பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Monday, December 21, 2020
#2021தேர்தல்களம் கிழக்கே மே.வங்கம்! தெற்கே தமிழ்நாடு! #அரசியல்இன்று
மேற்கு வங்க அரசியல்களம், தேர்தல்களம், உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் விஜயமாக அங்கே போய்வந்த பிறகு, சூடு பிடித்திருக்கிறது என்று சொல்வதை விட ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு அதிக கிலி பிடிக்க ஆரம்பித்து விட்டதென்றே தெரிகிறது! அதுவும் போக மம்தா பானெர்ஜிக்கு image makeover மற்றும் தேர்தல் உத்தி வகுக்கப் போயிருக்கும் IPAC பிரசாந்த் கிஷோர் பிழைப்பிலும் மண்விழுந்துவிடும் போல இருக்கிறது!
முகநூலில் பானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்:
ஆக .....வருகின்ற மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில்... பிஜேபி 99 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெற்றுவிடும் என்று தன்னுடைய political strategist பணியின் மீது சத்தியம் செய்து கூறுகிறார் பிரஷாந்த் கிஷோர் !
எதிரியின் அளவீடே 99 எனும்போது...இரட்டை இலக்கத்தை தாண்டுகிற முயற்சியை ..அமித்ஷா & co சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதன் grudging acknowledgement இது என்றே புரிந்து கொள்ள வேண்டும் !
[ தற்போதைய West Bengal சட்டசபையில்... 16 பிஜேபி எம் எல் ஏக்கள் இருக்கிறார்கள்.]
924Arul Selva Perarasan S மற்றும் 923 பேர்
67 கருத்துக்கள்
149 பகிர்வுகள்
பிஜேபியை, நரேந்திர மோடியைக் கடுமையாக விமரிசிக்கும் கார்ட்டூனிஸ்ட் சதீஷுக்கு பிரசாந்த் கிஷோர் சவால் விடுவதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை போல இருக்கிறது! பயத்தில் உளறுவதெல்லாம் சவாலாகி விடுமா சதீஷ்?
இங்கே தமிழக அரசியல்களம் என்ன நிலையில் இருக்கிறது?
எஸ்ரா சற்குணம் மாதிரி முழுநேர திமுக பாதிரிகளை வைத்துக் கொண்டு வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
ஈரோட்டு ராம்சாமி மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், ராம்சாமி சொன்ன உருப்படியான விஷயம் நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என்பது
உண்மையில் அது நல்ல விஷயம், நடிகனுக்கு என்ன தெரியும் நடிக்கும் கூத்தாடி கூட்டத்துக்கு என்ன தெரியும் என்ற அந்த சாடல் ஒருவகையில் நியாயமானது
இங்கு சினிமாவினை அரசியலுக்கு இழுத்து வந்தது கருணாநிதி, ராம்சாமி பெயரை சொன்னால் 4 வோட்டு அல்ல ஒரு வோட்டும் விழாது, தன் பெயரை சொன்னால் அரை வோட்டும் விழாது என்பதை உணர்ந்த அண்ணாவும் கருணாநிதியும் ராம்சந்தரை முன்னிறுத்தி இங்கு நாசமாய் போன கலாச்சாரத்தை தொடங்கி வைத்தனர்
ராம்சந்திரன் காட்டிய மாயாஜாலத்தில் ஆளாளுக்கு சினிமா ஆசை வந்தாலும் ஜெயலலிதா இருந்தவரை கொஞ்சம் அடக்கி வைத்திருந்தார்
இதில் கருணாநிதியின் கூட்டும் இருந்தது
இதில்தான் பாக்யராஜ், டி.ராஜேந்தர்,கார்த்திக், சரத்குமார் , விஜயகாந்த் என எல்லா சினிமாக்காரர்களும் தவிட்டு கடைக்கு தள்ளபட்டனர்
ஒரு சினிமாக்காரனால் கெட்ட தமிழகம் இன்னொரு சினிமாக்காரனை தாங்காது என இருவரும் முடிவோடு இருந்தாலும் அடுத்தது யார் என இருவருக்குமே சொல்ல தெரியவில்லை
இரு பிம்பங்களுமே அப்படியே இருந்து மறைந்தன
இப்பொழுது மறுபடி ஆட்டம் அதிகரிகின்றது, கமலஹாசர், ரஜினி என ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் விஜயண்ணாவுக்கு கொம்பு சீவும் காட்சியும் நடக்கின்றது
1960ல் இருந்து 2020 வரை அரசியலுக்கு வருபவர்களில் 99% சதவீதம் பேர் சினிமா கோஷ்டியே
சினிமாவினை அரசியலில் கலக்கவிட்ட பாவம் தன் மகனையே சுழற்றி அடிக்கும் என கருணாநிதி நினைத்திருக்கமாட்டார்
அவரின் திட்டம் எதுவுமே உருப்படியல்ல, சொந்த வீட்டுக்கு கூட நலம் கொடுக்காதது என்பது இப்பொழுதுதான் எல்லோருக்கும் புரிகின்றது, அவர் குடும்பத்தாருக்கும் புரிகின்றது
இதை அன்றே சொன்ன எம்.ஆர் ராதாவின் வார்த்தைகளோடு நினைவு கூறலாம்
"டேய் ராமசந்திரா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல்?
உனக்கு என்ன தெரியும்னு நீயெல்லாம் அரசியல் பேசுற? அங்க காமராஜர் மாதிரி நல்லங்க இருக்காங்க, டெல்லில சாஸ்திரி மாதிரி தியாகிங்க இருக்காங்க
இந்த நாட்டுல சில பிணக்குகள் இருக்கலாம், எந்த நாட்டுல பிணக்கு இல்ல எல்லா நாட்டிலேயும் இருக்கு?
அத அரசியல் ஆக்காதே, அதுவும் நீ ஆக்காதே, அது பின்னாளையில பெரிய பிரச்சினையா மாறி மாநிலமே நாசமாகும்
ஒழுங்கா நடிச்சியா, நல்ல கருத்துக்கள சொன்னியான்னு இரு. அதுதான் இந்த நாட்டுக்கு பெரிய சேவை, அதைவிட நீ ஒண்ணும் அரசியல்ல போய் கிழிக்க போறதில்ல
இஸ்லாமியர்களுக்கு திமுகவை விட்டால் வேறு போக்கிடமே இல்லை என்ற நிலை மாற்ற அசாதுதீன் ஒவைசி தன்னுடைய AIMIM கட்சியுடன் (நயம் முஸ்லீம் கட்சி முத்திரையுடன்) வருகிற சட்டசபைத் தேர்தலில் களம் இறங்குகிறாராம்! எஸ்ரா சற்குணம் திமுகவுக்கு கிறிஸ்தவ ஓட்டுக்களைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கித் தர முடியுமா என்பது சந்தேகம்தான்! ஆனால் ஒவைசி..? இங்கே யாருடன் கூட்டுச் சேரப்போகிறார்?
விடைகாண முடியாமல் தமிழக அரசியல் களம் வெகுவாக இப்போதே குழம்ப ஆரம்பித்து விட்டது.
No comments:
Post a Comment