Showing posts with label திரைப்பட விமரிசனம். Show all posts
Showing posts with label திரைப்பட விமரிசனம். Show all posts

Thursday, May 21, 2020

ச்சும்மா ஜாலிக்கு! விண்ணைத்தாண்டி வருவாயா? விடலைத்தனமான காதல்!

நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கிறதா? சமந்தா கதாநாயகியாக நடித்திருந்ததால் மட்டுமே அப்படிச் சொல்லவில்லை! 


சிம்புவை வைத்துப் படமெடுத்தால் அது தானாகவே ஒரு விடலைத்தனமான காதல் படமாக ஆகிவிடும் என்பதை நிரூபித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா! ஒரு எல்லைக்குள் நின்றால் மட்டுமே சிம்பு படங்களில் விடலைத் தனம் இருக்கும். எல்லைதாண்டினால் அதுவே வில்லங்கமான அல்லது விவகாரமான படமாகிவிடும் என்பதற்கு சிம்பு நடித்த பலபடங்களைச் சொல்லலாம். அந்தவகையில் VTV படத்தில் சிம்புவின் விடலைத்தனம் ஒரு அளவோடு இருந்ததால் மிகவும் ரசிக்கப்பட்ட படமாகவும் ஆகிப்போனது.  இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அதுவும் 12, 13 நிமிடங்களுக்குள்! கௌதம் வாசுதேவ் மேனன் தனது ஒன்றாக தளத்தில் வீடியோவை நேற்று ரிலீஸ் செய்த ஒரே நாளில் 11 லட்சம் பார்வைகளைக் கடந்து இருக்கிறதென்றால்....!

 
VTV நாயகன் கார்த்திக் தனது முன்னாள் காதலி ஜெஸ்ஸிக்கு போன் செய்கிறான். என்னமாக கதை போகிறதென்று வீடியோவைப் பாருங்கள்!  ஆனால்  நம்மூர் மீம்ஸ் க்ரியேட்டர்களுடைய கற்பனைத்திறன் இருக்கிறதே அது கௌதம் வாசுதேவ் மேனன்களை விட மிகத்திறமையாக இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்! ஒரே படத்தில் இந்த 12 நிமிட வீடியோவைச் சொல்லி இருக்கிறார் ஒரு திறமையாளர்!

 
இன்னொருத்தர் இதை அடுத்தகட்டத்துக்கே எடுத்துப் போய்விட்டார்! 


கொரோனா காலம், ஏகப்பட்ட புத்தகங்களைத் தூசு தட்டி எடுத்துப் படிப்பதிலும், தெலுங்கு தெரியாமலேயே சில வெப் சீரீசுகளைப் பார்ப்பதிலும் கடந்துபோய்க் கொண்டு இருக்கிறது!  Ee Office Lo இப்போது வெளியான இரண்டாவது சீசனைப் பார்த்து முடித்ததும் 2018 இல் வெளியான முதல் சீசனை VIU தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் பார்த்தேன்.நன்றாக இருந்தது என்று சொல்வது மிக்க குறைச்சலான மதிப்பீடு.   

நம்மூர் தொலைகாட்சி சீரியல் தயாரிப்பாளர்கள் இதுபோல எட்டிப் பிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

மீண்டும் சந்திப்போம்.  

Wednesday, April 8, 2020

கொஞ்சம் சீரியசாக! ஒரு பழைய படத்துக்கு புது விமரிசனம்! ஹே ராம்!

கமல் காசரை நான் ஒரு நல்லநடிகனாக மட்டும் பார்க்கிறேனே தவிர அரசியலில் வெறும் ஜீரோ தான் என்று உறுதியாக நம்புகிறவன். கமல் காசருடைய தந்தை பரமக்குடி வக்கீல் சீனிவாசன் அந்தநாளைய காங்கிரஸ்காரராக இருந்தவர் என்பதனாலேயே கமலுக்கும் காங்கிரசைப் பற்றியோ நடப்பு அரசியலைப்பற்றியோ கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என்று நம்புவது மிகக் கொடூரமான ஜோக்காக மட்டுமே இருக்கும். 2000 ஆம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படம் கமல் காசருடைய அரசியல் ஞானத்தைச் சொல்வதாக இங்கே இணையத்தில் நிறையப் பீற்றல்கள் உலாவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.


 "தேடிப்பாத்தேன் காந்தியத் தான்  காணோம்காந்தியத்தான் காணோம்ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி!" இந்தப் பாட்டைக் கமல் ஹாசன் சொந்தக் குரலில் பாடியிருப்பதைக் கேட்கிற  தருணங்களில் பரமக்குடி வக்கீல் ஸ்ரீநிவாசன் நினைவு வரும் என்று எழுதியது 2009 காந்தி ஜெயந்தி அன்று.  இப்படிப்பாடி நடித்தது 1998 இல், அடுத்த இருவருடங்களுக்குள் ஹே! ராம் மாதிரித் தெளிவான அரசியல் படம் எடுக்கிற அளவுக்கு கமல் காசருக்கு ஞானம் பிறந்து விட்டதா என்ன? !! என்னபாவம் செய்தேன் யான்? என்னை அரசியலுக்கு அழைக்கிறார்களே! என்று சிலவருடங்களுக்கு முன்பு டிவிட்டரில் புலம்பிய சரித்திரம் கமல் காசருக்கே மறந்துவிட்டது என்றால் என்னத்தை  சொல்ல?  இப்படி கமல் காசர், அடிப்பொடிகள் பற்றி  யோசித்துக் கொண்டிருந்த போது முகநூலில் திரு B R  மகாதேவன் எழுதிய ஹே! ராம் திரைப்பட விமரிசனம் கண்ணில் பட்டது. 

கமல் தன்னை காந்தியின் சீடனாகச் சொல்லிக்கொள்வதுபோன்ற அபத்தம், அபாயம் வேறெதுவும் இல்லை. அவர் உண்மையில் முஹம்மது அலி ஜின்னாவின் சீடர்.ஹேராம் திரைப்படத்தைத் தனது அரசியல் ஞானத்தின் உரைகல்லாகவும் அவரும் அவருடைய ரசிகக் கண்மணிகளும் சொல்லிக் கொள்வது வழக்கம்.

அந்தப் படம் உண்மையில் காந்தியிஸத்தை அல்ல; ஜின்னாயிஸத்தையே உயர்த்திப் பிடிக்கிறது.

அஹிம்சையே உயர்ந்த தர்மம். அதே நேரம் தர்மத்தை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் ஹிம்சை அதைவிட உயர்ந்தது.

இது அதர்மம் தலை தூக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட வன்முறையைக் கையில் எடுத்த தெய்வத்தின் குரல். காந்தியின் குரல் அல்ல.

காந்தி எந்நிலையிலும் இந்திய அளவில் ஆயுதத்தை ஏந்தச் சொல்லவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் குழந்தையை இஸ்லாமியக் குழந்தையாகவே வளர்த்துவா என்று தன் குழந்தையைப் பறிகொடுத்த இந்து தந்தைக்குச் சொன்னவர்.

ஹே ராம் படத்தில் தன் மனைவியை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றதால் கோபம் கொள்ளும் சாகேத ராம், தான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்து சமூகமே இப்படி பாதிக்கப்பட்டிருப்பது கண்டு குமுறுகிறான். காந்தியின் அஹிம்சையே இதற்குக் காரணம் என்று காந்தியைக் கொல்லப் புறப்படுகிறான்.

அந்த இடத்தில் தற்செயலாகத் தன் இஸ்லாமிய நண்பனைப் பார்க்கிறான். பல இஸ்லாமிய அப்பாவிகள் இந்து அடிப்ப்டைவாதிகளால் தாக்கப்படவிருப்பதையும் பார்க்கிறான். அவர்களைக் காப்பாற்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறான்.

இது காந்தியத்துக்கு முற்றிலும் எதிரானது.

காந்தி எந்த நிலையிலும் யாரையும் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை.

ஜாதி விஷயத்தில் மேல் ஜாதியினரே தமது தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்யவேண்டும் என்று சொன்னார்.

மத விஷயத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வன்முறையைக் கையில் எடுத்தால் பேரழிவு ஏற்படும் என்பதால் பொறுத்துக்கொண்டு போகச் சொன்னார். ஆனால், யாரைக் காப்பாற்றவும் ஆயுதத்தை அவர் பரிந்துரைக்கவே இல்லை. ஆயுதத்தை ஏந்தச் சொன்னது ஜின்னா.

சாகேத ராம் அதைத்தான் செய்கிறான். ஆனால், அதை காந்திய சிந்தனையின்படி வந்தடைந்ததாகவும் சொல்கிறான். முழு மடத்தனம்.

