நம்மூரில் பொருளாதாரம். வெளியுறவு விவகாரங்கள் முதலான முக்கியமான விஷயங்கள் தெரிந்து பேசுகிற அரசியல்வாதிகள் மிக அபூர்வம்! அதுவும் தமிழகத்தில் விஷயம் தெரிந்து பேசுகிற ஆசாமிகளைக் கண்டாலே முட்டை வீசித் தாக்குகிற திராவிடக் கலாசார கருமாந்தரத்தில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மாதிரி உண்மையிலேயே பொருளாதார பேராசிரியராக இருந்த ஒருவரைப் பற்றி இங்கே ஒரு ஏளனமான கண்ணோட்டமே திட்டமிட்டுப் பரப்புரை செய்யப்பட்டது. டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் போதித்திருக்கிறார் என்பது இங்கே எத்தனைபேருக்குத் தெரியுமோ? மனிதர் கலகக்காரர்தான், ஆனால் யாரைத் தாக்குகிறோம், எதிர்த்துக் கலகம் செய்கிறோம் என்பதில் மிகத் தெளிவாக இருப்பவர். சோனியாG மற்றும் வாரிசுகளை அம்பலப்படுத்தியதில், அவரளவுக்கு களத்தில் இறங்கிச் செயல்பட்டவர்கள் யாருமே இல்லை.
எதற்காக இத்தனை பில்டப் முன்னோட்டம் என்கிறீர்களா?
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இந்திய பொருளாதாரம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புத்தகம் வெளியாகிவிடும் என்று சொல்வதுடன் , இந்தியப் பொருளாதாரம் குறித்து தனது கருத்துக்களை இந்த நேர்காணலில் சொல்கிறார். வீடியோ 27 நிமிடங்கள் தான்!
பிஜேபிக்கு இப்படி ஒரு சோதனையா? பாஜகவுக்குத் தாவுகிறாரா ராதாரவி என்றொரு தலைப்புக் கொடுத்து வில்லங்க வாயர் ராதாரவியுடன் நேர்காணல் ஒன்றை ரங்கராஜ் பாண்டே நடத்தியிருக்கிறார்! பொதுவெளியில் கொஞ்சம் விவகாரமாகப் பேசுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிற நிறைய திராவிடப் பேச்சாளர்களில் ராதாரவி கொஞ்சம் பிரபலமானவர்! அதற்காக பிஜேபிக்குத் தாவுகிறார் என்றெல்லாம் விவகாரம் வேறுவிதமாகக் கிளப்பி விட்டால்....!
கொஞ்சம் ஆவலைத் தூண்டிய, தூண்டில் போட்டு இழுத்த தலைப்பு, விவாதம் இது. வீடியோ 51 நிமிடம்.
ஞாயிறு பொழுது கொஞ்சம் வித்தியாசமாகப் போக வேண்டாமா? கர்நாடக சபாநாயகர் ஞாயிறு விடுமுறை என்று கூடப்பார்க்காமல் சற்றுமுன் காலை 11.30 மணிக்கு நிருபர்களைக் கூப்பிட்டு மிச்சமிருந்த அதிருப்தி MLAக்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்து அறிவித்திருக்கிறார். விவகாரம் மறுபடி நீதிமன்ற முடிவுக்கே விடப்படுகிற மாதிரியான இந்த முடிவில் விவேகம் இருக்கிற மாதிரித் தெரியவில்லை. நாளை காலை எடியூரப்பா நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தோற்கடிக்க இது உதவாது என்றாலும் கர்நாடக அரசியல் குழப்பத்தை நீட்டிக்க மட்டுமே உதவும் என்றே தோன்றுகிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment