Tuesday, April 28, 2020

கார்டூனிஸ்ட் மதி துக்ளக்கில் எழுதிய கட்டுரை! என்ன செய்யப் போகிறோம்?

ஒரு கார்டூனுக்காகக் கொதித்தெழுகிறவர்கள் என்னமாதிரியான அரசியல் செய்பவர்கள் என்பது இங்கே பரவலாக எல்லோருக்குமே தெரிந்தது தான்! திராவிடம் என்பதே ஒரு சகிப்புத் தன்மையற்ற, அறிவற்ற முரட்டுக்கூட்டம்தான்  என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிற மாதிரி கார்டூனிஸ்ட் தினத்தந்தியில் கொரோனா விழிப்புணர்வுக்காக வரைந்த ஒரு கருத்துப்படம் மீதான வசைகள் தாக்குதல்கள் நிரூபித்திருக்கிறது.கருத்துச் சு’தந்திரம்’!
தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!
அண்மையில் நான் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
அதில் முதல் கார்ட்டூனுக்கு வருவோம்! ‘பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையின் தலையை மறைத்து வைரஸ் சித்திரத்தை வரைந்து கொச்சைப்படுத்தி இருக்கிறேன் நான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் தினத்தந்தி நாளிதழ் அதிபருக்கு கடிதம் எழுதி தனது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார்!
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதில் சிறிது நகைச்சுவை உணர்வைக் கலந்து கொடுப்பதற்கும் எனக்கு ஒரு சிலை தேவைப்பட்டது. அவ்வளவுதான்! அதைத்தான் அந்த கார்ட்டூனில் நான் வரைந்து இருந்தேன். பொதுவாகவே உலகிலுள்ள தலைவர்களின் சிலைகள் பெரும்பாலும் கையை உயர்த்திக் கொண்டு அல்லது நீட்டிக்கொண்டு இருப்பது போல்தான் அமைக்கப்படும். அது தலைவர்களின் ஆளுமையை காட்டுவதற்காகவா அல்லது சிலையின் அழகைக் கூட்டுவதற்காகவா என்பது எனக்கு தெரியாது. இக்கட்டுரையோடு வெளிவந்துள்ள புகைப்படங்களைப் பார்த்தால் ( படங்கள் அல்ல பாடங்கள்! ) உங்களுக்கு நன்றாகவே புரியும். அப்படி ஒரு சிலையைத்தான் நான் எனது கார்ட்டூனில் பயன்படுத்தி இருந்தேன்! தமிழகம் என்பதால் அந்தச் சிலைக்கு வேட்டி துண்டு அணிவித்திருந்தேன். அவ்வளவே!
அந்தச் சிலைக்குள் அண்ணா எப்படிப் புகுந்தார் என்பது எனக்கு இன்றும் புரியாத புதிர்! தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க. என்ற கட்சியை அண்ணா தோற்றுவித்த போது, மத நம்பிக்கைகளுக்கு எதிரான பெரியாரின் திராவிடர் கழகத்தின் கோஷங்கள் பெரிதும் தடையாக இருந்தது. அது தி.மு.க.வின் அரசியல் வளர்ச்சிக்கு பேராபத்தாக முடியும் என்பதை உணர்ந்த காரணத்தினால் தி.க.வின் இறைமறுப்புக் கொள்கைக்கு எதிராக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று புதிய கொள்கை விளக்கம் ஒன்றை அண்ணா கொடுத்தார்.
ஏனென்றால் அன்றைய தி.க. இறைமறுப்புக் கொள்கை என்பது அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் ஏளனம் செய்தது! அவற்றை சுவர்களில் எழுதியது! பிரச்சாரங்களில் பேசியது! இது தமிழக அரசியலை தி.க.வின் வரலாற்றை சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்! பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் அது இந்து மத உணர்வுகளை மட்டுமே காயப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது!
எனவே அவரின் இந்தப் புதிய சித்தாந்தத்தை விளக்கும் வண்ணமாக அண்ணா தனது வலது கையை உயர்த்தி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதைக் குறிக்கும் வண்ணமாக தனது ஆள்காட்டி விரலை ஒன்று என்பதுபோல் காட்டுவதாகஉருவாக்கப்பட்டதுதான் அந்தச் சிலை! எம்ஜிஆரால் நிறுவப்பட்டது. கிட்டத்தட்ட அது கிரிக்கெட் ஆட்டத்தில் அம்பயர் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுப்பது போல தனது வலது கையை மேலே உயர்த்தி ஆள்காட்டி விரலைக் காண்பித்து இருக்கும்!
நான் சிலையில் வரைந்து இருந்தது இடது கை. அதுவும் ஏதோ ஒரு திசையை காட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கும். அண்ணா சிலையில் உள்ளதுபோல வானத்தை சுட்டிக் காட்டுவது போல் இருக்காது! மேலும் நான் வரைந்த கார்ட்டூனில் சிலையில் உள்ள துண்டு இடது தோளில் இருக்கும்! ஆனால் நிஜமான அண்ணா சிலையில் துண்டு அவரது வலது தோளில் தான் இருக்கும்! பகுத்தறிவு இதையெல்லாம் ஆராயாமல் விட்டது ஏனோ!? அவர்களின் நோக்கம் ஒன்றுதான்!
இம்மாதம் 14ஆம் தேதி தினத்தந்தி நாளிதழில் வந்த ஒரு புகைப்படத்தையும் இக்கட்டுரை உடன் இணைத்துள்ளேன். படக் குறிப்பு உங்களுக்கு விஷயத்தை உணர்த்தும்!
மெக்சிகோவில் விழிப்புணர்வுக்காக இதை பயன்படுத்தி இருக்கிறார்கள்! இப்படி ஒரு நிகழ்வு நம் நாட்டில் நிகழ்ந்திருந்தால் கற்பனை கூட செய்ய முடியாத சேதங்களை ஒரு பெரிய கூட்டம் அரங்கேற்றி இருக்கும்!

ஆனால் படத்தைப் பார்த்தால் ஒன்று புரிகிறது... மெக்சிகோ போன்ற மேலை நாடுகளில் பகுத்தறிவை போதிக்கும் தலைவர்கள் இல்லை! பகுத்தறிவு இன்னும் பிறக்க கூடவில்லை என்பதையே காட்டுகிறது!

ஏதோ ஒரு சிலையை வரைந்து விழிப்புணர்வை ஊட்டுவதற்காக அதன் தலையில் கொரோனாவை வரைந்ததை குற்றமென்று பார்ப்பவர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து, அதன் மூலம் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் பணயம் வைத்து, சமூகத்தைக் காப்பதிலும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பல முயற்சிகள் செய்து வரும் தமிழக காவல்துறையினர் பலர், தங்களது முகங்களில் கொரோனா போன்ற மாஸ்க்கைப் போட்டு மூடி மறைத்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்களே..! அவர்கள் என்ன கோமாளித்தனமா செய்கிறார்கள்? அதையே ஒரு சிலை மூலம் செய்தால் என்ன தவறு? அதுவும் ஒரு கார்ட்டூன் மூலமாக!
'கொரோனா முன்னேற்றக் கழகம்' என்று இந்தக் கார்ட்டூனில் குறிப்பிட்டிருந்தேன். பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வந்த புகைப்படங்கள் தான் இத்தகைய கார்ட்டூனை நான் வரைவதற்குக் காரணமாக இருந்தது. வழக்கம்போல் எனது பணியைத்தான் நான் செய்தேன். சமூக இடைவெளியை நாம் பின்பற்றாவிட்டால், கொரோனா நோய்த் தொற்று குறைவதற்குப் பதிலாக முன்னேறுவதற்கு தான் வாய்ப்பு அதிகம் என்பதை மனத்தில் கொண்டு கொரோனா முன்னேற்றக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரிசையில் இதோ சமீபத்தில் தோன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரை தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொண்டதுதான். ஆனால் நான் குறிப்பிட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை திரித்து கார்ட்டூன் போட்டதாக அதன் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். மற்ற எந்தக் கட்சிக்குமே தோன்றாத இந்த சந்தேகம் ஸ்டாலினுக்கு மட்டும் எப்படி வந்தது? அல்லது இவ்விஷயத்தில் அவருக்கு ஏதேனும் குற்ற உணர்ச்சி இருக்கிறதா? எனக்கே புரியவில்லை!
ஆக மொத்தம் இரண்டு கார்ட்டூன்களிலுமே எனக்கு எள்ளளவும் எந்த உள்நோக்கமும் இல்லை. திரித்துக் கூறியது திமுக.,வும் அவர்களை அண்டி வாழும் சில பகுத்தறிவுவாதிகளும்தான்!
எனது 21 வயதில் கார்ட்டூன்கள் போட ஆரம்பித்தேன். துக்ளக், சாவி, கல்கி, நியூஸ் டுடே, கதிரவன், இதயம் பேசுகிறது, தினமணி... என பல்வேறு பத்திரிகைகளில் இதுவரை 17,000 கார்ட்டூன்கள் வரைந்து இருக்கிறேன்.
சுமார் 28 ஆண்டுகள் பணிக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வு எனக்கு தேவைப்பட்டது. பல வருடங்கள் தள்ளிப் போட்டு இருந்த எனது சொந்தப் பணிகள் பலவற்றை செய்து முடிக்க வேண்டும் என்பதும் அதற்குக் காரணம்!
ஆனால் சுமார் 400 கோடி மக்களை உலகம் முழுக்க வீட்டில் முடங்கி இருக்கச் செய்திருக்கிறது கொரோனா கிருமி! மனிதகுல வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை! மக்கள் அனைவருமே ஒருவித மன இறுக்கத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்! ஒருபுறம் வருமான இழப்பு; மறுபுறம் இந்த நோயின் பேராபத்து. இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
விரைவில் இதிலிருந்து வெளியே வரவேண்டும்! இந்நோய் உலகைவிட்டு விலக வேண்டும்! அதற்கான விழிப்புணர்வை எனது கார்ட்டூன்கள் மூலம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்! இந்த நேரத்தில் நான் எனது பணியைச் செய்யாமல் இருக்கக் கூடாது என்றுதான் விழிப்புணர்வு சம்பந்தமான கார்ட்டூன்கள் மட்டும் போடலாம் என்று ஆரம்பித்தேன்! இது எத்தனை பேரைச் சென்றடைவது சாத்தியமோ அத்தனை பேரைச் சென்றடைவது நல்லது என்று நினைத்ததால் தினத்தந்தி நாளிதழ் மற்றும் டி.வி. இல் எனது கார்ட்டூன்களை கொண்டுவர முயற்சி செய்தேன்! சுமார் இரண்டு வார காலம் பெரும் வரவேற்புடன் வந்தது!
இன்று நின்று போனது தினத்தந்தி நிறுவனத்திற்கும் சரி, எனக்கும் சரி... எந்த நஷ்டமும் இல்லை! ஆனால் திரித்துக் கூறும் குயுக்திகளால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து வந்திருக்கிறது! இது நல்லதல்ல! இனி ஒவ்வொரு கட்சிகளும் இத்தகைய பாணியைக் கையாள ஆரம்பித்தால் ஒரே ஒரு விஷக் கிருமியால் உலகமே இன்று ஊரடங்கி இருப்பதுபோல், ஊடகங்களும் விரைவில் அடங்கிப் போகும்!


கார்டூனிஸ்ட் மதி தன்னுடைய தரப்பைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். நமக்கு முன்னாலிருக்கிற ஒரே கேள்வி --  என்ன செய்யப்போகிறோம்? சுபவீ செட்டியார், இசுடாலின் மாதிரியானவர்களுடைய கீழ்த் தரமான அரசியலை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோமா ? இவர்கள் அனுமதிக்கும் செய்திகளை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்பது  தலையெழுத்தா என்ன? இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. புகட்டுவது நம் கைகளில் தான் இருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? கொஞ்சம் சொல்லுங்களேன்!


தொடர்புடைய பதிவு  

இரண்டு கார்டூன்கள்! பின்னாலிருக்கும் அரசியல்!மீண்டும் சந்திப்போம்.      

Sunday, April 26, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

நேற்றைக்குப் பார்த்த வீடியோக்களில் சாணக்யா தளத்தில் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று குறித்த பல புதிய தகவல்களைச் சொல்லும் 38 நிமிட வீடியோவும் ஒன்று. எப்படி வூஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்தப் புதிய 
கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. எப்படிப் பரவியிருக்கக் கூடும் என்ற பல புதிய தகவல்கள் இந்த உரையில் இருக்கிறது.
 
 

ரவீந்திரன் துரைசாமி போன்ற அரசியல் விமரிசகர்களுடன் பேசிப் பேசி ஆதன் தமிழ் மாதேஷுக்கும் கூட அகில இந்திய அரசியல் பற்றி பேசுகிற ஆசை வந்துவிட்டது போல! தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்கு பேசக்கூடியதாக எந்தவொரு அசைவும் இல்லை என்பதால் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் பற்றி மாதேஷ் கேள்வி கேட்க ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனைச் சொல்கிற காமெடிக் கொடுமையையும் பார்த்தேன்.


வீடியோ 25 நிமிடம். கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடப்பதில் பொழுதுபோக்கச் சிறந்த காமெடியாக இந்த விவாதத்தை சிபாரிசு செய்கிறேன்.

இன்றைக்குப் படித்ததில் பிடித்ததாக 

மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை டி.வி. பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விளம்பர வருமானம் இல்லை. அதேபோலதான், டிஜிட்டல் மீடியாவிலும் பார்வையாளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விளம்பர வருவாய் இல்லை.

இந்த நிலைமையில், இந்தியாவில் புகழ்பெற்ற பல ஊடகங்கள் ஊதியவெட்டு, ஆட்குறைப்பு என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சிக்கலில்லை. 5 முதல் 7.5 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்குவோருக்கு 10% சம்பள வெட்டு. 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15% சம்பள வெட்டு. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20% சம்பள வெட்டு… என்று போகிறது.

’’தற்போதைய நிலைமையில் நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக’’ குறிப்பிடும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, ஆண்டு ஊதியம் 6 லட்சம் வரை வாங்குவோருக்கு சம்பள வெட்டு செய்யவில்லை. அதைவிட அதிக ஊதியம் வாங்குவோருக்கு 5% முதல் 15% சதவிகிதம் வரை ஊதியவெட்டை அறிவித்துள்ளது.

News Nation Network நிறுவனம், தனது இங்கிலிஷ் டிஜிட்டல் டீம் 15 பேரை மொத்தமாக வேலையை விட்டு அனுப்பி, அந்த பிரிவையே கலைத்துவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போலவோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போலவோ இவர்கள் அதிக ஊதியம் பெற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்கள். அந்த வேலையும் போய்விட்டது.

புகழ்பெற்ற டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் ஒன்றான The Quint, தனது 45 ஊழியர்களை காலவரையற்ற; ஊதியமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது. இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் வேலை வழங்கப்படலாம். அது அப்போதைய சூழலை பொருந்தது. இப்போதைக்கு வேலை இல்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின், ஞாயிறு இணைப்புகளில் ஒன்றான The Life பிரிவில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

தி இந்து குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி…. ஆண்டு ஒன்றுக்கு… 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 8%, 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு 12%, 25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 16%, 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20%, 35 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு 25% என்ற ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களின் நிலைமை தெரியவில்லை. நிச்சயம் அங்கும் இத்தகைய கெட்டசெய்திகளை எதிர்பார்க்கலாம்.

இதை எழுதுவதற்குத்தரவாக இந்தச் சுட்டியில் உள்ள செய்தி 

மீண்டும் சந்திப்போம்.   

Friday, April 24, 2020

அன்னை என்னும் அற்புதப் பேரொளி! நிலையாகத் தங்க வந்த நாளின் நூற்றாண்டு நிறைவு!

இன்று ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கத்  திரும்பிய நாளின் நூற்றாண்டு நிறைவு .ஒவ்வொரு ஆண்டுமே ஏப்ரல் 24 பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரம தரிசனநாளாக இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையை தியானிக்க உதவியாக ஒரு வீடியோ 25 நிமிடம் 

 

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன். எங்கள் ஹ்ருதயத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருந்து திருவருள் செய்யவேண்டும்! தாயே! உனது பிரியத்துக்குத் தகுதியானவர்களாக எங்களை ஆட்கொள்ள வேண்டும். 

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம   

Wednesday, April 22, 2020

அடடே! மதி கார்டூன் ஸ்பெஷல்

தினத்தந்தி மாதிரி ஒரு பச்சோந்தி ஊடகத்திலிருந்து கார்டூனிஸ்ட் மதி வெளியேற்றப்பட்டு இருப்பது பல வகையில் அவருக்கே மிகவும் நல்லதுதான்! அவர் காலமும் கார்டூன்களும் நிச்சயம் வெல்லும்! வாசகர்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்! வாழி நலம் சூழ! அடடே! மதி வரைந்த கார்டூன்களின் சிறு தொகுப்பாக  இந்தப்பதிவு.இசுடாலின் தினத்தந்தி ஆதித்தனுக்கு கடிதம் எழுதினார். தினத்தந்தியும் வருத்தம் தெரிவித்தது. கார்டூனிஸ்ட் மதியை வீட்டுக்கு அனுப்பியது. 


ஊடகங்களின் மீதான தங்களுடைய பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட மாதிரியும் ஆயிற்று! தயாநிதி மாறன் பிரதமரையும் மக்களையும் பிச்சைக்காரர்கள் என்று உளறிய விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பிய மாதிரியும் ஆயிற்று!மீண்டும் சந்திப்போம்/    

Tuesday, April 21, 2020

இரண்டு கார்டூன்கள்! பின்னாலிருக்கும் அரசியல்!

கார்டூனிஸ்ட் அடடே!மதி  தினத்தந்தியில் வரைந்த ஒரு கார்டூனை வைத்து தீராவிடங்கள் ஒரு விஷபிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்தக் கார்டூனில் எந்தவிதமான அரசியலும் உள்நோக்கமும் இல்லாதபோதே இப்படி! சுபவீ செட்டியார் ரொம்பவுமே குதித்திருக்கிறார். இசுடாலின் தினத்தந்தி ஓனருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தினத்தந்தியும் கார்டூனுக்காக வருத்தம் தெரிவித்து விஷயத்தைக் கைகழுவி விட்டது. ஆனால் சுபவீ செட்டியார் குதித்ததற்கு அண்ணாதுரையின் பழைய கதைகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்திருப்பது மட்டும்தான் மிச்சம்..  

   
S Shanmuga Nathan பெறுநர் 

**திராவிட பயங்கரவாதம்**

ஒரே ஒரு கார்ட்டூன், திராவிட பயங்கரவாதிகளின் சகிப்புத்தன்மையை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இத்தனைக்கும் அது கேலிச்சித்திரம் அல்ல, அது ஒரு கருத்துப்படம். அந்தக் கருத்துப் படத்தில் "அவரையோ", அவர் கொள்கையையோ எதுவும் சொல்லாமல் ஏதோ ஒரு சிலை என்கிற கருத்தில் தான் வரைந்திருக்கிறார் ஓவியர்.

உடனே அவரை "பார்ப்பனப் பாம்பு" என்று வசை பாடி விஷம் கக்கி இருக்கிறது திராவிடத் தேள் சுப வீ. திராவிட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் மட்டும் தான் என்ற 1960/70 மன நிலையில் இருக்கிறார் "பேராசிறியர்". பாவம் களநிலவரம் தெரியவில்லை அவருக்கு,

இதிலும் கூட ஓவியர் பிராமணர் அல்ல. இருந்தாலும் வேறு யாரையும் திட்டுவதற்கு தைரியம் இல்லாத கோழைகள், பிராமணனை தேர்ந்தெடுத்து வசை பாடுகிறது.

மீசை வைப்பதல்ல வீரம். எந்த நிலையிலும் உண்மை பேசுவதுதான் உண்மையான வீரம். பிணத்திலும், தோசையிலும் சாதி பார்க்கும் பேடிக்கூட்டதுக்கு ஓவியர் மதி என்ன சாதி என்று தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் அவர் "சாதியை" சொல்லாமல் "பார்பனப் பாம்பு" என்கிறது இந்த விஷத்தேள். அவ்வளவு வீரம் அவருக்கு.

ஓவியர் மதி மன்னிப்பு கேட்காவிட்டால் காலம் செருப்படி கொடுக்கும் என்று பேசுகிறார். இவருக்கு ஒன்று புரியவில்லை, இவர் சுட்டிக்காட்டும் இதே காலம் தான் இவர்களுக்கு இப்பொழுது செருப்படி கொடுத்துக் கொண்டிருக்கிறது, இவர்கள் முன்னம் செய்த, இன்னும் செய்து கொண்டிருக்கின்ற பாவத்திற்கு. அந்த அடி தாங்காமல் கத்துகிறார்.

திராவிட பயங்கரவாதிகள் எத்தனை வகையான கேலிச்சித்திரங்கள் வரைந்திருப்பார்கள்? இனிய உளவாக இன்னாதது எத்தனை பேசி இருப்பார்கள்? அவர்கள் கொடுத்த மருந்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு திருப்பிக் கொடுத்தால் கசக்கிறது, இவர்களுக்கு.

திராவிடம் என்பதே ஒரு சகிப்புத்தன்மையற்ற, அறிவற்ற முரட்டுக்கூட்டம் என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறார் இவர்.

நேத்து சொன்னேன்ல... அண்ணாதுரையின் வரலாறு இனி இணையம் பூராம் நாறும்னு... இதோ ம.வெ ஜி(Ma Venkatesan) சின்ன சாம்பிள் அவிழ்த்து விட்டிருக்கிறார்....

பாரதிதாசனை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்? - 1

தினத்தந்தியில் அண்ணாதுரையின் சிலையின் தலையில் கொரானோ படம் வைத்து வரைந்ததற்கு நாய் என்றும் அவரை செருப்பால் அடிக்கும் காலம் வரும் என்றும் சுபவீ செட்டியார் சொல்லியிருக்கிறார்.

அண்ணாதுரையை இதைவிட மிக கேவலமாக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர் பெயரில் இப்போதும் திமுக விருது கொடுக்கிறது. அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகிறது என்பது சுபவீக்கு தெரியுமா?

அண்ணாதுரையை மிக கேவலமாக விமர்சித்தவர் சாதி ஒழிப்புப் போராளி பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் அண்ணாதுரையைப் பற்றி எழுதுகிறார் :

....அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று. ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது. ( குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18)
.............................

இதைவிட ஒருவர் அண்ணாதுரையை கேவலப்படுத்த முடியுமா? எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்?

Surya Ramadoss

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் "பொதுமக்கள்" என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்! இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.! கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான மதசண்டையை இது பிரதிபலிக்கிறது!
எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையை, கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை "பொதுமக்கள்" என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.. டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்களை இதே நபர்கள்தான் "தனியார் அமைப்பினர்" என அழைத்தனர்.
முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்..
சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது! அதே போல கிறித்தவ மதத்தில், வெள்ளை அங்கி பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!
கிறித்தவ மதத்திற்கு சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தையே.. தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் "பாதர்கள்" போல, நிஜ வாழ்க்கை பாதர்கள் இல்லை.!
எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்! கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது!
உங்கள் பிரிவு பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மசானங்களில் கூடி, கொரானாவை தடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்!

நன்றி ; Saravanan Swamy S

மீண்டும் சந்திப்போம். 

Sunday, April 19, 2020

#மோடிவெறுப்பை போணியாக்குவது எப்படி? சண்டேன்னா சுகமான பாட்டு!

நரேந்திர மோடியை வெறுப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற மூன்று தொழில்முறை நபர்கள் கூடிப்பேசினால் என்ன நடக்கும்?  அந்த மூன்று பேர்களில் ஒருவர் ஹிந்துவிலிருந்து வெளியேறி The Wire தளத்தை நடத்துகிற சித்தார்த் வரதராஜனாக இருந்தால் முகத்தை வெளியே காட்ட வேண்டியது இல்லை. அவருக்காக மோடிவெறுப்பைக் கக்குவதற்கு இரண்டு பேர் இருந்தாலே போதும். கக்குவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்து வெளியே பரவவிட்டால் போதாதா? மோடி வெறுப்பில் பிரபலமான ஊடகக்காரர் கரண் தாப்பர் நேர்காணலை நடத்துகிறவராகவும், பெயர் வெளியே தெரியாத நாட்களில் பிஜேபி கட்சிக்காக வேலை செய்தவராகவும், பிஜேபியுடனான உறவு முறிந்தபிறகு தனிக்கடை ஆரம்பித்து தேர்தல் உத்திவகுப்பவராக பிரபலமான பிரசாந்த் கிஷோர் பேட்டி கொடுப்பவராகவும் இருந்தால் எப்படியிருக்கும்? பாருங்கள்.

 
இந்த 49 நிமிட நேர்காணலில் கரண் தாப்பர், பிரசாந்த் கிஷோர், The Wire சித்தார்த் வரதராஜன் மூவரும் மோடிவெறுப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருப்பதைப் புரிந்துகொள்ள பெரிய அளவுக்கு அரசியல் ஞானம்  வேண்டியதே இல்லை. Modi is Not Caring Enough, It’s His Greatest Weakness’: இப்படி பிரசாந்த் கிஷோர் சொல்வதாக வீடியோவுக்குத் தலைப்பு வைத்தாயிற்று. என்ன முக்கிப்பார்த்தும் கூட நேர்காணலின் தலைப்பில் சொன்னதை நியாயப்படுத்த முடியவில்லை! மோடியுடன் பழகிய அனுபவத்தில் அவருடைய வலிமை என்ன என்பதைக் கரண் தாப்பர் கேள்விகேட்டு பிரசாந்த் கிஷோர் சுற்றிவளைத்துப் பதில் சொல்வதற்குள்ளாகவே முதல் இருபது நிமிடம் ஓடிவிடுகிறது. அப்படி என்ன வலுவான விஷயங்களை மோடியிடம் பார்த்தாராம்? RSS பிரசாரகராக 15 வருடம், பிஜேபி கட்சிப் பணியில் 15 வருடம், அப்புறம் அரசியல் தலைவராக 15! வருடம் என்று 45 வருட அனுபவம், அடுத்தவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பவர் என்று நிறுத்தி நிறுத்தி சொல்லும்போதே பிரசாந்த் கிஷோருக்கு நரேந்திர மோடியைப் பற்றி விசேஷமாகச் சொல்கிற அளவுக்குப் பரிச்சயம் இருந்ததில்லை என்பதான குட்டு உடைபடுவது தான் மிச்சம்! கொஞ்சம் பொறுமையாக இந்தத் தமாஷாவைப் பார்க்க முடிந்தால் பிரசாந்த் கிஷோர் எப்படி வெற்றிகரமான தேர்தல் உத்தி வகுப்பாளராக ஆனார் என்கிற கேள்விக்கும் கூட விடை புரிய வரலாம்! 

இதை இன்னொரு விதத்திலிருந்து பார்க்கலாம்! ஜனங்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஜனங்களுக்கு கற்றுக் கொடுப்பது என்ற இரண்டு விஷயங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சொல்லப்படுவதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் நரேந்திர மோடியை விட அதிக கால அனுபவம் உள்ளவர்களுண்டு. ஆனால் ஏன் நல்லகண்ணு போன்றவர்களால் தங்களுடைய கட்சியில் உள்ளவர்களுக்கே ஒரு தெளிவான அரசியல் பார்வையைக் கற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்! இன்னும் தெளிவான விடை கிடைக்கலாம்!  

ஒரிஜினலாக இந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு பழைய பாக்கியராஜ் படமான தூறல் நின்னுபோச்சுக்குத் தான் திரைப்பட விமரிசனமாக ச்சும்மா ஜாலிக்கு எழுத உத்தேசித்திருந்தேன். கரண் தாப்பரும் பிரசாந்த் கிஷோரும் குறுக்கே வந்து 49 நிமிடங்களை எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்பதால் பார்த்து ரசிக்க அந்தப்படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் இரண்டு அருமையான பாடல்கள்! 

         
 தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி!
   

ஏரிக்கரைப் பூங்காற்றே! நீ போற வழி தென்கிழக்கோ?  
 


மீண்டும் சந்திப்போம்! 

Wednesday, April 15, 2020

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வைரஸ் (Covid-19) சீனாவில் பரவும் இரண்டாவது அலை!

சீனாவில் இருந்து பரவிய வூஹான் வைரஸ் தொற்று அடங்கிவிட்டது போலச் சொல்லப் பட்டாலும், சீனாவில் அதன் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்துக் கொண்டு வருவதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னால் சீனாவிலிருந்து கிளம்பிய சார்ஸ் வைரஸ் போல அல்லாமல், கொரோனா வைரஸ் தொற்றின் வீச்சு உலகை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த 18 நிமிட வீடியோவில் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்! பிளாக்கரில் யூட்யூப் வீடியோக்களை இணைக்க முடியாமல் சுற்றலில் விடுவது மறுபடியும் ஆரம்பித்திருப்பதில், இங்கே எழுதுவதைத் தடைசெய்கிற மாதிரியே இருக்கிறது.

 
NTD refers to the novel #coronavirus, which causes the disease COVID-19, as the CCP virus because the Chinese Communist Party's coverup and mismanagement allowed the virus to spread throughout China and create a global pandemic இப்படி எதனால் கொரோனா வைரசை சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வைரஸ் என்றே சொல்கிறோம் என்பதற்கு ஒரு பொருத்தமான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள். பல தேசங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய வரலாற்றைக் கொஞ்சம் துருவிப் பார்த்தோமானால் எந்தக் காலத்திலும் அவை  உண்மையைச் சொன்னதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆச்சரியப் பட எதுவுமில்லை. உலகநாடுகளின் நம்பிக்கையைச் சீனா சுத்தமாக இந்த வைரஸ் தொற்று விவகாரத்தில் இழந்துவிட்டதை அலிபாபா குழுமம் நடத்தும் South Cbina Morning Post தளத்திலேயே ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டதாக வேண்டிய அளவுக்கு நிலைமை முற்றிவருகிறது. சீனத் தயாரிப்புக்களிலிருந்து முற்றொட்டாக விலகி விடும் அளவுக்கு இங்கே எந்தநாடுமே தயார் நிலையில் இல்லை என்றாலுமே கூட, அதற்கான வலுவான அடித்தளத்தை, கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி உண்மையை மூடி மறைத்த செயல், உருவாக்கிக் கொடுத்துள்ளது.
குறைந்த கூலி, cost cutting,outsourcing என்பன தேய்வழக்காகிப்போகிற காலம் உருவாகி வருகிறது.

மீண்டும் சந்திப்போம்.

    

Sunday, April 12, 2020

கூகிள்! அரசியல்! படித்ததில் பிடித்தது! #TSபாலையா

நடுவில் இரண்டுமூன்று நாட்களாக வீடியோக்களை பதிவில் இணைக்க முடியாமல் இருந்தது இன்றைக்குச் சரியாகி இருக்கிற மாதிரித் தெரிகிறது. ஆனால் கூகிளை முழுக்க முழுக்க நம்பியிருப்பது படுமுட்டாள்தனம் என்பதைக் கடந்தகால அனுபவங்கள் கற்றுக் கொடுத்தும் கூட கண்மூடித்தனமாக Firefox இல் இருந்து Chrome ப்ரவுசருக்கு மாறி, அதையும் personalised browser ஆகப்பயன்படுத்திவந்தது பெரும் தவறோ என்று யோசிக்க வைத்திருக்கிறது.


பானாசீனா செட்டியாருக்குத் தானும் பரபரப்புச் செய்திகளில் இடம்பெற்றே ஆகவேண்டும் என்ற தவிப்பிருக்காதா என்ன? இந்த நாறவாய் மட்டும் இல்லாமலிருந்தால் சீனாதானாவைத் தெரு நாயோ, காக்கையோ தூக்கிக் கொண்டு போயிருக்குமோ? இந்த 32 நிமிட நேர்காணலைப் பார்த்தபோது லைம்லைட்டில் இருந்தே ஆகவேண்டுமென்கிற தவிப்பு இருக்கிற மாதிரியே தமிழக சேனல்களுக்கும் இந்தமாதிரி குபீர் பொருளாதார மேதை தேவைப்படுகிறார் என்பது வெளிப்பட்டது. நெருக்கடியான நேரத்திலும் கூடத் தமிழக அரசியல்வாதிகள் எவரும் தங்களுடைய குறுகிய அரசியல் குட்டையில் இருந்து வெளியே வரத் தயாராக இல்லை என்பதும் தெரிந்த விஷயம்தான்.  அரசியல் குப்பைகள்!

முகநூலில் சில பகிர்வுகள் உண்மையிலேயே வித்தியாசமானதாகவும், வாசித்ததில் மிகவும் பிடித்தமானதாகவும் இருப்பதை மறுக்க முடியாது! அந்த வகையில் நடிகர் T S பாலையா பற்றி:


Balaguru Kalyanasundaram  நேற்று, பிற்பகல் 4:38

சில ஆளுமைகளைப்பற்றி நம்மிடமிருக்கும் தரவுகளை வைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவைத்திருப்போம் . அது பலநேரம் நிதர்சனத்தில் உண்மையாய் இருப்பதில்லை. கிக்கிரி பிங்கிரி என கோமாளித்தனம் செய்யும் நகைச்சுவை நடிகர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திரபாபு , காளி N .ரத்தினம் போன்றவர்களின் உண்மையான ஆளுமை பற்றி தெரிந்த போது விக்கித்து நிற்க வேண்டியிருந்தது . அந்த வரிசையில் இன்று வாசித்த `'நூற்றாண்டு கண்ட T.S. பாலையா `' புத்தகம் அவர் பற்றிய நிறைவானதொரு பிம்பத்தை கொடுத்து பிரமிக்க வைத்தது .

1.பாலையா ஒரு நல்ல குணச்சித்திர & நகைச்சுவை நடிகர் , 2. அவர் சிவாஜி எம்ஜிர் காலத்திய நடிகர் . என்று இதுநாள் வரை நினைத்திருந்தது எவ்வளவு தவறு என்று புரியவைத்தது புத்தகம் . 1936 ல் திரைத்துறையில் நுழைந்தவர் 1950 ல் உச்சம் தோட்டிருக்கிறார் . அந்த காலகட்டத்தில் தொடர்ந்து பாகவதர் , பியூ சின்னப்பா விற்கு எதிராக வில்லன் என்றால் பாலையாதான் என்று நின்று களமடியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் எல்லிஸ் .டங்கன் சதிலீலாவதி ,அம்பிகாபதி , மீரா என தன் படங்களில் பாலையாவை தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறார். இவரது திறமையை இனங்கண்டு கொண்டதையும் தன் நடிப்புக்கு உயிர் தண்ணீர் ஊற்றியதையும் நன்றியுடன் நினைவு கூருகிறார் பாலையா .

`பி எஸ் வீரப்பா & எம் `ஆர்`ராதா போன்றோர்களுக்கு முன்னோடி வில்லனாக துலங்கியவர் .செறிவான கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடுங்கள் பாலையாவை என்ற நிலையில் இருந்திருக்கிறார் . உதாரணமாக அண்ணாவின் வேலைக்காரி நாடகம் படமாக்க பேச்சுவார்த்தை நடந்தபோது , இயக்குனரிடம் அண்ணா இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறார் அதில் ஒன்று யாருக்கு முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தை கொடுக்கப்போகிறீர்கள் என்பது ! "பாலையா" என்றதும் நிறைவாய் ஒப்புக்கொண்டுள்ளார்.ஆரம்பகாலங்களில் பாலையாவின் பெயருக்கு பின்னேதான் எம்ஜிரின் பெயர் திரையில் தோன்றுமென்பதிலிருந்து அவரின் செல்வாக்கு நமக்கு புரிகிறது . இருவரும் ஒன்றாக "சதிலீலாவதி "யில் அறிமுகமானவர்கள் , எம்ஜியார் முக்கியநட்சத்திரமாக 20 ஆண்டுகள் ஆனது . பாலையாவுடன் இணைத்து நடிக்கையில் அவரே ரசிகர்களை ஆக்ரமிக்கிறார் என்று ஒரு கட்டத்தில் அவருடன் நடிப்பதையே தவித்திருக்கிறார் எம்ஜிஆர் .

பாலையாவின் நடிப்பில் அடிப்படையிலேயே நகைச்சுவை தொனி உண்டென்பதை ஆரம்பகாலங்களில் சில வில்லன் கதாபாத்திரங்களில் பளிச்சிட செய்தவர் ,ஒரு கட்டத்தில் கொடூர வில்லனிலிருந்து குணச்சித்திர நடிப்புக்கு நகர்ந்திருக்கிறார் அதற்கு தகுந்தாற்போல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்திருக்கிறது பிற்காலத்தில் AP நாகராஜன் ,ஸ்ரீதர், K .பாலசந்தர் போன்றோர் அவரின் மகோன்மதம் உணர்ந்து தங்கள் படைப்பில் பயன்படுத்தியுள்ளனர் .

காதலிக்க நேரமில்லையில் அந்த கதாபாத்திரத்திற்கு பாலையாதான் என்ற முடிவோடு பாலையாவை பார்க்க போகும் ஸ்ரீதரிடம் ரேஸ் ஆர்வமுள்ள பாலையா சனி ஞாயிறு படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற விஷயம் சொல்லப்படுகிறது . கதையை சொல்லி ஒப்புகொள்ளவைத்துவிட்டு பாலையாவிடம் கேட்டேவிடுகிறார் . ஆமாப்பா உண்மைதான் எனக்கு கிண்டில மனச வச்சிக்கிட்டு ஸ்டுடியோக்குள்ள நிக்கமுடியாதப்பா , என்னையும் ஏமாத்திகிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு எதுக்கு . அதான் படப்பிடிப்புக்கு போறதில்லை என்கிறார் பாலையா .புரியுது இருந்தாலும் இந்த படத்துக்கு நீங்க சனி ஞாயிறும் படப்பிடிப்புக்கு வரணும். உங்க கதாபாத்திரம் படம் முழுதும் இருக்கு . கொஞ்சம் யோசிச்சவர் . சரி வரேன் என்றவர் சொன்னபடி காலத்தால் அழியாத அந்த கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆரம்ப அத்தியாயமாக விளங்கியவர் .தனது 58 வயதில் மரணமடைந்தார் .

மீண்டும் சந்திப்போம்  

Friday, April 10, 2020

அக்கம் பக்கம்! இன்று என்ன சேதி?

1950களில் இந்தோ சீனி பாய் பாய் என்ற முழக்கங்களை காங்கிரஸ்காரர்கள் எழுப்பிக்கொண்டு  இருந்த கதை இன்றைய தலைமுறை அறிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கை என்ற ஒரு மாயஉலகில் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எழுந்த கோஷம் அது. 1962 இல் இந்திய சீனப்போருக்குப் பிறகு அந்த கோஷம் என்ன ஆனது என்பது அந்த நாளைய CONகிரஸ் ஆசாமிகளுக்கே நினைவிருக்காது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோசீனி பாய்பாய் கோஷம் கடந்தவாரம் மறுபடி சீனத்தரப்பிலிருந்து வெகுவாகத் தம்பட்டம் அடிக்கப் பட்டிருக்கிறது என்பது காலமும் கொரோனா வைரசும் ஏற்படுத்தித் தந்திருக்கிற விசித்திரம்! இங்கே ஹிந்து நாளிதழுக்கும் செலெக்டிவாக வேறுசில ஊடகங்களுக்கும் இந்திய-சீன் உறவு: எழுபது ஆண்டுகள் என்று முழுப்பக்க விளம்பரங்கள் சீன தூதரகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டதைக்கூட  கவனித்திருக்க மாட்டோம் தானே! என்று இந்தப்பக்கங்களில் எழுதியதன் தொடர்ச்சியாக இன்று அக்கம் பக்கம்! என்ன சேதி தளத்துக்காக  

அல் ஜஸீராவின் இன்றைய 26 நிமிட வீடியோ சொல்வதென்ன? கொரோனா வைரஸ் தொற்றைக் குறித்து சீனா இதுவரை உண்மைகளை மறைத்தே வந்திருப்பதில் பல நாடுகளுக்கும் சீனாவின் மீதான நம்பிக்கை சுத்தமாகக் காலி! உலகெங்கும் கொரோனா வைரசுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில், அதற்கான விலையைச் சீனா கொடுத்தே ஆக வேண்டும் என்கிற குரல்கள் பெருக ஆரம்பித்திருக்கின்றன. 

 
 

ப்ரம்ம செலானி மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

There are many lessons to be learned from the Wuhan coronavirus pandemic. But one is already clear: China needs to be isolated from the civilized world until its behavior improves. We are in the current situation, with deaths and economic devastation worldwide, because China handled this outbreak with its trademark mixture of dishonesty, incompetence and thuggery. Were China a more civilized nation, this outbreak would have been stopped early, and with far less harm, inside and outside of China.

As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.

As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from AustraliaEurope, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.”  இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப் படிக்க.  

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும்  தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம்   கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?! 

இது இன்று இந்தப்பக்கங்களில் எழுதப்பட்டதன் சுருக்கம்  நண்பர்கள் இந்தப்பக்கமும் வந்து வாசிக்கலாமே! மீண்டும் சந்திப்போம்.  

Wednesday, April 8, 2020

கொஞ்சம் சீரியசாக! ஒரு பழைய படத்துக்கு புது விமரிசனம்! ஹே ராம்!

கமல் காசரை நான் ஒரு நல்லநடிகனாக மட்டும் பார்க்கிறேனே தவிர அரசியலில் வெறும் ஜீரோ தான் என்று உறுதியாக நம்புகிறவன். கமல் காசருடைய தந்தை பரமக்குடி வக்கீல் சீனிவாசன் அந்தநாளைய காங்கிரஸ்காரராக இருந்தவர் என்பதனாலேயே கமலுக்கும் காங்கிரசைப் பற்றியோ நடப்பு அரசியலைப்பற்றியோ கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என்று நம்புவது மிகக் கொடூரமான ஜோக்காக மட்டுமே இருக்கும். 2000 ஆம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படம் கமல் காசருடைய அரசியல் ஞானத்தைச் சொல்வதாக இங்கே இணையத்தில் நிறையப் பீற்றல்கள் உலாவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.


 "தேடிப்பாத்தேன் காந்தியத் தான்  காணோம்காந்தியத்தான் காணோம்ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி!" இந்தப் பாட்டைக் கமல் ஹாசன் சொந்தக் குரலில் பாடியிருப்பதைக் கேட்கிற  தருணங்களில் பரமக்குடி வக்கீல் ஸ்ரீநிவாசன் நினைவு வரும் என்று எழுதியது 2009 காந்தி ஜெயந்தி அன்று.  இப்படிப்பாடி நடித்தது 1998 இல், அடுத்த இருவருடங்களுக்குள் ஹே! ராம் மாதிரித் தெளிவான அரசியல் படம் எடுக்கிற அளவுக்கு கமல் காசருக்கு ஞானம் பிறந்து விட்டதா என்ன? !! என்னபாவம் செய்தேன் யான்? என்னை அரசியலுக்கு அழைக்கிறார்களே! என்று சிலவருடங்களுக்கு முன்பு டிவிட்டரில் புலம்பிய சரித்திரம் கமல் காசருக்கே மறந்துவிட்டது என்றால் என்னத்தை  சொல்ல?  இப்படி கமல் காசர், அடிப்பொடிகள் பற்றி  யோசித்துக் கொண்டிருந்த போது முகநூலில் திரு B R  மகாதேவன் எழுதிய ஹே! ராம் திரைப்பட விமரிசனம் கண்ணில் பட்டது. 

கமல் தன்னை காந்தியின் சீடனாகச் சொல்லிக்கொள்வதுபோன்ற அபத்தம், அபாயம் வேறெதுவும் இல்லை. அவர் உண்மையில் முஹம்மது அலி ஜின்னாவின் சீடர்.ஹேராம் திரைப்படத்தைத் தனது அரசியல் ஞானத்தின் உரைகல்லாகவும் அவரும் அவருடைய ரசிகக் கண்மணிகளும் சொல்லிக் கொள்வது வழக்கம்.

அந்தப் படம் உண்மையில் காந்தியிஸத்தை அல்ல; ஜின்னாயிஸத்தையே உயர்த்திப் பிடிக்கிறது.

அஹிம்சையே உயர்ந்த தர்மம். அதே நேரம் தர்மத்தை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் ஹிம்சை அதைவிட உயர்ந்தது.

இது அதர்மம் தலை தூக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட வன்முறையைக் கையில் எடுத்த தெய்வத்தின் குரல். காந்தியின் குரல் அல்ல.

காந்தி எந்நிலையிலும் இந்திய அளவில் ஆயுதத்தை ஏந்தச் சொல்லவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் குழந்தையை இஸ்லாமியக் குழந்தையாகவே வளர்த்துவா என்று தன் குழந்தையைப் பறிகொடுத்த இந்து தந்தைக்குச் சொன்னவர்.

ஹே ராம் படத்தில் தன் மனைவியை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றதால் கோபம் கொள்ளும் சாகேத ராம், தான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்து சமூகமே இப்படி பாதிக்கப்பட்டிருப்பது கண்டு குமுறுகிறான். காந்தியின் அஹிம்சையே இதற்குக் காரணம் என்று காந்தியைக் கொல்லப் புறப்படுகிறான்.

அந்த இடத்தில் தற்செயலாகத் தன் இஸ்லாமிய நண்பனைப் பார்க்கிறான். பல இஸ்லாமிய அப்பாவிகள் இந்து அடிப்ப்டைவாதிகளால் தாக்கப்படவிருப்பதையும் பார்க்கிறான். அவர்களைக் காப்பாற்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறான்.

இது காந்தியத்துக்கு முற்றிலும் எதிரானது.

காந்தி எந்த நிலையிலும் யாரையும் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை.

ஜாதி விஷயத்தில் மேல் ஜாதியினரே தமது தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்யவேண்டும் என்று சொன்னார்.

மத விஷயத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வன்முறையைக் கையில் எடுத்தால் பேரழிவு ஏற்படும் என்பதால் பொறுத்துக்கொண்டு போகச் சொன்னார். ஆனால், யாரைக் காப்பாற்றவும் ஆயுதத்தை அவர் பரிந்துரைக்கவே இல்லை. ஆயுதத்தை ஏந்தச் சொன்னது ஜின்னா.

சாகேத ராம் அதைத்தான் செய்கிறான். ஆனால், அதை காந்திய சிந்தனையின்படி வந்தடைந்ததாகவும் சொல்கிறான். முழு மடத்தனம்.

பத்து அப்பாவி இஸ்லாமியர்களைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது சரி என்றால் 100 இந்துக்களைக் காப்பாற்ற அதே ஆயுதத்தை ஏந்துவதும் சரியாகத்தானே ஆகும். அப்படியானால், சாகேத ராம் கையில் இருக்கும் ஆயுதம் யாரைப் பார்த்து நீண்டிருக்கவேண்டும்.

அப்பாவிகளைக் கொல்ல வந்த அடிப்படைவாதிகளிடம் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். என்னை முதலில் கொல் என்று நிராயுதபாணியாக முன்னால் வந்து நின்றிருப்பார். துப்பாக்கியை எடுத்துச் சுட்டிருக்கமாட்டார்.

காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கமல்ஹாசன் செய்தது அப்பட்டமான அசட்டுத்தனமான அபாயகரமான தீவிரவாத ஆதரவு நிலைப்பாடுதான்.

ஒருவகையில் அப்பாவிகளைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது நிச்சயம் சரிதான். காந்தியம் தோற்கும் இடம் அது. மேலும் அந்த நியாயம் இஸ்லாமிய அப்பாவிகளைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தக்கூடாது. ஆனால் ஹேராமில் அதைத்தான் செய்திருக்கிறார் கமல். அப்படியாக அவர் ஜின்னாவின் சீடராகவே அன்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதென்றால், முதல் மனைவி இறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது (இது ரசிகர்களுக்காகச் செய்த கிளுகிளுப்பு), இயக்கத்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருக்க இரண்டாந்தாரம் கட்டிய சாகேத ராமையே அந்த இயக்கம் காந்தியை கொல்வது போன்ற மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்தது (அதற்கு சப்பைக் காரணம் வேறு சொல்லியிருப்பார்) என ஏகப்பட்ட குறைகள் இருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதானால், தான் எந்த அரசியலைப் பின்பற்றுகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூட வக்கில்லாத நபும்சகமே கமலிடம் வெளிப்படுகிறது.

 திரு B R  மகாதேவன் சொல்வது எனக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது என்பதால் இங்கே அவர் அனுமதியில்லாமலேயே பகிர்ந்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.  


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)