Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, July 6, 2021

இதுதான் விஷயம் ::: யார் யாருக்கு எப்படிப் புரிய வைப்பது?

 2500 கோடி ரூபாய் செலவில் சென்னையில் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். பூங்காக்கள் அவசியம் தான்!  ஒரு பேரிடர்த்தொற்று அபாயம் முற்றிலும் குறையாத தருணம் இது, இப்போது இது ரொம்ப முக்கியமா என்று கேள்வி கேட்டால் பதில் வருமா வராதா என்று எனக்குத் தெரியாது.


1980 களில் ராஜீவ் காண்டி பிரதமராக இருந்த சமயம், புதிய கல்விக்கொள்கை ஒன்று அறிவிக்கப்பட்டு அதன் ஒரு அம்சமாக மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளியும் அறிவிக்கப்பட்டது. எந்தவொரு நல்லவிஷயத்தையும் குறுக்கே விழுந்து மறிக்கும் இடதுசாரிகள் அதையும்  கடுமையாக எதிர்த்தார்கள். தமிழகத்தில் அன்று ஆண்ட கழகம் என்ன காரணத்தாலோ நவோதயா  பள்ளிகளைத் தமிழகத்துக்குள் நுழைய விடவில்லை. இப்போதும் கூட பூங்காவுக்குச் செலவிட உத்தேசித்திருக்கும் 2500 கோடியில் 125 - 150 நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசே செலவுசெய்து ஏழை எளிய மக்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்யலாம். நீட் தேர்வு பற்றி எல்லாம் வீணாக அச்சப்படாமல் மாணவர்கள் தயாராக தரமான பள்ளிகளை உருவாக்குவதுதான் உண்மையான சமூகநீதி, சமநீதியும் கூட! இலவச சைக்கிள்களோ, கலர் டிவி போன்ற இலவசங்களோ அல்ல என்பதை  யாரிங்கே ஆட்சியாளர்களுக்குப் புரியவைப்பது? 


மே 2க்கு முன்னால் தமிழகத்தில் எல்லோருமே பெட்ரோல் - டீசல் விலையேற்றத்திற்கு மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்துத் தான் போராடினார்கள். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தை உதாரணமாக காட்டி, அங்கு போல தமிழகத்திலும் மாநில அரசு வரியை குறைத்து, விலையை குறைத்தால் என்ன என்றெல்லாம் கேட்டார்..

ஆனால் தற்போது, பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் எல்லாப் போராட்டத்திலும் மாநில அரசு கழன்று விட்டது; மத்திய அரசை மட்டும் கண்டிக்கிறார்கள். இங்கே ஒரு நியாயமான ஊடகமிருந்தால், அது என்ன கேள்வி எழுப்ப வேண்டும்?  என சுந்தர் ராஜ சோழன் முகநூலில் கேள்வி எழுப்புகிறார். யார் இதற்குப் பதில் சொல்வது?

பிரிட்டன் உட்பட சில மேற்கத்திய நாடுகளில் Shadow Government என்று எதிர்க்கட்சிகளின் அரசியல் செயல் பாடுகள், துறை வாரியான யோசனைகள், விமரிசனம் என்பதை காப்பியடித்து பாமக இங்கே சிலகாலமாக நிழல் நிதிநிலையறிக்கை (
பட்ஜெட் ) வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராம்தாஸ் இங்கே வெளியிட்டு இருக்கிறார். 126 அறிவிப்புக்களைக் கொண்டதாக இந்த அறிக்கை இருப்பதை பாமகவினரே புரிந்துகொண்டு விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. ஆளும் தரப்பு எப்படிப்புரிந்து கொள்ளுமோ?



ஒரு போலிப்பாதிரி மரணம் குறித்து விதம்விதமாகப் புகழுரைகளும் கார்டூன்களும் வந்துகொண்டே இருப்பதன் மீதான சலிப்பை போக்குகிற மாதிரி ஒத்திசைவு பதிவர் வெ.ராமசாமியின் இந்தப்பதிவு

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, June 30, 2021

ஒரு தலையங்கக் கொட்டு! ஒரு சப்பைக்கட்டு! என்னா உருட்டு!

ஆனந்த விகடன் தலையங்கம்: செய்ய முடிவதைச் சொல்லுங்கள்!


‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது இப்போது சாத்தியமில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றிக் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம், ‘எப்போது குறைக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் தேதி ஏதாவது போட்டிருக்கிறதா?’ என்றும் கேட்டிருக்கிறார்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைப்பதன் மூலமே அவற்றின் விலையைக் குறைக்க முடியும். ‘செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலமே பெட்ரோலியப் பொருள்களின் வரிகள் சமீபகாலத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டன. இவற்றில் மாநில அரசுகளுக்குப் பங்கு வருவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாட் வரியைக் குறைப்பதால் மாநிலத்துக்கு இழப்பு ஏற்படும். இப்போது விலையைக் குறைக்க முடியாது என்றாலும், எங்கள் ஆட்சிக்காலத்துக்குள் இதைச் செய்வோம்’ என்பது நிதியமைச்சரின் வாதம்.
மாநிலத்தின் நிதிநிலைமை அவர் அறியாதது அல்ல. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களில் கலந்துகொண்டவர் அவர். சொல்லப்போனால், தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே ‘மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பது தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்கியவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் நேர்மறையான அணுகுமுறைகள் மூலம் தி.மு.க அரசு பாராட்டைப் பெற்றுவருகிறது. ஜெயரஞ்சன் தலைமையில் தமிழக அரசின் மாநிலக் கொள்கை வளர்ச்சிக் குழுவை அமைத்தது முதல் இப்போது ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரெஸ், எஸ்.நாராயண் ஆகியோரை தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்தது வரை எல்லாமே வரவேற்பு பெற்ற அறிவிப்புகள்.
பால் விலைக்குறைப்பு, பெண்கள் மற்றும் திருநர் சமூகத்துக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் எனத் தேர்தல் வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குறைப்பு விவகாரம் முதல் சறுக்கலாக அமைந்துள்ளது. ‘சொன்னதைச் செய்வோம்... செய்வதையே சொல்வோம்’ என்பது தி.மு.க-வின் தேர்தல் முழக்கம். ‘செய்ய இயலாததை ஏன் சொல்ல வேண்டும்’ என்ற கேள்வியை இப்போது நிதியமைச்சரின் அறிவிப்பு எழுப்பியுள்ளது. தி.மு.க கொடுத்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் பலவும் அரசுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துபவை. அவற்றின் நிலை என்ன ஆகும் என்ற சந்தேகம் இந்தத் தருணத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
‘ஒவ்வொரு மாதத்தின் முதல் பணிநாளன்றும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆய்வு செய்வார். அதைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து அரசின் ரிப்போர்ட் கார்டை வழங்குவார்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க குறிப்பிட்டிருந்தது. அதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. (ஆனந்த விகடன், 30.06.2021)


தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுத்தது யார் என்பது இன்னமும் தெளிவாகாத விஷயம். புதுச்சேரி பிஜேபி அமைச்சர்களும் ஒன்றிய அரசு எனச்சொல்லியே பதவிப் பிரமாணம் செய்ததாக இங்கே செய்திகள் பரவலாக வெளியானபிறகு, தமிழிசை இத்தனை தாமதமாக மறுத்திருப்பதே ஒருவிதமான சப்பைக்கட்டு மாதிரித் தான் இருக்கிறது. (இந்து தமிழ்திசை உள்ளிட்ட ஊடகங்களில் முன்னர் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு, வீடியோக்கள் கிடைக்கிறதா என்று தேடினேன். உறுதி செய்யப்படாத தகவல் என்று நினைத்ததால் இந்தப் பக்கங்களில் அதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.) இதில் தமிழில் பதவியேற்ற பெருமையை மறைப்பது எங்கே இருக்கிறது?
‘இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப்பரப்பு’ என்று சொல்லிப் பதவியேற்பு உறுதிமொழியை ஆரம்பித்துவைத்தவருக்கு, பக்கத்தில் தமிழ்நாட்டில் இந்த ஒன்றியம் என்கிற வார்த்தை கிடந்து படாத பாடு படுவது தெரியாமல் போயிற்று என்றால் நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது?  


உதயநிதி உருட்டுவதற்கெல்லாம் இது உறைபோடக் காணாது தான்! ஆனாலும் ஒரு நல்ல உருட்டோடு பதிவை முடித்துக் கொள்ளலாம் இல்லையா?

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, June 29, 2021

இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்! காங்கிரசுக்கு சோளப்பொரி!

சிறிது காலம் முன்புவரை கூட நான் அர்ஜுன் சம்பத் என்கிற நபரை அவ்வளவாக அறிந்ததில்லை. பொன் மாலை பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் அடிக்கடி அர்ஜுன் சம்பத்தைக் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதுபோக ஒன்றிரண்டு வீடியோக்களில் பார்த்ததோடு சரி. நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ இன்று என் பார்வைக்கு வந்தது. 



இந்த 23 நிமிட வீடியோவில் திமுகவை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரிக் கேள்வி கேட்கிறார். யூட்யூப் சேனல் வைத்திருந்தாலே ஊடகம் என்று அலப்பறை செய்கிற ஆசாமிகளுக்கு  சூடும் வைக்கிறார்  ரெட்பிக்ஸ் சேனல் தலைப்பு வைக்கிற மாதிரி சிவசங்கர் பாபாவைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை, சர்ச்சையைக் கிளம்புகிற மாதிரி எதையும் பேசவில்லை. ஆனால் அப்படித் தலைப்பு வைத்துத்தான் அவர்களும் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறது, பாவம் என்ன செய்வது? அர்ஜுன் சம்பத் குறிப்பிடுகிற லயோலா கல்லூரிப் பேராசிரியை பற்றி  ஒரு 5 நிமிட வீடியோ.  


ஸ்டேன்லி ராஜன் சொல்கிற நுண்ணரசியல் புரிகிறதா?  ஆணையத்தலைவர் மாதிரி ஏதாவது வாங்கிக்கொள்! ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் ஆசைப் படாதே! அவ்ளோ தான்! பஞ்சாயத்து முடிந்தது  


மன்மோகன் சிங் 10 ஆண்டு காலம் டம்மிப்பிரதமராக இருந்த ஐ மு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அதிகம் பேசப் பட்ட வார்த்தை கூட்டணி தர்மம். அதற்கு அர்த்தம் மிக  சிம்பிள்!  கொள்ளையடிப்பதில் உனக்கு எவ்வளவு எனக்கு எவ்வளவு என்கிற சதவீதக்கணக்கு. அவ்வளவு தானா? பானாசீனா மகனுடன் போய் முதல்வரை சந்தித்துவிட்டு வந்தது என்ன கணக்கு? மரியாதை நிமித்தமாக என்பது வெளியே சொல்லிக் கொள்வது மட்டும் தான். 

ஊகிக்க முடிகிறதா?  மீண்டும் சந்திப்போம்.     

Friday, June 25, 2021

தயிர்வடை (தோழர்) வரதராஜனும் தமிழக அரசியல் களமும்!

உதவாத ஒரு இடதுசாரியாகத் திரிந்து கொண்டிருந்த 40+ ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பிரபலமான அரசியல் ஆளுமையைப் பற்றி, தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டே தோழர் வரதராஜன் சொன்ன ஒரு சத்தியவாக்கு இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஞாபகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறதென்றால்  நம்ப முடிகிறதா? அவர் என்ன சொன்னார் என்பதைப் பார்த்தால் அது எத்தனை சத்தியமான வாக்கு என்பதும் புரிந்துவிடும்.  

வீடியோ 36 நிமிடம் 
 

தோழர் வரதராஜன் குறிப்பிட்ட அந்தப்பிரபலமான அரசியல்வாதி பலவித கிறுக்குத்தனங்களுக்குப் பெயர் போனவர். கருணாநிதி மாதிரி எல்லாவற்றிலும் கருத்துக் சொல்லி எல்லா விதங்களிலும் சிக்கிக்கொண்டவர் அல்ல. எப்படி அவர் தப்பித்துக்கொண்டே வருகிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. அதற்குத் தோழர் சொன்ன பதில் தான் கிளாஸ்! இருகோடுகள் தத்துவம் தான்!  

" ஒருவிஷயம் மிகவும் முட்டாள்தனமானது என்று ஜனங்கள் கூக்குரல் எழுப்ப ஆரம்பிக்கிறபோதே இன்னுமொரு முட்டாள்தனத்தை முன்னிறுத்துவது! புதிய விஷயம் கிளம்பியவுடன் பழைய கிறுக்குத்தனத்தை ஜனங்கள் மறந்துவிட்டுப் புதிய விஷயத்தைப் பிடித்துக் கொள்வார்கள். இப்படி வரிசையாகத் தொடர்வதிலேயே ஜனங்கள் மறதியும் கூடிக்கொண்டே போவதுதான் அவருடைய பலம், சாமர்த்தியம்! புரிகிறதா?" என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பிளேட் தயிர்வடை ஆர்டர் செய்யச் சொல்வார். தயிர்வடை என்னுடைய குரு தட்சிணை என்பது நண்பர்களுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும்!  

திமுக ஆட்சிக்கு வந்து இன்று 50 நாட்களாவதில், இரு கோடுகள் தத்துவம் சொல்கிற மாதிரி, வலுவில் ஒரு பிரச்சினையை உருவாக்கி, ஜனங்கள் குய்யோமுய்யோ என்று கூவ ஆரம்பிப்பதில் இன்னொரு பிரச்சினையை ஆரம்பித்து, தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத அவலத்தை மறைத்து ஜனங்களுடைய கவனத்தை எதிலும் நிலைகொள்ள விடாதபடி திசைதிருப்புவதில், அநேகமாக வெற்றி அடைந்து வருகிறார்கள். 


ஒவ்வொரு விஷயமாக நினைத்துப்பாருங்கள்! முதலில் அமைச்சர் தியாகராஜன்! ஒன்றியம் குன்றியம் என்ற விதண்டா வாதத்தை ஆரம்பித்தது அவர்தான்! நடுவில் சேகர்பாபு என்டர் ஆனார். அப்புறம் மின்தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று ஒரேபோடாக செந்தில் பாலாஜி போட்டது ஓடிக்கொண்டிருந்தது. நேற்றைக்கு கொங்கு ஈஸ்வரன் ஜெய் ஹிந்த் என்பது ஆளுநர் உரையில் இடம்பெறாமல்போனதே பெரிய சாதனை என சட்டசபையில் பேசியது சர்ச்சையாக.

கூட்டிக் கழித்துப்பாருங்களேன்! திமுகவின் சிக்சர்கள் காணாமல் போனதும் வெட்டி சர்ச்சைகளில் அவர்களது கையறுநிலை மறைக்கப்படுவதும் புரியுமே!

மீண்டும் சந்திப்போம்.                         

Tuesday, June 22, 2021

குழுவுக்கு மேல் குழுவாகப்போட்டு மக்களைக் குழப்பும் தமிழக அரசு! :: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

தமிழக அரசியல்களத்தில் மிகவும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒருவராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார். காரணம், உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிற அதே நேரம் தேசியப் பார்வை கொண்டவராகவும், அரசியலை உடனுக்குடன்  ஆராய்ந்து, சரியாக விமரிசனம் செய்கிறவராகவும் அவர் இருப்பதுதான்! பாமகவின் டாக்டர் ராமதாசும் கூட அப்படி அரசியல் செயல் பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர் மீது அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டாக்டர் ராமதாஸ் ஆதாயம் தருகிற பக்கம் சாய்ந்தே பழக்கப்பட்டவர என்பதோடு, எல்லா நேரங்களிலும் அவரது அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்ததே இல்லை என்கிற கடந்தகால வரலாறும் தடையாக இருக்கிறது. 


நான்காண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்தான்! ஒரு  consistency உடன் அரசியல் பேசுகிறவர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு என்றாலும், அப்படி அரிதானவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். வீடியோ 37 நிமிடம், டாக்டர் கிருஷ்ணசாமியைப் புரிந்துகொள்ள உதவுகிற ஒன்றும் கூட!

நேற்றைய 16வது தமிழக சட்டமன்றக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியதில்,புதிய திமுக அரசின் செயல் திட்டங்கள் எப்படியிருக்கும் என்பது வெளிப்பட்டதா? டாக்டர் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாமா?

படித்தவர் பாட்டைக் கெடுத்தார், எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்! என்பது போல,குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு நாட்டை குழப்பலாமா? 

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலோ அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில அரசோ ஆளுநர் உரையுடன் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை துவங்குவது மரபு. நேற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையுடன் துவங்கியது. ’ஆளுநர் உரை’ என்று பெயரிட்டாலும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு எழுதிக் கொடுத்த உரையே அது. ஓரிரு ஆளுநர்கள் தாங்களே அறிக்கைகளை  தயார் செய்து கொண்டு படித்த வரலாறுகளும் உண்டு. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திமுக அரசின் அறிக்கையை அப்படியே படித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர் சகாக்கள் நமது தாய் தேசத்தை ’இந்தியப் பேரரசு’ என முறையாக அடையாளப்படுத்தாமல் ’ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து இழிவுபடுத்துவதால் இத்தேசத்தின் மீது பற்று கொண்ட கோடான கோடி தேசபக்தர்கள் ஏற்கனவே பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய ’ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடர் நேற்றைய ஆளுநர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டமன்ற பதிவேடுகளிலும் இனி இடம் பெற்று விடும். இந்த ஆட்சேபனைக்குரிய தமிழ் வார்த்தை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.

நம்மை அடையாளப்படுத்தியும், பாதுகாத்தும் வரும் தாய்க்கு நிகராக போற்றப்படும் இந்தியத் தேசத்தைக் குறைத்துப் பேசி திமுகவினர் என்ன சுகம் காண்கின்றனரோ தெரியவில்லை? இப்படித் தொடர்ந்து பேசுவது தவறு என்ற  குற்ற உணர்ச்சி சிறிதும் கூட அவர்களுக்குத் தோன்றியதாக தெரியவில்லை. திமுகவின் இந்தியத் தேச விரோத போக்கு அவர்களின் வக்கிர புத்தியைக் காட்டுவதாகவே நாட்டுப் பற்றாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. அரிய பல அறிவிப்புகள் வரும் என்றே அவர்களது ஊடக தோழமைகள் ஆரூடம் சொல்லி வந்தனர். அதுபோன்று எந்த அதிசய அறிவிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த அரசிற்கு நிதிப் பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படும் என சொல்லவில்லை.

மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளைச் சொல்லவும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் அரசியல் சாசன விதிமுறைப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் இந்தியக் குடியுரிமை பணிகளில் (IAS) தேர்ச்சி பெற்றவர்களை கொண்ட   நிர்வாகக் கட்டமைப்பு (Bureaucracy) தமிழ் மாநிலம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ளது. தலைமைச் செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலும் அதன் நீட்சியாக நிர்வாக அமைப்புக் குக்கிராம தலையாரி வரையிலும் எப்பொழுதும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு மேலும், ஓரிரு துறைகளில் தகவல்களைத் திரட்டவும், அத்துறைகளை மேம்படுத்தவும் எப்பொழுதாவது சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படுவது விதிவிலக்காக கடந்த காலங்களில் நடந்துள்ளது.

ஆனால், எதற்கெடுத்தாலும் குழுவை நியமிப்பதே கொள்கையாக இவ்வரசு விதியாக்கிக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு; மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு; கருப்பு பூஞ்சையைக் கண்டறிய டாக்டர் மோகன் தலைமையில் ஒரு குழு; கரோனா குறித்து ஆராய இன்னொரு குழு என அண்மையில் தான் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் எல்லாம் போதவில்லை போலும். இப்பொழுது சர்வ தேச குழு ஒன்று புதிதாக முளைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ,  ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என நேற்றைய ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அடுக்கடுக்காக குழுக்களை மட்டும் இவ்வரசு அடுக்கிக் கொண்டே போகிறது.

இந்த குழுக்கள் எல்லாம் இலவசமாகச் செயல்படுமா? இவர்கள் எல்லாம் செயல்படக் கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டுமே? நிதி நெருக்கடியில் ஏற்கனவே மாநில அரசு சிரமப்படும் வேளையில் செலவைக் குறைப்பதற்குப் பதிலாகச் செலவைக் கூட்டிக்கொண்டே போவது எவ்விதத்தில் நியாயம்? ”அரைகுறை ஆயுள் கொண்ட இலவசத் திட்டங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டுவது; எளிதான இலக்காக விளங்கும் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வாக்குகளை ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது” தானே திராவிட சித்தாந்தத்தின் தாரக மந்திரம். ஏழை தமிழர்களின் அறியாமையின் மீதும், இயலாமையின் மீதும் தானே இவர்களின் பொருளாதார கோட்பாடும், சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. 

