கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ரங்கராஜ் பாண்டே இருந்தவரை தந்திடிவியில் முத்திரை பதித்த நிகழ்ச்சி ஆக இருந்தது. அவர் சேனலை விட்டு வெளியேறிய பின் அந்த நிகழ்ச்சியை சலீம், ஹரிஹரன், அசோகவர்த்தினி இப்படிப் பலரும் நடத்திப்பார்த்தும் கூட, பழைய மாதிரி தூக்கி நிறுத்தமுடியவில்லையே, ஏன்?
இந்தக் கேள்விக்கான பதில் நெறியாளர் என்ன கேள்வி கேட்டார், பதில் சொல்லவேண்டியவரிடமிருந்து சரியான கேள்விகளைக் கேட்டாரா, தனிப்பட்ட அஜெண்டாவுடன் கேள்வி கேட்காமல் விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிற மாதிரி இருந்ததா என்ற தெளிவோடு நடத்த முடியவில்லை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி FlopShow ஆகவே போய்க்கொண்டிருக்கிறது
தந்திடிவி யாரைவைத்து, என்ன அஜெண்டாவுடன் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த அக்கறையுமில்லை! ஆனாலும் தமிழக அரசியல்களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்கிற என்னுடைய அபிப்பிராயத்துக்கு பிஜேபியின் தமிழகத்தலைவர் Dr.L.முருகனுடன் ஹரிஹரன் நடத்தி நேற்றிரவு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி வலுசேர்த்து இருப்பதாகவே பார்க்கிறேன். இந்த 42 நிமிட பேட்டியில் பிஜேபியின் மாநிலத்தலைவரிடமிருந்து என்ன தகவவலைப் பெற விரும்பினார்? ஒரு தெளிவில்லாமல் வெறும் வதந்தி அல்லது ஊகங்களின் பேரிலேயே கேள்வி எழுப்பிக்கொண்டே போனால் என்ன பதில் கிடைக்கும்?
மேலே 42 நிமிட வீடியோவைப்பார்க்க நேரமில்லையா? கடந்த 21ஆம் தேதி தமிழக அமைச்சர் Mafoi பாண்டிய ராஜனுடன் நடத்திய நேர்காணலின் 6 நிமிடச் சுருக்கம் இதையாவது பார்த்துவிடுங்கள்! அதிமுக பாஜக கூட்டணிக்குள் விரிசல், அடிமை அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பிஜேபி தான் முடிவு செய்ய வேண்டுமா போன்ற வதந்திகளைத் திமுகவின் சமூக ஊடகங்கள் எழுப்பிவரும் கேள்விகளையே ஹரிஹரனும் கேட்கிறார் ! என்பது தந்தி டிவி முதலாளிகளின் அஜெண்டாவாகக் கூட இருக்கலாம்! பாண்டியராஜனோ. முருகனோ கொஞ்சமும் மழுப்பவில்லை என்பது ஒருபுறம்! தேர்தல் களம் இன்னமும் தயாராகவில்லை, சூடு பிடிக்கவில்லை என்பதாலேயே இதுபோன்ற வதந்திகள்,பேட்டிகள் உலா விடப்படுகின்றன.
No comments:
Post a Comment