தங்கமலை ரகசியம் என்று ஒரு பழைய தமிழ்ப் படம். அதில் TR ராமச்சந்திரன் ராஜா! காற்றுக்குக் கூடக் கேட்காத ரகசியங்கள் எல்லாம் என் காதுக்குக் கேட்கிற மாதிரி எனது காதுகள் பெரிதாக வளர வேண்டும் என்று ஒரு மருந்தைக் குடிக்கப்போய் கழுதைக் காது என்றாகிவிடும். ஊருக்குத் தெரியாமல் தலைப்பாகையால் ஒருமாதிரி மூடி மறைத்திருப்பார். ராஜாவுக்கு முடிவெட்டிவிட வரும்போது கழுதைக்காது ரகசியம் தெரிந்துவிடும். அப்புறம் என்னாகிறது என்று குண்டு கருப்பையா, அங்கமுத்து எல்லோரும் சேர்ந்து கலக்குகிற இந்தக் காமெடியைப் பாருங்களேன்!
சரி! எதற்காக இந்த காமெடி சீன் இப்போது என்கிறீர்களா? காங்கிரஸ் மேதாவிகள் சிலர் ராகுல் காண்டியை இந்தக் காமெடி சீனில் வருகிற ராஜா மாதிரியே ஆக்கி விட்டார்கள் என்று சொன்னால் மட்டும் போதுமா? மொத்தக்கதையும் இந்த வீடியோவில் வெறும் 6 நிமிடம்தான்!
2018 இல் சுப்ரமணியன் சுவாமி சொன்னதை என்னமோ இப்போதுதான் சொன்னமாதிரி, திடீரென முழித்துக் கொண்ட காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்! ராகுலைத்தான் budhdhu என்று சொல்ல வேண்டுமா? காங்கிரஸ் கட்சி முச்சூடுமே அப்படிக் கூறுகெட்டவர்களால்தான் நிரப்பப் பட்டிருக்கிறது என்று சொன்னால் ஜீவி சார் கோபித்துக் கொள்வார்தான், அதற்காக உள்ளதைச் சொல்லாமல் இருக்க முடியுமா?
மீண்டும் ஒரு காங்கிரஸ் காமெடியோடு சந்திப்போம்.
This comment has been removed by the author.
ReplyDelete// ஜீவி சார் கோபித்துக் கொள்வார்தான்,//
ReplyDeleteநான் ஒன்றும் பிஜேபிக்காரன் இல்லை இது குறித்து சந்தோஷப்படுவதற்கு.
நான் ஒன்றும் இன்றைய காங்கிரஸ்காரன் இல்லை இது குறித்து கோபப்படுவதற்கு..
ஆனால் ஆட்சிக்கு வந்த பிஜேபி-யின் உள்நாட்டு நடவடக்கைகளில் பல அதிருப்திகள் உண்டு. முக்கியமாக பொதுத்துறையை அழித்து கார்ப்பொரேட் பிர்மாண்டங்களை ஊக்குவிப்பது.
மற்றும் எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உருப்படியான நடவடிக்கைகள் எடுக்காமலிருப்பது.
வெகுஜன மக்களுக்கு எதிரான அந்த நடவடிக்கைகளை எதிர்த்துச் செயல்பட உருப்படியான ஒரு எதிர்கட்சி இன்றைய தேவை. காங்கிரஸை விட்டால் அதற்கு வேறு வழியில்லாமல் இன்றைய நாட்களில் இருக்கிறது.
ஏற்கனவே தனது தவறுகளால் நொண்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸை மேலும் வதைப்பது நமது வேலையல்ல என்று நினைக்கிறேன். அது எழுந்து நடக்க ஆக வேண்டியதைச் செய்ய வேண்டும்.
பிஜேபிக்கும் எதிர்காலத்தில் இன்றைய காங்கிரஸின் இதே நிலை வந்தால், அந்த சமயத்தில் அதை ஊக்குவிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
இது ஏழை எளியவர்கள் நிறைந்த நாடு. அவர்கள் வாழ்வு நலனுக்காக ஜனநாயகம் தழைக்க வேண்டும். உருப்படியான ஆளும்-- எதிர் கட்சிகள் நமக்குத் தேவை.
ஒற்றை கட்சி பலம் பெறுவது உகந்ததல்ல என்ற அடிப்படையில் என் பின்னூட்டங்கள் அமைகின்றன.
அருள் கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்..
ஜீவி சார்!
Deletehttps://consenttobenothing.blogspot.com/2019/07/34-bbc.html இங்கே உங்களுடைய கவலைகளுக்கு மருந்தாக டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறார். அதுதவிர PGurus தளத்துக்குப் போனீர்களானால் அங்கே கோவா கட்சித்தாவல் விஷயத்தில் பிஜேபிக்குளிருந்தே எதிர்க்குரல்கள் #decongressify என்றொலிக்க ஆரம்பித்திருப்பதை பார்க்க முடியும்.
காங்கிரஸ்கட்சி முற்றிலுமாக உடைத்து நொறுக்கப்பட வேண்டியது என்பது என்னுடைய தீர்மானமான கருத்து. ப சிதம்பரம் கமல்நாத் இன்னபிற தீய சக்திகளை வைத்திருக்கிற ஒரு கட்சி எழுந்து நடக்க உதவி செய்யவேண்டியது என்னுடைய வேலையல்ல.
அடக்கமுடியாத பலத்தோடு ஒரே ஒரு கட்சி என்பது கற்பனையான பயம். அடக்கவே முடியாதவராக இந்திரா ஒரு நாசகார சக்தியாக உருவெடுத்தபோது, ஒரு ஜெயப்ரகாஷ் நாராயணனையும் சேர்த்தே உருவாக்கின வரலாறு எனக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteபொதுவான கருத்துக்களை பொதுவாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி -- எதிர் கட்சி, அவற்றின் பங்களிப்புகள் என்று ஒரு கருத்தை முன் வைத்தால் நீங்கள் தனிப்பட்ட நபர்களைச் சாட அதை உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள். நாம் ஒன்றைச் சொன்னால், அதற்கு நீங்கள் வேறொன்றைச் சொல்லி அந்த வேறொன்றுக்கு பதில் சொல்லும் பொழுது மற்றொன்றைச் சொல்லி.. இப்படியான போக்கு எது ஒன்றையும் ஆக்கபூர்வமாக விவாதிக்க முடியாத சூழ்நிலையைத் தான் ஏற்படுத்தும். இத்தோடு இந்த விஷயத்தை முடித்துக் கொள்ளலாம்.
ReplyDeleteநன்றி, கிருஷ்ணமூர்த்தி சார்.