Showing posts with label செய்தியும் விமரிசனமும். Show all posts
Showing posts with label செய்தியும் விமரிசனமும். Show all posts

Tuesday, June 22, 2021

குழுவுக்கு மேல் குழுவாகப்போட்டு மக்களைக் குழப்பும் தமிழக அரசு! :: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

தமிழக அரசியல்களத்தில் மிகவும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒருவராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார். காரணம், உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிற அதே நேரம் தேசியப் பார்வை கொண்டவராகவும், அரசியலை உடனுக்குடன்  ஆராய்ந்து, சரியாக விமரிசனம் செய்கிறவராகவும் அவர் இருப்பதுதான்! பாமகவின் டாக்டர் ராமதாசும் கூட அப்படி அரசியல் செயல் பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர் மீது அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டாக்டர் ராமதாஸ் ஆதாயம் தருகிற பக்கம் சாய்ந்தே பழக்கப்பட்டவர என்பதோடு, எல்லா நேரங்களிலும் அவரது அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்ததே இல்லை என்கிற கடந்தகால வரலாறும் தடையாக இருக்கிறது. 


நான்காண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்தான்! ஒரு  consistency உடன் அரசியல் பேசுகிறவர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு என்றாலும், அப்படி அரிதானவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். வீடியோ 37 நிமிடம், டாக்டர் கிருஷ்ணசாமியைப் புரிந்துகொள்ள உதவுகிற ஒன்றும் கூட!

நேற்றைய 16வது தமிழக சட்டமன்றக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியதில்,புதிய திமுக அரசின் செயல் திட்டங்கள் எப்படியிருக்கும் என்பது வெளிப்பட்டதா? டாக்டர் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாமா?

படித்தவர் பாட்டைக் கெடுத்தார், எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்! என்பது போல,குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு நாட்டை குழப்பலாமா? 

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலோ அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில அரசோ ஆளுநர் உரையுடன் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை துவங்குவது மரபு. நேற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையுடன் துவங்கியது. ’ஆளுநர் உரை’ என்று பெயரிட்டாலும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு எழுதிக் கொடுத்த உரையே அது. ஓரிரு ஆளுநர்கள் தாங்களே அறிக்கைகளை  தயார் செய்து கொண்டு படித்த வரலாறுகளும் உண்டு. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திமுக அரசின் அறிக்கையை அப்படியே படித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர் சகாக்கள் நமது தாய் தேசத்தை ’இந்தியப் பேரரசு’ என முறையாக அடையாளப்படுத்தாமல் ’ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து இழிவுபடுத்துவதால் இத்தேசத்தின் மீது பற்று கொண்ட கோடான கோடி தேசபக்தர்கள் ஏற்கனவே பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய ’ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடர் நேற்றைய ஆளுநர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டமன்ற பதிவேடுகளிலும் இனி இடம் பெற்று விடும். இந்த ஆட்சேபனைக்குரிய தமிழ் வார்த்தை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.

நம்மை அடையாளப்படுத்தியும், பாதுகாத்தும் வரும் தாய்க்கு நிகராக போற்றப்படும் இந்தியத் தேசத்தைக் குறைத்துப் பேசி திமுகவினர் என்ன சுகம் காண்கின்றனரோ தெரியவில்லை? இப்படித் தொடர்ந்து பேசுவது தவறு என்ற  குற்ற உணர்ச்சி சிறிதும் கூட அவர்களுக்குத் தோன்றியதாக தெரியவில்லை. திமுகவின் இந்தியத் தேச விரோத போக்கு அவர்களின் வக்கிர புத்தியைக் காட்டுவதாகவே நாட்டுப் பற்றாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. அரிய பல அறிவிப்புகள் வரும் என்றே அவர்களது ஊடக தோழமைகள் ஆரூடம் சொல்லி வந்தனர். அதுபோன்று எந்த அதிசய அறிவிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த அரசிற்கு நிதிப் பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படும் என சொல்லவில்லை.

மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளைச் சொல்லவும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் அரசியல் சாசன விதிமுறைப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் இந்தியக் குடியுரிமை பணிகளில் (IAS) தேர்ச்சி பெற்றவர்களை கொண்ட   நிர்வாகக் கட்டமைப்பு (Bureaucracy) தமிழ் மாநிலம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ளது. தலைமைச் செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலும் அதன் நீட்சியாக நிர்வாக அமைப்புக் குக்கிராம தலையாரி வரையிலும் எப்பொழுதும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு மேலும், ஓரிரு துறைகளில் தகவல்களைத் திரட்டவும், அத்துறைகளை மேம்படுத்தவும் எப்பொழுதாவது சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படுவது விதிவிலக்காக கடந்த காலங்களில் நடந்துள்ளது.

ஆனால், எதற்கெடுத்தாலும் குழுவை நியமிப்பதே கொள்கையாக இவ்வரசு விதியாக்கிக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு; மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு; கருப்பு பூஞ்சையைக் கண்டறிய டாக்டர் மோகன் தலைமையில் ஒரு குழு; கரோனா குறித்து ஆராய இன்னொரு குழு என அண்மையில் தான் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் எல்லாம் போதவில்லை போலும். இப்பொழுது சர்வ தேச குழு ஒன்று புதிதாக முளைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ,  ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என நேற்றைய ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அடுக்கடுக்காக குழுக்களை மட்டும் இவ்வரசு அடுக்கிக் கொண்டே போகிறது.

இந்த குழுக்கள் எல்லாம் இலவசமாகச் செயல்படுமா? இவர்கள் எல்லாம் செயல்படக் கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டுமே? நிதி நெருக்கடியில் ஏற்கனவே மாநில அரசு சிரமப்படும் வேளையில் செலவைக் குறைப்பதற்குப் பதிலாகச் செலவைக் கூட்டிக்கொண்டே போவது எவ்விதத்தில் நியாயம்? ”அரைகுறை ஆயுள் கொண்ட இலவசத் திட்டங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டுவது; எளிதான இலக்காக விளங்கும் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வாக்குகளை ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது” தானே திராவிட சித்தாந்தத்தின் தாரக மந்திரம். ஏழை தமிழர்களின் அறியாமையின் மீதும், இயலாமையின் மீதும் தானே இவர்களின் பொருளாதார கோட்பாடும், சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. 

கழக கண்மணிகளின் இந்த அரிய கண்டுபிடிப்புகளைத் தாண்டி, கடந்த பத்து வருடமாக தமிழகத்திற்கு வரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்? அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப் படுத்தப் போகிறார்களா? இக்குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலையாகத் தானே முடியும்.

குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு இம்மாநில  மக்களைக் குழப்பவும் வேண்டாம்!மாநில நிதி ஆதாரத்தை விரயமாக்கவும் வேண்டாம்!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,  நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி.    22.06.2021   

அரசியலில் ஒரு தெளிவான பார்வையோடு இருப்பது அபூர்வம். நேர்மையாக  அரசியல் விமரிசனம் செய்வது அரிதிலும் அரிது. இப்படி அபூர்வமானவராக டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறாரே, எப்போது இவர்போன்ற அரசியல்வாதிகளைக் கண்டுகொள்ளப் போகிறோம்? சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.           

Tuesday, February 11, 2020

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள்! எப்படிப்புரிந்து கொள்வீர்கள்?

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் நான் தெரிந்து கொள்ள விரும்பிய விஷயங்களில்  IPAC பிரசாந்த் கிஷோர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்னமாதிரி image makeover செய்து விடுவார் என்பதும் ஒன்று! ஏனெனில்   அரவிந்த் கேஜ்ரிவாலுடைய இமேஜ் என்னைப் பொறுத்தவரை, மிகவும் கேலிக்குரியதாகவே எப்போதும் இருந்திருக்கிறது. அன்னா ஹஸாரேவுடன் கூட இருந்து தன் மீது அதிகவெளிச்சம் படுகிற மாதிரி பார்த்துக் கொண்ட நாட்களில் இருந்தே அவரை ஒரு சீரியசான அரசியல்வாதியாகப் பார்க்க முடிந்ததில்லை. ஒரு டிராமா பார்ட்டியாகவே தான் இப்போதும் அரவிந்த் கேஜ்ரிவால், மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்துவருவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.


தேர்தல் முடிவுகளில் வாக்காளர் மனோநிலை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அதிக விவரங்கள் தேவைப்படுவதில், ஆம் ஆத்மி கட்சியின் ரிப்பீட் வெற்றியைப் பற்றி என்னென்ன முதற்கட்ட கருத்து, விவாதங்கள் வருகிறது என்பதைப் பொறுமையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

 
   வீடியோ 25 நிமிடம் 

உள்ளூர் அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி ஒருவர்தான் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்கிற மாதிரி எடுத்துக்கொண்டு தன்னுடைய கருத்தைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். தெளிவான பதில் இருந்ததா என்றால் கொஞ்சமும் இல்லை!
                                                       

  
இந்தப்புள்ளிவிவரம் ஆனந்த் ரங்கநாதனுடைய ட்வீட்டர் செய்தியில் இருந்து எடுக்கப்பட்டது.  தேர்தல் கமிஷன் தளத்தில் சரிபார்க்க வேண்டும்.

இப்படி உள்ளூர் விமரிசகரே 25 நிமிடம் பீட்டர் விடுவாரென்றால் காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா எப்படி வானத்துக்கும் பூமிக்குமாகத் தவ்விக் குதிப்பார்?

                                              வீடியோ 39 நிமிடம் 

சேகர் குப்தா சொல்வதில் சிலபகுதிகளுடன் உடன்பட முடிந்தாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. மாநிலத்தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கையோ மக்களவைத் தேர்தல் அடுத்துவரும்போது அவரது வெற்றி வாய்ப்பையோ பாதிக்காது என்றும் சொல்வதில், சொல்ல விடுபட்ட அல்லது நாம் புரிந்து கொள்ளத் தவறும் வேறுசங்கதிகளும் இருக்கின்றன.

இந்திய அரசியல்களம், அதில் எத்தனை குற்றம் குறை சொல்லமுடிந்தாலும், ஆச்சரியமூட்டும் பல அம்சங்களையும் கொண்டது என்பதாலேயே அரசியல் என்னை மிக அதிகமாக ஈர்க்கிறது. எழுத வைக்கிறது.
                                                   
         
அரசியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை விடுங்கள்! இங்கே என்ன காரணம் என்று இருவர் ட்வீட்டரில் ஆராய்கிறார்கள்! இதற்கு என்ன சொல்வீர்கள்?

மீண்டும் சந்திப்போம். 
                                                          

Sunday, February 9, 2020

#550 டில்லி தேர்தல்! ராஜ் தாக்கரே! பானு கோம்ஸ்!

டில்லி சட்டசபைத்தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னாலேயே காங்கிரசின் பவிசும் மவுசும் பல்லிளித்து நின்றது தெரிந்தது தான்! ஆனால் காங்கிரசின் ராஜ்யசபா எம்பியும் வழக்கறிஞருமான KTS துளசியின் ஒப்புதல் வாக்குமூலம், நிலைமை எந்த அளவுக்குப் பரிதாபம் என்பதைக் காட்டுவதாக இருக்கிறதே!

வீடியோ 3 நிமிடம் 

காங்கிரஸ் தன்னுடைய கேவலமான தோல்வியை ஒப்புக் கொள்ளாதுதான்! அதற்காக இப்படியா? என்னவோ வாக்காளர்களும் காங்கிரசின் ராஜதந்திர நடவடிக்கையைப் புரிந்துகொண்டு, பிஜேபி வரவே கூடாதென்று வாக்களித்தார்களா என்ன!? ஆனால் பிஜேபிக்கு கடந்தமுறையை வீடாக கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக அல்லவா எக்சிட் கணிப்புகளில் தகவல் சொல்கிறார்கள்! காங்கிரசுக்கு இருக்கும் துக்கிணியூண்டு வாக்குகளை மாற்றிவிட்டுத் தான் AAP ஜெயிக்கிறதாமா? வழக்கறிஞர் அல்லவா! சரமாரியாக பொய்யும் சால்ஜாப்பும் வராமல் இருக்குமா என்ன! 


என்னதான் எல்லா எக்சிட் கணிப்புகளுமே AAP ஆட்சிதான் என்று சொன்னாலும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உள்ளூர ஒரு உதறல் இருந்துகொண்டே இருக்கிறமாதிரித்தான் அவருடைய  ட்வீட்டர் கீச்சில் இன்றைக்கு தெளிவாகவே வெளிப்படுகிறதோ?


சிவசேனா காலிசெய்த இடத்தை நிரப்ப உத்தவ் தாக்கரேவின் பங்காளி ராஜ் தாக்கரே, பிஜேபியுடன் நெருங்க முயல்வது, NRC, NPR இவைகளுக்கு ஆதரவாக  இன்றைக்கு அவரது MNS, மும்பையில் ஒரு பேரணி நடத்திக் காட்டியிருப்பதில் வெளிப்பட்டது 


ஆனால் சிவசேனாவின் பொருமல் கட்சியின் நாளிதழ் சாம்னாவில் ஜின்னா பாகிஸ்தானில் சந்தோஷமாக இருக்கிறார் ; இந்தியாவிலோ காந்தி அவமானப் படுகிறார் என்பதாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரிஜினல் காந்தி மீது சிவசேனாவுக்கு எப்போதிலிருந்து கரிசனம் பிறந்ததென்று தெரியவில்லை! ராகுல் காண்டியை மனதில் வைத்துச் சொல்லியிருந்தால், ரொம்பவும் பரிதாபம் தான்!  

வீடியோ 45 நிமிடம் 
   
புதிய தலைமுறை சேனல் விவாதங்களில் நெறியாளர் பல்பு வாங்குவதையும் காட்டியாகவேண்டிய அளவுக்குப் போய்விட்டதோ? விவாதத்தில் பானு கோம்ஸ் ரஜனி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரைத்தானே கூப்பிட வேண்டும்? என்னுடையகருத்திக் கேட்பதற்குத் தான் கூப்பிட்டீர்கள் என்றால் நான் இதைத்தான் சொல்வேன் என்று முகத்தில் அறைகிறமாதிரிச் சொல்கிறார்! அறை கொஞ்சம் பலமாகத்தான் விழுந்திருக்கும் போல!

பானுகோம்ஸ், தமிழருவி மணியன் இப்படி வரிசை கட்டி புதிய தலைமுறையையே கலாய்க்கிறார்களே! என்ன ஆயிற்று!   

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, February 4, 2020

வாலு போயிக் கத்தி வந்தது! டும்டும்டும்!!

புலி பசித்தால் பசும்புல்லை மட்டுமல்ல, வைக்கோல், புண்ணாக்கு இப்படி எதைவேண்டுமானாலும் தின்னும் என்பதற்கு நம்மூர் சிகுலர் அரசியல்வாதிகளே சாட்சி! தேர்தல் வரும்போதெல்லாம் அவர்களுக்கு ஹிந்து மத நம்பிக்கை. வந்துவிடுகிறது! சென்ற நாடாளுமன்றத் தேர்தல் சமயம் ராகுல் காண்டி தன்னை கவுல் பிராமணன், சிவபக்தன் என்று அறிவித்துக் கொண்டு கோவில் கோவிலாகப் போனது ஒரு நல்ல உதாரணம். பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்தி வகுத்துக் கொடுக்கும் வேலையை ஒரு வியாபாரமாக வளர்த்துவருவதில், அவரது சேவையைப் பயன்படுத்தும் மம்தா பானெர்ஜியை சமீபநாட்களில் சிரித்த முகத்துடன் பார்க்க முடிவது ஒருவிதம்! டில்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வேறுவிதம்! ஹனுமான் சாலிசா பாடியதோடு தன்னை ஆஞ்சநேய பக்தனாகக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தேர்தல் படுத்தும் பாடு!


பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி செய்தாரோ தானாகவே ஜிந்தித்துப் பண்ணினாரோ, கேஜ்ரிவால்  என்ன கிறுக்குத்தனம் பண்ணினாலும் டில்லி மிடில் கிளாஸ் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியை விடுவதாயில்லை! டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கேஜ்ரிவால் 54 முதல் 60 இடங்கள் வரை ஜெயித்து ஆட்சியைப் பிடிப்பார் என்று சொல்கிறது. ஆனால்  நம்மூர் முகநூல் போராளிகள்,  கேஜ்ரிவால் பாணியில் இசுடாலினை  முத்தைத் தருபத்தி என்ற திருப்புகழைப் பாடவைத்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விட்டார்கள்! 

இந்த முட்டுக்கு 200₹யும் இரண்டு வேளை சோறும் போட்டாங்களோ!!
அதுசரி! 200 இடம் உறுதி போனஸுக்கு உழைக்கணும்ங்கிற போது கூட பிரசாந்த் கிஷோர் எதிர்த்தரப்பில் களமிறங்கினால் பின்னடைவு என்ற நிலை தான் உள்ளதா?
கிஷோர்ங்கிற பேரக் கேட்டாலே ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு ஒரு ப ப பயம் இருக்கோ 



ஆக வாலு போயிக் கத்தி வந்தது டும்டும்டும் என்ற குழந்தைப்பாடல் மாதிரி, ரஜனிகாந்த் பரபரப்பு போய் ராஜேந்திரபாலாஜி, அவரும்போய் பிரசாந்த் கிஷோர் என்று தமிழக ஊடகங்கள் வரிசைகட்டிப் பரபரப்புச் செய்திகளாக்கிக் கொண்டிருப்பதில் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் எல்லாம் சீந்துவார் இல்லாமல் அப்படியே கிடக்கின்றன. ஆசியாநெட் தமிழில் தினத்தந்தியை மிஞ்சுகிற விதத்தில் குபீர் செய்திகளாகப் போட்டு நன்றாகச் சிரிக்க வைக்கிறார்கள். வெறுமனே சிரித்தால் மட்டும் போதுமா?


பிரசாந்த் கிஷோர் தன்னுடைய வேலைகளைத் தமிழ் நாட்டில் ஆரம்பித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. இசுடாலினுக்கு என்ன மாதிரி image makeover செய்யப் போகிறார் என்பதும் தெரியாது. இசுடாலின் யாரை எங்கே வைக்கவேண்டுமென்பதில் என்ன ஆலோசனை சொல்லப்போகிறார் என்பதும் தெரியாது. அதிமுகவின் ஐடி விங் திறமையாகச் சமாளிக்குமா, கோட்டை விடுமா என்பதுமே தெரியாது. இப்படிக்கு கள நிலவரம் தெளிவாகத் தெரிவதற்கு முன்னாலேயே மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அதிமுக என்பது மட்டும் தெரிந்துவிடுமா? என்னமோ ஆவுடையப்பன் கேள்வி கேட்கிறார்! ரங்கராஜ் பாண்டேவும் பதில் சொல்கிறார்! வீடியோ 16 நிமிடம்! 

வாலுபோயி கத்திபோயி ....... போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்! முற்றுப்புள்ளி வைப்பது நம் கைகளில் தான் இருக்கிறதென்பதை அறியாமலேயே ஊடகங்களும் பிரசாந்த் கிஷோர்களும் முடிவு செய்ய விட்டு விடுவோமா?

மீண்டும் சந்திப்போம்.  
              

Saturday, January 25, 2020

71வது குடியரசு தினமும் குடிமைப்பண்பு இல்லாத கூட்டமும்!

1950 ஜனவரியில் ஒரு அரசியல் சாசனத்தின் கீழ் இந்திய மக்களாகிய நாம் என்று ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டதன் நினைவூட்டலாக 71 வது குடியரசு தினம் நாளை கொண்டாடவிருக்கும் சமயம் இது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகம், எல்லோருக்கும் வாக்குரிமை என்று அறிமுகமானதெல்லாம் பழங்கதை!
ஒரு தேசமாக நம்மை உணர்ந்தோமா? Nation, NationHood இவையெல்லாம் தெரிந்து, பொறுப்புள்ள குடிமக்களாக (citizenship) வளர்ந்தோமா?  தேசம், தேசியம், குடிமக்கள் இவைகளைப் பற்றி எதுவும் தெரியாமலேயே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே என்று ஆடினால் போதுமென்று இருந்தது எங்கே கொண்டு
போய் நிறுத்தியிருக்கிறது? ஷாஹீன் பாத் வண்ணாரப் பேட்டை போக இன்னும் எத்தனை முட்டுச்சந்துகளில்? 


நாளை குடியரசுதின விருந்தினராக பங்கேற்க பிரேசில் அதிபர் ஜாயிர் பல்சானாரோவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு, அவரும் சில சக அமைச்சர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு நேற்றைக்கு நம்முடைய மதிப்புக்குரிய விருந்தினராக வந்திருக்கிறார். இந்த நேரத்திலும் கூட, இடதுகளும் ஒருபக்கச்சார்புள்ள ஊடகங்களும் பிரேசில் அதிபரைப் பழிக்கிற மாதிரியான செய்திகளை  வலிந்து பரப்பிக் கொண்டிருக்கின்றன. வேடிக்கையென்னவென்றால் பிரிட்டனின் கார்டியன் நாளிதழும் இப்படிப் புழுதி வாரித் தூற்றுவதில் வெபன் சப்ளையராக! பிரேசில் இந்தியா உறவுகளை மேம்படுத்திக்கொள்வதை உலக நாடுகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன, அவர்களுக்கு இது மிகவும் உறுத்தலாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படி?


It's fair to say that the mainstream media treats both Modi and Bolsonaro as aberrations from the liberal status quo. Modi for India's controversial Citizenship Amendment Act, and Bolsonaro for his outspoken opposition to leftist politics. But these are the least important issues at hand when these two massive democracies meet. Far more important is their shared belief in a multipolar world, outside the influence of the traditional power centers.

For one, India and Brazil have certain similar approaches in diplomacy. Both have not submitted entirely to a particular bloc – whether it is the US, Russia or China. They have stuck to their individual standpoints on several issues. 

India, despite its closeness to the US, has not diluted its traditional friendship with Russia. The Bolsonaro administration, despite its baggage about Russia's Soviet past and its distrust of communism, sees the neo-Christian conservatism under Putin as common ground for a relationship.
BRICS may not have the same resonance any more, but both Brazil and India are looking for strong bilateral arrangements in a post-globalised world.In case a war breaks out over Iran, both would want to be away from the quagmire, with pragmatic alternative alliances in place. இப்படி இங்கே கள யதார்த்தத்தை விவரிக்கிறார் அபிஜித் மஜூம்தார் 
"Dividing everything into two categories is neither accurate nor reasonable. The way the world evolves isn't binary but rather gradual and on a vast array of aspects and nuances. If we want to positively impact the world, we need active engagement, not superficial clickbait or ignorance." இப்படி ஜாயிர் பல்சானாரோவுடனான சந்திப்பைக் குறித்து சொல்லியிருப்பது யாரோ ஒரு அரசியல்வாதியோ விமரிசன சக்ரவர்த்தியோ இல்லை. Criticism of Jair Bolsonaro meeting is "an oversimplification of a complex world" says Bjarke Ingels இவர் ஒரு டேனிஷ் ஆர்கிடெக்ட். சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் என்பது இங்கே இடதுகளுக்கும், காசுக்குக் கூவுகிற ஊடகங்களுக்கும் புரியவே புரியாது! அவர்களுடைய முட்டாள்தனமான கற்பனாவாதத்துக்கு பதிலே கிடையாது!
பிரேசில் அதிபர் ஜாயிர் பல்சானரோ வருகையை, நம்முடைய அரசு காட்டுகிற நெருக்கத்தை அப்புறம் எப்படித்தான் புரிந்துகொள்வது?  FirstPost  தளத்தில் ஸ்ரீமாய் தாலுக்தர் ஒரு சரியான பார்வையை நேற்றே எழுதியிருக்கிறார். 
Brazil — which has seen ties with neighbouring Argentina deteriorate — looks to upgrade its trade partnership with India and tap its rapidly growing market, New Delhi is keen to exploit possibilities in resource-rich Latin America. Plus, there’s oil.
India, one of the world’s biggest oil importers, needs to diversify its energy needs from the Gulf. Iraq remains its top supplier but in recent times India has started importing more crude from the US (a 72 percent jump in first five months of 2019). The instability in Gulf, US-Iran confrontation and threats of secondary sanctions from the US may drive India further away from middle east. This is where Brazil, one of world’s top 10 oil exporters, sees a big opportunity.  மேலே சுட்டியில் ஸ்ரீமாய் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாக வாசித்துப் பாருங்கள்!
மேலே அபிஜித் மஜூம்தார் தனது செய்திக்கட்டுரையில் முடிவாக ஒரு பன்ச் வைத்து முடித்திருக்கிறாரே! அதையாவது வாசித்தீர்களா?
"The Modi and Bolsonaro meeting may not be the most explosive, but when two of the world's biggest emerging powers meet on a very special occasion, it is a clear signal to the big boys: We are here to play our game, not yours."  
அதுதான் இங்கே முக்கியமான விஷயம். மீண்டும் சந்திப்போம்.              

Saturday, January 4, 2020

எங்கேயோ இடிக்கிறதே! #தமிழகஊடகநிலவரம்

தமிழக ஊடகங்களில் ரொம்பவுமே துள்ளிக் குதித்தது நக்கீரன்! Investigative Journalism என்ற பெயரில் மஞ்சள் பத்திரிகையாகவே ரொம்பநாட்களாகவே நடந்து வருவதில் திடீரென்று ஒரு மாற்றம் தென்பட்டிருக்கிறது. நக்கீரன் முதன்முறையாக தமிழ்நாடு ஆளுநரைப் பற்றி தான் வெளியிட்ட செய்தி பொய்யானது என்று ஒரு ஓரத்தில் சின்ன பாக்ஸ் கட்டி அச்சு ஊடகத்தில் வருத்தம் தெரிவித்திருப்பதே பெரிய ஆச்சரியம் தான்!


