அரசியல் செய்தியா அல்லது செய்தியே அரசியலா என்று குழம்பும் அளவுக்கு, தமிழக அரசியல் களத்தில் நிறையக் காமெடி சமாசாரங்கள் நடந்து கொண்டே இருக்கும்தான்! அதைமட்டுமே நம்பி, ஆஹா, அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன?! நிகழ் நேர அரசியல் காமெடி அல்லது செய்திகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?
#உதை_வாங்கிய_உதயநிதி கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!
இது நேற்றைக்கே தெரிந்த செய்திதான்! வீடியோ கிடைத்தால் போடலாமே என நினைத்தேன். அரியலூர் மாவட்டத்துக்கு இசுடாலின் மகன் உதயநிதி தேர்தல் பிரசாரம் செய்யப்போனார். G.K மூப்பனார் தன தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக்க கொடுத்த ஒரு பொது அரங்கத்தில் மூப்பனார் பெயரைத் திமுக ஆசாமிகள் மறைத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்கள் உதயநிதி பயணித்த வாகனத்தை மறித்து, தங்கள் கோபத்தை ஒரு காட்டு காட்டியிருக்கிறார்கள். இதையடுத்து ட்வீட்டரில்
#உதை_வாங்கிய_உதயநிதி என்ற ஹேஷ்டாக் போட்டு பரவலாகக் கலாய்த்திருப்பதாக இங்கே செய்தி
சமீபத்தில் இதேமாதிரி பாமகவினரிடம் வாங்கி கட்டிக் கொண்ட தயாநிதி மாறனுக்கு இந்தச் செய்தி எப்படி இருந்திருக்குமோ? ஊகிக்க முடிந்தால் நீங்களும் அரசியலில் பிஸ்தா தான்! அடுத்த செய்தி முகநூலில் பார்த்தது: பேக்கேஜ் டூர்! இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயம்.
இன்னிக்கி அவனவன் குடும்பத்தோட கொஞ்சம் Wine குடிச்சமா, கேக், மட்டன் சாப்பிட்டமான்னு இருக்க விடாம புதுசா புதுசா என்னதடா கிளப்புறீங்க.
இன்று நண்பர் ஒருவர் ஒரு சர்ச் போர்டில் கண்டது :
கிருஸ்மஸ் இன்று சென்னையில் ஏசுவின் நவ க்ஷேத்திர யாத்திரை டூர் பேக்கேஜ் ஆரம்பம்!
மவுண்ட், லிட்டில் மவுண்ட், பெஸண்ட் நகர், சாந்தோம், மேரி மாதா சர்ச் (கோட்டை), (அரண்மனைக்காரத் தெரு) உட்பட 9 இடம்! ஒரே நாளில்! தவற விடாதீர்!
எஸ்ரா சற்குணம் சமீபத்தில் புலம்பித்தள்ளிய மாதிரி முந்தைய நாட்களை போல காசு,காணிக்கை இல்லாது ரொம்பவுமே தவிக்கிறார்களோ?
இசுடாலினாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை யாராவது யோசித்துப் பார்த்திருப்போமா? இசுடாலின் சந்தித்து வரும் பிரச்சினைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆளுக்காள் கட்சி ஆரம்பித்து பயமுறுத்துவது போதாது என்று உடன்பிறந்த அண்ணனும் தனிக்கட்சி தொடங்க இருக்கிறாராம்! ரஜனி தரப்பில் அறிவிப்பு வருகிறதோ இல்லையோ, மு.க.அழகிரி முந்திக்கொள்வார் போல இருக்கிறதே!
வைகுண்ட ஏகாதசியன்று ஏதும் உண்ணும் விரதம் போன்றவற்றை வீரமணி மற்றும் திராவிட கும்பல் தொடுக்கும் என எதிர்பார்த்தால் சத்தமில்லை
இதுபற்றி நம் திராவிட அன்பர்களிடம் விசாரித்தால் நீண்ட அமைதிக்கு பின் தாங்கள் கடுமையாக போராடுவதாக சொல்லிவிட்டு ஓடுகின்றார்கள்
அப்படி என்ன போராட்டம்? என ஒருவனை பிடித்து விசாரித்தால் அவன் இப்படி சொல்லிகொண்டிருகின்றான்
"அண்ணே, வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு இரவெல்லாம் தூங்காம இருக்கணுமாம், அது மூட நம்பிக்கை
இரவுல மட்டும் அல்ல, பகலிலும் தூங்கினால் ஒன்றும் ஆகாதுண்ணே, அதை நிரூபிக்க எல்லோரும் தூங்கிட்டு இருக்கோம்ணே, போராட்டத்தை கெடுக்காதீங்க..."
சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! இவ்வளவு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment