இசுடாலின் தினத்தந்தி ஆதித்தனுக்கு கடிதம் எழுதினார். தினத்தந்தியும் வருத்தம் தெரிவித்தது. கார்டூனிஸ்ட் மதியை வீட்டுக்கு அனுப்பியது.
ஊடகங்களின் மீதான தங்களுடைய பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட மாதிரியும் ஆயிற்று! தயாநிதி மாறன் பிரதமரையும் மக்களையும் பிச்சைக்காரர்கள் என்று உளறிய விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பிய மாதிரியும் ஆயிற்று!
மீண்டும் சந்திப்போம்/
அடக்கடவுளே...
ReplyDeleteஅடக்கடவுளே என்று நொந்துகொள்வதற்கு எதுவுமில்லை துரை செல்வராஜூ சார்! இங்கே ஊடகங்கள் எவர்கைகளில் சிக்கியிருக்கிறது என்பதை ஜனங்களும் புரிந்து கள்ள உதவியாகவே இதுமாதிரி நடப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
Deleteபுரிந்துகொண்டிருக்கிறோமா? அதற்குத்தகுந்த செயல்களைத் தொடர்கிறோமா?
மதி அவர்களுக்கு இறைவன் துணை செய்வாராக...
ReplyDeleteஎன்னுடைய பிரார்த்தனையும் அதுவே!
Deleteமதி, ரங்கராஜன் பாண்டே - திறமையாளர்கள், நடுநிலையாளர்கள் என்றால் திமுகவுக்கு எரிச்சலாக இருக்கும். அவங்க வண்டவாளத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வாங்க இல்லையா?
ReplyDeleteஊடகங்களையும் திமுக மற்றும் அவங்க பினாமிகள் விலைக்கு வாங்கிடறாங்க.
இப்போதைக்கு பாலிமர் செய்திகள் ஓகே (அடுத்தவங்க அதை வாங்கும் வரையில்). செய்தித்தாள்களில் நடுநிலையானவை இல்லை
வாருங்கள் நெ.த. சார்!
Deleteசெய்திகளின் வேரைப்பிடித்துப் பார்க்கப்பழகுங்கள் என்று உன்னொரு காலத்தில் ரங்கராஜ் பாண்டே சொன்னார். அதையும்கூட பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால்வரை உலகம் முழுதுக்கும் ஒரே ஒரு கோயபல்ஸ்தான்! இன்றைக்கோ தெருவுக்குத்தெரு கோயபல்ஸ்கள் நடமாடும் காலம் இது. இவர்களிடம் நடுநிலை, நேர்மை இவைகளை எதிர்பார்த்துப் பிரயோசனம் இல்லை.
செய்தி சொல்கிறவர்களுடைய யோக்கியதை என்ன என்பதை நாடிபிடித்துப் பார்த்துவிட்டு அப்புறமாக அவர்கள் சொல்கிற செய்திகளின் நம்பகத்தனமையை எடைபோட்டாகவேண்டும். சிரமாமனதுதான், ஆனால் வேறுவழியில்லை. .