கழக கண்மணிகளின் இந்த அரிய கண்டுபிடிப்புகளைத் தாண்டி, கடந்த பத்து வருடமாக தமிழகத்திற்கு வரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்? அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப் படுத்தப் போகிறார்களா? இக்குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலையாகத் தானே முடியும்.

குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு இம்மாநில  மக்களைக் குழப்பவும் வேண்டாம்!மாநில நிதி ஆதாரத்தை விரயமாக்கவும் வேண்டாம்!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,  நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி.    22.06.2021   

அரசியலில் ஒரு தெளிவான பார்வையோடு இருப்பது அபூர்வம். நேர்மையாக  அரசியல் விமரிசனம் செய்வது அரிதிலும் அரிது. இப்படி அபூர்வமானவராக டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறாரே, எப்போது இவர்போன்ற அரசியல்வாதிகளைக் கண்டுகொள்ளப் போகிறோம்? சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.           

Saturday, June 19, 2021

டில்லிக்குப்போனார்! திரும்பி வந்தார்! #சொல்லவிடுபட்டவை

முந்தைய பதிவில் தமிழக முதல்வர் தலைநகர் டில்லிக்குப் போனதைக் கொஞ்சம் பார்த்தோம். கூடவே போனவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது லைம்லைட்டுக்கு வரவே இல்லையே என்ற மனக்குறையை இன்றைய செய்திகள் தீர்த்து வைத்திருக்கின்றன. திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகன் முதல்வருடன் கூடவே டில்லிக்குப் போனதாக செய்திகள் சொன்னாலும் பிரதமரைச் சந்தித்த போதும் சரி, மறுநாள் சோனியாவை சந்தித்தபோதும் சரி துரைமுருகனைக் காணவே இல்லை. எங்கே போனாராம்?


டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் தீவிர ரசிகரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே,  கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்த தோனியை, நேரில் சந்தித்தார். அப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்காக தோனிக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்ததாக News 18 தமிழ்நாடு செய்தி சொல்கிறது. அப்படியானால் தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் MP  மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றதாக இதே செய்தியின் துவக்கம் சொல்வதில் வரவேற்பளிப்பதற்காக மட்டுமே துரை முருகன் டில்லிக்குப் போனார் என்றாகிறதே! ஆக, பொழுது போகாமல்தான் தந்தையும் மகனும் தோனியைச் சந்தித்தார்கள் போல!


இந்த 5 நிமிட வீடியோவில் விகடன் சொல்வது என்ன? மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணி வேண்டாம் என ஸ்டாலின் உருமாறி இருப்பதாக சொன்னதைக் கூட சகித்துக் கொண்டுவிடலாம். ஆனால் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாதிரி நிதானமான அணுகுமுறைக்கு மாறிவருகிறார் என்கிறார்களே, அது சரிதானா?

.

நீட் தேர்வை ரத்து செய்! இது எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது. பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நீட் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை மெமோரண்டமாக அளித்து இருக்கிறோம் என்று சில கோரிக்கைகளைப் பட்டியல் இட்டுச் சொல்லியிருக்கிறார் 


நீட் தேர்வு ரத்து மாதிரியே கச்சத்தீவை மீட்பதும் அந்தக் கோரிக்கைகளில் சேர்ந்திருக்கிறது GST வரிவசூலில் தமிழகத்துக்கு நிலுவை இருப்பதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதில் ரூ. 4321 கோடி என்று குறிப்பிட்டுப் போதிய விவரங்களுடன் கேட்டமாதிரித் தெரியவில்லை.  பிரதமருடனான சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும்? முகநூலில் ஒரு கற்பனை உரையாடல்.
சிரிப்பதற்காக மட்டும்.  


திமுகஆட்சிக்கும் மின்வெட்டுக்கும் அப்படி பொருத்தம்! அந்தநாளைய ஆற்காடு வீராசாமி போலத்  தடுமாறாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி அசால்டாக ஒரேபோடு போட்டதில் ஆறுமாத வாய்தா! அப்புறம்? இன்னொரு வாய்தா வாங்கத்தெரியாதா என்ன? !! ஜனங்கள் பாடு தான் எப்போதும் போலத் திண்டாட்டம்.....😕😔 


சுண்டெலிகளுக்குக் குளிர்விட்டுப்போய் விட்டது போல!  அதற்காக பிறந்தநாள் வாழ்த்தாக இப்படியா? திமுக சங்கர மடம் இல்லைதான்! ஆனால் வாரிசு இல்லாத கட்சி ஒன்றுமில்லையே! 

மீண்டும் சந்திப்போம். 
   

Sunday, June 13, 2021

கதை கேளு கதை கேளு! சுவையான அரசியல் கதை கேளு!

இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்! அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே! பாமக நிறுவனத் தலைவர்  Dr ராமதாஸ்  சிலகாலமாகவே கதைகள் சொல்லி அரசியல் நடப்பை சொல்லாமல் சொல்வதென்ற பாணியைக் கடைப்பிடித்து வருவதும் தெரிந்திருக்கும்.


மதுநீதி என்ற தலைப்பிட்டு மருத்துவர் ராமதாசு இன்று  முகநூல் பகிர்வில் ஒரு கதை சொல்லி இருக்கிறார்:::

நவீன மதுநீதிச் சோழன்!
அந்த சோழமன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அந்த பசு அடித்தது.
அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர்.
அந்த பசு கூறியது,” மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள். அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சற்று முன் தேரில் வந்த இளவரசர் நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று என் மனம் திருப்தியடைந்திருக்கும். ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ் வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார். நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று பசு முறையிட்டது.
மந்திரிமார்களும் மன்னனிடம் சென்று பசு நீதி கேட்ட கதையை கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், மந்திரியாரின் காதுகளில் எதையோ கூறி, ‘’ நான் கூறியது போல அந்த பசுவுக்கு நீதி வழங்குங்கள்” என்று கட்டளையிட்டார்.
அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்தனர். பசுக் கன்றை கொன்ற இளவரசனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றிக் கொல்ல மன்னர் ஆணையிட்டிருக்கிறார் என்று நினைத்தனர்.
மந்திரியாரும், சேனைத்தலைவரும் தேரை எடுத்துக் கொண்டு பசுவின் இருப்பிடத்திற்கு விரைந்தனர். அதைப் பார்த்த மற்றவர்கள், ‘’ பார்த்தாயா எங்கள் மன்னர் அடித்த சிக்சரை! பசுவின் இருப்பிடத்தில் வைத்து இளவரசர் மீது தேரை ஏற்றி நீதி வழங்கப்போகிறார் எங்கள் மன்னர்” என்று கதையளந்தனர்.
ஆனால், நேராக பசுவின் இருப்பிடத்திற்கு சென்ற மந்திரியாரும், சேனைத் தலைவரும் அங்கு நடக்க முடியாமல் நலிவடைந்த நிலையில் படுத்துக் கிடந்த இன்னொரு கன்றுக் குட்டி மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டு வெற்றிக் களிப்புடன் அரண்மனைக்கு திருப்பினர்.
எங்கோ ஒரு மூலையிலிருந்து முழக்கம் எழுந்தது.
’’ எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!”


