Tuesday, December 29, 2020

அதிமுக -பிஜேபி கூட்டணி(??) எந்த லட்சணத்தில் இருக்கிறது?

மூன்று நாட்களுக்கு முன்னால் அதிமுகவின் கே பி முனுசாமி மிகவும் தெனாவட்டாக, பிஜேபிக்கு ஒரு சவாலைப் பொதுவெளியில் விடுத்திருக்கிறார். கீழே வீடியோவை முழுதாய்ப் பார்க்கமுடியாவிட்டாலும், எட்டாவது நிமிடத்திலிருந்தாவது பார்த்து விடுங்கள்! ஆட்சியில் பங்கு கூட்டணி ஆட்சி என்று யாராவது வந்தால் ....என முழங்குகிறார். வெறும் 96 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி கூட இத்தனை வெளிப்படையாக, ஆட்சியில் பங்குக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் MLA க்களைப் பார்த்து முழங்கியதில்லை. டில்லித் தலைமையிடம் பேசி அவர்களைத் தலையெடுக்க விடாமல் வைத்திருந்தார் என்பது மிகச் சமீபத்திய வரலாறுதான்! கேபி முனுசாமி அவராகவே இப்படிப் பேசினாரா அல்லது பேசிவைத்துக் கொண்டு இப்படிப் பேச வைத்தார்களா என்பது அனாவசியம் திமுக, அதிமுக இரு கழகங்களுமே தங்களுடைய அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பியதே இல்லை! இந்த இரண்டு கழகங்களை விட்டால் தமிழனுக்கு வேறு கதியே இல்லை என்ற மிதப்பில் இருக்கிற கழகங்களைக் கண்டுகொள்வதற்கு தமிழக வாக்காளருக்குத் திறமை இல்லையா? அல்லது வேறெந்தக் காரணமாவது இருக்கிறதா?    

 


கே பி முனுசாமியின் எச்சரிக்கையை தமிழக பிஜேபி எப்படி எடுத்துக் கொண்டது என்ற விவரம் பரம ரகசியமாக இருக்கிறது போல! 


இந்த ரகசியத்தை எப்படியாவது வெளிப்படுத்தலாம் என்று இந்த 44 நிமிட இருதுருவம் நிகழ்ச்சியில் அதிமுக MLA செம்மலை, பிஜேபியின் நாராயணன் திருப்பதி இருவருடனும் ரங்கராஜ் முட்டி மோதிப் பார்க்கிறார். கூட்டணி உடைகிறதா, அல்லது வீரத்தழும்புகளுடன் நீடிக்கிறதா என்ற ரகசியத்தைக் கடைசிவரை இருவரும் சொல்லவே இல்லை.

😎
தேர்தல் செய்திகள்!
—————————-
சிம்பிளா, கூட்டணி கிடையாது போங்கடான்னு சொல்ல முடிஞ்சா அது வீரம்! மத்தபடி இதெல்லாம் ஒப்பாரி!

வசந்தன் பெருமாள் சொல்வது போல இதுதான் உண்மை நிலவரம் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

என்னமோ போடா மாதவா! தமிழக அரசியள் களமும் கூட்டணிக் குழப்பங்களும் பிரிக்க முடியாத இரட்டை தானா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

மீண்டும் சந்திப்போம்.

8 comments:

 1. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக உமி, அதிமுக அரிசி. ஆனால் பாஜக தமிழகத் தலைவர், ஏதோ இது தேசியக் கூட்டணி போலவும், யார் முதலமைச்சர் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று சொல்வது டூ டூ மச் இல்லையோ? முருகன் அவர்களின் பேச்சு எனக்கே கடுப்பாகிறது எனும்போது, போனாப் போகுதுன்னு ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட அதிமுகவினருக்கு எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு பாஜக என்பது பெரும் சுமை, 8-10 சதவிகித ஓட்டிழப்பிற்குக் காரணமாக இருக்கும் கட்சி. பாஜக கூட்டணி இல்லாவிடில் குறைந்தது ஐந்து எம்பிக்களாவது அதிமுகவிற்கு இருந்திருக்கும்.

  கேபி முனுசாமி பேசியது சரிதான். முருகன் அவர்கள் அதீதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாஜக, 2 சதவிகித வாக்குகளுக்கும் அதிகம் இருக்கும் கட்சி என நிரூபிக்கட்டும்.

  கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய கட்சி பாஜக இல்லை

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்கிற அந்த உமிதான் அரிசியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விட்டீர்களே நெ.த. சார்!

   அதிமுகவுடன் அதிக சீட் கேட்கத்தான் பிஜேபி இப்படி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிற மாதிரி எனக்குப் படுகிறது. பாஜக கூட்டணியில் இல்லாமல் போனால், அதிமுகவை விட்டுப்போன ஐந்தாறு சதவீத வாக்குகள் அப்படியே திரும்பக்கிடைத்துவிடுமென்பது அதீதக்கற்பனை. அந்த மைனாரிட்டி சமூக வாக்குகள் இப்போது திமுகவுக்கே கிடைக்குமா என்ற கேள்விக்கு விடைதெரிய தேர்தல் முடிவுகள் வெளிவந்தாக வேண்டும்.

