டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் நான் தெரிந்து கொள்ள விரும்பிய விஷயங்களில் IPAC பிரசாந்த் கிஷோர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்னமாதிரி image makeover செய்து விடுவார் என்பதும் ஒன்று! ஏனெனில் அரவிந்த் கேஜ்ரிவாலுடைய இமேஜ் என்னைப் பொறுத்தவரை, மிகவும் கேலிக்குரியதாகவே எப்போதும் இருந்திருக்கிறது. அன்னா ஹஸாரேவுடன் கூட இருந்து தன் மீது அதிகவெளிச்சம் படுகிற மாதிரி பார்த்துக் கொண்ட நாட்களில் இருந்தே அவரை ஒரு சீரியசான அரசியல்வாதியாகப் பார்க்க முடிந்ததில்லை. ஒரு டிராமா பார்ட்டியாகவே தான் இப்போதும் அரவிந்த் கேஜ்ரிவால், மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்துவருவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
தேர்தல் முடிவுகளில் வாக்காளர் மனோநிலை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அதிக விவரங்கள் தேவைப்படுவதில், ஆம் ஆத்மி கட்சியின் ரிப்பீட் வெற்றியைப் பற்றி என்னென்ன முதற்கட்ட கருத்து, விவாதங்கள் வருகிறது என்பதைப் பொறுமையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
வீடியோ 25 நிமிடம்
உள்ளூர் அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி ஒருவர்தான் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்கிற மாதிரி எடுத்துக்கொண்டு தன்னுடைய கருத்தைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். தெளிவான பதில் இருந்ததா என்றால் கொஞ்சமும் இல்லை!
இந்தப்புள்ளிவிவரம் ஆனந்த் ரங்கநாதனுடைய ட்வீட்டர் செய்தியில் இருந்து எடுக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் தளத்தில் சரிபார்க்க வேண்டும்.
இப்படி உள்ளூர் விமரிசகரே 25 நிமிடம் பீட்டர் விடுவாரென்றால் காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா எப்படி வானத்துக்கும் பூமிக்குமாகத் தவ்விக் குதிப்பார்?
வீடியோ 39 நிமிடம்
சேகர் குப்தா சொல்வதில் சிலபகுதிகளுடன் உடன்பட முடிந்தாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. மாநிலத்தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கையோ மக்களவைத் தேர்தல் அடுத்துவரும்போது அவரது வெற்றி வாய்ப்பையோ பாதிக்காது என்றும் சொல்வதில், சொல்ல விடுபட்ட அல்லது நாம் புரிந்து கொள்ளத் தவறும் வேறுசங்கதிகளும் இருக்கின்றன.
இந்திய அரசியல்களம், அதில் எத்தனை குற்றம் குறை சொல்லமுடிந்தாலும், ஆச்சரியமூட்டும் பல அம்சங்களையும் கொண்டது என்பதாலேயே அரசியல் என்னை மிக அதிகமாக ஈர்க்கிறது. எழுத வைக்கிறது.
அரசியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை விடுங்கள்! இங்கே என்ன காரணம் என்று இருவர் ட்வீட்டரில் ஆராய்கிறார்கள்! இதற்கு என்ன சொல்வீர்கள்?
மீண்டும் சந்திப்போம்.
நீங்க வேற எதையோ ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கீங்க? இதில் ஆதித்ய ராஜ் சொல்லியுள்ளதை நான் நேற்று தான் எழுதினேன்.
ReplyDeleteநான் 360 டிகிரியிலிருந்தும் பார்த்து விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்! உங்களுடைய பதிவில் நீங்கள் எழுதியதற்கு பதிலாக அங்கே எழுதியது இங்கேயும்
Deleteஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற வழக்கு அரசியலுக்கு மட்டும் பொருந்தாதோ ஜோதிஜி.!
அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய உயரம் வீச்சு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு பிரசாந்த் கிஷோர் வேண்டியிருக்கிறது! PK வகுத்துக் கொடுத்த உத்திப்படி ஹனுமான் சாலிசாவை ஒப்பிக்க வேண்டியிருக்கிறது. தேர்தலில் ஜெயித்தவுடன் கூட ஹனுமான் மீதான பக்தியை நன்றியறிவிப்பில் சொல்லியாக வேண்டியிருக்கிறது .
ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாக கேஜ்ரிவால் வெற்றி இன்னும் ஒருசில நாட்களுக்கு வேண்டுமானால் பேசுபொருளாக இருக்கலாம்! அதுவும் கேஜ்ரிவாலுக்காக அல்ல, பிஜேபியை வெறுப்பேற்ற உதவுகிற பானகத்துரும்பாக இருப்பதைப்பற்றி மட்டுமே!
இன்னொரு விவரம் கூட இணையத்தில் கிடைக்கிறது. டில்லியை சேர்த்து இப்போது 13 மாநிலங்களில் பிஜேபி தான் எதிர்க்கட்சி என்று! ஆனால் காங்கிரஸ் பூஜ்யமாகிப் போனதைப் பற்றியோ அகில இந்திய அளவில் அதற்கு மாற்றாக யார் இருப்பார்கள் என்பதுபற்றியோ யோசித்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்! வெறும் கூச்சல் அரசியலுக்காகாது!!
பாஜக செய்ய வேண்டியது
ReplyDelete1. அடுத்த நான்கு வருடங்களுக்கு நிர்மலா அக்காவைப் பத்திரிக்கையாளர்களிடம் பேசவிடக்கூடாது. அக்காவுக்குப் பேசத் தெரியவில்லை. வாயைத் திறந்தாலே வம்பு தான் பெருகுது. முதலில் அக்கா ஜிஎஸ்டி இணையத்தைச் சரி செய்யாமல் சீட்டை விட்டு எந்திரிக்கக்கூடாது என்று மோடி உத்தரவிட வேண்டும். கட்டிய பணம் 90 நாள் கழித்து வரும் என்றார்கள். ஒன்றும் நகர்வதாகத் தெரியவில்லை. முன்கூட்டியே கட்ட வேண்டியிருப்பதால் தலையைப் பிச்சுக்கிட்டு அலைய வேண்டியதாக உள்ளது.
2. அடுத்த நான்கு வருடங்களுக்குப் பாகிஸ்தான் என்ற வார்த்தையை பாஜக வில் உள்ள எவரும் பேசவே கூடாது. பேசியவர்கள் வாயில் குயிக்பிக் வைத்துத் தைத்து விட வேண்டும்.
3. டெல்லி தேர்தலில் அனுமனைக் கொண்டு வந்து சிரிப்பாய் சிரித்தது போல இனி எந்தத் தெய்வங்களையும் கொண்டு வரக்கூடாது. கேஜ்ரிவால் அனுமன் சாலிசா மந்திரத்தை அட்சர சுத்தமாக கூட்டத்தில் பாடத் தொடங்க பயபுள்ளைங்க நடுங்கிப் போய் இதுவும் பால் அவுட்டா என்று பார்க்கத் துவங்கினர்.
4. அமித்ஷா எல்லா இடங்களிலும் வாயால் வடை சுட முடியாது என்பதனை உணர வேண்டும். சாதாரணக் குடும்ப பட்ஜெட் ல் 5000 முதல் 6000 ரூபாய் மிச்சப்படுத்திய கேஜ்ரிவால் பார்த்து தீவிரவாதி என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்ட தைரியம் ஆச்சரியமாகவே உள்ளது. 400 க்கும் மேற்பட்ட இவர் உருவாக்கிய எளிய மருத்துவமனைகள் மூலம் 42 சதவிகித மக்கள் பயன்படுத்திய காரணத்தால் தனியார் மருத்துவமனை காத்தாடுது. மக்கள் இவரை விடுவார்களா?
பிஜேபி என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை நம்முடைய ஆசைக்காக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் அவர்களுக்கு அதிகப்பலன் அளிக்கக் கூடிய உத்திகள், பேச்சு என்னவென்று நன்றாகவே தெரிந்திருக்கும். என்வரையில் ஒரு பார்வையாளனாக இருந்துமட்டுமே சொல்ல விரும்புகிறேன். .
Deleteநிதியமைச்சர் மீது திருப்பூர்க்காரர்களுக்கு இருக்கும் காண்டு எனக்குப் புரிகிறது!!
அய்யோ என்ன அப்படி சொல்லிட்டீங்க. அவங்க எனக்கு அக்கா மாதிரி. என் மகளிடம் அவரைப் போல வந்துடும்மா என்று சொல்லியுள்ளேன்.
Deleteஅப்போ பாயிண்ட் 1 இல் சொன்னது வாபஸ்தானா? :-)))
Delete