எனக்கென்ன ஒரே வருத்தமென்றால், நாளைய தமிழ் பேசும் ஊராட்சி ஒன்றிய முதல்வராக அறியப்படுகிற தியாகராஜனைப் போயும் போயும் அந்த யூட்யூப் வாயன் ஜெயரஞ்சனிடம் பட்ஜெட் ஆலோசனை கேட்கச் சொல்லி விட்டாரே இந்த ஸ்டேன்லி ராஜன் என்பது மட்டும்தான்!


திமுகவும் முதல்வரும் தம்பட்டம் அடித்துக்கொள்கிற சிக்ஸர்கள் யோக்கியதை இன்னதென்று ஏற்கெனெவே தெரிந்து வைத்திருப்பதால் எனக்கு இந்த சிக்சரும் கூட என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லாமல் போய்விட்டது. மதுரை வக்கீலய்யா பிரபு ராஜதுரை வேறு முகநூலில் இந்தக் காலி இடம் கார் பார்க்கிங் ஆக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு மேல் ஒரு ஆக்கிரமிப்பும் இல்லை மீட்கப்படவும் இல்லை என்ற குட்டை முகநூலில் சிலநாட்களுக்கு முன்னாலேயே உடைத்துவிட்டார்.


பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பது அமைச்சர் பெருமக்களுக்குப் பொருந்தாது போல இருக்கிறதா? கொரோனா முதல் அலையில் (அதிமுக ஆட்சி) நோய்த்தொற்று எண்ணிக்கையை விட இப்போது 2வது அலையில் ( திமுக ஆட்சி) தொற்று பல மடங்கு அதிகம் உயிரிழப்பும் மிக அதிகம் என்பதை மறந்த மறைக்கும் பேச்சு.
''அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தாதது ஏன்? கடந்த ஆட்சியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். தற்பொழுது கரோனா குறைந்த காரணத்தால் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்று செந்தில் பாலாஜி கேட்டதாக நக்கீரன் வெளியிட்டிருக்கிறது


எல்லாவற்றுக்கும் உங்களையே நம்பியிருக்கிற கரூர் MP ஜோதிமணியை இப்படி வெறும் அஞ்சு பேரோடு வீதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை.க் கண்டித்துப் போராட விட்டுவிட்டீர்களே! அது ஏன் அமைச்சரே என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல இருக்கிறது. நல்ல கதைதான்!

இது இந்தப்பக்கங்களில் 700 வது பதிவு
மீண்டும் சந்திப்போம்.

Monday, June 7, 2021

30 நாட்களில் சாதனை! #பத்தாண்டுப்பசி தீர்ந்ததா?

திமுக ஆட்சியின் 30 நாள் சாதனை என்ன? நிதி அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் சர்ச்சைக்குரியவர்கள் திமுகவினை தெருவில் இழுத்து விடுவார்கள் என்பது 30 நாளிலே தெரிகின்றது. திமுக ஆட்சியின் உச்சபட்ச சாதனை என்னவென்றால் யூடியூபில் பேசிகொண்டிருப்பவனெல்லாம் அரசு பணிக்கு வரமுடியும் எனும் அதிசயத்தை செய்தது. மற்றபடி நீட் ரத்து, நகைகடன் ரத்து, குடியுரிமை ரத்து, காஷ்மீர் சட்ட ரத்து,மதுகடை ரத்து இன்னும் எதை எல்லாம் ரத்து செய்வோம்  என சொன்னார்களோ அந்த கோரிக்கை எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டார்கள், அதுதான் ஆகசிறந்த சாதனை

மணல் குவாரி தொடங்கி +2 தேர்வே இல்லா கல்லூரி அனுமதிவரை அனுமதிக்கப் படுகிறது, இது மிகபெரிய சுரண்டலை, வசூலை அவர்களுக்கு கொடுக்கும். இன்னும் என்னென்ன வகையில் அள்ள முடியுமோ அவ்வளவு வகையிலும் வாரி சுருட்டுவார்கள் இனி 5 வருடம் இதுதான் நடக்கும். ஆடாத ஆட்டம் ஆடி அடங்கிய சசிகலா கும்பல் போல் இனி இன்னொரு கும்பல் ஆட ஆரம்பிக்கும். ஆடட்டும், அவர்களுக்கு குறித்த காலம் முடியும் வரை ஆடட்டும். அதுவரை இதையெல்லாம் பார்த்து கொண்டிருப்பதை தவிர யார் என்ன செய்துவிட முடியும்? ஆனால் காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருகிறது, அந்த கணக்கு நிறைவேறும் பொழுது எல்லாம் மாறும், நிச்சயம் மாறும் என்று முகநூலில் தமிழகத்தில் ஆட்சி மாறிய 30 நாள் சாதனையை மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஸ்டேன்லி ராஜன்.


காவல்துறையினரை பெண் வழக்கறிஞர் மிரட்டுகிறார். ஆட்டோ டிரைவர் மிரட்டுகிறார். இன்னும் யார் யார்  மிரட்டுகிறார்கள் என்று பார்த்தால் வீடியோ லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வருகிறது. இதையும் சாதனை லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமா?


சொல்லாமல் செய்து கொண்டிருக்கும் சாதனைகளைக் கொஞ்சம் பார்க்கலாமா?


திமுக தன் சொந்தக்காசில் பிரியாணி போடவில்லை. ஹிந்துக்கோவில் சொத்திலிருந்துதான் என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


யாருமே வாங்கிப்படிக்காத முரசொலிக்கு ஆண்டு சந்தா கட்ட 12524 ஊராட்சிகளுக்கும் உத்தரவு. வருட சந்தா ரூ.1800 தான் என்றால் அவ்வளவாகப் புரியாதுதான்!

1800X 12524X 5 ஆண்டுகள் = ரூ. 11.27,16000 பதினோரு கோடியே இருபத்தேழு லட்சத்து பதினாராயிரம் ரூபாய் முரசொலிக்கு அரசிடமிருந்து அனாமத்து வருமானம். இன்னும் நூலகங்கள், அதுஇது என்று மேல்வரும்படிக்கு வழி செய்துவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் சாதனை லிஸ்டில் அவர்களே சேர்க்கமாட்டார்கள்! 


இதெல்லாம் சாதனை லிஸ்டில் சொல்லாமல் விடுபட்ட சில துளிகள் தான்! இன்னும் அவர்கள் சொல்லிச் செய்தது, சொல்லாமல் செய்தது என்று நிறைய இருக்கிறது. கொஞ்சம்கொஞ்சமாக வரும்.