நிர்மலாதேவி படத்தை அட்டைப்படத்திலேயே போட்டு ஆளுநரை சம்பந்தப்படுத்திச் செய்தி போட்டவர்கள் அதே மாதிரி முகப்பு அட்டையிலேயே வருந்துகிறோம் என்று போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறுதான்!  இந்த விஷயத்தை முடித்துவைக்கவும் இந்து  என் . ராம்தான் வரவேண்டியிருக்கிறது என்பதுமே கூட வெட்கப்பட வேண்டிய விஷயம் தான் ! ஆனால் நக்கீரன் கோபாலுக்கு நல்ல புத்தி வந்திருப்பது நம்புகிற மாதிரியா இருக்கிறது? எங்கேயோ இடிக்கிறதே என்ற சந்தேகம் வருகிறதா? இந்த விஷயத்தை முதலில் கிளறியது கிஷோர் கே சுவாமி தான்!

நேற்று மீசை(க்கீரன்) safari ஏஜெண்டின் மகளுக்கும் செயலின் செயல்படாத வாரிசுக்கும் 5 star ஹோட்டல் பார்ட்டியில் கைகலப்பு மீசைக்கீரன் யாருக்கு பிரச்னையானாலும் அந்த நாய் அந்த நாய்னு வீடியோ போடுவாரே அவர் மகள் தாக்கப்பட்டதுக்கு வீடியோ உதயமாகுமா இல்ல பேக்கரி dealing ah
😉
பிற்பகல் 2:23 · 1 ஜன., 2020Facebook 

நக்கீரன் கோபால் திடீரென மன்னிப்பு கேட்கிறாரே?
எங்கயோ இடிக்குதே,
பிரஷாந்த் கிஷோர் இராஜினாமா..
காயத்ரி கந்தாடையின் பாகிஸ்த்தானிய தொடர்பு கண்டுபிடிப்பு..
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், நக்கீரன் கோபாலுடைய மகளுக்கும் கருணாநிதி அவர்கள் குடும்ப வாரிசுக்கும் சண்டைனு ஒரு செய்தி பார்த்தேன், இன்று நக்கீரன் தடாலடி பல்டி?
நாம் அனைவரும் யூகிப்பதினைவிட ஏதோ பெரிய அளவில் திமுக மாட்டிக்கொண்டுள்ளதாகவே படுகிறது. மாரிதாஸ் சொல்வது போல, வரும் நாட்களில் பல திமுக பெரிய தலைகள் கூட வேறிடத்திற்கு மாறலாம்.
விஷயம் ரொம்ப சீரியஸா இருக்கும் போலயே?
Disclaimer: WhatsApp forwarded message 

பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுக்கும் பணியிலிருந்து ஒதுங்கிக்  கொண்டு விட்டதாக வரும் செய்திகள் தவறானவை என்கிறார் மாரிதாஸ். 

பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு வேலை செய்வதிலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி தவறானது. அவர் விலகிவிட்டதாகத் திட்டமிட்டு பொய்யான செய்தி பரப்பியதும் திமுக ஆதரவாளர்கள் தான். ஆக ஸ்டாலின் எடுக்கும் அனைத்து புதிய முயற்சியோடு பிரசாந்த் கிஷோரையும் இணைத்தே சிந்திக்கவும். வச்சு செய்யவும்.
பிற்பகல் 5:29 · 4 ஜன., 2020Twitter Web App
கோலம் போட்டது கூடத் தவறில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் வேறொருவர் வீட்டின் முன் காயத்ரி முதலானவர்கள் எதிர்ப்புக் கோலம் போட்டது சரிதானா? போதாக்குறைக்கு அம்மணிக்கு பாகிஸ்தான் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு வேறு! மாரிதாசுக்கு புதிதாக காணொளி ஒன்று வெளியிட வாகாக ஒரு செய்தி கிடைத்து விட்டது!

இன்ஸ்டன்ட் போராளிகளை இங்கே உள்ள ஊடகங்கள் எப்படி   உருவாக்குகின்றன என்ற விஷயத்தை மாரிதாஸ் கொஞ்சம் சுவாரசியமாக விளக்குகிறார். 
அடங்கமறு அத்துமீறு சரக்கு மிடுக்கு என்று பேசுகிற படங்கள் வரிசைகட்டி வந்தால், அதற்கு மாற்றுப் பார்வை திரைப்படங்களும் வரும் தானே!

ட்ரெயிலர் வெளியான ஒருநாளிலேயே 11,61, 720  பார்வைகளைப் பெற்றிருக்கிறது  என்பதே ஒரு சாதனை!  திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்ட குழுவினருடன் ஒரு 26 நிமிட உரையாடல் 


Crowd Funding மூலமாக மூலதனம் திரட்டப்பட்டு மிகுந்த நம்பிக்கையோடு திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான தகவல்.