   பாஜக அதிமுகவுக்கு சுமை என்று சொல்லிவிட முடியாது. எடப்பாடி அரசு இன்னமும் ஆட்சிக்கட்டிலில் இருப்பதற்கே பாஜக ஆதரவிருப்பது மட்டுமே காரணம். அதற்கு அதிமுக பாஜகவுக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள்.

   கேபி முனுசாமி பேச்செல்லாம் வெட்டி அராத்து. மாநிலக்கட்சிகள் தங்கள் சொந்த வலுவிலேயே ஜெயித்து, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட காலமெல்லாம் மலையேறி நீண்டகாலமாகி விட்டதைக் கவனத்தில் வைத்துக் கொண்டீர்களானால், இங்கே ஒவ்வொரு மாநிலக்கட்சியும் ஏதோ ஒரு தேசியக்கட்சி ஆதரவு, அதுபோக உள்ளூர் உதிரிகள் சிலபலவற்றின் ஆதரவோடுதான் தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வந்துகொண்டிருப்பது ஏனென்றும் புரியும்.

   Delete
  2. //தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாஜக, 2 சதவிகித வாக்குகளுக்கும் அதிகம் இருக்கும் கட்சி என நிரூபிக்கட்டும். கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய கட்சி பாஜக இல்லை//

   கூட்டணி என்று வந்துவிட்டால் எந்தக்கட்சியும் நம்பகமான கட்சி இல்லைதான்! இதில் பாஜகவை மட்டும் குறை சொல்வானேன்? தவிர, இன்றைக்கிருக்கிற பாஜக தன்னளவிலேயே வலுவான கட்சியாக வேரூன்றி விட்டது. வாஜ்பாய் காலத்தைய தாராளம், பெருந்தன்மை இன்றைக்கும் அவசியமா என்ன?

   Delete
  3. பாஜக தமிழகத்தில் வலுவான கட்சியாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்க.

   ஆட்சிக் கட்டிலுக்கு பாஜக ஆதரவாக இருப்பது என்பதே எனக்குச் செய்திதான் சார். காங்கிரஸ், அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்த மாதிரி கொடுக்கலை.

   தமிழகத்தில் பல கட்சிகளைக் கூட்டணி சேர்த்துக்கொள்கிறார்கள் என்பது உண்மைதான். காங்கிரஸுக்கு 5% வாக்கு, பாஜகவுக்கு 1% வாக்குகூட இல்லை என்பது இன்றைய நிலைமை. சும்மா அதிமுகவோட கூட்டணில இருந்து அவங்க வாக்குகளை தங்கள் வாக்குகள்போலச் சொல்வதை எப்படி ஏற்பது?

   பாஜக, அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் நிச்சயம் அது அதிமுகவுக்கு வலுதான்.

   Delete
  4. நெ.த. சார்!

   நான் பிஜேபி என்று பொதுவாக தேசிய அளவில் தான் சொன்னேன் தமிழக பிஜேபி வலுவடைந்து விட்டது என்று எங்கே சொன்னேன்? பிஜேபியுடன் ஒரண்டை இழுப்பது அதிமுகவுக்குத்தான் சேதம் விளைவிக்கும். சேதம் விளைவிப்பதற்காகவே இங்கே உள்ள மாநிலத்தலைவர்கள் மாற்றிமாற்றிப் பேசுகிறார்களோ என்னவோ? :-))))

   உங்கள் ஆசைப்படியே, தைரியமிருந்தால் அதிமுக பிஜேபியைக் கழற்றி விடட்டுமே! என்னதான் ஆகிறதென்று பார்த்துவிடலாம்!

   Delete
  5. //ஆட்சிக் கட்டிலுக்கு பாஜக ஆதரவாக இருப்பது என்பதே எனக்குச் செய்திதான்//

   பின்னே? எடப்பாடி தன்னுடைய சொந்தச் செல்வாக்கிலேயே ஆட்சியை இதுநாள்வரை காப்பாற்றிக் கொண்டிருந்தார் என்று சீரியசாகவே நம்புகிறீர்களா? சசிகலா ரிலீசாகி வெளியே வரட்டும்! யார்யார் எப்படி மாறுகிறார்கள் என்பதையும் பார்த்துவிடலாம்!

   Delete
  6. சமீப காலங்களில் எடப்பாடி கொஞ்சம் நல்ல பெயர் சம்பாதிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.  ஓ பி எஸ் ஸுக்கே அதில் பொறாமை என்றும் தோன்றும் எனக்கு!

   Delete
  7. உண்மைதான் ஸ்ரீராம்! ஆனால் அந்த நல்லபெயருக்கு கவுண்டரே முழுக்காரணம் என்று சொல்லிவிட முடியாதபடி இசுடாலினின் அசட்டுத்தனமான அரசியல், உளறல்களும் காரணமாக இருந்திருக்கிறது.

   சசிகலா ரிலீசுக்குப் பிறகு அதிமுக இப்போதிருக்கிற form இலேயே இருக்குமா என்பது இன்னும் கொஞ்சநாட்களில் விடைதெரிந்துவிடக்கூடிய கேள்விதான்! தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் என்கிற வதந்தியும் அப்படியே! ரஜனி குழப்பம் என்கிற ஒன்றைத்தவிர மற்றெல்லாக்குழப்பங்களும் அப்படியே நீடிக்கின்றன.

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

ஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா? ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சி யின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம்? அவரை அரசியலில் எந்த இடத்தில் ...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (322) அனுபவம் (252) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (87) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)