பத்து அப்பாவி இஸ்லாமியர்களைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது சரி என்றால் 100 இந்துக்களைக் காப்பாற்ற அதே ஆயுதத்தை ஏந்துவதும் சரியாகத்தானே ஆகும். அப்படியானால், சாகேத ராம் கையில் இருக்கும் ஆயுதம் யாரைப் பார்த்து நீண்டிருக்கவேண்டும்.

அப்பாவிகளைக் கொல்ல வந்த அடிப்படைவாதிகளிடம் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். என்னை முதலில் கொல் என்று நிராயுதபாணியாக முன்னால் வந்து நின்றிருப்பார். துப்பாக்கியை எடுத்துச் சுட்டிருக்கமாட்டார்.

காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கமல்ஹாசன் செய்தது அப்பட்டமான அசட்டுத்தனமான அபாயகரமான தீவிரவாத ஆதரவு நிலைப்பாடுதான்.

ஒருவகையில் அப்பாவிகளைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது நிச்சயம் சரிதான். காந்தியம் தோற்கும் இடம் அது. மேலும் அந்த நியாயம் இஸ்லாமிய அப்பாவிகளைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தக்கூடாது. ஆனால் ஹேராமில் அதைத்தான் செய்திருக்கிறார் கமல். அப்படியாக அவர் ஜின்னாவின் சீடராகவே அன்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதென்றால், முதல் மனைவி இறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது (இது ரசிகர்களுக்காகச் செய்த கிளுகிளுப்பு), இயக்கத்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருக்க இரண்டாந்தாரம் கட்டிய சாகேத ராமையே அந்த இயக்கம் காந்தியை கொல்வது போன்ற மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்தது (அதற்கு சப்பைக் காரணம் வேறு சொல்லியிருப்பார்) என ஏகப்பட்ட குறைகள் இருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதானால், தான் எந்த அரசியலைப் பின்பற்றுகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூட வக்கில்லாத நபும்சகமே கமலிடம் வெளிப்படுகிறது.

 திரு B R  மகாதேவன் சொல்வது எனக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது என்பதால் இங்கே அவர் அனுமதியில்லாமலேயே பகிர்ந்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.  


Thursday, April 2, 2020

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம் : HIT (the first case) தெலுகு

மல்லுத்திரைப்படங்கள் மட்டும் தான் உசத்தி! கதையைத் தேர்ந்தெடுப்பதாக ஆகட்டும், நடிகர்களைத் தேர்வு செய்வதாகட்டும், இப்படி எல்லாவற்றிலும் சிகரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிற மாதிரி சமீபநாட்களில் நிறைய நண்பர்கள் பீலா விடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அய்யப்பனும் கோஷியும் என்கிற ஒருபடத்தை வைத்து ஏகப்பட்ட அலப்பறைகள்! இருதனிநபர்களுடைய ஈகோ மோதலை மையமாக வைத்து இதே ப்ருத்வி ராஜ் சுகுமாரன் டிரைவிங் லைசன்ஸ் என்று இதற்கு முன்பும் ஒரு சராசரிப்படத்தைக் கொடுத்திருக்கிறார் என்பது மல்லுத்திரைப்பட அபிமானிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும் AK படத்தைவைத்துச்செய்த அலப்பறைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் தெலுங்குத்  திரை உலகம் இந்தமாதிரி அலப்பறைகள் எதுவுமில்லாமல், நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டு வருவது ஏனோ இந்தமாதிரித் தம்பட்டங்களுக்கு கண்ணில் படுவது இல்லை. ஒரு தெலுங்கு த்ரில்லர் படத்தை இன்றைக்குப் பார்த்த அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லட்டுமா? 

 

யூட்யூபில் 2 நிமிட ட்ரெய்லரை இணைக்க முயற்சித்தால் வேறென்னவோ வந்து நிற்கிறமாதிரி இருக்கிறது. அதனால் நேரடியாகத் திரைப்பட விமரிசனத்துக்குள் போய்விடலாம். முதலில் என்னைப் பொறுத்தமட்டில் இதில் நடித்திருக்கும் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் கூட அறிமுகமே இல்லாத புதுமுகங்கள்! கதாநாயகன் விஷ்வக் சென் ஆகட்டும், கதாநாயகி ரூஹானி ஷர்மா ஆகட்டும், எனக்கு சற்றும் பரிச்சயம் இல்லாதவர்களே! நாயகன் விக்ரம் ருத்ரராஜுவின் அறிமுகக் காட்சியிலேயே ஒரு விதமான அதிர்ச்சி, மன அழுத்தத்துக்கு ஆளான போலீஸ் அதிகாரியாக மனநல மருத்துவரைச் சந்திக்கிறவராக! PTSD என்றால் தெரியுமில்லையா? 

Posttraumatic stress disorder (PTSD) is a serious mental condition that some people develop after a shocking, terrifying, or dangerous event. These events are called traumas. After a trauma, it's common to struggle with fear, anxiety, and sadness. You may have upsetting memories or find it hard to sleep. நாயகனுடைய சொந்த வாழ்க்கையிலும் அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் இருந்திருக்கிறது. அது ஆழ்மனபாதிப்பை ஏற்படுத்தியிருப்பதில், மனநல மருத்துவர் போலீஸ் வேலையை விட்டு விடும் படி சிபாரிசு செய்கிறார். ஆனால் நாயகனுக்கோ வேலையை விட்டு விட்டால் அதுவே பைத்தியம் பிடிக்க வைத்துவிடும் என்பதான மனோநிலை.

நாயகனுக்குத் துப்புத்துலக்குவதில் அபாரத்திறமை என்பதை அடுத்துவரும் காட்சி விவரிப்பதுடன் கதை கொஞ்சம் வித்தியாசமான திரைப்படத்தைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு வேகமாக நகர்கிறது. நாயகனுடைய காதலி நேகா, அவளும் forensic department இல் இருப்பவள்தான், மனநலமருத்துவர் சொல்கிறபடி நாயகன் உடல்நலத்தை முதலில் கவனித்துக் கொள்ளும்படி வேண்டியும் கூட நாயகன் பிடிவாதமாக மறுக்கிறான். அதற்கடுத்த காட்சியில் நேகா காரை ஓட்டிச்செல்கிற வழியில், கார் மக்கர் செய்து நின்றுவிடுவதில் காணாமலும் போய்விடுகிறாள்.
நாயகனுக்கு, நாயகியைத் தேடுகிற வேலையோடு, இதேமாதிரி சூழ்நிலையில் காணாமல் போன ப்ரீத்தி என்கிற பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்பதையும் தேடுகிற வேலை.

வழக்கமாகத் துப்புத்துலக்குகிறவன் கதையென்றால், காட்சிகளுக்கு உள்ளாகவே தடையங்களையும் சேர்த்தே காண்பித்துத்தானே எடுத்திருப்பார்கள், அந்தவகையில், இந்தப்படம்  மட்டும் என்ன வித்தியாசம், எதனால் ஒசத்தி என்று கேட்பீர்களேயானால், படத்தை எழுதி இயக்கியிருக்கிற சைலேஷ், ஒரு சராசரி துப்பறிவாளன் கதைபோல இயந்திரத்தனமாக நகர்த்தாமல், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் பார்ப்பவர் உணர்ச்சிகளோடு ஒன்றச் செய்திருக்கிறார் என்பது முதலாவது. அடுத்ததாக நடிகர்கள் கதைக்காக மட்டுமே இயங்குகிறார்கள், தங்களுடைய பாத்திரத்தை செம்மையாகச் செய்து பார்ப்பவர்களையும் கதையோடு ஒன்றச் செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது. இதில் நாயகன் விக்ரம் எப்படித் துப்புத் துலக்கி என்ன கண்டுபிடிக்கிறான் என்ற வழக்கமான பாணி இல்லை. அது இரண்டாம்பட்சம்தான்! அதனால் கதையை முடித்திருக்கிற விதம் சிலருக்கு அத்தனை பிடித்தமானதாக இல்லாமலிருக்கலாம்.   

பிப்ரவரி இறுதியில் வெளியான இந்தப்படத்துக்கு வரவேற்பு இருந்ததாம்? தினேஷ் நாயுடு என்கிற ஒரிஜினல் பெயர் கொண்டு  சினிமாவுக்காக விஷ்வக் சென் ஆகிப்போன 24 வயதே நிரம்பிய நாயகன் இதனுடன் சேர்த்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார். ஒரு படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். இந்தப்படம் அவருக்கு முதல் ஹிட் படமாகவும் ஆகியிருக்கிறது என்கிறது பாக்ஸ் ஆபீஸ். அந்த நம்பிக்கையில் இதை முதலாவது கேஸ் என்று தலைப்பிலேயே hint கொடுத்திருக்கிறார்கள். கடைசிக் காட்சியிலும் கூட இதன் அடுத்த seuel இருக்கும் என்பதற்கான hint உம் கொடுக்கப்பட்டிருக்கிறதே, அது போதாதா?

மீண்டும் சந்திப்போம்.   
         

Saturday, March 28, 2020

வைரஸ் ! ஒரு சிச்சுவேஷன் திரைப்பட விமரிசனம்!

மல்லுதேசத் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கிற வியாதி தொற்றிக் கொண்டிருப்பதில், 2019 ஜூன் முதல் வாரம் வெளியான ஒரு திரைப்படம், படத்தின் பெயரே வைரஸ் தான்,   கொரோனா வைரஸ் தொற்று உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிற தருணத்தில், மிகவும் பொருத்தமான திரைப்படமாகப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங்காகவும், உங்களுக்குப் பரிச்சயமான சில தளங்களில் தரவிறக்கம் செய்துகொள்கிற மாதிரியும் கிடைக்கும்.

      
மல்லுதேசத் திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு தீர்க்க தரிசனம் இருந்தது என்று கதைகட்டவெல்லாம் நான் முயற்சிக்கப் போவதில்லை. 2018 இல் கேரளாவை ஆட்டிப் படைத்த நிபா வைரஸ் தாக்கத்தை வைத்து எடுக்கப் பட்ட ஒரு மெடிகல் த்ரில்லர்! 152 நிமிடங்கள்! திரைக்கதை, களத்தைப் பக்காவாக ரெடிபண்ணி வைத்துக் கொண்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே ஷெட்யூலில்,52 நாட்களில் படமாக எடுத்திருக்கிறார்கள். குழப்பமே இல்லாத வகையில் படமாக்கப்பட்ட விதம் ஜனங்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே செமஹிட்!

  
வெற்றிப்படமாக அமைந்த சந்தோஷத்தில் வைரஸ் படத்தில் நடித்த நடிகர் பட்டாளம் மனோரமா ஆன்லைன் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்  ஜெயித்தால் கொஞ்சம் அலட்டலும் ஜாஸ்தியாகத்தான் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள முடிந்தால் இந்த 35 நிமிட வீடியோவைப் பார்க்கலாம்! இல்லையேல் கடந்தும் போய்விடலாம்!

குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி,டொவினோ தாமஸ்,இந்திரஜித் சுகுமாரன், ரேவதி, பார்வதி, பூர்ணிமா இந்திரஜித், ரகுமான், மடோனா செபாஸ்டியன், ரம்யா நம்பீசன் இன்னும் மலையாள சினிமையின் அறியப்பட்ட பல திரை முகங்கள் எல்லாம் சேர்ந்து நடித்திருக்கிற திரைப்படம் இது என்பது தமிழகத்தில் நமக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்! தமிழ் சினிமாவில் பலபிரபலங்களை ஒரே இடத்தில் சேர்த்துப் பார்ப்பதே மிக அபூர்வம்தான் இல்லையா? ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்து, தவற விட்டார். அவர் நழுவவிட்ட  இடத்தை ஸ்ரீநாத் பாஸி என்கிற இளம் நடிகர் பிடித்துக் கொண்டார். 

ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகியிருக்கிற இந்தப் படம், 2018 இல் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்த நிஜ சம்பவங்களைஅடிப்படையாகக் கொண்டது. ஆக இந்தப்படத்தில் கதைக்களம் தான் நிஜமான ஹீரோ, வில்லன் என்று எல்லாமாகவும்! நடிகர்கள் கதைக்களத்தோடு ஒன்றி, ஒரு நோய்த் தொற்றை கேரளாஎப்படி எதிர்கொண்டது என்பதை எடுத்துச் சொல்கிறார்கள். எப்படி நிபா வைரஸ் ஒரு தொற்றாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது, பரவுகிற விதம், வேகம் இவற்றைக் கணிப்பது, 21 நாட்கள் கணக்கு என்று பலவிதத்திலும் கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தோடு ஒத்துப் போகிறது என்பதுதான் சிலமாதங்களுக்கு முன்பு பார்த்த ஒரு படத்தை ரீவைண்ட் செய்து இங்கே ஒரு திரைப்பட அறிமுகம் அல்லது விமரிசனமாகவும்!

இந்தப்படத்தை பத்தோடு பதினொன்றாக வெறும் documentary film மாதிரி ஆகிவிடாமல் திரைக்கதையை முஸின் பராரி, சுஹாஸ், சஹரஃபு  என  ஒரு மூன்று பேர் கூட்டணி மிகத்திறமையாக எழுதி இருக்கிறார்கள். ஒன்றன்மீது ஒன்றாகக் கதைக்களம் விரிவதை இயக்குனர் ஆஷிக் அபு மிகத்திறமையாகப் படமாக்கி இருக்கிறார். கட்டாயமாக இந்த படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன். நிபா வைரஸ் குறித்த பயம், தொற்று ஏற்படாமல் இருக்கப் போராட்டம், இவைகளைத் தாண்டி உயிர் மேல் ஆசை எல்லாம் இந்த கொரோனா தொற்று விஷயத்திலும் அச்சுப்பிசகாமல் அப்படியே இருப்பதுதான் முக்கியமான விஷயம்.

மீண்டும் சந்திப்போம்.     
    

Tuesday, January 21, 2020

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம்! V1 மர்டர் கேஸ்

இந்தப்பக்கங்களில் ஓர் முழுநீளத் திரைப்பட விமரிசனமாக எழுதிப்பார்த்து நாளாகி விட்டது இல்லையா? சிலநாட்களுக்கு முன்னால் ஒரு நாலு படத்துக்கு விமரிசனம் எழுதலாமென்றால், சரக்கே இல்லாத படத்துக்கு என்ன எழுதுவது என்று மிகவும் சுருக்கமாக இரண்டு தமிழ் இரண்டு தெலுங்குப் படங்களுக்கு சின்னக்குறிப்பாக எழுதியதை நண்பர்கள் அவ்வளவாக சட்டை செய்யவே இல்லை!

  
பெரிய நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என்று வெளியாகி பெருமளவிலான தியேட்டர்களை ஆக்கிரமித்தும் கூடாக காற்றாடிக்கொண்டிருக்கிற நேரத்தில் குறைந்த அளவு தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாகி ரசிகர்கள் ஆதரவைப் பெற்றிருக்கிற ஒரு படம் என்று சொல்லவேண்டுமானால் அது V1 மர்டர் கேஸ் என்கிற படம் தான். இத்தனைக்கும் படத்தில் பெரிய நடிகர்களோ பட்ஜெட்டோ எதுவுமில்லை. ஒரு த்ரில்லர் படம்தான்! திரைக்கதை வடிவம், காட்சிப்படுத்தி இருக்கிற விதம் எல்லாமாகச் சேர்ந்து படம் வெற்றி அடைந்திருக்கிறதென்றால் என்ன சொல்வீர்கள்?


WIN News சேனல் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது என்பதைச் சொல்கிற மாதிரி இந்தப்படம் குறித்த ஒரு கலந்துரையாடலை நேற்றைக்குப் பார்த்தேன். இயக்குனர் பாவெல் நவகீதன் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு வித்தியாசமாக இந்தப் படத்தின் இயக்குனராகவும் ஆகிவிட்டார். 


அதென்ன பாவெல் என்று பித்தியாசமாக என்ற கேள்விக்கு மேலே வீடியோவில் காரணம் சொல்வதும் தன்னுடைய படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்வதுமாக! நடிகர் அஜித் குமார் படம் இருக்கிறதே என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்! ஒரு சம்பந்தனுமில்லை!

ஒரு கொலை விசாரணைதான்! ஆனால் அதுவே கொஞ்சம் வித்தியாசமானதாக, கதாநாயகன் ஏதோ ஒரு காரணத்தால் இருட்டைக்கண்டால் பயம், மயக்கம் அடைகிறவனாக! அதனாலேயே ஆக்டிவ் போலீசாக இருப்பதிலிருந்து தடைய அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டவன். அவனை சக போலீஸ் அதிகாரி ஒரு பெண் கொலை பற்றிய விசாரணைக்குள் எப்படிக் கொண்டு வருகிறார் என்பதில் ஆரம்பித்து வழக்கமான போலீஸ் விசாரணையாகக் கதைக்களம் விரிவதில் பார்ப்பவர்களை படத்தில் ஒன்றச் செய்துவிடுவதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். க்ளைமேக்ஸ் எதிர்பாராதது என்று சொல்ல முடியாதுதான்! ஆனால் அதையே இயக்குனர் ஒரு மெசேஜ் சொல்லப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். ரொம்ப உறுத்தல் என்றாகிவிடாமல் அளவோடு முடித்திருப்பது இன்னொரு வெற்றி! எப்படி என்பதை படத்தைப்பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!

இப்போதெல்லாம் சமூகத்துக்கு மெசேஜ் சொல்கிற வியாதி தமிழ்ப்பட இயக்குநர்களுக்குத் தொற்றிக் கொண்டிருப்பதில், பாவெல் நவகீதனுக்கும் அப்படி ஒரு தொற்று இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை! இதை அந்தநாட்களிலேயே கலைவாணர் நாட்டுக்கு சேதிசொல்ல நாகரீகக்கோமாளி வந்தேனய்யா என்று பாட்டுப்பாடி நாசூக்காக, பலவித மெசேஜ் சொல்லி இருக்கிறார். பராசக்தி வசனம் போல அனல்(?) துப்பாமல்  மென்மையாகவே சொல்லியிருக்கிற மாதிரி, இந்தப் படத்தின் க்ளைமேக்சிலும்  கதாநாயகன், கொஞ்சம் எக்ஸ்ட்ரா வசனங்களில் அந்த மெசேஜை சொல்லி இருக்கிறார். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு இதெல்லாம் தேவைதானா என்று பார்வையாளர்களை எரிச்சல் கொள்ளச் செய்யாமல் அளவோடு முடித்திருப்பது இயக்குனருடைய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காகவே படம் பார்க்கலாம்!  

மீண்டும் சந்திப்போம்!  
  

Thursday, January 16, 2020

நான்கு படங்களுக்கு நாலைந்து வரிகளுக்கு மிகாமல் விமரிசனம்!

கடந்தவாரம் வெளியான இரு தமிழ்ப்படங்கள் இரு தெலுங்குப் படங்கள் என நான்கு லோக்கல் படங்கள் பார்த்ததில் எதுவும் விமரிசனம் எழுதுகிற அளவுக்குத் தேறவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுவது உத்தமம்.


1. தர்பார் ரஜனி படத்தில் நயன்தாராவை சுத்தமாக வேஸ்ட் செய்திருக்கிறார்கள். அதேபோல தெலுங்கில் படங்கள் இல்லாததாலோ என்னவோ நிவேதா தாமஸ் மகள் வேடத்தில் நடிக்கிற அளவுக்கு கீழிறங்கி விட்டதோடு அதைக்குறித்து பெருமிதமாகவும் ட்வீட் செய்திருக்கிறார். ஆக தர்பாரில் சொல்வதற்கு வேறு என்ன மிச்சமிருக்கிறது?


2. பட்டாஸ் அசுரன் படத்தில் மிகச்சிறப்பாக நடித்த பிறகு திருஷ்டிபரிகாரம் போல இந்தப்படத்தில். தனிப் பட்ட முறையில் நடிகர்களைக் குறைசொல்ல முடியாது. 7 ஆம் அறிவு மாதிரி தனுஷுக்கும் இந்தப்படம் பெரிய சறுக்கல். மேலே உள்ள படம்தான்  இந்தப்படத்துக்குப் பொருத்தமான விமரிசனமாக இருக்கும் போல!

3,சரிலேரு நீக்கெவ்வரு மகேஷ்பாபுவுக்கு இன்னுமொரு டெம்ப்லேட் படம். அதற்குமேல் பெரிதாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறதென்றால், முதல் படம் மாதிரியே கதாநாயகி தேவைப்படாத ஒரு திரைப்படம். அதிலும் ராஷ்மி மந்தனா ஒரு லூசுப்பெண் கதாநாயகியாக, I am impressed என்று ஒரு ஏழெட்டுத்தரம் ஓடிப்போய் மகேஷ்பாபுவை கட்டிப் பிடிக்கிற காட்சி லூசுத்தனத்தின் உச்சம். அதென்னவோ சமீபகாலமாக வரும் படங்களில் எதற்காக கதாநாயகி என்று தேவையில்லாமல் திணிப்பு செய்கிறார்கள் என்பதான அலுப்பு அதிகமாகி வருகிறது.


4, அல வைகுந்தபுரமுல்லோ  அல்லு அர்ஜுன் படங்களில் பாடல்களும் நடனங்களும் சண்டைக் காட்சிகளும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். கதைகூட அப்புறம் தான்! ஏழை பணக்கார வீட்டுப்பிள்ளைகள் பிறந்தவுடனேயே இடம்மாறி வளர்கின்றன என்ற கதை முடிச்சை வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பின்னியிருக்கிறார்கள். கதாநாயகி பூஜா ஹெக்டே. ஒரு நட்சத்திரப்பட்டாளமே படத்தில் இருப்பதில், வில்லன் சமுத்திரக்கனிக்குத் தேவையான ஸ்பேஸ் இல்லாமல் ஒரு படம். மற்ற மூன்று படங்களோடு ஒப்பிடுகையில், அல்லு அர்ஜுன் படம் ஏமாற்றமளிக்காத பொழுது போக்குப் படமாக இருக்கிறது என்றாலும் இதிலும் கூட கதாநாயகி வெறும் கிளாமருக்காக மட்டுமே வந்துபோகிற பாத்திரமாக இருக்கிறார் என்பது நான்கு படங்களிலும் இருக்கிற பொதுவான விஷயம். தர்பார், சரிலேரு நீக்கேவ்வரு இருபடங்களிலும் கதாநாயகி பாத்திரமே தேவையில்லை. மற்ற இரு படங்களிலும் எதோ கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாவு தான்! 


இந்தக் குப்பைகளுக்கு வெப் சீரீஸ் எவ்வளவோ தேவலாம்! சென்றவாரம் பார்த்து முடித்த வெப் சீரீஸ் 
I  Medici  இத்தாலியின் ஃப்லோரன்ஸ்  நகரத்தின் மெடிசி குடும்பத்தின் கதை.  இது  வெப் சீரீசின் மூன்றாவது பாகம். ஒவ்வொன்றும் எட்டு எபிசோடுகளாக. கொஞ்சம் கற்பனையோடு ஐநூறு வருடங்களுக்கு முந்தைய இத்தாலியின் சரித்திரத்தையும், கூடவே கத்தோலிக்க சர்ச்சின் அரசியலையும் தெரிந்து கொள்ள உதவுகிற கதையாக!

மீண்டும் சந்திப்போம். 
                                   

Wednesday, November 13, 2019

கொஞ்சம் சினிமா! Official Secrets! திரை விமரிசனம்.

உண்மையாகவே நடந்த சம்பவங்களை வைத்துப் படம் எடுத்தால் அது ஓடுமா என்ற கேள்விக்கு அதில் எந்த அளவு உண்மை சொல்லப்படுகிறது என்பதில்,  பார்வையாளர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் தான் பதில் இருக்கிறது இப்படி என்னுடைய அபிப்பிராயத்தை உறுதிசெய்த திரைப்படம் Official Secrets 



பொதுவாக அமெரிக்க ஊடகங்கள்,  திரைப்படங்கள், அரசுக்குத் தர்மசங்கடமான சங்கதிகளை வெளியிடத் தயங்குவதே இல்லை என்றாலும் பழமைவாதிகளான பிரிட்டிஷ் ஊடகங்கள் அவ்வளவு துடிப்பாக இருப்பது மிக மிக அரிது. அப்படி அரிதான ஒரு உண்மை நடப்பை வைத்துக் கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாத படமாக எடுத்திருக்கிறார்கள். 


ஜனங்களிடம் எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியாமல் தானோ என்னவோ இந்தப்படத்தை  2019 ஜனவரியில் ஒரு அமெரிக்கத் திரைப்பட விழாவில் திரையிட்டுக் காண்பித்துவிட்டு, அப்புறம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் அமெரிக்காவிலும், இரண்டு மாதம் தள்ளி பிரிட்டனில் அக்டோபரிலும் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனாலும், திரைப்படம் விமரிசன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கதையில் நடந்ததென்ன? The true story of a British whistleblower who leaked information to the press about an illegal NSA spy operation designed to push the UN Security Council into sanctioning the 2003 invasion of Iraq. இதுதான் ஒன்லைனர்.


இந்த இரண்டரை நிமிட வீடியோவில்   2003 இல் ஈராக் பயங்கர ரசாயன அழிவு ஆயுதங்களைக் குவித்து வருவதாக அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனைத் தூக்கிலிட்டது சொல்லப்படுகிறது 

General Communications Head Quarters GCHQ என்பதான பிரிட்டிஷ் உளவு அமைப்பில் பணியாற்றுகிற காதரின் ட்ரெசா கன் பார்வைக்கு ஒரு ரகசிய மெமோ வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை  (பல்வேறு நாட்டவர்கள்) உளவு பார்ப்பதில் அமெரிக்க NSAவுடன் பிரிட்டனும் சேர்ந்து ஈடுபட்டிருப்பதில் அவர்களை அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு பிளாக்மெயில் செய்யவும் தயாராக வேண்டுமென்கிற  தகவல் இருக்கிறது. ஈராக் மீது போர்தொடுப்பதற்கு அமெரிக்கா பொய்யான காரணங்களை உருவாக்குவதற்கு டோனி பிளேர் பிரதமராக இருந்த அன்றைய பிரிட்டிஷ் அரசும் உறுதுணையாக இருந்தது பொறுக்காமல் காதரின் அந்த ரகசிய மெமோவை பத்திரிகைகளுக்கு லீக் செய்துவிடுகிறார்.

அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பை  இந்த லீக் தடுக்கவில்லை என்றாலும் அமெரிக்கா, பிரிட்டன் இருநாட்டு அரசுகள் மீதும் இந்தச் செய்திக்கசிவு ஒருமாதிரியான  களங்கத்தை ஏற்படுத்தியதென்றால் சும்மா விடுவார்களா? கசிய விட்டது யார் என்கிற விசாரணையில் காதரின் ட்ரெசா கன் சிக்குகிறார். Official Secrets Act இன் கொடூரமான பிரிவுகள் அவரைச் சுற்றி வளைக்கின்றன. 

அடுத்த சில மாதங்கள் அவருடைய சொந்த வாழ்க்கை தோண்டித் துருவப்படுகிறது. தைவானில் பிறந்தவர்  (பிரிட்டிஷ் தாய்தந்தையர்) ஒரு துருக்கி  குர்திஷ் இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டவர் இப்படி     மன உளைச்சலை அதிகப் படுத்துகிற மாதிரியே விசாரணை போய்க் கொண்டிருப்பதில் காதரின் வழக்கறிஞர்களுடைய உதவியை நாடுகிறார். வழக்கு விசாரணைக்கு வருகிற சமயம் அரசு தரப்பு குற்றத்தை நிரூபிப்பதில் இருந்து பின்வாங்குகிறது. விசாரணை கைவிடப்பட்டு காதரின் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப் படுகிறார்.
Katharine Gun was sitting at her desk at the UK intelligence agency, GCHQ, when she received the email that would change her life.

It was a Friday in the British winter, in February 2003 . The sender of the mysterious message was one Frank Koza , then a member of the United States National Security Agency (NSA).

Its content horrified who was a simple 28-year-old translator: the Americans asked GCHQ for their cooperation to spy on the delegations of the six countries that at that time were non-permanent members of the United Nations Security Council (UN), Angola, Cameroon, Chile, Mexico, Guinea and Pakistan.The secret campaign - which involved intercepting domestic and official telephones, as well as emails - was aimed at winning votes in favor of the war against Iraq யாருடைய பார்வைக்கு அனுப்புகிறோம் என்றே இல்லாமல் பொத்தாம்பொதுவாக அதுவும் ஒரு அமெரிக்கனிடமிருந்து  உத்தரவாக வந்தால், ஒரு பிரிட்டிஷ் பிரஜைக்குக்  கோபமும் வரவேண்டும் இல்லையா? காதரீனுக்கு கோபம் வருகிறது. ரகசிய மெமோ கசியவிடப் படுகிறது, Official Secrets வெளியே கசியலாமா? அப்புறம் என்னென்ன நடக்கும்?  இதையே ஒரு கோர்வையாக, திரைப் படமாகக் காட்சிப்படுத்தினால் இப்படித்தான் காட்சிகள் விரியும் இல்லையா!

இந்தக்கதையை 2016 வாக்கிலேயே அமெரிக்க நடிகர்களை வைத்துப் படமாக்க முயற்சி செய்து கைவிட்டிருக்கிறார்கள். 2018 இல் கேவின் ஹூட் என்கிற தென்னாப்பிரிக்க இயக்குனர், இதைக் கையில் எடுத்து பிரிட்டிஷ் நடிகர்களையே நடிக்க வைத்துப் படமாக்கியிருக்கிறார். 

கசிய விட்ட விஷயம் The Observer பிரிட்டிஷ் நாளிதழில் இப்படி வெளியானதாம்! உளவாளிகளின் கதை என்றால் ஜேம்ஸ் பாண்ட் பட டெம்பிளேட் மாதிரி அதிரடி திருப்பங்கள், சேசிங், சண்டைக்காட்சிகள் என்றுதான் இருக்க வேண்டுமா என்ன? Official Secrets மாதிரி மெதுவாகக் கதைக்களத்தை விரித்து, அலுப்புத் தட்டாமல் கூட இருக்க முடியும்! அந்த வகையில் பார்க்க வேண்டிய படம் என்றே நான் பரிந்துரைப்பேன்!

எங்கே பார்ப்பது என்பது தேடத் தெரிந்தவர்களுக்குக் எளிதில் கிடைக்கிற விஷயம். நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மீண்டும் சந்திப்போம்.            

Sunday, October 6, 2019

அசுரன் பட விமரிசனம்! வெக்கை எழுதிய பூமணி நேர்காணல்!

ச்சும்மா ஜாலிக்கு என்றே எழுதாமல் இந்தமுறை ஒரு சமீபத்தைய திரைப்பட விமரிசனம்! அதுவும் என்னுடையது இல்லை! வலைப்பதிவுகளில் பதிவர் வால்பையனோடு கூட்டாளியாக அறிமுகமான நண்பர் ராஜன் ராதாமணாளன் முகநூலில் எழுதியிருந்த விமரிசனம்! அதுவே நன்றாக இருந்ததால் அவருக்கு நன்றியுடன் இங்கே பகிர்வாகப் பார்க்கலாமா?  ஒரு கதையாக பேனாபிடித்து எழுதுவதைத் திரைக்கதையில் அப்படியே கொண்டுவர முடியாது என்பதைத் தொடர்ந்து தமிழில் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா?  இதுதான் எனக்கிருக்கும் கேள்வி. 


வெக்கையை ஒரு mainstream சினிமாக்குவதில் உண்டான முக்கியப் பிரச்சனையே நாவலில் தந்தையும் மகனும் தலைமறைவாவதற்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணம் தான். அடுத்து வேறெந்த புற அழுத்தமும் இல்லாமல் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இருவரும் கோர்ட்டில் சரணடையப் புகுவதெல்லாம் நிஜவாழ்வில் இயல்பாக நடக்கக் கூடியது தான் என்பதை ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கக் கூடிய மனம் இட்டு நிரப்பிக் கொள்ளும். ஆனால் கமர்சியல் சினிமாவில் அந்த யதார்த்தம் எடுபடாமல் போகலாம்.
ஆக, இவ்விரு தர்க்கங்களையும் அடைக்க வடக்கூரானும் அவனைச் சார்ந்த ஒரு கும்பலும் typical சினிமா வில்லன்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். நாவலில் வரும் “சின்னப்பய வெட்டிப்புட்டான் நமக்கு வக்கில்லாமப் போச்சே” என்ற அப்பனின் கழிவிரக்கமும், தன் அய்யாவின் மீது சிதம்பரத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அசுரனில் இல்லை. சுவாரசியமான இருமைக்காகவும் ப்ளாஷ்பேக் பில்டப்புக்காகவும் “அண்ணனுக்கு பதில் நீ செத்திருந்தாலாச்சும் குடும்பம் உருப்பட்டிருக்கும்” என்று அப்பனின் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவனாக சிதம்பரத்தை மாற்றியிருக்கின்றனர்.
நாவலில் டீட்டெய்லாகச் சொல்லப்படும் கரிசல் நிலத்தின் வெக்கை, காட்டுக்குள் இறங்குவதன் கஷ்டம், சோற்றுக்குப் படும் பாடு, படிக்கும் போதே கால் வலிக்கக் கூடிய பெரு நடையெல்லாம் சினிமாவில் சாத்தியமும் இல்லை எடுத்தால் பார்க்கவும் ஆளிருக்காது என்பதால் அவற்றை விலக்கியதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் ஏனோ அய்யா புகைக்கும் பீடிப்புகையிலிருந்து அத்தை - மகள் என்ற மாமன் குடும்பம் வரை காணாது போயிருக்கிறது. அதே சமயம் மகன்களைப் பாதுகாப்பதில் சிவசாமியின் குணவார்ப்பு சினிமாவில் சற்று விரிந்திருக்கிறது.
ஆக, வெக்கை முதல் பாதியோடே முடிவடைகிறது. இரண்டாம் பாதியில் பெரும்பாலும் வேறு களம், வேறு மனிதர்கள், வேறு ஒரு பிரச்சனையை நோக்கிக் கதை சென்றுவிடுகிறது. சிவசாமி இந்த ஊருக்கு வந்து சேர்ந்ததற்கு நாவலில் இருந்த சிறிய lead ஐ வைத்து வேறு கதை பின்னிவிட்டார்கள்.
வெற்றி மாறன் படங்களில் வஞ்சம், துரோகம், ரிவெஞ்ச் போன்ற Human emotions ஒரு craft ஆகவே செதுக்கப்படுவதைக் காணமுடியும். ஜாலக்காரனின் லாவகத்துடன் அவை Disclose செய்யப்படும். இந்தத் துல்லியமே அவர் படங்களில் compassion குறைவாக இருப்பதாய் (எனக்கு) ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

அசுரனில் இந்தத் துல்லியம் இல்லை. Gray shade மனிதர்கள் இல்லை அல்லது அப்படி நினைத்துச் செய்த கதாபாத்திரங்கள் முழுமையாக ஆகி வரவில்லை. மறுபுறம் இரக்கமும் கருணையும் ஆர்கானிக்காக அமைந்திருக்கிறது. இந்தச் சமநிலை எதேச்சையானதாகக் கூட இருக்கலாம்.
வெக்கையில் சாதி சார்ந்த கோணம் அனேகமாகக் கிடையாது அல்லது மிகவும் subtle ஆக இருந்தது; ஆனால் அசுரனில் சாதியின் பெயர் தவிர்த்து மீதியெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு விடுகின்றது. ( சேஷாத்திரி தவிர - அதெற்கென்ன அவசியம் என்றும் புரிபடவில்லை.) இந்த இரண்டாம் பகுதி இன்றைக்கு நாடிருக்கும் நிலைமைக்கு மிகவும் முக்கியம் தான்; ஆனால் அதில் கலையமைதி கூடிவரவில்லை.
வெற்றிமாறன் இனி அவரே நினைத்தாலும் ஒரு மோசமான படத்தை எடுக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவு கன்ஸிஸ்டன்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.  

மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் பூமணி இந்தப் படம் குறித்து என்ன நினைக்கிறார் என்று இந்து தமிழ்திசையில் ஒரு நேர்காணல். அவருக்கும், அவருடைய பார்வையில் படம் எடுக்கப்பட்டிருந்தால் உலகத்தரத்துக்குப் போயிருக்கும் என்றுதான் படுகிறது.    


எழுத்தாளர் பூமணியின் ஆதங்கம் நியாயமானதுதானா? எனக்கென்னவோ அது சரிதான் என்று தோன்றவில்லை  அதே மாதிரி ராஜன் ராதாமணாளன் சொல்கிற மாதிரியும் இல்லை!  நாவல் வடிவத்தை அப்படியே திரையில் கொண்டுவரமுடியுமா என்ற சந்தேகம் எனக்குள் நீண்டநாட்களாகவே இருக்கிறது.

படத்தை பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும் .

மீண்டும் சந்திப்போம். 

Friday, October 4, 2019

ச்சும்மா ஜாலிக்கு! #மலைக்கள்ளன் (1954) பட விமரிசனம்!

ச்சும்மா ஜாலிக்கு எழுத ஆரம்பித்தாலும் பழைய படங்களைத் தேடிப்பிடித்துப் பார்த்துவிட்டு, சீரியசாகவே திரை விமரிசனம் செய்வதில் நம்மூர் இலக்கியவாதிகள் (அவர்கள் எவருமே அப்படித் தங்களைச்  சொல்லிக் கொண்டதில்லை)  பலரை மீள்நினைவு செய்து கொள்கிற முயற்சியாகவே  இந்தப்பகுதி மாறி வருவது நண்ர்களுக்குப் பிடித்திருக்கிறதா? பிலஹரி என்றொரு பழைய தமிழ் எழுத்தாளர், அவரை நினைக்கிற தருணமாக அவர் கதை ஒன்று ரோஷக்காரி என்ற பெயரில் படமாக வந்ததைத் தொட்டு எழுதியதில்  ஒரு பின்னூட்ட விவாதம் எங்கள் Blog ஸ்ரீராமுடன் நடந்தது. அதன் தொடர்ச்சியாக   அவரிடம் ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளாக அந்தநாட்களில் வெளிவந்த நான்கு சிறுகதைகள் அவருடைய பைண்டிங் கலெக்ஷனில் இருப்பதாக, நேற்றைய பதிவில் ஸ்ரீராம் சொன்னதும், அவருடைய சிறுகதைகளை எங்கள் Blog இல் விரைவில் எதிர்பார்க்கலாம் என்பதும் கூட ஒரு Butterly effect தான்!  அதேமாதிரி பிலஹரியின் ஒரிஜினல் பெயர் T ராமன் என்பது கூட அவருடைய கதை  ஆலயம் என்ற பெயரில் வந்ததில் டைட்டில் கார்ட் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதான வெகுஜன மறதி, ஒரு வாசகனாக என்னை மிகவும் வருத்தப் பட வைக்கிற செய்தி. 

மலைக்கள்ளன் படப்பாடல்கள் முழுதும் 

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று பெயர் சொன்னால் உடனே  நினைவுக்கு வருகிற பாடல் தமிழன் என்றொரு இனமுண்டு! தனியே அவர்க்கொரு  குணம் உண்டு! என்ற பாடலாகத்தான் இருக்கும். கவிஞர் கதைகளும் எழுதி இருக்கிறார் என்பது அதிகம்  தெரியாத சங்கதி என்றால் அதிலொன்று திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியதும் தமிழில்  முதன் முறையாக ஜனாதிபதி விருதும் (வெள்ளிப்பதக்கம்) வாங்கி இருக்கிறது என்றால் அது எம்ஜியார் பானுமதி நடித்த மலைக்கள்ளன் படம்தான்!  கொசுறுச் செய்தியாக வசனம் எழுதியவர் 
மு.கருணாநிதி அடுத்தவர் கதைக்கு வசனம் எழுதியே வசன கர்த்தாவாக ஆனதும், அப்படியே அரசியல்வாதியாக மாறியதும், இந்தப்பதிவுக்கு அவசியமில்லாதவை.    

நாமக்கல் கவிஞர் கல்கி ராகிருஷ்ணமூர்த்தி போல மிகப் பிரபலமான கதாசிரியர் இல்லைதான்! ஆனால் கல்கியின் மூன்று கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்ட போதிலும் கூட மலைக்கள்ளன் அளவுக்கு வெற்றிப்படமாகவோ, விருது வாங்கும் அஅளவுக்குப் பரிசீலிக்கப்பட்டதாகவோ எதுவுமே தேறவில்லை. இதை முன்னால் அவருடைய கள்வனின் காதலி திரைப்பட விமரிசனமாக எழுதியபோதே சொல்லி இருக்கலாம். கல்கியின் பெயரை பொன்னியின் செல்வன் ஒன்று தான் இன்னமும் நினைவில் வைத்திருக்கும்படி செய்து கொண்டிருக்கிறது என்பதில் எழுத்தாளரின் குற்றம் எதுவுமே  இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.


பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த ஒரு ஸ்பானிஷ் இளைஞன், தன்னுடைய நாடும் ஏழை ஜனங்களும் சுரண்டப் படுவதை சகிக்க முடியாமல்  Zorro என்று முகமூடி அணிந்த கள்வனாக மாறி ஏழைகளைக் காப்பாற்றுகிற கதாபாத்திரம் கதைகள்  மிகவும் பிரசித்தம்! அந்தக் கதைகளில் ஒன்றை அப்படியே லோக்கலைஸ் செய்து எழுதப்பட்ட கதைதான் மலைக்கள்ளன். கள்வனின் காதலி கூட அந்த நாட்களில் கொள்ளிடக் கரையில் பிரசித்தமாக இருந்த ஜம்புலிங்க நாடார் என்ற திருடனுக்கு கதாநாயகன் வேஷம் போட்டு எழுதிய கதைதான் என்பதும் ஞாபகம் வைத்துக் கொண்டீர்களேயானால் ஆங்கிலத்தில் படித்த பார்த்த கதைகளில் இருந்து அங்கே இங்கே கொஞ்சம் உருவிக் கதை எழுதுவது கல்கிக்கு கைவந்த கலை என்பதை மறைந்த பதிவர் டோண்டு ராகவன் விலாவாரியாக அவருடைய பதிவுகளில் எது எங்கிருந்து எப்படி அப்பட்டமாக உருவப்பட்டது என்பதை ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார்! அப்படியிருக்கும்போது நாமக்கல் கவிஞரும் கூட கதையைத் திருடி எழுதினார் என்று சொல்லலாமா? அபாண்டம்! 

கதைக்களம்  என்னவோ மிகவும்  சுவாரசியமாகப் பின்னப்பட்ட, விறுவிறுப்பாகப்போகிற  சம்பவங்களின் கோர்வைதான்!  

விஜயபுரி என்றொரு மலைப்பிரதேசம். அழகான வளமான இடமென்கிற போது  கள்வர்களும் கொள்ளையர்களும்  வீடு புகுந்து பெண்ணைக் கடத்துகிறவர்களும் இல்லை என்றால் எப்படி?  கதாநாயகி பூங்கோதை, பெருந்தனக்காரர் சொக்கேச முதலியாரின் பெண். தாயில்லாத பூங்கோதையை அவளது விதவை அத்தை காமாட்சி தான் ஆதரவாக வளர்க்கிறாள். காமாட்சியுடைய ஒரே மகன் குமாரவீரன் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுகிறான்.

வீரராஜன்! பூங்கோதையின் உறவுக்காரன். பணத்துக்காக பூங்கோதையைத் திருமணம் செய்துகொள்ளக் காத்த்திருப்பவன். கெட்ட சகவாசம் உள்ளவன் என்பதால் அந்த எண்ணம் ஈடேறாமல், தன்னுடைய அந்தரங்கத்துக்குப் பாத்திரமான காத்தவராயன் என்ற கள்ளன் , அவனது ஆட்கள் துணையுடன் பூங்கோதையைக் கடத்தி வரும்போது, மலைக் கள்ளனும் அவனது ஆட்களுமாக இடைமறித்துப் பூங்கோதையைக் காப்பாற்றுகிறார்கள். 

காத்தவராயன், மலைக்கள்ளன் என்று இரு கள்வர்களுடைய கூட்டத்தையும் பிடிக்கப் போலீஸ் படாதபாடு படுகிறது, இந்த இடத்தில் அப்துல் ரஹீம் என்ற ஒரு பணக்கார வியாபாரி, அடிக்கடி  வியாபார விஷயமாக   தூரதேசங்களுக்குப் போய் வருவதில், விஜயபுரியில் அவ்வப்போது தலைகாட்டுகிறவர் அறிமுகமாகிறார்.

கடத்திவரச்சொன்னதில் கோட்டைவிட்ட காத்தவராயன் வீர ராஜனுடைய கோபத்துக்கு ஆளாகிறான். மலைக்கள்ளனின் பாதுகாப்பில் பூங்கோதை பத்திரமாக இருக்கிறாள்.ஆரம்பம் அவநம்பிக்கையில் என்றாலும் அது படிப்படியாகக் காதலாகவும் மாறாவிட்டால்தான் அதிசயம்! இப்படிப் பல திருப்பங்களுக்குப் பிறகு  காத்தவராயன் வீரராஜன் கூட்டம் பிடி படுகிறது  மலைக்கள்ளன் தான் சிறுவயதில் காணாமல் போன அத்தைமகன் குமாரவீரன் என்று தெரியவந்து, சுபமாக கதை, படம் முடிகிறது.


மூன்றுமணிநேரப் படம், ஒன்பது பாடல்கள்  என்பதை எல்லாம் தாண்டி, இன்றைக்கும் எப்படிப் பார்ப்பவர்களைக் கட்டிப் போடுகிறது என்பதில் அது  கருணாநிதி வசனத்தால் அல்ல என்பதும்  முழுக்க முழுக்க எம்ஜியார் முகராசியால்  மட்டுமே என்பதும் தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரமில்லை!   போன்ற பாடல்கள், படத்துடன்  இன்றும் மனதில் நிற்பது அதிசயம்! 

மீண்டும் சந்திப்போம்.                    

Saturday, September 28, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கல்கியின் கள்வனின் காதலி! பட விமரிசனம்!

ஒரு எண்பது வருஷங்களுக்கு முன்னால் கதாசிரியர்கள் தமிழில் எப்படிக் கதை சொன்னார்கள், ஜனங்களும் அதை எப்படித்  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என்பதையெல்லாம்  திரும்பிப்பார்த்தால் நிஜமாகவே தலை சுற்றுகிறது! கூடவே கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அதைத் தாண்டி அவர் எழுதிய வேறு கதைகளைப் படிக்க ஏன் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை என்ற கேள்விக்கு விடைகிடைக்கிற மாதிரியும் இருக்கிறது!


 

கள்வனின் காதலி! இப்படித் தலைப்பில் 1937வாக்கில் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கதை! கதை என்னவோ மிகச் சாதாரணமானதுதான்! கல்யாணியும் முத்தையனும் மாமன் மகள் அத்தைமகன் உறவுமுறையுள்ள காதலர்கள்! மேலே பாரதியார் பாடலுடன் டைட்டில் கார்ட் இரண்டரை நிமிடம் பார்த்தீர்களானால்  படத்தில் நடித்தவர்கள் யார் யார் என்ற விவரங்கள் தெரியும். டைட்டில் முடிந்தவுடன் ஒரு காதல் பாட்டு! 


இதைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதும் போது காதல் பாட்டாகத்தான் எழுதினாரா இல்லையா  என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியாததால்  உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்! முதலில் டூயட்டாக வரும் இந்தப்பாடலை கண்டசாலா மட்டும் பாடுகிற சோலோ வெர்ஷன் படத்தின் கடைசிப்பகுதியில் இருக்கிறது. பாட்டு முடிந்ததும், கதை ஆரம்பம்! கல்யாணியின் தந்தை மகள் முரடனும் ஏழையுமான முத்தையனுடன் பழகுவதைக் கண்டிக்கிறார். மகளுக்கு வசதியான கிழவர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் பேசியும் முடித்து விடுகிறார். கல்யாணி முத்தையனைச் சந்தித்து ஓடிப்போய்விடலாமாவென்று கேட்கிற அளவுக்கு கதை எழுதிய 1937 அல்லது படம் வெளியான 1955 காலகட்டத்திலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறது! முத்தையன் தன்னுடைய தங்கை அபிராமிக்கு, திருமணம் செய்துவைத்தபிறகுதான், கல்யாணம் பண்ணிக்கொள்வதைப் பற்றியே யோசிக்க முடியும் என்று மறுத்துவிடுகிறான். கோபத்துடன் கல்யாணி தந்தை பார்த்த கிழவருக்கே இரண்டாம் தாரமாக ஆகிறாள். முத்தையன் தங்கையுடன் வெளியூருக்குப் போய்விடுகிறான்.


கதாநாயகன் கள்வனாக மாற வேண்டாமா? ஒரு மடத்தின் கார்வாரிடம் வேலைகேட்டுப்போகிறவனை முதலில் விரட்டி அடிக்கும் அந்தக் கார்வார் சங்குப்பிள்ளை  (TS துரைராஜ்), முத்தையனின் தங்கை அபிராமியைப் (குசலகுமாரி)  பார்த்துவிட்டு, நாயகனைத் தாஜா செய்து அழைத்துவரச் செய்து கணக்கப் பிள்ளை வேலை கொடுக்கிறான். பின்பு ஒரு நாள் நாயகனை வெளியூர் வசூலுக்கு அனுப்பிவிட்டு தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். நாயகனிடம் நன்றாக உதைவாங்கித்  தப்பித்துப் போகிற சங்குப் பிள்ளை போலீசில் முத்தையன் திருடியதோடு தன்னைத் தாக்கியதாகவும் புகார் கொடுத்துவிடுகிறான்.  லாக்கப்பில் வைக்கப்படுகிற முத்தையனுக்கு அங்கே  சொக்கன் என்கிற குறவன் ஆறுதல் சொல்கிறான், இருவருமாகத் தப்பித்துப் போகிறார்கள். ஒருதரம் திருடன் என்று முத்திரை குத்திவிட்டால் அதுவே காலத்துக்கும்  நிற்கும்  என்று உபதேசம் செய்து முத்தையனையும் கள்வனாக மாற்றுகிறான்! கொள்ளிடக்கரை சுற்றுவட்டாரமே பயப்படும் கள்வனாக நாயகன் மாறியாயிற்று! 

    
நாயகி கல்யாணியைத் திருமணம் செய்து கொண்ட கிழவர் மனம் மாறி இந்தப்பாட்டுடன், சொத்துக்களை நாயகியின் பெயருக்கே உயில் எழுதி வைத்து விட்டு விவாக விடுதலை கொடுப்பதாகச் சொல்லிவிட்டு செத்தும் போய்விடுகிறார். இந்த இரண்டுபேரும் சந்திப்பதற்கும், அபிராமி என்ன ஆனாள் என்பதற்கு முடிச்சுப் போடுகிற மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாஸ்திரி (கே சாரங்கபாணி)  அவர் மனைவியாக அதான் எனக்குத்தெரியுமே முத்துலட்சுமி, நாடகத்தில் பெண் வேடமிடும் துணைக்கதாநாயகனாக கமலபதி (TR ராமச்சந்திரன்)    என்று வரிசையாகக் கதையை நகர்த்திக் கொண்டு போகிறார்கள். படத்தைப் பொறுமையாகப் பார்ப்பதற்கு கே சாரங்கபாணி, முத்துலட்சுமி  TR ராமச்சந்திரன், TS துரை ராஜ், குறவனாக நடித்தவர் என்று இவர்கள் வரும் காட்சிகள்தான் உதவியாக இருக்கின்றன .    


யூட்யூபில் இந்தப்படத்தைப் பார்த்தபோது இந்தப்பத்து நிமிட சதாரம் நாடகத்தில் வருகிற கள்ளன் சதாரம் (சிவாஜி TR ராமச்சந்திரன்) சந்திக்கிற காட்சி நன்றாக இருந்தது. என்தம்பி படத்தில் கூட இதே காட்சி கொஞ்சம் சுருக்கமாக இருந்தது நினைவுக்கு வருகிறதா?

என்னதான் கதாநாயகனாக இருந்தாலும் போலீஸ் வேட்டையாடுகிற  கள்வனை விட்டுவிட முடியுமா? அதுவும் அந்த நாட்களில்? நாயகனைப் போலீஸ் சுடுகிறது, நாயகி தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறாள். இப்படித் திரைப்படம் முடிக்கப்பட்டாலும், கல்கியின் கதையில் முடிவு அப்படி இல்லை.  

கல்கியின் கதைக்கு  S D சுந்தரம் வசனம் எழுதியிருக்கிறார் என்பதை விட கள்வனின் காதலி கதையை முதலில் என் எஸ் கிருஷ்ணன் தயாரிக்க இருந்து பின்னர் கைவிடப்பட்டதாக விக்கி தகவல் சொல்கிறது. எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.

கல்கியின் கதைகளான பார்த்திபன் கனவு, தியாகபூமி இரண்டும் படமாக எடுக்கப்பட்டதில், பார்த்திபன் கனவு படம் ஒன்றில் தான் கதையில் இருந்த வசனங்களை அப்படியே எடுத்துப்பயன் படுத்தப்பட்டதாக நினைவு. படம் மிக நன்றாக எடுக்கப்பட்டுமே கூட வெற்றிப்படமாக அமையவில்லை. இந்தப் படத்துக்கு வசனம் கொஞ்சம் அல்ல நிறையவே மைனஸ்!


மீண்டும் சந்திப்போம்.     

Saturday, September 21, 2019

ச்சும்மா ஜாலிக்கு! ரோஷக்காரி! பட விமரிசனம்!

நேற்றைக்கு எங்கள் பிளாகில் ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வீடியோவாக நிலவே நீ சாட்சி படத்திலிருந்து இரண்டு பாடல்களைப் பகிர்ந்திருந்ததில் நடிகர் முத்துராமனைப் பற்றிய ஒரு கமென்ட் : இரண்டாவதில் சூப்பர் ஃபிட்டாகத் தெரிகிறார் முத்துராமன். இந்த ஃபிட்னெஸ்ஸைத் தேடி ஓடியே அவர் காணாமற்போனார் என்பது நினைவுக்கு வருகிறது. சில சமயங்களில் இந்த உடம்பை அதன் இஷ்டப்படியும் விட்டுவிடுவதே நல்லது எனவும் தோன்றுகிறது.  இதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த வேறொரு திரைப்படத்தில் முத்துராமன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர்! கோடீஸ்வரன் V S ராகவனுடைய லக்கேஜை தூக்கிக் கொண்டு வெளியே அவரது கார் அருகில் வரும்போது, கார் self எடுக்காமல் மக்கர் செய்கிறது. முத்துராமன் தனியாளாக அந்தக் காரைத் தள்ளிக்கொண்டே வீடுவரை கொண்டுவந்து சேர்த்து விடுகிறார்!    

ரோஷக்காரி! 1974 இல் வெளியான தமிழ்த் திரைக் காவியம்! நவரசத் திலகம் ஆக முத்துராமனும் கலைஞர் திலகம் ஆக ரவிச்சந்திரனும் கே ஆர் விஜயாவும் சேர்ந்து நடித்த படம்! கதை பழம்பெரும் எழுத்தாளர் பிலஹரி என்பதால் பார்க்கலாமே என்று மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு பார்த்தபடம். நாற்பத்தைந்து வருடத்துக்கு முன்னால் வந்தபடம் இப்போதும் கூட பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது!


மணவாள நாயுடு (SV சுப்பையா) ஒரு தபால்காரர்! காலைப் பொழுதில் ஆண்டாள் பெருமாள் படம் வைத்துப் பாசுரம் சேவிக்கும் காட்சியோடு  ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகம் ஆகிறார்கள்! மூத்தமகன் பட்டாபி (முத்துராமன்) ரயில்வே போர்ட்டர், அடுத்தமகன் ரகுராமன்(ரவிச்சந்திரன்)  கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான், என்பதை வசனங்களில் தெரியப்படுத்துகிறார்கள்! ஏகாம்பரம் என்கிற  வக்கீல் குமாஸ்தாவாக         சோவும், பால்காரி இசக்கியாக மனோரமாவும் முதல்காட்சியிலேயே அறிமுகம். அடுத்து முதலில் சொன்னமாதிரி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்குகிற கோடீஸ்வரன் தர்மலிங்கம்  (VS ராகவன்) வீட்டுக்கு வருகிற காட்சியில் அவரது ஒரே மகள் சீதா (கே ஆர் விஜயா)  திருமணம் எப்படி கிராண்டாக நடக்கவேண்டும் எனத் தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிற காட்சி.

ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சினிமாவில்,கதைகளில் சுவாரசியமேது? கல்லூரியிலேயே காதலர்களாக கதாநாயகனும் கதாநாயகியும்! படிப்பு முடிந்து அவரவர் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.கதாநாயகியின் தந்தை மகள்மீது பாசமுள்ள தந்தையாக, அதே நேரம் நல்ல அந்தஸ்துடன் கூடிய மாப்பிள்ளையாக வரவேண்டுமென்கிற ஆசையுடன்!
  

இந்த ஒரே டூயட் பாட்டுடன்  கே ஆர் விஜயா ரவிச்சந்திரனை திருமணம் செய்துகொள்கிறார்! சொன்னபேச்சு கேட்கா விட்டால் சொத்து முழுவதையும் கோவில் குளத்துக்கு எழுதிவைத்துவிடுவேன் என்ற தந்தையின் மிரட்டலுக்கு   சொத்து வேண்டாம், நான் ஆசைப் பட்டவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ரோஷக்காரியாக மகள் நிற்பதில் தந்தையே திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனால் அடிக்கடி மகளின் புகுந்த வீட்டைச் சீண்டுகிற மாதிரி சில காட்சிகளில் மகள் மரணப் படுக்கையில் கிடக்கும் நேரத்தில் தான் மனிதர்களை ஏழை, பணக்காரன் என்று பிரித்துப் பார்ப்பது தவறு என்று புரியும் எனத் தந்தையிடம் சொல்கிறாள். கார்விபத்தில் தந்தை மரணப் படுக்கையில் மகளிடம் பேசுகிற காட்சிக்குப் பிறகுதான் கதையில் ஒரு திருப்பம்! சொத்துக்களை ரோஷக் காரியான மகள் சீண்டமாட்டாள் என்று மருமகன் பெயரில் உயில் எழுதி வைத்திருப்பதில் கதாநாயகனைப் புதுப்பணக்காரத் தனம், சொந்தக் குடும்பத்தையே பிரிக்கிறது. கதாநாயகியும் புகுந்த வீட்டாரோடு நாயகனைப் பிரிகிறாள்!

கதாநாயகனை ஏமாற்றி சொத்தைப் பறிக்க வில்லன் வில்லி வேண்டாமோ? மேனேஜர் ராமதாஸ், தங்கையாக  CID சகுந்தலா அதற்காகவே இருக்கிறார்களே! குடிபோதையில் சொத்துக்களை எழுதிவாங்கிக் கொண்டு நாயகனைத் துரத்தி விடுகிறார்கள்! நாயகன் சோற்றுக்குத் திண்டாடுகிறான் தெருவில் பிச்சை எடுக்கிறான். இப்படியே போய்க் கொண்டு இருந்தால் கதையை எப்படி முடிப்பது?

எப்படி முடிக்கிறார்கள் என்பது தான் சுவாரசியமான க்ளைமேக்ஸ்! இப்போது வருகிற பல குப்பைத் திரைப் படங்களுக்கு மத்தியில் இந்தப் பழைய படம் கொஞ்சம் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. கதைக்காகத் தான் நடிகர்களே தவிர, நடிகர்களுடைய இமேஜுக்காகக் கதை பண்ணத்தெரியாத காலத்தைய படம் என்று உறுதியாகச் சொல்ல முடிகிற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. முழுப்படமும்  யூட்யூபில் கிடைக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.              

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)