மீண்டும் சந்திப்போம்.

Sunday, May 30, 2021

விருதாவாகிப்போன ஒரு விருது! விதைத்ததைத் தானே அறுவடை செய்தாக வேண்டும்!

வைரமுத்துவுக்கு கேரளத்தின் ONV இலக்கியவிருது என்று  அறிவித்த நேரம் மிகவும் பொல்லாத நேரமாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனெவே இடதுமுன்னணி அரசில் ஷைலஜா டீச்சருக்கு அமைச்சராகப் பதவி தரவில்லை என்பதே சர்ச்சையாக எழுந்து சற்றே அடங்கி இருக்கிற நேரத்தில், மலையாளக்கவிஞன் நினைவாகக் கொடுக்கப் படும் விருதை வைரமுத்துவுக்கு அறிவித்ததே ஒருவித அரசியல்தான்! #MeToo புகார்களில் சிக்கிய காமுகனுக்கு விருதா என்று கேரளத் திரைப்பட நடிகைகள் பலரும்  கொதித்தெழுந்து கடுமையாக எதிர்த்ததில் ONV கல்சுரல் அகாடெமி ஜகாவங்கியதும், விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அறிவித்ததுகூட தற்காப்பு அரசியல் தான்!


காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டால் இப்படி என்று நொந்து கொள்ளும் வைரமுத்து, உன்னுடைய  விருதைத் திருப்பிக்கொடுத்துவிடுகிறேன், மேற்கொண்டு இரண்டுலட்சரூபாய் போட்டுக்கொடுத்து விடுகிறேன், ஆளை விட்டால் போதுமையா சாமியென்று கதறுவது கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கிறது. துதிபாடியோ lobby செய்தோ விருதுகள் வாங்கியே பழக்கப்பட்டவருக்கு இது மிகவும் வேதனையான அனுபவம் தான்!  ஆனால் ராமன் பட்டாபி போன்ற முகநூல் நண்பருக்கோ இதைக் காவியமாக எழுதிப் பார்த்தே ஆகவேண்டும் என்ற தவிப்பு!  


இங்கே ஒரு 34 நிமிட விவாதத்தில் நாச்சியாள் சுகந்தி, அஜயன் பாலா இருவருடனும் நிஜந்தன் விவாதிப்பது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது.


அவரை விதைத்தால் துவரை முளைக்குமா? ஆரம்பப் பள்ளிக்கூட மாணவனுக்குக் கூடத் தெரிந்த விஷயம் தான்! ஆனால் கழகங்களுக்குப் பட்டாலும் புரியாது, திருந்தாது என்பதும் கூடத் தெரிந்த வரலாறுதான்!  



கொங்குமண்டலத்தைப் புறக்கணித்துவிட்டு, இப்போது விளம்பரத்துக்காக கோவைக்குப்போனார் இசுடாலின். #GoBackStalin என்று ஜனங்கள் ட்வீட்டரில் அவர் முன்பு  செய்த பாணியிலேயே வரவேற்புக் கொடுத்ததில் இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் ஆறாவது இடத்திலும்  #GoBackStalin ஹேஷ்டாக் இன்றைக்குப் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது 



ஆக ...ஆக .....ஆக என்று காமெடிகள் மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. திகட்டுமுன் நிறுத்திக் கொள்வது தமிழக ஆரோக்கியத்துக்கு நல்லது!

மீண்டும் சந்திப்போம். 

Sunday, March 14, 2021

நிர்மலா சீதாராமன்! தமிழக முதல்வரானால் எப்படி இருக்கும்? !!

சில விவாதங்களின் காணொளிகள் திரும்பத்திரும்பப் பார்க்கிறமாதிரி இருக்கும். சிக்க மாட்டாரா என்ற எதிர் பார்ப்பிலேயே கேள்விகளாய்க் கேட்டாலும் கொஞ்சம் கூடத் தயங்காமல் தெளிவான பதில்களைச் சொல்லும் திருமதி நிர்மலா சீதாராமன்!இந்தியா டுடே South Conclave விவாதங்களில் ராகுல் கன்வலுடன் நடத்திய இந்த 46 நிமிட விவாதத்தில் தமிழக அரசியல் களத்தில், திமுக, காங்கிரஸ் கட்சிகளுடைய முகத்திரையைக் கிழித்து எறிந்திருக்கிறார்.


சொல்வதற்கும் செய்வதற்கும் கொஞ்சம் கூடப் பொருத்தமே இல்லாதவை திமுக, காங்கிரஸ்  கட்சிகள் என்பதை சுற்றிவளைக்காமல், வார்த்தைகளை விரையம் செய்யாமல் சொல்லியிருப்பது சிறப்பு. இந்த விவாதம் தெற்கே பிஜேபி காலூன்றுமா என்ற தலைப்பில் இருந்தாலும், அதையும் தாண்டி முதலில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து இப்போது நிதியமைச்சராகவும் இருப்பதால், இரண்டுதுறைகளைக் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டபோது அத்தனைக்கும் பொறுமையாகவும் புரிகிற மாதிரியும் பதில் சொன்னவிதம் அருமை! பேட்டியின் முடிவில் தமிழிலும் கேட்கச்சொல்லி பதிலும் சொன்னது மனதின் அடி ஆழத்திலிருந்து வந்ததாகவே கருதுகிறேன்.


இந்தியா டுடே நிகழ்ச்சிக்கு முன்னாடியே முகநூலில் நண்பர் இப்படிச் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது. வீடியோவைக் கொஞ்சம் பொறுமையாகப் பார்த்து விட்டு பாலாஜி சார் சொல்வது ஏற்புடையது தானா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.       

Friday, March 5, 2021

சுதந்திரத்தை எதைவைத்து, எப்படி அளவிடுவது? #சேகர்குப்தா

Freedom House என்றொரு அமைப்பு இருப்பது யாருக்காவது தெரியுமா? ஜனநாயகம், சுதந்திரம் ஒவ்வொரு நாட்டிலும் எந்த அளவுக்கு இருக்கிறது என்று இவர்கள் மதிப்பீடு செய்வதை இதற்கு முன்னால் கேள்விப்பட்டது உண்டா? ட்வீட்டர், முகநூல் முதலான big tech ஊடகங்கள் மீதான அவநம்பிக்கையும் கோபமும்  எதிர்ப்பாகப் பெருகி வருகிற நேரம் பார்த்து இந்த அமெரிக்க அமைப்பு, இப்படி ஒரு  மதிப்பீட்டை வெளியிட்டிருப்பது தற்செயலானது தானா? பாகிஸ்தான், இந்தியா இருநாடுகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கிற இந்த மதிப்பீடு நம்பக கூடிய ஒன்றாக இருக்க முடியுமா? 

  

சேகர் குப்தா இந்த 27 நிமிட வீடியோவில் விளக்கிச் சொல்லியிருப்பது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலை நீங்கள்தான் வந்து சொல்ல வேண்டும்!


