர்வது சிறப்பு. வீடியோ 54 நிமிடம்
JNU இடதுசாரிகள் பிடியில் நீண்டநாட்களாக இருந்து ஈரல் முதல் எல்லாமே சீரழிந்து கிடப்பதைத் தொட்டுப் பேசும் முந்தைய பதிவைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள்