யூட்யூபில் 2 நிமிட ட்ரெய்லரை இணைக்க முயற்சித்தால் வேறென்னவோ வந்து நிற்கிறமாதிரி இருக்கிறது. அதனால் நேரடியாகத் திரைப்பட விமரிசனத்துக்குள் போய்விடலாம். முதலில் என்னைப் பொறுத்தமட்டில் இதில் நடித்திருக்கும் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் கூட அறிமுகமே இல்லாத புதுமுகங்கள்! கதாநாயகன் விஷ்வக் சென் ஆகட்டும், கதாநாயகி ரூஹானி ஷர்மா ஆகட்டும், எனக்கு சற்றும் பரிச்சயம் இல்லாதவர்களே! நாயகன் விக்ரம் ருத்ரராஜுவின் அறிமுகக் காட்சியிலேயே ஒரு விதமான அதிர்ச்சி, மன அழுத்தத்துக்கு ஆளான போலீஸ் அதிகாரியாக மனநல மருத்துவரைச் சந்திக்கிறவராக! PTSD என்றால் தெரியுமில்லையா?
Posttraumatic stress disorder (PTSD) is a serious mental condition that some people develop after a shocking, terrifying, or dangerous event. These events are called traumas. After a trauma, it's common to struggle with fear, anxiety, and sadness. You may have upsetting memories or find it hard to sleep. நாயகனுடைய சொந்த வாழ்க்கையிலும் அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் இருந்திருக்கிறது. அது ஆழ்மனபாதிப்பை ஏற்படுத்தியிருப்பதில், மனநல மருத்துவர் போலீஸ் வேலையை விட்டு விடும் படி சிபாரிசு செய்கிறார். ஆனால் நாயகனுக்கோ வேலையை விட்டு விட்டால் அதுவே பைத்தியம் பிடிக்க வைத்துவிடும் என்பதான மனோநிலை.
நாயகனுக்குத் துப்புத்துலக்குவதில் அபாரத்திறமை என்பதை அடுத்துவரும் காட்சி விவரிப்பதுடன் கதை கொஞ்சம் வித்தியாசமான திரைப்படத்தைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு வேகமாக நகர்கிறது. நாயகனுடைய காதலி நேகா, அவளும் forensic department இல் இருப்பவள்தான், மனநலமருத்துவர் சொல்கிறபடி நாயகன் உடல்நலத்தை முதலில் கவனித்துக் கொள்ளும்படி வேண்டியும் கூட நாயகன் பிடிவாதமாக மறுக்கிறான். அதற்கடுத்த காட்சியில் நேகா காரை ஓட்டிச்செல்கிற வழியில், கார் மக்கர் செய்து நின்றுவிடுவதில் காணாமலும் போய்விடுகிறாள்.
நாயகனுக்கு, நாயகியைத் தேடுகிற வேலையோடு, இதேமாதிரி சூழ்நிலையில் காணாமல் போன ப்ரீத்தி என்கிற பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்பதையும் தேடுகிற வேலை.
வழக்கமாகத் துப்புத்துலக்குகிறவன் கதையென்றால், காட்சிகளுக்கு உள்ளாகவே தடையங்களையும் சேர்த்தே காண்பித்துத்தானே எடுத்திருப்பார்கள், அந்தவகையில், இந்தப்படம் மட்டும் என்ன வித்தியாசம், எதனால் ஒசத்தி என்று கேட்பீர்களேயானால், படத்தை எழுதி இயக்கியிருக்கிற சைலேஷ், ஒரு சராசரி துப்பறிவாளன் கதைபோல இயந்திரத்தனமாக நகர்த்தாமல், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் பார்ப்பவர் உணர்ச்சிகளோடு ஒன்றச் செய்திருக்கிறார் என்பது முதலாவது. அடுத்ததாக நடிகர்கள் கதைக்காக மட்டுமே இயங்குகிறார்கள், தங்களுடைய பாத்திரத்தை செம்மையாகச் செய்து பார்ப்பவர்களையும் கதையோடு ஒன்றச் செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது. இதில் நாயகன் விக்ரம் எப்படித் துப்புத் துலக்கி என்ன கண்டுபிடிக்கிறான் என்ற வழக்கமான பாணி இல்லை. அது இரண்டாம்பட்சம்தான்! அதனால் கதையை முடித்திருக்கிற விதம் சிலருக்கு அத்தனை பிடித்தமானதாக இல்லாமலிருக்கலாம்.
பிப்ரவரி இறுதியில் வெளியான இந்தப்படத்துக்கு வரவேற்பு இருந்ததாம்? தினேஷ் நாயுடு என்கிற ஒரிஜினல் பெயர் கொண்டு சினிமாவுக்காக விஷ்வக் சென் ஆகிப்போன 24 வயதே நிரம்பிய நாயகன் இதனுடன் சேர்த்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார். ஒரு படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். இந்தப்படம் அவருக்கு முதல் ஹிட் படமாகவும் ஆகியிருக்கிறது என்கிறது பாக்ஸ் ஆபீஸ். அந்த நம்பிக்கையில் இதை முதலாவது கேஸ் என்று தலைப்பிலேயே hint கொடுத்திருக்கிறார்கள். கடைசிக் காட்சியிலும் கூட இதன் அடுத்த seuel இருக்கும் என்பதற்கான hint உம் கொடுக்கப்பட்டிருக்கிறதே, அது போதாதா?
மீண்டும் சந்திப்போம்.
//அய்யப்பனும் கோஷியும் என்கிற ஒருபடத்தை வைத்து ஏகப்பட்ட அலப்பறைகள்!//100% உண்மை!. இந்தப் படத்தைப் பற்றி மத்யமரில் ஆஹா! ஓஹோ! என்று புகழப்பட்டிருந்ததை படித்து விட்டு படம் பார்த்து ஏமாந்தேன்.
ReplyDeleteவாருங்கள் அம்மா!
Deleteஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூட மிகச்சிறந்த கலைவடிவம் என்று தம்பட்டம் அடிப்பதில் மல்லுதேசத்துக்குத் தனித்திறமை உண்டே ! ஈகோ மோதல் என்ற ஒருவிஷயத்தை வைத்து இதே பிருத்விராஜ் டிரைவிங் லைசன்ஸ் என்றொரு படத்தில் நடித்திருந்தார். அடுத்து இந்தப்படம்.
இந்தத் தெலுங்குப்படத்தை முடிந்தால் பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமாகப் படம் எடுப்பதில் மல்லுத் திரையுலகையும் விட டோலிவுட் முன்னணியில் இருப்பதை புரிந்துகொள்ள முடியும்.
இன்று தான் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. உங்கள் கதை நேரேஷனில் சிறிய தவறு. //அதற்கடுத்த காட்சியில் நேகா காரை ஓட்டிச்செல்கிற வழியில், கார் மக்கர் செய்து நின்றுவிடுவதில் காணாமலும் போய்விடுகிறாள்.// நேகா அப்படி காணாமல் போகவில்லை. வீட்டிலிருந்து கடத்தப்படுகிறார்.
ReplyDeleteAgent Sai Srinivas Athreya படம் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்
இது போன்ற இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள்!
வாருங்கள் பந்து!
Deleteநலம் தானே! உங்கள் ஏரியாவில் கொரோனா பரவல் அதிகம் இல்லாமல் இருக்கிறதா?
இப்போது நிறையத் தெலுகு, கன்னடப்படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பிரஷர் குக்கர் என்கிற தெலுங்குப்படத்தில் பரிச்சயமான முகம் பரணியைத் தவிர வேறெவரும் இல்லை. பிள்ளை அமெரிக்கா போய் செட்டிலாகிவிடவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிற தந்தை என்று ஆரம்பித்துக் கதை பின்னியிருப்பது இன்றைய கள யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. படமும் பிடித்திருந்தது. புதியவர்கள் மிகவும் வித்தியாசமாகக் கதையைக் கையாளத் தொடங்கியிருக்கிறார்கள்.
இங்கு அவ்வளவாக இல்லை. san francisco bay area .
ReplyDeleteஎன்ன... ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம். உள்ளே இருப்பது ஈறும் பேனும் தான்! என்று அமெரிக்கா / ஐரோப்பா medical facilities பல்லை இளித்து விட்டது!
மருத்துவ வசதிகள் பல்லிளித்துவிட்டது என்று சொல்வதை விட சீனர்களுக்கு outsourcing இல் அதிக இடம் கொடுத்ததே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகத் தெரியவில்லையா பந்து?
Delete