சீன விவகாரத்தில் மட்டும் மத்திய அரசின் அணுகுமுறை மீது கடுமையாகச் சாடும் ப்ரம்ம செலானி சொல்கிற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.

சுதந்திரத்தை, இங்கே கூக்குரலிடும் Paid Media வை வைத்து மதிப்பிடமுடியாதென்பது எவ்வளவு நிஜமோ அதுபோலவே வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்று அதை இந்த நாட்டுக்கெதிராகவே பயன்படுத்தும் PETA. AMENESTY போன்ற அமைப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவந்ததை வைத்தும் கூட மதிப்பிட முடியாது.

சேகர் குப்தா, அந்த அமைப்பு எது எதை வைத்து எப்படி மதிப்பீடு செய்தார்கள் என்று சொல்வதைக் கேட்டுவிட்டு உங்களுடைய கருத்தை இங்கே கொஞ்சம் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.

Friday, January 22, 2021

#மீள்பதிவு சோதனையும் சாதனையும்!

கவியோகி சுத்தானந்த பாரதியார்!அன்பே சிவமாகிக் கனிந்த துறவி, பன்மொழிப் புலமை, துறவையும் மீறித் தமிழில், இலக்கியங்களின் மீது காதல் கொண்டு,  ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர், அதே போலப் பாடல்கள்எழுதியவர், சுதந்திரப் போராட்ட வீரர், ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி முதற்கொண்டு எண்ணற்ற ஞானிகளோடு கூடவே இருந்து அவர்களுடைய சாதனையை நேரடியாகவே அறியும் பேறு பெற்றவர், ரமண சரிதம், அரவிந்த விஜயம் என்று அவர்களுடைய சரிதையை நாம் அறியத் தந்தவர்.



என்ன காரணமோ, உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த தேசம் அறிந்துகொள்ளத் தவறிக் கொண்டே இருக்கிறது. நடிப்புச் சுதேசிகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தமிழ், தனித்தமிழ் என்று மூக்கினால் பேசிக் கொண்டே தமிழ்வளர்த்த பெரியோர்களை உரிய மரியாதையோடு நடத்தத் தவறியிருக்கிறது. வெறுப்பில் எரியும் மனங்களாகப் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. உண்மையைப் பார்க்கவொட்டாமல், வம்பு செய்து கொண்டே இருக்கிறது.

சுத்தானந்த பாரதியாரை, தமிழ் கூறும் நல்லுலகம், அவருக்குரிய இடத்தில் மரியாதையோடு வைக்கத் தவறியதை என்னுடைய குமுறலாக, ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம் 


கவியோகியார் தனது சுயசரிதையை இரண்டு பகுதிகளாக வெளியிட்டதில் . முதல் பகுதி ஆத்ம சோதனை என்ற பெயரில் வந்தது. 

இதை என்னுடைய  சிறு வயதிலேயே படித்திருக்கிறேன். இரண்டாவது பகுதி, சோதனையும் சாதனையும் என்ற புத்தகமாக வெளி வந்திருக்கிறது. தற்போது இரண்டு பகுதிகளையும் ஒரே புத்தகமாக, சோதனையும் சாதனையும் என்ற தலைப்பில், சுவாமிகளிடம், வடலூரில் அருட்பணி, கல்விப்பணி செய்து வந்த நாட்களில் அவரிடம் பயின்ற இரு சகோதரர்கள், திரு நாகராஜன், திரு. நாக சுப்பிரமணியம், கவியோகியாரது படைப்புக்களை சுத்தானந்த நூலகம் என்ற பெயரில் மறுபடி வெளியிடுகிற செய்தியை திரு சந்திர சேகரன் ஏற்கெனெவே தெரிவித்திருந்தார்.

பதினைந்து நாட்களுக்கு முன்னால், நான் நீண்ட நாட்களாகப் படிக்க ஆர்வம் கொண்டிருந்த பாரத சக்தி மகா காவியம், சோதனையும் சாதனையும் என்ற இரு நூல்களையும்  எனக்கனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தபடி வந்து சேர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன், கவியோகியின் தமிழில் தோய்ந்திருந்தது சிலநேரம், அதில் கண்ட அனுபவச் சிதறல்களை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தது சிலநேரம் என்று போய்க் கொண்டே இருந்தது 

மற்ற நூல்களைப் போல, படித்து விட்டு, அந்த நேரத்தில் தோன்றுகிற எண்ணங்களை முடிவாகச் சொல்கிற விதத்தில் இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுத முடியாது. விமரிசனம் என்று எழுத முடியாத அளவுக்கு, சத்தியக் கனல், அனுபவச் சிதறல்கலாகக் கொழுந்து விட்டெரிகிற தன்மையைப் பார்த்தேன், பிரமித்தேன்!

ஒரு சிறு பகுதி, இங்கே நூல் அறிமுகமாக!

சுதந்திரப் போராட்டம் நடந்த போது, அதில் பங்கு கொண்ட எவரும் தங்களுக்கு மாலை மரியாதை வேண்டுமென்றோ, அரசு வழங்கும் கட்டாந்தரை பூமி ஐந்து ஏக்கர் மானியத்துக்காக ஏங்கித்  தவித்தோ, போராட்டத்தில் குதிக்கவில்லை! தங்களுடைய ஜாதி, அந்தஸ்து, தொழில், குடும்பம் எல்லாவற்றையும் உதறிவிட்டு,தேச விடுதலை ஒன்றில் மட்டுமே குறியாக இருந்தார்கள். அப்போதெல்லாம் கூட வராத சொந்த பந்தம், ஜாதியெல்லாம், இப்போது சமீப காலங்களில் அவர்களை ஜாதிக்குள் குறுக்கி வைத்துச் சிலை வைத்துத் தகராறு வளர்க்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

இது 1937-1942 காலங்களிலேயே ஆரம்பித்து விட்டதை இந்தப் பகுதி உறைக்கும்படி சொல்கிறது. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையை, இன்றைக்குப் பிள்ளைமார் சமூகம் தத்தெடுத்துக் கொண்டு சிலை வைத்து, தங்களுடைய சொந்த லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. காமராஜர், நாடார் சமூகத்தின் சொத்தாகிப் போனார்!

 "சோதனையும் சாதனையும்" என்ற தனது சுயசரிதையில் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குப் போனபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதில் முதல் பகுதியை இங்கே பார்க்கலாம்!

சமீப கால வரலாறு கூடத் தெரியாமல் வளர்க்கப் படும் இன்றைய இளம் தலைமுறைக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம்! இது புத்தக மதிப்புரையோ, விமரிசனமோ இல்லை! இந்த மண்ணை நேசிக்கும் ஒருவனின் ஆதங்கமாக....குமுறலாக,,,,!


சிதம்பரம் பிள்ளையுடன்....!

தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.

நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.

(வ. உ.சிதம்பரம் பிள்ளை  இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்) 

நான் :  தங்களைக் காணவே மகாநாட்டிற்கு  வந்தேன். எந்தாய் வாழ்க!