தமிழக ஊடக நிலவரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம்.

Monday, December 30, 2019

பிழைப்பின் பொருட்டே நரேந்திர மோடி எதிர்ப்பு!

ஒரு நல்ல ஊடகக்காரனின் பணி என்ன? ஜனங்களுக்கு முக்கியமான செய்திகளைக் கவனப்படுத்தவேண்டும் என்பது அடிப்படையானது. அவசியம் தேவைப்படுகிற இடங்களில் செய்தியை விளக்குவதும் கூட ஒரு நல்ல ஊடகக்காரன் செய்ய வேண்டிய வேலைதான்! நேர்காணல் என்று வரும்போதுகூட இந்த அடிப்படைகள் மாறுவதில்லை. கேள்விகள் கேட்பதும் கூட ஒரு தெளிவை ஏற்படுத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர, தன்னுடைய கருத்தை நேர்காணலில் அடிக்கடி குறுக்கீடாகப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தக் கூடாது. சில கிறித்தவக் கல்வி நிறுவனங்கள்  விஸ்காம் படிப்பிலும் கூட இடதுசாரி தறுதலைகளை உருவாக்கி சேனல்களில், ஊடகங்களில் ஊடுருவ விடும்போது, நாகரிகமான ஊடக நடைமுறைகள் முன்மாதிரிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்படும் என்பது தெரிந்த விஷயம் தான்.


மதன் ரவிச்சந்திரன் மாதிரி துடிப்பான இளைஞர்கள் இங்கே திராவிட சார்புள்ள, இடதுசாரி fringe  elements உருவாக்கி வைத்திருக்கிற திராவிடம் என்பது அசைக்க முடியாதது என்ற மாயையை உடைக்க முயற்சிக்கிற போது, வளரவிடாமல் அழித்து விட முயற்சிப்பதும் இயல்புதான்! புதிய தலைமுறை, காவேரி நியூஸ் சேனல் இரண்டிலும் அந்த இளைஞன் கொஞ்சம் துடிப்பாகச் செயல்பட்டதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வேலை செய்துகொண்டிருந்த சேனலை விட்டு வெளியேற்ற பழம்தின்று கொட்டைபோட்ட திராவிட சார்புள்ள சீனியர்கள் முயற்சித்ததை இந்தப் பக்கங்களிலேயே பேசியிருக்கிறோம். 

இந்த 60 நிமிட விவாதத்தில் மதன் ரவிச்சந்திரன் சில முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்துகிறார். இன்றைக்கு எதிர்ப்பு நிலை எடுக்கிறவர்கள் இதற்குமுன் ஆதரித்தது முரண்பாடு இல்லையா என்பது முதலாவது. அடுத்தது நல்ல தமிழ்ப் பேச்சாளர் என்று அறியப்பட்ட நெல்லை கண்ணன் அப்பட்டமான திமுக மேடைப்பேச்சாளராகக் குறுகிப்போனதையும், தரம் தாழ்ந்து பேசியதையும் போகிறபோக்கில் விவாதத்தில் சொல்கிறார்கள். 


திமுக இந்த அளவுக்கு நரேந்திர மோடி /பாஜக எதிர்ப்பு என்று மும்முரமாக இறங்குவானேன்? இசுடாலின் மனதில் ஓடுகிற கணக்கென்ன என்பதை  துரை முருகன் கூட அறிந்திருப்பாரோ என்பதே சந்தேகம் தான்! ஆனால் மோடி எதிர்ப்பாளர்களோடு ஒட்டிக் கொள்கிறார். OMG சுனிலை விரட்டிவிட்டு IPAC பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் உத்திகளை வகுப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.இப்போது (2021இல்) இல்லையென்றால் இனி எப்போதும் முதல்வராகிற வாய்ப்பு இல்லை என்கிற தவிப்பின் வெளிப்பாடாகவே    நடப்பவைகளை அனுமானிக்க முடிகிறது.



ஆக, இசுடாலின் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே மோடி எதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கிறார். கொள்கை சித்தாந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அதிமுகவை பிஜேபி காப்பாற்றி வருவதால் பிஜேபியை எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம்! இன்னொரு சட்டசபைத்தேர்தல் தோல்வி திமுகவைக் கரைத்துவிடும், தன்னுடைய தலைமை கேலிக்குரியதாகி விடும் என்று இசுடாலின் நினைத்தால். அதில் தவறேதுமில்லை.

மீண்டும் சந்திப்போம்        

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)