சித :     பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும்  உமது நண்பர் தாமே!

நான் :  எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன்  வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில்  பொறிக்கும்.

சித  :   நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை  மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் "

இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.

நான் :  இந்தக் காலம்
 கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.

சித :      ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா?  இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா? நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.

நான் :  தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு,  (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.

சித :     எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,
வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.

நான்:  தடையென்ன? தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.

சித :    தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.

இச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ் 
சுப்ரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.

கடைசியில், "சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.


நூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்.வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப் பட்டது. 

சோதனையும் சாதனையும்
 
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
 
சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு. மேல்விவரங்களுக்கு  
shuddhashakthi@gmail.com  

434 பக்கங்கள் விலை ரூ.120/-
 

தமிழை நேசித்த கவியோகி! பன்முகத் திறமை கொண்ட துறவி! சுதந்திரப் போராட்ட வீரர்! கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.

சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது!

**2010 ஏப்ரலில் இன்னொரு பக்கத்தில் எழுதியதன் மீள்பதிவு.     

Thursday, December 31, 2020

விடைபெறும் #2020 வரவிருக்கும் #2021 #தேர்தல்களம்

2020 ஆம் ஆண்டு நிறையக் களேபரங்களுடன் ஒருவழியாக இன்றுடன் முடிகிறது. 2021 என்று புதிய ஆண்டு துவங்க இருக்கும் வேளையில், நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்? நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மனோநிலை, கருத்து இருக்கும். கார்டூனிஸ்ட் மஞ்சுள் இப்படித் தனது கருத்தைச் சொல்கிறார்.
கொரோனாதாக்கம், பாதிப்பு இன்னும் சிலகாலத்துக்கு நீடிக்கும் என்றுதான் சொல்கிறார்கள். அதற்காக இடிந்துபோய் உட்காரவேண்டியதும் இல்லை. முகக்கவசம், சானிடைசர், இப்படி சில முன்னெச்சரிக்கைகளோடு கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ளவேண்டியதுதான்! வேறு வழி? !! 

ஸ்டேன்லி ராஜன் வழக்கம் போலத் தனது கூர்மையான வார்த்தைகளில் என்ன சொல்கிறாராம்?

கொரோனாவின் பாதிப்பு விமான போக்குவரத்து சுற்றுலா போன்றவற்றை அடியோடு சாய்த்திருப்பதும், வாழ்வே புதிய இயல்புக்கு மாறி இருப்பதும் இந்த ஆண்டு கொடுத்த அதிர்ச்சிகள்
தமிழகத்தை பொறுத்தவரை 2020லும் எதிர்கட்சி வழக்கம் போல் காமெடி சொதப்பல்களை செய்தது, எந்த நெருக்கடியும் அவர்களால் கொடுக்கமுடியவில்லை
பழனிச்சாமி தன் 5ம் வருடத்தை பூர்த்தி செய்து தேர்தலுக்கும் வந்துவிட்டார்
2020ல் தமிழகம் கண்ட மிகபெரும் முடிவு ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பது, ஒருவழியாக அந்த புயல் கரையினை கடக்காமலே கரைந்து விட்டது.
2021 தமிழகத்தில் தேர்தல் வருடம், அது என்னாக போகின்றது என்பதை காலமே காட்டும்
2020ல் பள்ளி விடுமுறை ஆண்டு முழுக்க தொடர்ந்ததில் மாணவ சமுதாயமும் முககவசம் மற்றும் சானிட்டைசர் தயாரிப்பாளர்கள் மட்டும் மகிழ்ச்சி, வேறு எந்த தரப்பும் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை எல்லாம் கொரோனா செய்த கோலம் உலகம் புதிய வாழ்வியல் முறைக்கு மாறிவிட்டது   முழுப்பகிர்வையும் படிக்க இங்கே  
 
இன்றைய ஹிந்து ஆங்கிலநாளிதழில் ரஜனிகாந்த் அறிவிப்பைக் கிண்டல் செய்து சுரேந்திரா வரைந்த ஒரு கார்டூனுடன் என் ராம் கும்பலுக்கு இந்த ஆண்டு விடைபெறுகிறதாம்! தினமலர் நாளிதழில் கூட ரஜனியைக் கிண்டல் செய்கிற மாதிரி கேலிப்படங்கள் வந்துகொண்டிருக்கிறதாம். அவர்களைக் குறை சொல்லிப்பயனில்லை! களிமண் கால்களுடைய ஒருவர் இப்படி வீராவேசமாக நான் அரசியலுக்கு வருவது உறுதி. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று டயலாக் பேசிவிட்டு , பின்வாங்கினால் வேறென்ன நடக்குமாம்?
சுத்திச் சுத்தி வந்தீக என்று ஜோடிபோட்டு டூயட் பாடியவருக்கு, இதெல்லாம் தேவைதான்! 

கொரோனா செய்த கொடுமைகள் நிறைய உண்டு என்றாலும் அது செய்த நல்ல விஷயம் இந்த ஆண்டு முழுக்க தமிழக சினிமா இம்சைகளை முடக்கி வைத்தது
இல்லையேல் இந்நேரம் இந்த ஆண்டின் சிறந்தபடம், சிறந்த இயக்குநர், சிறந்த புதுமுகம், சிறந்த புது மூக்கு, கண் என ஆளாளுக்கு பட்டியலிட்டு பெரும் களபேரம் செய்து கொண்டிருப்பார்கள்
கொரொனா அடித்த அடியில் எல்லோரும் மகா அமைதி
ஆக தியேட்டர்கள் அடைபட்டால் தமிழகத்தில் பெரும் அமைதி நிலவும் என்பது தெரிகின்றது, திராவிட கட்சி இம்சைகளுக்கு முன்பு தமிழக சினிமாவோடு தமிழகம் எவ்வளவு நிம்மதியாக இருந்தது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.
இந்த கொரோனா ஒழியட்டும் ஆனால் சினிமா உலகத்தை மட்டும் முடக்கி வைக்கும் புதிய வகை கொரோனா உருவாகி வரட்டும், அப்படி ஒன்று வந்தால் நிச்சயம் வரவேற்கலாம் 

கொரோனாவால் விளைந்த நல்ல விஷயங்களில் ரஜனி ஜகா வாங்கியதைச் சொல்லாமல் விட்டுவிட்டாரே! அது இன்னமும் உறுத்தலாய்த் தான் இருக்கிறது.


திமுக எம்பி கிச்சுகிச்சு மூட்டுகிறார்! KDbrothers பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாது போல இருக்கிறது. அவர்கள் திமுகவில் இருப்பதே விசுவாசத்தினால் அல்ல! வியாபாரத்துக்காகத்தான் என்பது கூடாது தெரியாத இவரெல்லாம் எப்படித் திமுக எம்பியானார்?

புதிய ஆண்டில் மீண்டும் சந்திப்போம்.    

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)